பொதுவாக, பழங்கள் எல்லாமே இனிப்புச் சுவையுடையதாகவே இருக்கும். காயாக இருக்கும் போது அதன் சுவை கசப்பாகவோ அல்லது புளிப்பாகவோ இருக்கும். இப்படி சுவை மாறுவதற்கு என்ன காரனம்.
பழங்களுடைய இனிப்புச் சுவைக்கு குளுக்கோஸ், பிரக்சோஸ், சுக்ரோஸ் போன்ற சர்க்கரைப் பொருள்கள் அதிகளவில் இருப்பதுதான் காரணம். என்றாலும், இதற்கு மற்றொரு சுவராசியமான காரணமும் உண்டு.
பழங்களுக்குள் உள்ள விதைகளில் தான் தாவரங்களின் அடுத்த சந்ததியே மறைந்து இருக்கிறது. இந்த விதையை பக்குவமாக விழுந்து முளைக்க வைக்க வேண்டிய பெரிய பொறுப்பு பழங்களுக்குதான் உள்ளது. பிஞ்சாக இருக்கும் போதே இனிக்க ஆரம்பித்து விட்டால், என்னாவது? விதை உருவாகும் முன்பே அதைப் பறித்து, சுவைத்து விடுவோம் அல்லவா?
அதனால் தான் விதை, முழுமையாக முதிர்ச்சி அடையும் வரை பழம் பழுக்காமல் காத்திருக்கிறது. பின்பு, விதை முதிர்ச்சி அடைந்தவுடன் பழமும் நன்றாக பழுத்து, அதன் நிறமும், சுவையும் மாறி விடுகிறது. கண்ணைக் கவரும் விதத்தில் சிவப்பு, மஞ்சள் என்று மின்னும் நிறங்களையும் அதன் மணத்தையும் கண்டதும், பறவைகளையும், விலங்குகளையும் சுண்டி இழுக்கச் செய்கிறது.
உடனே அவை பழங்களை இனம் கண்டு, அவற்றைப் பறித்து சுவைத்து விடுகின்றன. அப்படி இருந்தும் கூட, தாவரங்கள் தங்கள் விதையைக் காப்பாற்ற வேண்டி, அவற்றைக் கசப்பாகவோ அல்லது வழுவழுப்பாகவோ நழுவி கீழே விழும் வகையில் மாற்றி விடுகிறது. ஏனென்றால், பழங்களுக்கு இனவிருத்தி தான் முக்கியம். விதையை பக்குவமாக விதைக்க வேண்டும் என்பதே அவற்றின் கடமையாக உள்ளது. அந்த அனவுக்கு தன் இனத்தைப் பெருக்குவதில் புத்திசாலியாக இருக்கின்றன, தாவரங்கள்.
இயற்கை நமக்கு அளித்த மகத்துவங்கள் ஏராளம். ஒவ்வொரு பழத்திலும் நோய்களுக்கான மருத்துவ குணங்கள் உள்ளடங்கியுள்ளன...

No comments:
Post a Comment