Monday, August 22, 2011

எங்கே? அந்த கிராமம்

   ஒவ்வொரு சமயமும் எங்கள் கிரமத்திற்கு போகும்போது ஒரு நாள்தான் இருக்க முடியும், உடனே திரும்பி வர நேர்ந்துவிடும். சமிபத்தில் ஒரு ஐந்து நாள் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்பொழுது நான் சின்ன வயதில் இந்த கிராமம் எப்படி இருந்தது இப்போது எவ்வளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது, எங்கே? அந்த கிராமம், எப்படி இருந்தது என்று நினைத்து  நினைத்ப் பார்தேன். 
    முன்பு கிராமத்தைச் சுற்றி பாசன வயல் வெளிகள், தோட்டங்கள்! தோட்டங்களைப் பாதுகாக்க கருவேல முள் வேலிகள். வேலிகளின் மீது பச்சை நிறத்தில் படர்ந்துள்ள பல வகை செடி, கொடிகள். வேலிகளில் மீது அமரும் பூச்சிகளை பிடிக்க அமர்ந்திருக்கும் ஓணான்களைக் கல்லெறிந்து காயப்படுத்தும் சிறுவர்கள். அதிகாலையில் வயல் வெளிகளுக்கு ஏர் ஓட்ட செல்பவர் இரண்டு காளை மாடுகளை கையில் பிடித்து, கலப்பையை தோலில் சுமந்து செல்லும் காட்சி, காட்டிற்கு வேலைக்கு செல்லும் பெண்கள், அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களைக் கொண்டுவந்து போரடிக்கும்  கலத்து மேடு.
   ஓட்டு வீடுகள், ஓலை வீடுகள், ஓலைக்குடிசைகள் அங்கொன்று இங்கொன்று காரை வீடுகள் வீட்டுச் சுவர்களில் ஒட்டப்பட்டுக் காயவைக்கப்பட்டுள்ள, சாண வறட்டிகள். வீட்டுமுன் படுத்து உறங்கும் தெரு நாய்கள், வீட்டுத் தின்னையின் அடியில் உள்ள கோழிக் கூடு.
    வீட்டின் கொல்லைப் புறத்தில் முருங்கை மரம். நிழல் தருவதற்காக வளர்க்கப்படும் வேப்பமரங்கள். வீட்டு உபயோகத்திற்கு வளர்க்கும் பயிர்க் குழிகளில் பூசணிகாய், சுரைக்காய். புடல், பீற்கங்காய், பாகற்காய், அவரைக் கொடி. கொல்லை தொளுவத்தில் கட்டியிருக்கும் பசுவும், கன்றும். தெருக்களில் இரட்டை மாடுகளால் இழுக்கப்படும் கட்டைவண்டி காளைமாடுகள், காளைமாடுகளைக் கயிற்றால் கட்டி கீழே படுக்கவைத்து லாடம் கட்டுவது. வீடுகளில் கட்டி வைத்திருக்கும் ஆடுகள், மந்தையில் படுத்திருக்கும் ஆட்டு மந்தைகள், கோயில், தெப்பக்குளம், அதில் நீந்தித் திரியும் சிறுவர், சிறுமிகள் அதில் உள்ள மீன்கள் அதில் திரியும் தண்ணீர் பாம்புகள்.
  தெருக்களில் சிறுவர்கள் அரைக்கால் சட்டையுடன் சைக்கிள் டயர்களையும் பனம் நுங்கின் குடுக்கைகளை வண்டியாக ஓட்டும் காட்சி, பம்பரம் கிட்டி, குண்டு விளையாட்டு. வயதானவர்கள் பஞ்சாயத்து தின்னையில் வெட்டிகதை பேசி தூங்கித்திரியும் பெரியவர்கள். வயதான அப்பத்தா, அம்மாச்சிமார்கள், காதுகளில் பெரிய பெரிய பாம்படம், தந்தட்டிகள் சுமக்கும் அதிசய காட்சிகள் அவர்களின் இடுப்பில், சொருகி வைத்திருக்கும் சுருக்குப் பை.
    தெருக்களில் ஆங்காங்கே திரியும் நாட்டுக்கோழிகள். வீடுகளின் முன்வரந்தாவில், வைக்கப்பட்டிருக்கும் போட்டோக்கள், போட்டோகேகளின் பின்னால் கூடுகட்டி வாழும் சிட்டுக் குருவிகள். பெரிய அரசமரம், ஆலமரம், நாவல்மரம். இதில் பழம் பழுக்கும் போது பழம் தின்ன வரும் பலவகை பறவைகளின் இனிமையான சத்தங்கள். மரப்பொந்துகளில் வாழும் கிளிகள், மைனாக்கள், இரவில் அலரும் ஆந்தைகள் என விதவிதமான பறவைகள் கண்மாய், கண்மாயில் நீந்தித் திரியும் நீர்க் கோழிகள், கொக்கு, நாரை பேன்ற பறவைகள் கண்மாயிக்கு தண்ணீர் வரும் ஆறு, ஓடைகள் ஊரணி, ஊத்துகள் மேடு, பள்ளம், நீர் ஆதாரங்கள் இதில் படர்ந்திருக்கும் தாமரை கொடிகள், இது போல் இன்னும் நிறைய. இது எல்லாம் உள்ள கிராமம் எங்கே? இதைவிட ஒருத்தருக்கொருவர் உதவும் கிராமத்து பன்பும் எங்கே?   
படம்  தினமலர்...

மனிதன் இயற்கையை இயற்கையாக இருக்கவிடாமல் இருப்பதே இயற்கை அழிவிற்கு காரனம்.

Friday, August 19, 2011

ஸ்வார்டுபிஷ் (Swordfish)

    ஸ்வார்டுபிஷ் (Swordfish) இது ஒரு அற்புதமான உயிரினம். இது குளிர் சூட்டுக்குருதியுடையது கண்கள் மற்றும் மூளை சூடாக வைக்க என்று சிறப்பு உறுப்புகள் இருக்கின்றது. வெப்பம் அவைகளின் பார்வை திரனை அதிகரித்து அவைகளின்  உணவு வேட்டையாடுவதை சுலபமாக்கிறது. இந்த ஸ்வார்டுபிஷ், மார்லின், மற்றும் டுனா ஒத்திருக்கிறது.
   ஸ்வார்டுபிஷ் இது கிரேக்கம், லத்தீன் மொழியில் வாள் எனப்படும். இதில் ஒரு பிரிவு இடம் பெயருந்து, கொள்ளையடிக்கும் மீன் என்றும் மற்றொன்று விளையாட்டு மீன் என்றும் கூறப்படுகிறது. இதன் உடல் வாகு நீண்டு குறுகி உள்ளது, அவைகள் 14 அடி அங்குலம் நீளம் மற்றும் 650 கிலோ எடை அதிகபட்சமாக அடைகிறது.
   ஸ்வார்டுபிஷ் அதன் நெறிப்படுத்தப்பட்ட உடலமைப்பு அது மிகவும் எளிதாக நீந்துவதற்கு உதவுகிறது. அதன் வாள் ஈட்டிபோன்ற கூர் நுனி அதன் இரையை காயப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.  முக்கியமாக ஸ்வார்டுபிஷ் தனது இரையை பிடிக்க 80 கிலோ மீட்டர் வேகத்தில் நீந்தும் திறன் கொண்டது.
   ஆண் ஸ்வார்டுபிஷ் விட பெண் ஸ்வார்டுபிஷ் பெரிய வளர்கின்றன 135 கிலோ எடை வரை இருக்கும். ஆண் ஸ்வார்டுபிஷ் 3 முதல் 4  ஆண்டுகள் முதிர்ந்தபோது பெண் ஸ்வார்டுபிஷ் 4 முதல் 5 ஆண்டுகளில் முதிர்கின்றன. ஸ்வார்டுபிஷ் தீவனம் சிறிய டுனா, பொன்னாடு, சீலா மீன், பறக்கும் மீன், கானாங்கெளுத்தி ஆகியவை. மனிதர்களை தாக்குவதில்லை என்றாலும் ஸ்வார்டுபிஷ் மிகவும் ஆபத்தானது.
  ஸ்வார்டுபிஷ் அட்லாண்டிக், பசிபிக், மற்றும் இந்திய பெருங்கடல் உட்பட உலகம் முழுவதும் கடல் பகுதிகளில், காணப்படுகிறது. ஒரு நீண்ட எல்லை உடன், வெப்பமண்டல, மிதவெப்ப, மற்றும் சில நேரங்களில் குளிர்ந்த நீரில் காணப்படும். ஸ்வார்டுபிஷ் பொதுவாக கோடையில் குளிர் மற்றும் குளிர்ந்த நீரில் வெப்பமான நீர்ப்பகுதிக்கு இடம் பெயரும் இனங்கள் உள்ளது.


அண்டங்கள் ஆகாயங்கள் இயற்கை! வானும் விண்மீன்களும் இயற்கை! சூரியனும் ஒளியும் இயற்கை! அதைச் சுற்றிவரும் கிரகங்கள் இயற்கை! ...

Thursday, August 18, 2011

விலங்குகளின் வினோதமான தூக்கம்


   குறும்புத்தனத்துக்குப் பெயர் பெற்ற ராக்கூன் என்ற ஒருவகை கீரிப்பிள்ளை போன்ற பிராணி, நல்ல குறட்டை ஒலியுடன் ஆழ்ந்து உரங்கும். அத்துடன் மனிதரைப் போல் இப்பிராணிகள் கனவும் காணுகின்றன என்று தூங்கும் போது இவற்றின் உடல் அசைவைக் கொண்டு விஞ்ஞானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
   நாய், பூனை போன்ற வீட்டு விலங்குகள் உடம்பைட் சுருட்டிக் கொண்டு உடலின் வெப்பத்தை காப்பாற்றி, தலையை உடலின் உள்பதிந்து தூங்கும்.
   ஆடு, மாடு, மான் போன்ற தாவர உண்ணிகள் நான்கு கால்களையும் மடித்து, தலையை உடலின் மேல் வைத்துத் தூங்கும்.
   யானை மற்றும் குதிரை இன விலங்குகள் நின்று கொண்டே தூங்கும். யானை தூங்கும்போது அதன் எடை முழுவதையும் ஒவ்வொறு காலுக்கும் மாற்றி மாற்றி வைத்துக்கொள்ளும்.
   பாம்பு வகையைச் சேர்ந்தவை அனைத்தும் உடலை கடிகார ஸ்பிரிங் போல சுருட்டிக்கொண்டு தூங்கும். பாம்புகள் தூங்கும்போது கண்கள் திறந்த வண்ணமே இருக்கும்.
   சிலவகை மான்கள் தூங்கும்போது தமது சுவாச சக்தியின் மூலம் பகை விலங்குகளின் நடமாட்டத்தை உணரும் அற்புத சக்தி கொண்டவை.
   சிலவகை ஐரோப்பியக் கிள்கள், வவ்வால் போலவே கால்களால் மேலே உள்ள கிளைகளைப் பற்றிக்கொண்டு தலை அதன் மார்பைப் பார்த்திருக்குமாறு ஒய்யாரமாகத் தூங்கும்.
   பெரும்பாலான பறவைகள் பகலில் விழித்து இரவில் உறங்கும் வழக்கம் கொண்டிருந்தாலும், ஆந்தை இனப் பறவைகள் பகலில் தூங்கி இரவில் இரை தேடும் பணியைச் செய்கின்றன. வாத்து தரையில் நின்றுகொண்டோ, தண்ணீரில் மிதந்துகொண்டோ தூங்கும்.
   சுறுசுறுப்புக்குப் பெயர் போன எறும்புகள், மண்ணீல் அழகான மணற்படுக்கை போன்ற திண்டுகளை ஏற்படுத்தி, கால்களை உடலுடன் அழுத்திவைத்து ஒய்யாரமாய் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நிம்மதியாய் உறங்குகின்றன.

வனவிலங்குகள், பறவைகள், பூச்சிகளை காத்து இயற்கையை காப்போம்...

Friday, August 12, 2011

கல் மீன் (Stone fish)


    கல்மீன் இது இந்திய பசிபிக்கிக் வெப்பமண்டல கடல் பகுதியில் காணப்படுகின்றன, இது 20 இனங்கள் இருக்கிறது. கொடிய நச்சுத்தன்மையுடையவை, கரடுமுரடான உடல் கீழ்தாடை ஒரு அசிங்கமான மேல் நோக்கிய பெரிய தலை மற்றும் சிறிய கண்கள் அதன் பெயர் குறிப்பிடுவதுபோல் ஒழுங்கற்ற புள்ளிகள் மற்றும் உடல் முழுவதும் மருக்கள் ஒரு முதுகு துடுப்பு அது கற்கள் மத்தியில் அல்லது கடற் பவள பாறை பிளவுகளில் புதைக்கப்பட்டது போல் கல் மீன் தன் நிறம் மற்றும் வடிவத்தை கல் போன்று கண்ணுக்கு தெரியாத உருவத்தில் உருமாற்றிருக்கும்.
  ஸ்டோன் மீன் புரதங்கள் கொண்ட, உலகின் மிக கொடிய விஷ மீனக கருதப்படுகிறது. ஒரு கல் மீனை துரதிர்ஷ்டவசமாக மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்கள்  மிதித்துவிட்டாலோ இந்த மீன்  உடலில் விஷம் புகுத்த என்று பதிமூன்று மிக நீண்ட ஈட்டிகளை கொண்டிருக்கிறது அதன் விஷம் உடலில் பாயும் ஆழம் பொறுத்து திசு இறப்பு, கடுமையான வலி, அதிர்ச்சி, பக்கவாதம் ஏற்படுத்துகிறது. நரம்பு மண்டலத்தை தாக்கும் அதனால் இது 2-3 மணி நேரத்திற்குள் சிகிச்சை செய்யவில்லை என்றால் மரணம் நிச்சயம். கொடிய சிலந்தி மற்றும் பாம்பு கடித்தல் போலவே சீக்கிரம் சிகிச்சை எடுக்கவேண்டும். உடனடியாக குறைந்தது 43 டிகிரி செல்சியஸ் சுடு நீரை காயம்பட்ட இடத்தில் விடவேண்டும். இந்த மீன் இருக்கும் இந்திய பெருங்கடல் பகுதியில் மென்மையாக நடந்துகொள்ள வேண்டும்.

இயற்கையின் அதிசயம் கடல் வாழ்  உயிரினம்... 

Saturday, August 6, 2011

நமது நாடு 30. வாணிகம்


   ஓரிடத்தில் உள்ள பண்டங்களை இன்னேரிடத்திற் கொண்டு சென்று விற்றுப்பொருள் ஈட்டுதல் வாணிகம் எனப்படும். பல இடங்களிலுள்ள மக்கள் பண்டங்களை விற்கவும் வாங்கவும் கூடும் இடங்கள் அங்காடிகள் (சந்தைகள்) எனப்பட்டன. சந்தை என்பது சந்தி என்பதினின்றும் பிறந்தது. உள்நாட்டுச் சந்தைகளுக்குப் பண்டங்கள், கழுதை பொதி மாடு வண்டிகளிற் கொண்டுபோகப்பட்டன. இன்று நமது நாடுகளில் ஆங்காங்கே நடைபெறும் சந்தைகளுக்கும் முற்காலச் சந்தைகளுக்கும் அதிக வேறுபாடு இருக்கவில்லை.
   தமிழ் மக்கள் மேற்கு ஆசிய நாடுகளோடு மிகப் பழங்காலந் தொட்டுக் கடல் வழியாகவும் தரைவழியாகவும் வாணிகம் நடத்தினர். சிந்துநதி முகத்துவாரத்திலிருந்து எகிப்பிலுள்ள மெம்பிஸ் நகர்வரையில் பாரசீகத்துக்கூடாகப் பெரிய தரைப்பாதையிருந்தது.
   இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளின் முன் எகிப்தியர் மரக்கலம் வழியாகத் தமமிழ் நாட்டுக்கு வந்து மீண்ட வரலாறு அவர்களின் பட எழுத்துப் புத்தகங்களிற் காணப்படுகின்றது. அவர்கள் மொழியில் குரங்கு, யானைத் தந்தம் என்பவைகளைக் குறிக்க வழங்கிய பெயர்கள் தமிழ்ச் சொற்களின் திரிபுகள் என்று கருதப்படுகின்றன.
     "திரைகடலோடியுந் திரவியந் தேடு "   தெண்ணீர்க்கடல் கடந்தும் "  "நாவாய் கவிழ்ந்த நாய்கன் போல " என்னும் தமிழ் வழக்குகளால் தமிழ் மக்கள் கடல் கடந்து தொலைவிலுள்ள நாடுகளுக்குச் செந்று பொருளீட்டினார்கள் என நன்கு அறிகிறோம். சுமத்திரா, யாவா, இந்துச்சீனம் முதலிய நாடுகளில் வாணிகத்தின் பொருட்டு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சென்று தங்கிய தமிழரே அந்நாடுகளுக்கு முன் சென்று தங்கிய தமிழரே அந்நாடுகளில் அரசுகளைக் கோலி அவைகளை ஆண்டு வந்தனர். இன்றும் அந்நாடுகளில் தமிழர் நாகரிகத்தின் அடையாளங்கள் பல காணப்படுகின்றன.
  கிறித்து பிறப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பலஸ்தின் நாட்டை ஆண்ட சலமன் என்னும் அரசன் தனது மாலுமிகளை அனுப்பித் தந்தம், மயில், குரங்கு, பொன், யானைத் தந்தம், அகிற்கட்டை முதலிய பல பொருள்களைத் தமிழ் நாட்டினின்றும் பெற்றான். இப்பண்டங்களைக் குறிக்கப் பலஸ்தின் மக்கள் வழங்கிய தமிழ்ப் பெயர்கள் சிறு மாறுபாட்டுடன் எபிரேய மொழியிற் காணப்படுகின்றன.
   கறுவா, இஞ்சி, திப்பிலி, அரிசி முதலிய பொருள்களைக் குறிக்கக் கிரேக்க மொழியில் வழங்கிட பெயர்களும் தமிழ்ச் சொற்களின் திரிபுகள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் எகிப்து, மேற்கு ஆசியா, சீனம் முதலிய நாடுகளுக்குச் சென்று வாணிகம் நடத்தியதற்கு ஆதாரங்கள் பல பிறமொழிகளில் எழுதப்பட்ட பழைய நூல்களிற் காணப்படுகின்றன.
   தமிழர் 6000 ஆண்டுகளுக்கு முன்னரேயே நாணயங்களின் பயனை அறிந்திருந்தனர். இது பழைய சிந்துவெளிப் புதைபொருல் ஆராய்ச்சியால் நன்கு தெளிவுறுகின்றது.

நமது நாடு தொடரும்....

இயற்கை அண்ணை அழகு, புத்துணர்ச்சி, உற்சாகம் இவையனைத்தையும் தரும் ...

Friday, August 5, 2011

மிளகு

    மிளகு இந்தியாவில் பெரும்பாலும்  மலபார் கடற்கரை தென் இந்தியாவின் வெப்பமான, ஈரப்பதமான பகுதியில் விளையும். தமிழ்நாட்டிலும், கேரளாவிலும்,  மலைப்பகுதி எஸ்டேட்களிலும், தமிழகத்தில் ஊட்டி, குன்னூர், ஏலகிரி, ஏற்காடு மலைப்பகுதி எஸ்டேட்களிலும் குடகு மலையிலும் அதிகமாகமான  இடங்களில் மிளகு பயிரிடப்பட்டுகிறது. இந்த பகுதியில் தரம் உயர்ந்த மிளகு உற்பத்தியாகிறது, தாவரங்கள் 3 ஆண்டுகளுக்கு பிறகு பழம் தரத் துவக்குகின்றன 40 ஆண்டுகள் வரை ஒவ்வொரு மூன்றாவது ஆண்டும்  தொடர்ந்து பழம் கொடுக்கிறது. இது  சிவப்பு மாறும், பச்சை நிறத்தில், கோள  வடிவத்தில் இருக்கும்.
    இந்தியாவிலிருந்து ஐரோப்பா, சைனா, மத்திய கிழக்கு நாடுகள் வட ஆப்பிரிக்காவிற்குப் பரவிற்று. மிளகு ஒரு கொடிவகையைச் சார்ந்தது. இதன் இலைகள் வெற்றிலை போல் பெரிதாக இருக்கும் மரத்தில் பற்றி வளரும்.
    இந்திய சர்வதேச தரமான மிளகு அதிக அளவு ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடுகளில் ஒன்றாக உள்ளது. கேரளா தென் மாநில மொத்த மிளகு உற்பத்தியில் 90% கொண்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் முக்கிய உற்பத்தி மையங்கள் உள்ளன.
   சுக்கு, மிளகு திப்பிலி இந்த மூன்றையும் 'திரிகடுகம்'னு சொல்வாங்க. சித்த மருந்துகள்ல பெரும்பாலும் இந்த மூன்றுல ஏதாவது ஒன்று கண்டிப்பாக இருக்கும். ஒரு காலத்தில் மிளகு வானிகம் கொடிகட்டிப் பறந்தது. அந்தக் காலத்தில் ஒருவர்கிட்ட இருக்கிற மிளகோட அளவை வைத்தே, அவரோட செல்வத்தைக் கணக்கிடுவாங்கலாம். எல்லா சமையலுக்கும் சுவை சேர்க்க மிளகு பயன்படுத்தப்படுகிறது. அதனால் தான் சாப்பட்டு மேஜையில் உப்பையும், மிளகையும் வச்சிருப்பாங்க.
    கருமிளகு, வெள்ளைமிளகு வால்மிளகு என்று மூன்று வகை இருக்கிறது. காரமும், சூடும் நிறைந்த உணவுப் பொருள் என்பதால், நன்கு பசியைத் தூண்டிவிடும் சக்தியும், உணவை செரிக்கச் செய்யும் திறனும் கொண்டது. மேலும், சுவை உணர்வை அதிகரித்து, உமிழ்நீரை நன்கு சுரக்கச் செய்யும். சுவாசக்கோளாறுகளை நீக்கும்; சிறுநீரைப் பெறுக்கும்; உடலை சுறுசுறுப்பாக்கும்.
     இருமலை குணப்படுத்த மிகச் சிறந்த வீட்டு மருந்து, மிளகு. இரண்டு அல்லது மூன்று மிளகை வெறும் வாயில் போட்டு மென்று, அந்த சாற்றை விழுங்கினால் கொஞ்ச நேரத்தில் இருமல் கட்டுப்படும். மிளகின் காரத்தைத் தாங்க முடியாதவங்க, மிளகைப் பொடியாக்கி பாலில் கலந்து குடிக்கலாம்.

இயற்கையின் எழிலினை நாம் கண்டு ரசிக்கும் போது அவற்றைப் படைத்த ஆண்டவன் நம் கண்களுக்குத் தெரியாமலா போவான்?

Thursday, August 4, 2011

கடல் காடுகள்

     நதிகள், ஓடைகள் போன்றவற்றின் பிறப்பிடம் காடுகள்தான். அவை தான் நீரின் ஆதாரம். ஆனால் ஆச்சரியமாக நீருக்கு அடியிலும் காடுகள் இருக்கின்றன. நீர்காடுகளில் இரண்டு வகை உள்ளன.
    முதல் வகையை அலையாத்தி காடுகள் என்கிறார்கள். இது பெரும்பாலும் கடல்நீருக்கு அருகிலேயே வளரும். இந்த தாவரங்கள், தண்டுகளிலும், கிளைகளிலும் உள்ள துவாரங்களின் மூலம் ஆக்சிஜனை உள் இழுத்துக்கொள்ளும். நீர்மட்டம் அதிகரிக்கும் போது, சிறிய குழல்களை வெளியே நீட்டி சுவாசிக்கும். கடலுக்கு அருகில் இருந்தாலும், உப்புத்தன்மையை வடிகட்டியே நீரை எடுத்துக்கொள்ளும். இதன் இலைகள் மூலமாக நீர் ஆவியாதல் மிக மெதுவாகவே நடக்கும்.
      சுனாமி, கடல் கொந்தளிப்பு போன்ற காலங்களில் அதன் வேகத்தை கட்டுப்படுத்தி இந்த அலையாத்தி காடுகள் நம்மை காப்பாற்றுகின்றன. உலகின் மிகப் பெரிய அலையாத்திக் காடுகள் பிரேசிலில் உள்ளன. இதன் பரப்பளவு 26 ஆயிரம் சதுர கிலோ மீட்டர். இரண்டாவது இடம் நமது பிச்சாவரம் கடற்கரை. கடந்த சில ஆண்டுகளாக பிச்சாவரத்தில் அலையத்திக் காடுகளில் அடர்த்தி அதிகரித்து வருகிறது.
      இரண்டாவது வகை காடுகள் கெல்ப் காடுகள் என்கிறார்கள். இவை கடலுக்கு அடியில் வளரும் பூஞ்சை வகை செடிகள். செடிகள் என்றால், ஏதோ நம்வீட்டில் வளர்க்கும் செடிகள் போன்று கிடையாது. இந்த செடிகள் ஒவ்வொன்றும் 20 முதல் 40 அடி உயரம் வரை வளர்ந்து மிரட்டும். உலகில் இருக்கும் மிக முக்கியமான காடுகளின் பட்டியலில் இந்த கெல்ப் காடுகளும் உண்டு.
    கடலுக்கு அடியில் எந்த தப்பவெப்ப சூழலிலும் இவை வளரும். நீருக்கு அடியில் கிடைக்கும் வெளிச்சம், நீரில் கலந்திருக்கும் ஆக்சிஜன், பாறைகளில் இருக்கும் தாதுக்களை உட்கொண்டு இவை வளருகின்றன. மெல்லிய நாணல் போல இருக்கும் ஆயிரக்கணக்கான தாவரங்கள் ஒன்று சேர்ந்து நிற்பது போல இருக்கும் ஆயிரக்கணக்கான தாவரங்கள் ஒன்று சேர்ந்து நிற்பது தான் இந்த கெல்ப் காட்டின் பலம்.
    கெல்ப் காடுகள் குளிர், ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீரில் ஏற்படுகின்றன மற்றும் கடல் சூழலில் மிக அழகான மற்றும் உயிரியல் ரீதியாக வாழ்விடங்கள் உள்ளன. அவைகள் ஆழமற்ற திறந்த கரையோர நீர் உலகம் முழுவதிலும் காணப்படுகின்றன, மற்றும் பெரிய காடுகள் ஆர்க்டிக் மற்றும் அண்டார்க்டிக் வட்டங்கள் இரண்டிலும் நீண்டு இருக்கிறது, 20 º C விட குறைவான வெப்பநிலை தடை செய்யப்படுகின்றன. ஒளிச்சேர்க்கை  சார்ந்திருக்கிறது ஆழமற்ற நீர் அவற்றை கட்டுப்படுத்துகிறது மற்றும் அவைகள் 15-40m விட அரிதாக மிகவும் ஆழமாக. கெல்ப் தாவர இனமே மிகவும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி விகிதங்கள் சில பொதுவான ஒரு திறனை கொண்டிருக்கின்றன. கடலுக்கு அடியில் ஏற்படும் நீரோட்ட மாறுபாடு, சுனாமி போன்றவற்றின் வேகத்தை இவை தடுக்கின்றன. கிரகத்தில் ஒவ்வொரு இயற்கை அதிசயம் போல், கெல்ப் காடுகள் அச்சுறுத்தல் கீழ் பெரும்பாலும் உள்ளன. முக்கிய பிரச்சினைகள் "கடல் மாசுபாடு மற்றும் நீர் தரம், கடற் பாசிகள் அறுவடை மற்றும் மீன், நுண்ணுயிர், காலநிலை மாற்றம் இவற்றின் முக்கிய எதிரி, மனிதனால் ஏற்படுத்தப்படும் சுற்றுச்சூழல் மாசுதான்.

இயற்கையின் அதிசயம் கெல்ப் காடுகளை காக்க கடல் மாசுபடாமல் இருக்க உதவுவோம்.....

Tuesday, August 2, 2011

குதிரை நண்டு (Horseshoe Crab)

   குதிரை நண்டு அல்லது கிங் நண்டு என்றும் அழைக்கப்படுகிறது. இது பல மில்லியன் வருடங்களாக பூமியில் வாழ்கிறது, இது ஒரு ''நாடு படிம'' என்று அழைக்கப்படுகிறது. தட்ப வெப்பமான கடல் தரையில் காணப்படும். இது நண்டு என்று அழைக்கப்பட்டாலும்,  ஆனால் சிலந்திதேள் அல்லது சிலந்தி குடும்பத்தை சேர்ந்தவை.
    குதிரை நண்டு நான்கு இனங்கள் உள்ளன. மூன்று இனங்கள் இந்தியா, ஜப்பான், மற்றும் இந்தோனேஷியா சுற்றி நீரில் இருக்கிறது. நான்காவது இனங்கள், பாலிஃபெமஸ், வடக்கு மெயின் இருந்து யுக்காட்டன் தீபகர்ப்பம் வட அமெரிக்கா கிழக்கு கடற்கரை கடல் பகுதியில் வாழ்கிறது.
    ஆண் குதிரை நண்டு பெண் குதிரை நண்டை விட சிறியதாக இருக்கும். இது இரண்டு அடி நீளம் இருக்கும். உயிருடன் இருக்கும்போது அது  பழுப்பு, பச்சை நிறத்தில் இருக்கும். அது இறந்த பிறகு, கரும் பழுப்பு நிறமாக இருக்கும். குதிரை நண்டுடின் தோற்றம் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததற்கு மிகவும் சிறிதளவே மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று கருதப்படுகிறது. அவை  அடிவயிற்று கால்களின் கடைசி ஜோடியில்  இணைக்கப்பட்ட செவுள்கள் மூலம் சுவாசிக்கிறன. வாய் உடலின் மையத்தில் உள்ளது. கண்கள் ஷெல்லின் முன் பகுதியின் மேல் உள்ளன. குதிரை நண்டு ஒரு கடினமான வெளிப்புற ஷெல், ஐந்து கால்கள் ஜோடிகள் மற்றும் குதிரை நண்டு மாறாக ஒரு தற்காப்பு ஆயுதமாக விடா நீச்சல் அதே நேரத்தில் திசை மாற்றப் பயன்படுத்தும் ஒரு நீண்ட, மெல்லிய வால் கொண்டிருக்கிறது.
   குதிரை நண்டுகள் பாலியல் முதிர்ச்சி அடைய 9-10 ஆண்டுகள் ஆகின்கின்றன மற்றும் 16-17 ஆண்டு வரை உயிர் வாழும்.  அவர்கள் 2 அடி மற்றும் 10 பவுண்டுகள் எடை வரை வளரும். அவைகள் பெரும்பாலும் கடலின் கீழ்ப்பகுதியில் இருக்கும்.
   குதிரை நண்டுகள் இருளில் வெளியில் உணவு தேடும் புலால் உண்ணுகிற விலங்குகளை போல், குதிரை நண்டுகள்  கடல் புழுக்கள், சிறிய மெல்லுடலிகள் மற்றும் ஓட்டுமீன்கள் உட்பட  சாப்பிடுகின்றன.
    பெண் குதிரை நண்டுகள் ஒரே நேரத்தில் 60,000 120,000 முட்டைகள் இடுகிறது. இனச்சேர்க்கை பிறகு, பெண் குதிரை நண்டு மணலில் 15-20 செ.மீ. (6-8 ல்) ஒரு ஆழத்தில் பொந்துகள் ஒரு கூட்டினை அமைக்கும். இந்த கூடுகளை பொதுவாக கடற்கரை குறைந்த மற்றும் உயர் அலைகள் இடையே அமைக்கிறது.
   சில பகுதிகளில் குதிரை நண்டு மக்கள் நீர் மாசுபாடுத்தல் மற்றும் அதிகமான மீன்பிடிதலால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட போதிலும், இன்று, குதிரை நண்டு இன்னும் உலகின் வெப்பமான கடற்கரைகள் பரவலாக காணப்படுகிறது.
  
 இயற்கை வளங்கள் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் விலங்குகள்...