Saturday, December 19, 2009இந்தமாதம் எலக்ட்ரிக் பில்லை பார்த்தவுடன் ஒரே ஷாக். பில் எக்கச்சக்கமா எகிறி போயிருந்தது.


மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்த சில டிப்ஸ்...

   பேன் மற்றும் லைட்டின் தேவை இல்லாதபோது, அதை நிருத்தி வையுங்கள். அறையைவிட்டு வெளியே சென்றால் பேன் மற்றும் லைட் சுவிட்சை ஆப் செய்துவிட்டு செல்லுங்கள். நீங்கள் மட்டுமின்றி, உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் இந்தப் பழக்கத்தை கடைப்பிடிக்கும்படி வலியுறுத்துங்கள்.

     மிக்சி, பிரிஜ், அயன் பாக்ஸ், கிரைண்டர், வாஷிங் மெஷின், போன்ற வீட்டு உபயேகப் பொருட்களின் தேவை இல்லாதபோது, அவற்றின் பிளக்கை பிடுங்கி வைத்துவிடுங்கள் அல்லது சுவிட்சை ஆப் செய்யுங்கள். பிரிஜ்ஜை அனாவசியமாக அடிக்கடித் திறந்து மூட வேண்டாம். நீங்கள் திறந்து மூடும் ஒவ்வோரு முறையும் ஏகப்பட்ட மின்சாரம் வீணாகிறது.
அரை மணி நேரத்திற்கு அதிகமாக அதிகமாக கம்ப்யூட்டரைப் பயன்படுத்தாமல் இருக்க நேரிட்டால், கம்ப்யூட்டரை ஷட்டவுன் செய்துவிடுங்கள்.
     டிம்மர் விளக்குகளைப் பயன்படுத்தினால் மின்சாரமும் குறைவாகவே செலவாகும். இந்த டிம்மர் விளக்குகள் குறைவான வெளிச்சத்தை கொடுக்க கூடியவை. தேவைபட்டால் வெளிச்சத்தின் அளவை அதிகமாகக் கூட்டியும் வைத்துக் கொள்ளலாம். படிக்கும் போதும் எழுதும்போதும் மேஜை விளக்குகளைப் பயன்படுத்துங்கள். இதன் மூலம் அறை முழுவதும் ஒளிரக்கூடிய விளக்குகளைப் பயன்படுத்துவது தவிர்க்கப்படும். மின்சாரமும் சேமிக்கப்படும்.

முடிந்த அளவு பகலில் இயற்கையாகக் கிடைக்கும் சூரிய வெளிச்சத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மின்சாரத்தை சிக்கனமாகப் பயன் படுத்தி வீட்டுக்கும், நாட்டுக்கும் பயன் அடையச் செய்வோம்.

சோ.ஞானசேகர்.

Tuesday, December 15, 2009

சுவாமி ஐயப்பன்


    கார்த்திகை மதம் ஆரம்பித்து விட்டால் போதும் பலர் ஐயப்பன் சாமி கோவிலுக்கு மாலை போட்டு 41 நாள் விரதம் இருந்து சென்று வருவார்கள். நிறையப்பேருக்கு ஐயப்பன் கோவிலுக்கு ஏன் போகிறோம் என்று தெரியாது. எல்லோரும் போகிறார்கள் நாமும் போய்வருவோம் என்று போய்வருகிறார்கள்.

   அந்தக்காலத்தில் (மலைதேசம்) கேரளா மன்னன் போட்ட திட்டம். அங்கு நிலப்பரப்பு அதிகம் கிடையாது எல்லாம் மலைப்பரப்பு அதிகம். அதனால் அடிக்கடி உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டது இதை போக்க என்ன செய்யலாம் என்று யோசனை செய்தபோது தான் ஒரு திட்டம் உறுவானதுதான் இந்த ஐயப்பன் கோவில் வழிபாடு.

   ஆடி மாதம் விதைவிதைத்து ஆவனி, புரட்டாசி மாதங்களில் நடவு முடிந்திருக்கும். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் அடைமழை பெய்யும் தைமாதம்தான் அறுவடை நடைபெரும் அதுவரை உணவுத்தானியம் கையிருப்பு குறைவாக இருக்கும். இதை சமாளிக்க ஐயப்பனுக்கு கோவிலுக்கு மாலைபோடுதல் ஆரம்பித்தது. எப்படி இதில்சாத்தியம் இதில் என்ன என்ன அடங்கியிருக்கிறது. இதில் பல திட்டங்கள் அடங்கியிருக்கிறது.  உணவுப்பற்றாக்குறையை போக்கும் வீட்டுக்கு ஒருவர், அல்லது இருவர் மாலை போட்டு இருந்தால் ஒருவர் ஒரு வேலை சாப்பாடு மட்டும் சாப்பிட்டால் இரண்டு வேலை சாப்பாடு மிச்சம். இதேமாதிரி வீட்டுக்கு ஒருவர் இருவர் இருந்தால் நாட்டில் எவ்வளவு உணவுத் தானியங்கள் சேமிக்கப்படும். இதில் உணவு பகிர்வு நடைபெருகிறது.ஒரு வேலை உணவு உண்டு இரண்டு வேலை நோம்பு இருந்து மலை மேல் சென்று அங்கு உள்ள மூலிகை செடிகளின் காற்றை சுவாசித்து வரும் போது உடல் ஆரோக்கியம் அடைகிறது. இந்த இரண்டு மாதம் குளிராக இருக்கும் அந்தநேரத்தில் கனவன் மனைவி சேர்ந்தால் குழந்தை உருவாகக்கூடிய வாய்புகள் அதிகம் அதனால் மாலை போட்டுவிட்டால் அதை தவிற்கலாம்.

  பொருளாதரம், மருத்துவம், குடும்பகட்டுப்பாடு இப்படி பலவழிகளில் நாட்டுக்கு நன்மை உண்டு.

   இது மட்டும் அல்ல அந்த மாநிலத்துக்கு நாம் தெரிந்தோ தெரியாமலே நிறைய நன்மை செய்து கொண்டு இருக்கிறோம்.

  இங்கு இருந்து ஒரு ஐயப்ப பக்தர் இருமுடி கட்டி போகும் போது அதற்குள் தேங்காய், நெய், அரிசி இத்தனையும் கொண்டு செல்வார். அரிசி அவர் சாப்பாட்டுக்கு அவரே இங்கிருந்து அரிசி கொண்டு செல்கிறார். தேங்காய் இது அதிகமாக விளையும் மாநிலம் கேரளா அங்கு விளைந்த தேங்காயை நம்மிடம் விற்று காசாக்கிவிட்டு நம்மலை வைத்தே மீண்டும் அங்கே கொண்டு வரவைக்கிறார்கள். நெய் அங்கு ஆடு, மாடு, மற்றும் கால்நடைகள் அதிகம் வளர்பது கிடையாது. ஏன்னென்றால் கால்நடைகள் வளர்த்தால் காடுகள் அழிந்து விடும் என்று அதிகம் வளர்பதில்லை. அதலால் பசு நெய் கிடைப்பது குறைவு. அதனால் இங்கிருந்து நெய் கொண்டு செல்வார்கள். நாம் கொண்டு சென்ற நெய் டின்களில் அடைத்து நம்மிடம்மே காசாக்கிறார்கள். இதுமட்டும் அல்லாமல் ஒரு ஆற்றை கடக்கும் போது அழுதா நதி கடக்கும் போது ஆளுக்கு ஒரு கல் எடுத்து கல்லிடும் குன்றில் கொண்டு போடவேண்டும். எப்படி நம்மலை வைத்தே நதியை தூர்வாரும் ஐடியா. இது போக ஆள்கள் வந்து போனதால் காடு அழிந்து விடும் என்று 18 வருடம் வந்தால் ஆளுக்கு ஒரு தென்னங்கன்று கொண்டுவர வேண்டும் எண்று ஒரு நிபந்தனை. ஆக நம்மலை வைத்தே காடு அழியாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள்.

   இங்கிருந்து கோடிக்கணக்கான பக்தர்களால் பல கோடிக்கணக்கான பணம் வருமானம் பெருகிறது கேரளா மாநிலம். அனால் நமக்கு உரிமையுள்ள முல்லை பெரியார் அணை மற்றும் பல இடத்தில் ஓடும் ஆறுகளின் நீர் வீனாக கடலில் கலக்கும் தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கொடுக்க மறுக்கிறார்கள். நாம் எப்படி இருக்கிறோம் என்று பாருங்கள். இங்கு எத்தனை லட்சம் கேரள மக்கள் இருக்கிறார்கள் வீடு, நிலம் என்று வசதியாக இருக்கிறார்கள் ஆனால் நாம் அங்கு கை அகல நிலம் வாங்கமுடியாது. மேலும் இங்கு டீகடை நடத்தும் ஆள் யார் 100க்கு 90பேர் மளையாளி எப்படி நம்முடைய தண்ணீரை எடுத்து நமக்கே விற்று காசாக்குறங்க பாருங்க. மேலும் தமிழ்நாட்டில் புகழ்பெற்ற கோவில்கள் நிறைய உண்டு அங்கே போய் வாருங்கள் மலைமேல் நிறைய கோவில் இருக்கிறது அங்கு சென்று வரலாம் மேற்கு தொடர்ச்சி மலையில் நிறைய இடம் உண்டு சதுரகிரி மலை, (அகத்தியர்வாழ்த பூமி) பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை சித்தர்கள் நிறைந்த வணங்கள் உண்டு அங்கு சென்று வாருங்கள் உடம்பும் மணமும் மகிழ்சியாக இருக்கும்.

  இதை பார்க்கும் அன்பர்கள் நான் பிரிவினை வாதியாகவும், நாத்திகனகவும், பார்க்கவேண்டாம் எனக்கு கடவுள் நம்பிக்கையுண்டு ஆனால் மூடநம்பிக்கை இல்லை. தாய்நாட்டு பற்று உண்டு,  தாய்மொழி பற்று உண்டு.

சோ.ஞானசேகர்..

Saturday, December 12, 2009

கிரடிட் கார்டு உபயோகிப்போர் உசார்  சமிபகாலமாக கிரடிட் கார்டு உபயோகிப்போர் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. அதை சரியான முறையில் உபயோகித்தால் நல்லது. ஒவ்வெரு பேங்கும் சில விதி முறைகள் வைத்துள்ளது.  கார்டு உபயோகிப்போர் சரியான முறையில் பேங்குக்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் பணத்தை செலுத்தினால் எந்த பிரச்சனையும் இல்லை. மாறாக செலுத்தினால் மிகவும் சிக்கலைச் சந்திக்க நேரிடும். இது ஒருபுறம் இருக்க நாம் கார்டு நம் கையில் இருக்க வேரு ஒரு நபர் நம் கணக்கில் லட்சக்கணக்கில் பணம், பொருள் வாங்கியிருப்பார்.

   இது எப்படி சாத்தியம் இதோ இப்படியும் நடக்கிறது. ரெஸ்ட்ராரெண்ட், பெட்ரோல்பங், நகைக்கடை இன்னும் சில இடங்களில் நாம் கார்டை உபயோகிக்கிறேம். அப்படி உபயோகிக்கும் போது அங்குள்ள ஊழியர்களால் நம்முடைய கார்டின் அடையாள எண் பதிவு செய்யப்படுகிறது. எப்படியென்றால் ஸ்கிரிம்மர் (படம்) மூலம் நம் கார்டு அவர்கள் கையில் கொடுத்தவுடன் அவர்கள் உள்ளங்கையில் வைத்துள்ள ஸ்கிரிம்மர் மூலம் நம் கார்டில் உள்ள டீட்டைலை பதிவுசெய்து விடுகிறார்கள். பின்பு யூஎஸ்பிகனைக்ட் மூலம் கம்பியூட்டரில் பதிவுசெய்து வெளிநாட்டில் உள்ள அவர்கள் பாஸ்களுக்கு அனிப்பிவிடுவார்கள். அவர்கள் சைனீஸ் மேட் பிளாஷ்டிக்கார்டில் அவர்கள் ஸ்கிரிம்மர் மூலம் பதிவு செய்துவிடுவார்கள். உண்மையான கார்டு பர்சில் நம்மிடம் பத்திரமாக இருக்கும் போலிகார்டுல நம் பணத்தில் பொருள் வாங்கி குவிப்பார்கள். இங்கு உள்ள ஏஜண்டுகளுக்கு கமிஷன் கிடைக்கும். எப்படி எல்லாம் நாட்டில் நடக்குது பாருங்க.

சோ.ஞானசேகர்.

Thursday, December 10, 2009

சுற்றுச்சூழல் பாதிப்பு,​பருவநிலை மாறுபாடு அச்சுறுத்தல்:40 ஆண்டுகளில் 100 கோடி மக்கள் இடம்​பெயரும் அபாயம்
     பரு​வ​நிலை மாறு​பாடு மற்​றும் சுற்​றுச்​சூ​ழல் பாதிப்​பால் வரும் காலங்​க​ளில் மனித சமு​தா​யம் பெரும் பாதிப்​புக்​குள்​ளாக உள்​ள​தாக ஆய்​வில் தெரி​ய​வந்​துள்​ளது.​

​ ​ இத​னால் தென்​கி​ழக்கு ஆசியா,​​ மத்​திய அமெ​ரிக்கா,​​ மேற்கு ஆப்​பி​ரிக்​கா​வின் ஒரு பகுதி ஆகிய பகு​தி​க​ளில் வாழும் மக்​கள்​தான் கடும் பாதிப்​புக்​குள்​ளாக உள்​ள​தா​க​வும் புலம்​பெ​யர்ந்த மக்​க​ளுக்​கான சர்​வ​தேச அமைப்பு நடத்​திய ஆய்​வில் தெரி​ய​வந்​துள்​ளது.​

​   பரு​வ​நிலை மாறு​பாடு,​​ சுற்​றுச்​சூ​ழல் பாதிப்​பால் இந்த பகு​தி​க​ளில் இருந்து அடுத்த 40 ஆண்​டு​க​ளில் 100 கோடி மக்​கள் இடம்​பெ​யர்வு மற்​றும் புலம்​பெ​ய​ர​லாம்.​

​  கடந்த 20 ஆண்​டு​க​ளாக இயற்கை பேர​ழி​வு​கள் இரு​ம​டங்கு அதி​க​ரித்​துள்​ளன.​ சமீ​ப​கா​ல​மாக பூகம்​பம்,​​ வறட்சி,​​ வெள்​ளம் ஆகி​யவை மனித சமு​தா​யத்​துக்கே பெரும் சவா​லாக உரு​வெ​டுத்​துள்​ளன.​

மனி​தன் உயிர்​வாழ்​வ​தற்கு அவ​சி​ய​மான காற்று,​​ நீர்,​​ நிலம் ஆகிய சீர்​கே​டும் அதி​க​ரித்து வரு​கி​றது.​

​ அதே​போல,​​ இந்த நூற்​றாண்​டின் இறு​திக்​குள் புவி​யின் வெப்​ப​நி​லை​யும் 2 டிகிரி சென்​டி​கி​ரேட் முதல் 5 டிகிரி சென்​டி​கி​ரேட் வரை அதி​க​ரிக்க வாய்ப்​புள்​ளது.​

​ இது​போன்ற கார​ணங்​க​ளால் மனித சமு​தா​யம் அதிக இன்​னல்​களை சந்​திக்க வேண்​டி​யுள்​ளது.​ பசுமை இல்ல வாயுக்​க​ளால் ஏற்​ப​டும் பரு​வ​நிலை மாறு​பாட்​டால் கடல் மட்​டம் உயர்ந்து வரு​கி​றது.​ இது கட​லுக்கு மத்​தி​யில் அமைந்​துள்ள நாடு​க​ளுக்கு அச்​சு​றுத்​த​லாக உள்​ளது.​ கடல் மட்​டம் தொடர்ந்து உய​ரு​மா​னால் கட​லுக்கு மத்​தி​யில் உள்ள நாடு​கள் மூழ்​கிப்​போ​கும் அபா​ய​மும் உள்​ளது.​

​ இத​னால் இது​போன்ற நாடு​க​ளில் வசிக்​கும் மக்​கள் தற்​போதே எதிர்​கால அபா​யத்தை நினைத்து பிற நாடு​க​ளுக்கு புலம்​பெ​யர ஆரம்​பித்​து​விட்​ட​னர்.​ எங்​கெல்​லாம் சுற்​றுச்​சூ​ழல் அதி​க​ரித்​துள்​ளதோ அந்​நாட்​டைச் சேர்ந்த மக்​கள் அரு​கில் உள்ள நாடு​க​ளுக்கு புலம்​பெ​ய​ரத் தொடங்​கி​யுள்​ள​னர்.​

​ சில நாடு​க​ளில் சுற்​றுச்​சூ​ழல் பாதிப்​பு​மிக்க பகு​தி​க​ளில் வசிப்​ப​வர்​கள் பாதிப்​பில்​லாத பகுதி நோக்கி இடம்​பெ​யர்​கின்​ற​னர்.​ இத​னால் ஓரி​டத்​தி​லேயே அதிக மக்​கள் குவி​யும் நிலை ஏற்​பட்​டுள்​ளது.​ இது மேலும் சுற்​றுச்​சூ​ழல் பாதிப்​புக்கு வழி ஏற்​ப​டுத்​து​கி​றது.​

​ அது​மட்​டு​மல்​லா​மல் ஓரி​டத்​தில் இருந்து மற்​றொரு இடத்​துக்கு மக்​கள் இடம்​பெ​ய​ரும் போது சில நேரங்​க​ளில் மக்​க​ளி​டையே மோத​லும் தவிர்க்க முடி​யா​த​தாகி விடு​கி​றது.​

இது எதிர்​கா​லத்​தில் பெரிய பிரச்​னை​யாக உரு​வெ​டுக்க வாய்ப்​புள்​ள​தா​க​வும் புலம்​பெ​ய​ரும் மக்​க​ளுக்​கான சர்​வ​தேச அமைப்​பின் ஆய்​வில் தெரி​ய​வந்​துள்​ளது.

நன்றி தினமணி நாளிதழ்...

சோ.ஞானசேகர்.

Monday, December 7, 2009


தக்காளி    இன்று தக்காளி ஒரு பிரசித்தமான காய்கறி. தக்காளி இல்லாமல் நமது இந்திய உணவுகள் இல்லை. ஆனால் மக்கள் முதன் முதலாகத் தக்காளியைப் பார்த்தபோது அவர்கள் மனதில் இரண்டு கேள்விகள் தோன்றின: இது நஞ்சானதா? சாப்பிடக்கூடியதா? இது பழமா அல்லது காய்கறியா?

   ஸ்பானிய சாகசப் பயணியான ஹெர்னாண்டோ கோர்ட்டஸ், தென் அமெரிக்காவில் இருந்து ஐரோப்பாவிற்க்குத் தக்காளி விதைகளைக் கொண்டு வந்தார். ஆனால் இது ஆரம்ப காலத்தில் ஓர் அலங்காரத் தாவரமாகத்தான் வளர்க்கப்பட்டது. தக்காளி ஒரு நச்சுவகைத் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது என்பதால் பலரும் இதை விலக்கினர். தக்காளியானது 'குடல் வால்' பிரச்சினையையும், புறறுநோயையும் கூட ஏற்படுத்தக்கூடும் என்று 18-ம் நூற்றாண்டு வரை மருத்துவர்கள் மக்களை எச்சரித்து வந்தனர்.

  அதன்பின் தக்காளியின் இலைகளும், தண்டுகளும்தான் நச்சுத்தன்மை வாய்ந்தவை, ஆனால் தக்காளிப் பழம் ருசியானது என்ற முடிவுக்கு மக்கள் வந்தனர். அதையடுத்து தக்காளி விறுவிறு வென்று புகழ் பெறத் தொடங்கியது. பிரெஞ்சுக்காரர்கள் இது நேசத்தைத் தூண்டுவதாகக் கருதி 'பொம்மே டாமர்' என்று பெயர் சூட்டினர். அதவது 'அன்பு ஆப்பிள்' என்று அர்த்தம்.

  தக்காளியை முதன்முதலில் பெருமளவில் விளைவித்தவர்கள் இத்தாலியர்களும், ஸ்பானியர்களும் ஆவர். அவர்கள் இதை 'பொம்மி டோரோ' (தங்க ஆப்பிள்) என்று அழைத்தனர். காரனம் அவர்கள் விளைவித்த தக்காளி வகை மஞ்சள் நிறமாக இருந்தது.

  தாவரவியல்படி தக்காளியானது ஒரு பழமாகும். 1893-ல் அமெரிக்காவில் காய்கறிகளுக்கு விதிக்கப்படும் வரியைத் தவிர்க்க, அந்நாட்டில் தக்காளியை இறக்குமதி செய்த ஒருவர் இது ஒரு பழம் என்று வாதிட்டார். ஆனால் அந்நாட்டு உச்ச நீதிமன்றம், தக்காளி ஒரு காய்கறி என்று தீர்பளித்தது. தக்காளி எப்போதும் ஒரு காய்கறியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிததே தவிர, பழமாக அல்ல; எனவே அது வரிவிதிப்புக்கு உரியது என்றது அமெரிக்க நீதிமன்றம்.

  தக்காளியானது 10சென்டி மீட்டர் சுற்றளவுக்குப் பெரிதாகவும் இருக்கலாம், வெறும் 2சென்டி மீட்டர் அகலத்தில் சிறிதாகவும் இருக்கலாம். தக்காளி என்றாலே நமக்குச் சிவப்பு நிறம்தான ஞாபகத்துக்கு வரும். ஆனால் பச்சை, மஞ்சள், ஆரஞ்சு நிறத்திலும் கூட தக்காளி இருக்கும். கறுப்பு, இளஞ்சிவப்பு, பழுப்பு, ஊதா நிறம் உடைய அறிய வகை தக்காளிகளும் உண்டு.

  தக்காளியானது கச்சிதமான உருண்டை வடிவிலோ, பேரிக்காய் வடிவிலோ இருக்கலாம்.

  செர்ரி தக்காளி, திராட்சைத் தக்காளி போன்றவை அப்படியே சாப்பிடப்படுகின்றன அல்லது பச்சை காய்கறிக் கூட்டுகளில் பயண்படுத்தப்படுகின்றன. பொதுவாகத் தக்காளியானது சூப், தக்காளிப் பசை அல்லது 'சாஸ்' தயாரிக்கப்படுகிறது.

  தக்காளி பல்வேறு வைட்டமின்களுடன், 'லைக்கோபீன்' என்ற வேதியப் பொருளையும் கொண்டுள்ளது. அதுதான் தக்காளிக்கு சிவப்பு நிறத்தை அளிக்கிறது. 'லைக்கோபீன்' இதைய நோயையும், புற்று நோயையும் தடுக்கிறது. சமைத்த தக்காளியில் இருந்து 'லைக்கோபீனை' நமது உடம்பு உடனே ஏற்றுககொள்கிறது.

  தக்காளி தனது இலைகளை பூச்சிகள் சாப்பிடுவதை தடுக்க, சில வேதியப் பொருட்களைச் சுரக்கிறது. அவை பூச்சிகளுக்கு அஜீரணத்தை ஏற்படுத்துகின்றன.

  தற்போது உலக அளவில் அதிகமாக விளைவிக்கப்படும் காய்கறிகளில் ஆறவது இடத்தில் தக்காளி உள்ளது. இன்று உலகளவில் பனிரெண்டரைக் கோடி டன் தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது. தக்காளி விளைவிப்பதில் சீனா உலகத்திலேயே முதலிடத்தில் உள்ளது. நமது இந்தியா நான்காவது உளளது.

நன்றி தினத்தந்தி

சோ.ஞானசேகர்

Tuesday, November 17, 2009

ஜப்பான் ரெயில் நிலையங்கள் உஜாலாவுக்கு மாறுகிறது.   ஜப்பனில் ஓடும் ரெயில்கள் முன்பு குதித்து தற்கெலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு போகிறது. தற்கொலை எண்ணத்தை மாற்ற என்ன செய்யலாம் என்ற ஆராய்ச்சிகள் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க, தற்சமயம் ஒரு புதுமையான ஐடியாவை ஜப்பானில் செயல்படுத்துகிறார்கள்.

  பிளாட்பாரங்களின் முனைகளில், நீல வண்ணத்தை மென்மையாகப் பரப்பும் விளக்குகளைப் பெருத்தியிருக்கிறார்கள். நீல வண்ணம் சஞ்சலமற்ற மனதுக்கு ஒருவித ஆறுதலையும் நிம்மதியையும் தருவதக ஆராய்ச்சிகள் ஓரளவு நிரூபிக்கின்றன.

  டோக்கியோவின் மத்திய ரெயில் பாதையில் உள்ள 29 ரெயில் நிலையங்களிலும் 'ப்ளு லைட்' போடப்பட்டிருக்கிறது.

    நீல வெளிச்சம் மனித மனத்தின் எண்ணங்களை மாற்றுகிறது என்பது அறிவியல் ரீதியாக நூற்றுக்கு நூறு நிருபிக்கப்படவில்லை என்றாலும், நீலம் மனதை அமைதிப்படுத்துகிறது என்கிறார்கள் சில மனவியல் நிபுணர்கள்.

   தற்கொலை எண்ணிக்கையை குறைத்தே ஆக வேண்டும் என்ற அவசியத்தில் இப்போது ஜப்பான் இருக்கிறது. 2003 இல் தற்கொலை செய்து கொண்டவர்கள் 34427.

  சென்ற ஆண்டு ரெயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை மட்டும் கிட்டத்தட்ட இரண்டாயிரம். இந்த ஆண்டு எண்ணிக்கை அதை முறியடிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இப்படித் தற்கொலை செய்து கொள்பவர்கள் பெரும்பாலானவர்கள் பிளாட்பாரத்தின் முனைகளில் தயாரக நின்று கொண்டிருந்து ரெயில் வரும்போது சரியாகக் குதித்து விடுகிறார்கள் என்பதால் அந்த அந்த முனைகளில் நீல விளக்கு மாட்டப்பட்டு அங்கிருந்து பிளாட்பாரம் முழுவதும் நீல வண்ணத்தில் குளிக்கும்படியாக வெளிச்சம் அமைக்கப்பட்டிருக்கிறது.

    ஜப்பானில் நீல விளக்கை மாட்டியிருக்கிறார்கள்  நம்நாட்டில் ரெயிலில் தற்கொலை, எதிர்பாரமல் அடிபடுவது, செல்போனில் பேசிக்கொண்டு அடிபடுவது இவர்களை எப்படி திருத்துவது. எந்த விளக்கை மாட்டுவது. என்று தெரிந்தால் சொல்லுங்களேன்.

நீலம் நல்லது செய்தால் சரி.


படித்தது...
நன்றி....


சோ.ஞானசேகர்.

Friday, November 13, 2009

கொசு, மனிதனை விரும்பி கடிப்பது ஏன்?   "வீட்டுல நிம்மதியா படுத்து தூங்க முடியல, கொசுத் தொல்லை தாங்க முடியல" என்கிறோம். 'எப்படித்தான் அடையாளம் கண்டு வருமோ இடம் மாற்றி படுத்தாலும் தேடி வந்து கடிக்கிறது' என்று சிலர் புலம்புவதுண்டு. அப்படி என்ன விஷேசம் மனித ரத்தத்துக்கு. நாமே காரணம் சொல்லிவிடுவோம். 'உன் ரத்தம் கொசுவுக்கு ரெம்ப பிடிச்சிருக்கு, ரத்தவாடை கண்டுபிடித்து வந்து கடிக்கிறது என்போம். ஆனால் அந்த ரத்தத்தில் கொசுவுக்கு பிடித்தது எது? இந்தக் கேள்விக்கு விடை கண்டுபிடித்து இருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

   கொசுக்கள் மனிதனையும், விலங்குகளையும் கடிக்கும் தன்மை உடையது. குறிப்பாக மனிதர்களையே கொசுக்கள் அதிகம் கடிக்கிறது. கியூலெக்ஸ் என்னும் ஒருவகை கொசுவே பலவித நோய்கள் உருவாவதற்கும் காரனமாக இருக்கிறது.

   கலிபோர்னியா பல்கலைக்கழக பூச்சியியல் பற்றிய ஆய்வுக்குழு இதுகுறித்து ஆய்வில் ஈடுபட்டது. ஆய்வில் மனிதனை கொசு விரும்பி கடிப்பது ஏன் என்று தெரியவந்துள்ளது. நாமறிந்த படியே நமது உடல் வாசனையே கொசுக்களை நம்மை நோக்கி ஈர்த்து வருகிறது. கொசுவின் தலைப்பக்கத்தில் உள்ள ரத்தம் உறிஞ்சும் குழாய்தான் வாசனை அறியும் உறுப்பாக செயல்படுகிறது. மற்ற கொசுக்களைவிட கியுலெக்ஸ் இன கொசுக்களுக்கு இந்த உறுப்பு சிறப்பான அளவில் வளர்ச்சி அடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

   மேலும் நமது ரத்தத்தில் கலந்துள்ள சில ரசாயனங்களே கொசுவின் விருப்ப உணவு. இந்த குறிப்பிட்ட ரசாயனமே கொசுக்களுக்கு அழைப்பு விடுகிறது. உங்களை கொசு தேடி வந்து கடித்தால் கொசுவுக்கு பிடித்தமான ரசாயனக் கலவை உங்கள் ரத்தத்தில் அதிகம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

   "காற்றாடியை வேகமாக வைத்தும் பயனில்லை என்றால் கொசுவலை விரித்து வலைக்குள் நாம் போய்விட வேண்டியதுதான். வேறென்ன செய்ய?" இரவில் தூங்க செல்லும் முன் குளித்விட்டு தூங்க சென்றால் கொசு கடியில் இருந்து கொஞ்சம் தப்பிக்கலாம்.

படித்தது..

சோ.ஞானசேகர்.

Tuesday, November 10, 2009

துப்பாக்கிக்கலாச்சாரம்

     இன்றைய தினத்தில் உலகிலேயே துப்பாக்கிக்கலாச்சாரம் வேகமாகப் பெருகி வருவது தென்ஆப்பிரிக்காவில்தான். அதுவும் எப்படி? ஆளுக்கு ஆள் சுட்டுக் கொள்வது.

   அதிலும் சமிபத்தில் ஒரு வெள்ளை இன போலீஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் பெரும் பீதியையும், பரபரப்பையும் பிரிடோரியாவில் ஏற்படுத்திவிட்டது. அங்கே ஒரு பெரிய ஷாப்பிங் சென்டரில் ஒருவன் கம்ப்யூட்டர் திருவதைப் பார்த்த சார்ஸ் ஷீப்பரிஸ் என்ற வெள்ளை போலீஸ் அதிகாரி அவனை பாய்ந்து சென்று பிடித்தார். ஆனால் அந்தக் கொள்ளையன் அவரைச் சுட்டுக் கொன்றான். அந்த அதிகாரிக்கு மூன்று குழந்தைகள். கண்ணீர் மல்க அவரது மனைவி வெளியிட்ட அறிக்கையில் 'நாட்டில் இப்போது கிரிமினல்கள் வென்று வருகிறார்கள். இதை அனுமதிக்க கூடாது. என் கனவர் அந்தப் பாவியைச் சுட்டுக் கொன்றிருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை.துப்பாக்கியை கீழே போடு என்று மூன்று முறை அவர் கேட்டும் அவன் கேட்கவில்லை' என்று கூறியிருக்றார்.

     போலீஸ் கமிஷனர் எனக்கு 'வரும் கேள்விகள் பெரும்பாலும் சுட்டுக் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரிகளின் குடும்பங்களிடமிருந்துதான். இன்னும் எத்தனை போலீஸ் விதவைகளும், அனாதைகளும் எண்ணிக்கையில் கூட வேண்டும்? என்று கேட்கிறார்கள். என்ன பதில் சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை' என்கிறார்.

தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேகப் ஸூமாவும் குழம்பிப் போய் எப்படி இந்தத் துப்பாக்கி கலாசாரத்தை நசுக்குவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

         அவரே தெரிவித்த சில புள்ளி விவரங்கள்: 1. உலகில் அதிக கொலைகள் நடைபெரும் நாடுகளில் தென் ஆப்பிரிக்காவும் ஒன்று. 2. சென்ற ஆண்டில் மட்டும் 18 ஆயிரம் கொலைகள் நடைபெற்றிருக்கின்றன. 3. இந்த நாட்டில் அனேகமாக ஒவ்வொருவனும் துப்பாக்கி வைத்திருக்கிறான்.

         சமிபத்திய ஆய்வின்படி வானவில் நாடு என்று அழைக்கப்படும் தென் ஆப்பிரிகாவில் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 50 பேர் கொல்லப்படுகிறார்கள்.

   'எவனாவது துப்பாக்கியை எடுத்தால் உடனே அவனைச் சுடு' என்று போலீஸூக்கு அனுமதி தந்திருக்கிறார் ஸூமா.

     அடுத்த ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் அங்கு நடை பெற இருக்கின்றன.

       துப்பாக்கிகள் கோல் போட்டுவிடக்கூடாது.
S.Gnanasekar

Monday, November 9, 2009

பட்டாம்பூச்சிகள்மனிதனின் மனதை ஈர்க்கும் அதிசயங்கள் பல அவற்றில் வணணத்துப்பூச்சிக்கு சிறப்பிடம் உண்டு. பல வண்ணங்களில் சிறகடிக்கும் பட்டாம்பூச்சிகள் பார்பவர்களை பரவசப்படுத்திவிடும்.

பட்டாம்பூச்சிகளில் 15,000 முதல் 20,000 வகையான பல்வேறு உள்ளினங்கள் உள்ளன. பட்டாம்பூச்சியின் இறக்கைகளில் காணப்படும் நிறங்கள் மிகப்பலவாகும். அதில் காணப்படும் நிறவடிவங்களும் கோலங்களும் அழகு வாய்ந்தவை. பட்டாம்பூச்சிகள் உலகில் பெரும்பாலான இடங்களில் வாழ்கின்றன.

ஒரு சில பட்டாம்பூச்சி இனங்கள் ஒராண்டு, ஒன்றரை ஆண்டு வரையும் வாழுகின்றன.

சில பட்டாம்பூச்சிகள் வியப்பூட்டும் விதமாக வெகுதொலைவு (3,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவு) பறந்து செல்கின்றன.

அந்த அழகு பட்டாம்பூசியைப் பற்றிய ஒரு கூடுதல் தகவல் இது. வண்ணத்துப்பூச்சிகளுக்கு காதுகள் கிடையாது என்றோ, அதன் உறிஞ்சுகுழல் மூலம் உணர்ந்து கொள்ளும் என்றோ நினைத்துக் கொண்டிருந்தால் அது தவறு.

இங்லாந்தில் உள்ள பிரிஸ்டோல் பல்கலைக்கழக குழு ஒன்று இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டது. அவர்கள் புளுமார்போ இன வண்ணத்துப்பூச்சிகளில் காதுகள் இருக்கும் ரகசியத்தை கண்டுபிடித்தனர். அதன் வண்ணமயமான இறகுகள் உடலோடு இணையும் பகுதியில் இந்தகாதுகள் அமைந்துள்ளன. இது சிறிய புள்ளி போன்ற சற்று மேலேழும்பிய குமிழ் போல காணப்படும். சாயம்போன மஞ்சள் நிறத்தில் இது அமைந்திருக்கும்.

இந்தபகுதியே வண்ணத்துப்பூச்சிகள் ஒலியை கேட்கத் துணைபுரிகிறது. 1000 முதல் 5 ஆயிரம் ஹெர்ட்ஸ் வரையிலான ஒலியை கேட்கும் தன்மையைப் பெற்றிருக்கின்றன. (மனிதனின் ஒலி உணரும் திறன் 20 மிதல் 20 ஆயிரம் ஹெர்ட்ஸ் அளவாகும். நமது பேட்டின் அதிர்வு 100 முதல் 4 ஆயிரம் ஹெர்ட்ஸ் வரை இருக்கும்.)

அதிர்வுகளை  காதுகளின் மேற்புற செல்களே அறிந்து கொள்கின்றன. மற்ற ஒலி அலைகளை உட்புற செல்கள் நரம்புகள் கடத்தும் அதிர்வுகளாக மாற்ரி நரம்பு செல்கல் மூலம் அறிந்து கொள்கின்றன.

பறவைகளின் பாட்டுக்களை கேட்கவும், தன்னை நெருங்கிவரும் ஆபத்துக்களை அறியவும், திசைமாற்றி பறக்கவேண்டிய நேரத்திலும் இந்த உறுப்பை அதிகமாக பயன்படுத்துகின்றன.

1912 வரை வண்ணத்துப்பூச்சிகளுக்கு காது கேக்காது என்றே நம்பப்பட்டது. அதன் பிறகு சிலவகை பட்டாம்பூச்சிகள் ஒலி அதிர்வை அறிந்து கொள்வது கண்டுபிடிக்கப்பட்டது.

வண்ணத்துப்பூச்சிகளை கண்டு ரசியுங்கள், அதன் காதை தேடாதீர்கள்.

படித்தது...
சோ.ஞானசேகர்...

Thursday, October 15, 2009

தீபாவளி நல் வாழ்த்துக்கள்.உலகத்தமிழ் வலைப்பதிவு அன்பர்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த தீபத் திருநாள் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

Thursday, October 8, 2009

மனம் மகிழ்ச்சி

மனம் மகிழ்ச்சி
குழந்தை தத்தித்தத்தி நடைபழகுவதை காணும் பெற்றோர் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
கண்ட கண்ட பெண்களின் பின்னால் சுற்றித் திரிவது சிலருக்கு மகிழ்ச்சி. அவள் அவனை திரும்பி பார்த்தால் இன்னும் சந்தோஷம்.
துணைக்கு ஆளின்றி வருபவர்களை கண்டால் திருடனுக்கு மகிழ்ச்சி. இப்படி பலருக்கு பலவித மகிழ்ச்சி.
உண்மையில் மகிழ்ச்சி என்பது என்ன? அதன் இலக்கணந்தான் என்ன?
மகிழ்ச்சிக்கென்று தனி இலக்கணம் கூற முடியாது. அது மனித மனத்தின் ஒருவகை உணர்ச்சி, அவ்வளவுதான். அந்த மனதில் அவரவர் நிலைக்கும், சக்கிக்கும், இயல்புக்கும் ஏற்றபடி ஏற்படும் உணர்ச்சி அலைகள்தான் மகிழ்ச்சி எனும் பெயர் பெறுகின்றன. அந்த மனநிலைதான் நாமும், மற்றவர்களும் விரும்புவதாக இருக்கிறது. நாம் மகிழ்சியாக இருக்கும்போது நம்மை விரும்புகிறோம், மற்றவர்களையும் விரும்புகிறோம், எல்லாமே நமக்கு சந்தோஷம் தருபவையாக இருக்கின்றன.
ஒருவருடைய மனம் எத்தைகைய பயிற்சியைப் பெற்றுள்ளது என்பதைப் பொருத்தே அவருடைய மனம் இன்பத்தையும், துன்பத்தையும் அனுபவிக்கிறது. இதனால்தான் ஒருவருக்கு இன்பமாகத் தோன்றும் ஒன்று மற்றொருவரருக்கு துன்பமாகத் தோன்றுகிறது. தித்திக்கும் இனிப்பைக்கூட வெறுப்பவர்கள் இருக்கின்றனர். எனவே மகிழ்ச்சி என்பது ஒரு மனப்பழக்கம்தான்.
மனம் பொதுவாக புறமனம், ஆழ்மனம் என இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. இந்த மனம்தான் மகிழ்ச்சிக்குக் காரனமாக அமைகிறது. அதாவது மனதின் ஒருவித அனுபவம்தான் மகிழ்ச்சி எனப்படுகிறது.அது போலவே மகிழ்ச்சிக்கு நேர் எதிரான துயரமும் மனதின் ஒரு அனுபவம்தான். இன்பத்தையும், துன்பத்தையும் மனம்தான் அனுபவிக்கிறது.
இன்பத்துக்கும், துன்பத்துக்கும் பொதுவாக இரண்டுவகையான காரணங்கள் உள்ளன. ஒன்று புறக்காரணம் மற்றது அகக்காரணம். புறக்காரணங்களால் ஏற்படும் இன்பத்துக்கும், துன்பத்துக்கும் மனதின் எதிர்பார்ப்புகளும், லட்சியங்களும்தான் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியுடன் கழித்தால் நம் ஆயுள் முழுவதையும் மகிழ்சியுடன் கழித்து விட முடியும். நம்முடைய மனதில்தான் மகிழ்ச்சி புதையுணடு கிடைக்கிறது. நாம் அதை வெளியே கொண்டு வரவேண்டும். நம்முடைய மனதின் ஆற்றல் அளவிட முடியாதது. அதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஆழமான சுரங்கத்தில் அதிக கவனட்டுடன் தோண்டும் போது தங்கம் கிடைப்பது போல், நம்முடைய மனமாகிய சுரங்கத்தில் ஆழமாகத் தோண்டினால் மகிழ்ச்சி என்னும் நவரத்தினங்கள் ஏராளமாகக் கிடைக்கும்.
மனதில் உண்டாகும் மகிழ்ச்சியான எண்ணங்களால் உடல் அழகு பெறும். தைரியமும், மகிழ்ச்சியான எண்ணங்களும் உடலுக்கு வலுவைத் தருகின்றன. நம்முடைய உள்ளத்தில் மகிழ்ச்சியும், நல்லெண்மமும், சாந்தமும் குடி கொண்டால் உடலின் ஆரோக்கியமும், திடமும் அதிகரிக்கும். மகிழ்ச்சியான மனதையும், பரிசுத்தம்ன எண்ணங்களையும் கொண்டிருந்தால் நாமும் இன்பமாக வாழ முடியும். நம்முடைய மனதில் மகிழ்ச்சியான காட்சிகளைக் கண்டு வந்தால் நம்முடைய வாழ்க்கையிலும் விரைவிலேயே மகிழ்ச்சி நிச்சயம்.
நன்றி குடும்ப மலர் தினத்தந்தி...
சோ.ஞானசேகர்..

Thursday, October 1, 2009

இதயம்


ண்களை விட பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்க்கான சூழ்நிலைகள் குறைவு. அதற்கு காரனமாக இருப்பது, பெண்களின் உடம்பில் சுரக்கின்ற ஈஸ்ட்ரஜன் ஹார்மோன்தான். ஆனால் பெண்களின் மாதவிலக்கு நிலைத்துப்போகும் 'மெனோபாஸ்' காலகட்டத்திற்குப் பிறகு, ஈஸ்ட்ரஜன் சுரப்பு படிப்படியாகக் குறைந்து விடும். அதற்குப் பிறகு பெண்களுக்கும் ஹார்ட் அட்டாக் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகி விடும்.

தயத்தை நோக்கிச் செல்லுகின்ற ரத்த குழாய்களில் கொழுப்பு படிந்து விட்டால், அந்த குழாய்களின் வழியே ரத்தம் சீராகப் பாயாது. ஒருவித தடுமாற்றம் இருக்கும். இதைத்தான் ஹார்ட் அட்டாக் என்கிறோம் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், சர்க்கரை வியாதி, உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் மாரடைப்பு ஏற்படும் சூழல் அதிகரிக்கிறது. உணவுக் கட்டுபாடும், உடற்பயிற்சியும் இந்த தாக்குதலை தடுக்க உதவும்.

நெஞ்சு வலி வந்தால், அதற்குரிய மாத்திரையை நாக்குக்கு அடியில் வைத்துக் கொள்ள டாக்டர்கள் பரிந்துரைப்பார்கள். மாத்திரை பயன்படுத்தினாலும் உடனடியாக பக்கத்தில் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு கொண்டுப்போக வேண்டும். ஹார்ட் அட்டாக் வரும்போது, முதல் ஒரு மணி நேரம் மிக முக்கியமானது. இதய நாளங்களில் உள்ள ரத்தக்கட்டியை கரைக்க டாக்டர்கள் உடனடியாக அதற்குறிய ஊசி மருந்துகளை செலுத்துவார்கள்.

பெரும்பாலானோர் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக வீட்டிலேயே டிரெட்மில்லில் நடைபயிற்ச்சி செய்கிந்றனர். நடக்கும் போது நன்றாக வியர்க்கும். ஆனால், நீங்கள் நடக்கும் போது வழக்கத்தைவிட அதிகமான வியர்வை, படபடப்பு, நெஞ்சுவலி, ஒருவித அசவுகரியம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே பயிற்சியை நிறுத்திவிட்டு, உடலை பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இவைகள் கூட ஓரளவு இதய பிரச்சினையின் அறிகுறிதான்.

தோல்பட்டையில் வலி வந்தாலே, அது இதயத்தின் பிரச்சினைக்கான அறிகுறியாக சொல்லப்படுவதில் உண்மை இல்லை. இதயத்தில் பிரச்சினை என்றால், நடு நெஞ்சில் வலி உருவாகி, அந்த வலி தோல்பட்டையில் பரவி, சில நிமிடங்கள் வரை நீடித்து, பிறகு சரியாகிவிடும். இப்படி அடிக்கடி் ஏற்ப்பட்டால், நீங்கள் உஷாராகி உடனடியாக டாக்டரிடம் செல்ல வேண்டும்.

ந்த எளிதான வழியை கடைப்பிடித்துப் பாருங்கள். வாகன நெருக்கடி இல்லாத ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். மனதில் இருக்கும் கவலை அனைத்தையும் ஒதுக்கிவிட்டு, மெதுவாக நடக்க ஆரம்பியுங்கள். பத்து நிமிடம் இப்படி நடந்த பிறகு, உங்கள் நடையின் வேகத்தை அதிகப்படுத்துங்கள். பத்து நிமிடம் வேகமாக நடந்த பிறகு, மீண்டும் பத்து நிமிடங்கள் மெதுவாக நடந்து செல்லுங்கள். இப்படி தினமும் நாற்பது நிமிடங்கள் நடந்தால், இதய நோய் அண்டாது.

பொதுவாக ஒரு மனிதன் ஓய்வில் இருக்கும் போது அவனது இதயம் நிமிடத்துக்கு 70 முதல் 80 தடவை துடிக்கலாம். அதுவே அவன் ஓடியாடி வேகமாக வேலை செய்யும்போது, நிமிடத்திற்கு 150 தடவை துடிக்கலாம், ஆனால், இதயத்துடிப்பு மேலே சொன்ன அளவிலிருந்து குறையும் போது மயக்கம் வரும். இந்தப் பிரச்சினையை சரி செய்ய மருத்துவ ரீதியாக டாக்டர்கள் பொருத்தும் கருவிக்கு பேஸ் மேக்கர் என்று பெயர்.

பெண்கள் தாய்மை அடைந்திருக்கும் போது உடம்பில் உள்ள மூட்டு இணைப்புகள் சற்று நெகிழ்ச்சியடைய ஆரம்பிக்கும். அதே சமயத்தில் உடம்பும் சற்று தளர்ந்து விடும். அப்போது இதயத்துக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் ரத்தக்குழாய் (மகாதமணி) சீரில்லாமல் செயல்படக்கூடும். கர்பினிகளுக்கு நெஞ்சு வலி, மூச்சுத் திணறல், மயக்கம் ஆகிய அறிகுறிகள் தெண்பட்டால், உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்லவேண்டும்.

ருத்துவரிடம் கலந்தாலோசிக்காமல் கருத்தடை மாத்திரைகளை தாங்களாகவே கடைகளில் வாங்கி பயன்படுத்தும் போது இதயப் பிரச்சினை வரலம். காரணம், இது போன்ற மாத்திரைகள் தொடைப் பகுதியில் உள்ள ரத்தக் குழாய்களை உறைய வைத்து, அதன் மூலம் நுரையீரலைப் பாதிக்கிறது. அதனால் பென்கள், டாக்டரின் ஆலோசனை இல்லாமல் கர்பத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக் கூடாது.

ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்க விரும்புகிறவர்கள் அதிகக் கொழுப்புள்ள உணவை உண்ணக்கூடாது. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சிகிச்சை மற்றும் உணவு பழக்கம் மூலம் நோயை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உடல் பருமன் கூடவே கூடாது. நாற்பது வயதுக்கு மேல் உடல் பரிசோதனை மிக அவசியம். அடிக்கடி டென்ஷன் ஆகாமல், மனதை எப்போதும் ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளுங்கள்.யோகா, தியானம் செய்வது நல்லது.

தய நோய் பிரச்சினை உள்ளவர்கள் வனஸ்பதி, வெண்ணை, நெய் போன்ற உணவுப் பொருட்களை அறவே தவிர்க்க வேம்டும். நிறைய பழங்கள் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை நோயாளிகள் இனிப்புச் சத்து குறைந்த பழங்களை கொஞ்சம்க எடுத்துக் கொள்வது நல்லது. அசைவம் சாப்பிடுவோர் தோல் நீக்கிய கோழி இறைச்சியையும், மஞ்சள் கரு நீக்கிய முட்டையையும் சாப்பிடலாம்.
நன்றி...
சோ.ஞானசேகர்....

Tuesday, September 22, 2009

நாவல் மரம்

நாவல் மரத்தையோ அதன் பழத்தையோ எங்கு பார்த்தாலும் எனக்கு எங்கள் ஊர் ஞாபகம் வரும். எங்கள் ஊரின் மேற்கே கோவில்தோப்புனு ஒரு இடம். அந்த இடத்தில் கருப்பசாமி கோவில், பஞ்சபாண்டவர் கோவில் உள்ளது. இந்த இடத்தில் பலவகை மரங்கள் உள்ளது. அதில் நாவல் மரம் ஒன்று, அடுத்து ஒரு அரசமரம். இந்த இரண்டு மரங்களும் ரெம்ப பெரியமரம் 5பேர் கட்டிபிடிக்களாம் அவ்வளவு பெரியது.இந்த நாவல்மரத்தின் வயது என்னனு ஊர் பெரியவர்களிடம் கேட்கும் போது எங்களுக்கு எங்கடா தெரியும் எங்க அய்யா, தாத்தான்ட்ட கேக்கும்போது அது நாங்க சின்னபையனாக இருக்கும் போது இப்படித்தாண்டா இருந்ததுனு சொன்னாங்கனு சொல்வாங்க.


ஆடி மாதம் ஆரம்பத்தில் இருந்து பழம் பழுத்து விழும் காலை 5மணிக்கு பழத்தை சேகதிப்பதற்க்கு நாம்தான் முதலில் வந்திருக்கோம் நினைத்தால் நமக்கு முன் நிறையப் பேர் வந்துதிருப்பார்கள். ஒவ்வெருவரும் நிறையப் பழங்களை சேகரிப்பார்கள் பழம் மிகவும் சுவையாக இருக்கும்.சமிபத்தில் ஊருக்கு போய் இருந்தேன் அப்ப என் பையன்களிடம் வாங்கடா போய் நாவல் பழம் எடுக்கப் போகலாம்னு சொன்னேன் அப்ப எங்க அம்மா அங்கே மரமே இல்லைனு சொன்னாஙக ஏன் என்ன ஆச்சுனு கேட்டதுக்கு மரம் எரிஞ்போச்சுனு சொன்னாஙக. அதை கேட்டவுடன் எனக்கு நெம்ப அதிர்சியாகவும் வருத்தமாக இருந்தது.எப்படிமா எரிஞ்சதுனு கேக்க பசங்க தேன் எடுத்து விட்டு தீ பந்தத்தை சரியாக அனைக்காமல் மரத்துக்குள் போட்டுட்டு வந்துட்டாங்க இரவில் மரம் எரிந்துவிட்டதுனு சொன்னாங்க. இடத்தை போய் பார்த்தேன் மரம் இருந்த சுவடுதான் இருந்தது பல வருடமரம் நெடியில் வெந்து சாம்பம் ஆகிவிட்டது. மரம் நடுவில் பெரிய ஓட்டை இருக்கும் வண்டுகள் குடைந்த ஓட்டைகள் நிறைய இருக்கும் அதனால் தீ விரவில் பற்றிக் கொண்டது. நாங்களும் தேன் எடுத்திருக்கிறோம் கவனமா தீயை அனைத்து போட்டுட்டுத்தான் வருவோம்.


சரி விசயத்துக்கு வருவோம் நாவல் மரத்தின் மருத்துவப் பயன்கள் உடல் துர்நாற்றம், வயிறு உப்புசம், சிறுநீர்க்குறைவு, கிருமிகளின் தொற்று, சர்க்கரை நோய், வெள்ளைப்பாடு, தொண்டை குரல் வளைப்புண், பல் ஆடுதல், மண்ணிரல் வீக்கம், சளி, இருமல், அதிக அளவிலான மாதவிடாய் போக்கு, ஆஸ்தும், கரப்பான், தோல்நோய், இரத்த பேதி, அடிக்கடி தாகம் எடுத்தல் போன்ற நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.இதன் பழம், இலை, பட்டை, நாவல் பழக் கெட்டையின் பருப்பு இவைகலை காயவைத்து பொடி செய்து காலை, மாலை சாப்பிட சர்கரை நோய் கட்டுப்படும் சர்கரை நோய்க்கு அருமருந்து. சர்க்கரை நோய் உள்ளவர்கள் நாவல் பழம் சாப்பிடவும்.


நன்றி மீண்டும் பேசுவோம்.


சோ.ஞானசேகர்..

Wednesday, September 9, 2009

"பெருந்தலைவர் காமராஜ்"

பெருந்தலைவர் காமராஜ் தனக்கென்று வாழாமல், பிறருக்காகவே வாழ்ந்து, நாட்டு மக்கள் உள்ளத்தில் நிரந்தர இடத்தைப் பெற்றவர் பெருந்தலைவர் காமராஜ். பணம் படைத்தவர்கள், சாதிப் பெருமை பெற்றவர்கள், செல்வாக்கு மிகுந்தவர்கள் மட்டுமே அரசியலில் பதவி பெற முடியும், தலைமை ஏற்க முடியும் என்றிருந்த நிலையைத் தம் அயராத உழைப்பால், தியாகத்தால், மாற்றிக் காட்டியவர் காமராஜ்.

எளிய குடும்பத்தில் பிறந்தவர், ஆறு வயதுச் சிறுவனாக இருந்தபோதே தந்தையை இழந்தவர், ஆறாவது வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோதே பள்ளி செல்வதை நிறுத்த வேண்டிய நிலைமைக்கு ஆளானவர், தன் முழு நேரத்தையும் நாட்டுப் பணிக்கு அர்ப்பணிப்பதற்காகத் திருமணம் செய்து கொள்ளவும் மறுத்தவர், எளிய தொண்டனாக அரசியல் வாழ்க்கையைத் துவக்கி, உண்மையான உழைப்பால், அடக்கமான எளிய வாழ்க்கையால், உயர்ந்த பதவிகளைப் பெற்று, வரலாற்றுப் புகழை அடைந்தார்.

ஜாலியன்வாலாபாக் படுகொலை அவரது இளம் உள்ளத்தில், தேச பக்திக் கனலைத் தூண்டிவிட்டு, தேசிய இயக்கத்தில் அவரை இணையவைத்தது. அண்ணல் காந்தியடிகளைத் தம் நெஞ்சம் நிறைந்த தலைவராக ஏற்றுக் கொண்டு, காங்கிரசின் முழுநேர ஊழியராகச் சத்தியாக்கிரகப் போரட்டங்களில் ஈடுபட்டு, வெஞ்சிறையில் பலமுறை வாடினார், காங்கிரசிஸ் இயக்கத்தின் தலைவர் ஜவகர்லால் நேருவின் மதிப்பையும், பாசத்தையும் தூய தொண்டாலும், மக்கள் செல்வாக்காலும் பெற்றார். தமிழ்நாட்டின் அரசியல் மேதை சத்தியமூர்த்தியை அரசியல் குருவாகக் கொண்டு, அவரது நன்மதிப்பையும் பெற்று, தமிழ்நாட்டு அரடியலில் நம்பிக்கை நட்சத்திரமாகத் தொண்டாற்றினார்.

பல்கலைக் கழகப் படிப்போ, பட்டமோ பெறாதிருந்தும், தனிப்பட்ட முறையில் ஏராளமான நூல்களைப் படித்து உலக அறிவை வளர்த்துக்கொண்டார். அவர் விரும்பிப் படித்த ஆங்கில நூல்களையும் தமிழ் நூல்களையும் சென்னையில் உள்ள காமராஜ் நினைவு இல்லத்தில் இன்னும் காணலாம்.

பதவியைச் சேவை செய்வதற்கான வாய்ப்பாகவே காமராஜ் கருதினார். சேவையில் முழுநேரம் ஈடுபடுவதற்காகப் பதவியைத் துறக்கவும் அவர் தயங்கியதில்லை. ஏழை எளிய மக்களை வாழவைக்க வேண்டும் என்ற இலட்சியப் பிடிப்போடு பாடுபட்டு, இந்தியாவில் தமிழ்நாட்டிற்குத் தனிப் பெருமை தேடித் தந்தார்.ஜவகர்லால்நேரு மறைந்தபோது இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் தனிப்பெருந்தலைவராக காமராஜ் செயல்பட்டார்.


''சுதந்திரம் என்றால் பயமில்லாது வாழ்வதுதான். பயமில்லாது வாழ நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்"


"வாழ்க்கைக் குறிப்பு"

1903 - விருதுபட்டி என்னும் விருதுநகரில் குமாரசாமி நாடார் அம்மாள் தம்பதிக்கு 1903 ஜூலை 15 அன்று மகனாக பிறந்தார். 1907-ல் தங்கை நாகம்மாள் பிறப்பு.

1908- காமராஜ் திண்மைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பெற்றார். ஏனாதி நாயானார் வித்யாசலாவிலும், சத்திரிய வித்தியாசலாவிலும் சேர்ந்து படித்தார்.

1909- தந்தை மறைவு. தாய்மாமன் கருப்பையா நாடர் காமராஜ் குடும்பத்திற்கு உதவியாக இருந்தார்.

1914-ஆறாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, பள்ளி செல்வதை நிறுத்திக் கொண்டார்.

1919-ஏப்ரல் - ரவுலட் சட்டத்தை எதிர்த்துக் காந்தியடிகள் விடுத்த அழைப்பை ஏற்று, காங்கிரசின் முழு நேர ஊழியரானார்.

1920-ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டார்.

1921-தமிழ்நாடு காங்கிரஸ் செயலராக இருந்த பெரியாரை முதன் முதலாக விருதுநகரில் சந்தித்து அவரது உறுதி மிக்க பேச்சுத் திறனை போற்றினார்.

1923-நாகபுரி கொடிப் போரட்டத்தில் பங்கு கொண்டார். மதுரையில் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார்.

1925-கடலூரிலிருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1926-சத்தியமூர்த்தி - சீனிவாசஅய்யங்கார் ஆகியோருடன் தேர்தல் பணி புரிந்தார்.

1927-சென்னையில் கர்னல் நீல் சிலையை அகற்றும் போராட்டத்தை நடத்த அண்ணல் காந்தியிடம் அனுமதி பெற்றார். போராட்டம் நடைபெறுவதற்குள் அரசாங்கமே நீல் சிலையை அகற்றிவிட்டது.மதுரைக்கு வருகைபுரிந்த சைமன் குழுவை எதிர்த்தார்.

1930-வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்பு சத்யாகிரகத்தில் கலந்து கொண்டதால், இரண்டாண்டு அலிபூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

1931-காந்தி இர்வின் ஒப்பந்தம் காரனமாகக் காமராஜ் விடுதலை செய்யப்பட்டார். இராமநாதபுரத்திலிருந்து சென்னை மாகாணக் காங்கிரஸ் செயற்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
"நாட்டின் ஐக்கியத்தைப் பாதுகாப்பதிலும், ஒற்றுமையோடு பாடுபடுவதிலுந்தான் நமது முன்ன்ற்றம் இதுக்கிறது."
1933-சதி வழக்கில் காமராஜ் சிறைக்கனுப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டார்.

1934-காமராஜ் உழைப்பால் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் பெருவாரியான வாக்குகள் பெற்று வென்றது.

1936-காரைக்குடியில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டித் தேர்தலில் சத்தியமூர்த்தி தலைவராகவும், காமராஜ் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1937-சட்டமன்றப் பொதுத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் வென்றார். விருதுநகர் நகராட்சி மன்றத்தேர்தலில் 7-வது வார்டில் போட்டியிட்டு வென்றார்.

1940-தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வென்றார்.

1941-யுத்தநிதிக்கு எதிர்ப்புப் பிரச்சாரம் செய்ததால்,கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.சிறையில் இருக்கும்போதே 1941-மே 31 விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1942-மார்ச்-சிறையிலிருந்து விடுதலையானதும்,ஒருநாள் மட்டும் நகராட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு, தீவிர கட்சிப் பணிக்காக நகராட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

1942-ஆகஸ்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு, அமராவதி சிறைச்சாலையில் இரண்டு ஆண்டுகள் கழித்த பிறகு, வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார், 1945-ல் விடுதலை ஆனார்.

1946-மே 16-தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார். அதே ஆண்டு சென்னை சட்டமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1947-ஆகஸ்டு 15- இந்தியா விடுதலை பெற்றது. பண்டிதநேருவின் தலைமையில் இடைக்கால அரசு உருவானது. அண்ணல் காந்தியடிகளைப் போற்றி அறிக்கை வெளியிட்டார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆனார்.

1949-இலங்கையில் சுற்றுப்பயணம்.

1950-நானகாவது முறையாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஆனார்.

1952-தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக டாக்டர் சுப்பராயன் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வழிவகுத்தார்.

1952-நாடாளுமன்ற உறுப்பினர்- சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெறமுடியவில்லை. இராஜாஜி முதலமைச்சர் ஆவதற்க்குக் காமராஜ் ஒத்துழைப்பு நல்கினார். 1952டிசம்பரில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
"அப்பாவியான ஏழை மக்களை வடதி படைத்தவர்களும், கல்மனம் படைத்தவர்களுந் கசக்கிப் பிழிந்து விடாதபடி தடுக்க வேண்டியது அவசியம்."
1953-இலங்கையில் சுற்றுப்பயணம் செய்தார்.

1954-பிப்ரவரியில் மலாய் நாட்டில் சுற்றுப்பயனம். குலக் கல்வித்திட்ட எதிர்ப்பு காரணமாக இராஜாஜி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவும், சட்டமன்றக் காங்கிரஸ் கட்சித் தலைவராகக் காமராஜ் போட்டியிட்டு வென்றார்.

1954-ஏப்ரல் 13- சென்னை மாநிலத்தின் முதலமைச்சர் ஆனார். குடியாத்தம் இடைத்தோர்தலில் போட்டியிட்டு வென்றார்.

1955-ஆவடி காங்கிரஸ் மாநாடு வெற்றிகரமாக நடைபெற காமராஜ் அரும்பணி ஆற்றினார்.ராமநாதபுரம் மாவட்டத்தில் புயலாலும் பேய் மழையாலும் பாதிக்கப்பட்டபகுதிகளை நேரில் பார்த்து, நிவரண உதவிகளைச் செய்தார்.

1956- மொழிவழி மாநிலம் என்ற திட்டத்தின்படி புதிய தமிழகம் உருவாவதற்கு ஆதரவு தெரிவித்தார். பள்ளிகளில் இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

1957-பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, வென்று, இரண்டாவது முறையாக முதலமைச்சர் ஆனார்.

1960-ஏழைப் பிள்ளைகள் அனைவரும் 11-ஆம் வகுப்புவரை இலவசக் கல்வி அளித்தார்.
"நாடு முன்னேற வறுமையும் அறியாமையும் போக வேண்டும் இவை இரண்டும் போனாலன்றி நாடு முன்னேறியதாகச் சொல்ல முடியாது."
1961-அக்டோபர் 9- சென்னை மநாகராட்சி உருவாக்கிய காமராஜ் திருஉருவச் சிலையைப் பிரதமர் நேரு திறந்துவைத்தார்.

1962-பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக முதலமைச்சர் ஆனார்.

1963-எல்லோருக்கும் இலவசக் கல்வித் திட்டத்தை அமல்படுத்தினார். அக்டோபர் 2-காமராஜ் திட்டத்தின்படி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

1964- அனைத்திந்தியக் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மே 27-ல் நேரு அவர்கள் மறைந்த பிறகு, லால்பகதூர் சாஸ்திரி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட காமராஜ் ஆவன செய்தார்.

1965-இந்தியா - பாக்கிஸ்தான் போர் ஏற்பட்டபோது பஞ்சாப் போர்முனைப் பகுதிகளுக்குக் காமராஜ் சென்று வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

1966-தாஸ்கண்ட் சென்று லால்பகதூர் மறைவு எய்தியதால், இந்ராகாந்தி பிரதமராவதற்கும் காமராஜ் ஆவன செய்தார். சோவியத் நாட்டிற்க்கும் பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் காமராஜ் சென்று வந்தார்.

1967-பொதுத் தேர்தலில் காமராஜ் தோல்வி.

1969-நாகர்கோயில் நாடடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு.காமராஜ் அவர்களின் தாயார் மறைவு.
"பெணகள் விழிப்பு அடைந்தால், குடும்பம் முன்னேறும், கிராமங்கள் முன்னேறும், தேசமே முன்னேறும்."
1971-பொதுத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி. நாடளுமன்ற உறுப்பினராகத் காமராஜ் தேர்வு.

1972-தாமிரப்பத்திர விருது பெற்றார்.

"மறைவு"

1975- எளிய குடும்பத்தில் பிறந்து, விடுதலைப் போராட்டத் தொண்டனாக வாழ்வைத் துவக்கி, தன்னலமற்ற உழைப்பால், தியாகத்தால், மக்கள் தலைவராக உயர்ந்து, கோடிக்கணக்கான இதயங்களில் குடிகொண்டிருக்கும் பெருந்தலைவர் காமராஜ் 1975 அக்டோபர் 2 அன்று அண்ணல் காந்தியடிகல் பிறந்தநாளில் நம்மை விட்டு உடலால் பிரிந்தார். நினைவாக நம் நெஞ்சில் நிறைந்திருக்கிறார்.
" நினைவில் காமராஜ்"

கிண்டி படேல் சாலையில் காந்தி மண்டபத்தை அடுத்துள்ள வளாகத்தில் அவரது உடல் எரியூட்டப்பட்ட இடத்தில் தமிழக அரசு காமராஜ் நினைவகத்தை உருவாக்கியிருக்கிறது.

விருதுநகரில் காமராஜ் வாழ்ந்த இல்லத்தை தமிழ்நாடு அரசு அரசுடைமையாக்கி நினைவு இல்லமாக்கியுள்ளது.

1976- ஜூலை 15ஆம் நாள் காமராஜ் நினைவு 25 காசு அஞ்சல் தலையை மைய அரசு சென்னை கலைவாணர் அரங்கத்தில் வெளியிட்டது. 1976 ல் பாரதரத்னா விருது வழங்கப்பட்டது. 1977 ஆகஸ்டு 18 தமிழ்நாடு சட்டப்பேரவையில் மேதகு இமந்தியக் குடியரசுத் தலைவர் சஞ்சுவி ரெட்டியால் காமராஜ் திருவுருவப் படம் திறந்து வைப்கப்பட்டது.

"காமராஜ் நினைவு இல்லம்"

பெருந்தலைவர் காமராஜ் சென்னை, தியாகராய நகர் திருமலைச் சாலையில் வாழ்ந்து வந்த வீட்டை அரசுடைமையாக்கி மாண்பு மிகு அன்றய தமிழக முதலமைச்சர் டாக்டர் எம். ஜி.ஆர் அவர்கள் 15-7-1978 அன்று நினைவு இல்லமாக மாற்றினார். அவர் பயன்படுத்திய பொருட்கள், வாழ்க்கை நிகழ்ச்சிகளை எடுத்து கூறும் புகைப் படங்கள், படித்த நூல்கள் ஆகியவை நினைவு இல்லத்தில் நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ன.

தினமும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை நினைவு இல்லத்தைப் பொது மக்கள் பார்வையிடலாம்.சென்னை கடற்கரைச் சாலைக்கு காமராஜ் சாலை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

விருதுநகரைத் தலைமை இடமாகக் கொண்ட காமராஜ் மாவட்டத்தை 1984 ஜூலை 15 அன்று மாண்புமிகு அன்றய தமிழக முதமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

மதுரைப் பல்கலைக் கழகத்திற்க்கு மதுரை-காமராஜ் பல்கலைக் கழகம் என்று பெயர் சூட்டிச் சிறப்பித்தார்.

தமிழக அரசு வாங்கிய மூன்றாவது கப்பலுக்கு தமிழ் காமராஜ் என்ற பெயரைச் சூட்டினார்.
தனக்கென்று வாழாமல், பிறருக்காகவே வாழ்ந்து, நாட்டு மக்கள் உள்ளத்தில் நிரந்தர இடத்தைப் பெற்றவர் பெருந்தலைவர் காமராஜ்.
சோ.ஞானசேகர்.

Saturday, August 15, 2009

"நம்ம ஊர் தட்டான் தும்பி"
நம்மில் நிறையப்பேருக்கு வெளிநாடு செல்ல ஆசையிருக்கும். சிலபேர் சுத்திப்பார்க்க போவார்கள். சிலபேர் வேலை நிமித்தமாக போவார்கள். ஒவ்வெருவருக்கும் ஒரு ஆசை இருக்கும். ஆனால் அதற்க்கு நிறைய பார்மால்ட்டி இருக்கு பாஸ்போர்ட், விசா எடுக்கவேண்டும். அப்பொழுதான் விமாணத்தில் பறந்து வெளிநாடு செல்லமுடியும். இதெல்லாம் இல்லாமல் போய்வருபவர்கள் உண்டு யார்னு உங்களுக்கு தெரியும் யார் நம்மலுடைய பறைவைகள்தான்.

வசந்தகாலம் வந்துவிட்டால் பறவைகள் நாடுவிட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் வந்து முட்டையிட்டு, குஞ்சு பொரித்து அந்தக் குஞ்சுகளுடன் தாய்நாடு திரும்பும், இப்படி வந்து போகிற பறவைகளை நம் நாட்டில் நிறைய சரணாலயத்தில் பார்த்து இருக்கிறேம் கேள்விப்பட்டிருக்கிறேம்.இது இல்லாமல் வண்ணத்துப் பூச்சிகளும் நீண்டதுரம் 4ஆயிரத்து 300 மைல் துரம் பயணிப்பாதாக கேள்விப்பட்டிருக்கிறேம். இதெல்லாம் இல்லாமல் நம்ம ஊரில் மழை காலம் முடிந்தவுடன் ஒரு பூச்சி இணம் பறக்கும் அதுதான் 'தட்டான் பூச்சி' (தும்பினும்) சொல்வார்கள். இதுவும் கண்டம் விட்டு கண்டம் பறந்து செல்கிறது 12 ஆயிரம் மைல்கள் பயணம் செய்கிறது நம் தமிழ் நாட்டு தட்டான்கள். ஆண்டுதோறும் ஆகஸ்ட்டு மாதம் தென்னிந்தியாவில் இருந்து புறப்பட்டு அக்டோபர் ம்தம் மாலத்தீவை அடைகிறது. பின்னர் அங்கிருந்து நவம்பரில் செகேல்ஸ் தீவை அடைகிறது. டிசம்பரில் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள மொசம்பிக் நகரை அடைகிறது. அங்கு இருந்து ஏப்ரல் மாதம் மாலத்தீவு வழியாக மீண்டும் இந்தியா திரும்புகிறது. இதில் ஆச்சரியப்படவேண்டிய விஷயம் என்னவெனில் அவை ஒவ்வொரு இடத்திலும் சில நாட்களே தங்குகின்றன. இடையே 600 மிதல் 800 கிலோமீட்டர் தூரம் கடலை கடக்கின்றன. இவை 3 ஆயிரத்து 200 அடி உடரத்தில் பறக்கின்றன. தாழ்வாக பறந்தால் காற்றிந் வேகம் தட்டாந்களை தள்ளிவிட்டு திசை மாற்றிவிடக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதில் சுவராசியமான விசயம் என்னவென்றால் இப்படி நீண்டதூரம் கண்டம் விட்டு கண்டம் செல்வதற்கு அவற்றின் அத்தியாவசிய தேவையான சுத்தமான தண்ணிர் கிடைக்காததுதான் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

நாம் சின்னவயதில் சாதரனமாக நினைத்து அடித்து துன்புறுத்திய ஒரு தட்டானுக்கு இப்படி ஒரு திறமை..

நன்றி தினத்தந்தி இளைஞர் மலர்....சோ.ஞானசேகர்..
"இலங்கையில் நிலவும் சுமுக நிலை"
'இலங்கை தமிழர்கள் இலங்கையில் சுமுகமாக 'இருக்கிறார்கள். முதல்வர் மு.கருணாநிதி கன்னட கவிஞர் சர்வக்ஞரின் சிலை திறப்பு விழாவில் பேசியது, இலங்கைத் தமிழர் பிறச்னையில் சுமுக நிலை ஏற்பட்டுவிடக்கூடாது எனச் சிலர் விரும்பியதாகவும், இப்போதுகூட சிலர் அதைக் கிளறிவிடுகிறார்கள் என்று பேசினார்.எப்படி இலங்கையில் நம் சகோதர, சகோதிரிகள் சுகுமுகமாகவும், சந்தோசமாகவும் இருக்கிறார்கள் என்று பாருங்கள்........

Tuesday, August 4, 2009

ஈரமில்லாத ஈரானிய ராணுவம்‍

ஈரானில் 'லாயல் மிலிஷியா' என்றொரு ராணுவப் பிரிவு இருக்கிறது. 1979 இல் மக்கள் ராணுவமாக அயதுல்லா கொமினியால் தொடங்கப்பட்ட இந்தப் பிரிவு ஈரானின் பிரதான ராணுவத்தின் கீழ் செயல்படுகிறது. கொமினிக்குப் பிறகு அவரது இடத்திற்க்கு வந்த காமெனிக்கு இப்போது இந்த லாயல் மிலிஷியா ரெம்பவும் விசுவாசமாக இருக்கிறது.

இந்த ராணுவப் பிரிவினருக்குத் தரப்பட்டுள்ள கடமைகளில் ஒன்று என்ன தெரியுமா?

குற்றம் செய்ததாக மரண தண்டனை விதிக்கப்படும் ஈரானிய இளம் பென்களை 'தற்காலிகமாக' திருமணம் செய்து கொண்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும் தினத்திறக்கு முதல் நாள் இரவு அவர்களை கற்பழிக்க வேண்டும்.

ஏன் இந்தக் கொடுமை?

ஈரானில் 'கன்னி கழியாத' பெண்களை மரண தண்டனைக்கு உட்படுத்துவது சட்டத்தை மீறியதாகக் கருதப்படுகிறது. அவர்களுக்கு மரண தண்டனை தரலாம். ஆனால் நிறை வேற்றப்படும்போது அவர்கள் கன்னிகளாக இருக்ககூடாது.

விசுவாச ரானுவப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் தந்த வாக்கு மூலம் இது: 'ஐயோ ரெம்பக் கொடுமை இது. நாளை காலை மரண தண்டனை என்றால் இன்று இரவு தடண்டனை பெற்ற பெண்ணை நான் தற்காலிகமாக மணந்து கொண்டு கற்பழிக்க வேண்டும். அப்படி என் கடமையைச் செய்யும்போது அந்த இளம் பெண்களின் கதறல் கேட்டு நான் நொறுங்கிப் போகிறேன். பல பெண்கள் 'அது' முடிந்ததும் தன் நகங்களால் உடல் முழுவதும் கீறிக் கொள்வதையும் பார்த்திருக்கிறேன். மருநாள் மரண தண்டனையை எதிர்கொள்ளும்போது முகத்தில் அவர்கள் எந்த எக்ஸிபிரஷனும் இல்லாமல் நிற்பது இன்னும் சோகம்.

மரண தண்டனை கூட அவர்களுக்கு பயமில்லை. அதற்க்கு முதல் நாள் நடக்கும் கொடுமைதான் அவர்களுக்குப் பயம்.

இப்படியும் நடக்கிறது உலகத்தில் இந்த 20ஆம் நூற்றாண்டில்.

(நன்றி தினமணி கதிர் அக்கரைச் சீமை ராணிமைந்தன்).

சோ.ஞானசேகர்.

Tuesday, July 21, 2009

காட்டன் சூதாட்டம்
நான் எத்தனையோ சூதாட்டம் கேள்விப் பட்டிருக்கிரேன் சீட்டுகட்டு ஆடுவதை பார்த்து இருக்கிறேன் அதனால் பல குடும்பம் கஷ்டத்தை அனுபவித்து கொண்டு இருக்கிறது. அடுத்து குதிரை ரேஸ் இதில் பணத்தை கட்டி பணத்தை இலந்து விட்டதை பிடிக்கிறேன் என்று உள்ளதை இலந்ததுதான் மிச்சம். அடுத்து லாட்டரி சீட்டு இந்த சீட்டை வாங்கி லாட்டரி அடிக்கும் என்று சோத்துக்கு லாட்டரி அடித்ததுதான் மிச்சம். இதை அரசாங்கம் தடை செய்து விட்டது. அடுத்து மூன்று சீட் இதில் ஆசைபட்டு கூலி பணம் முழுவதும் இலந்தது தான் மிச்சம் இது ஒரு வகை, அடுத்து ஒரு டப்பாவில் நான்கு ஐந்து அடையாள கட்டைகளை போட்டு கட கடனு கலக்கி வைசார் ஐஞ்சு வைச்சா பத்து, பத்து வைச்சா இருவது இப்படி ஒரு சூதாட்டம் இந்தனை சூதாட்டம் நடக்கிறது. இதலாம் அரசாங்கம் ஒழிக்கும் என்று நினைத்தால் சுத்தமடத்தனம் ஏன்னா இதை நடத்துவது அவர்களின் கைதடிகள்தான். இதல்லாம் போகட்டும் இந்த காட்டன் சூதாட்டம்னா என்னானு பார்போம் முதலில் இந்த சூதாட்டம்னா என்னானு எனக்கு தெரியாது பேப்பரில் வந்த செய்தியை பார்த்து (நன்றி தினமனி....) நன்பர் ஒருவரிடம் கேட்டேன் அவர் என்னை ஒரு மாதிரியாக பார்த்து சிரித்தார் ஏன் சிர்க்கிறேங்கனு கேட்டேன் அதற்க்கு அவர் விளக்கம் சொன்னார். ஒரு நம்பர் மேல் பணம் கட்டினால் இதை நடத்துபவர் ஒரு நம்பர் கொண்ட பேப்பர் அச்சிட்டு வெளியிடுவார் எந்தெந்த நம்பர் உள்ளதோ அது பரிசுக்கு உரிய நம்பர் அந்த நம்பகுரியவர் பரிசு பெற்றவர் ஆவார். இது என்னனா ஒரு 20 வருடங்களுக்கு முன் மும்பையில் பருத்தியின் விலையை நிர்நயம் செய்து தினமும் செய்தி பேப்பரில் வெளிவருவதை வைத்து சூதாடியுள்ளார்கள் அதுதான் இன்று ஒரு மிகப் பெரிய சூதாட்டமாக ஏழைகளை பிடித்து ஆட்டுகிறது. இதை எப்படி ஒழிக்கப்போகிறது நமது அரசாங்கம்.
சோ.ஞானசேகர்.

Tuesday, July 7, 2009

சங்கிலி பறிப்பு

நாம் இப்பொழுது காலை மாலை பேப்பரை கையில் எடுத்தால் அதிகமாக செய்தி வருவது கொலை, கொள்ளை, திருட்டு, சங்கிலி பறிப்பு. கொலை செய்பவர் பணத்துக்காகவோ முன்பகையோ காரனமாக இருக்கும். இரண்டாவதாக கொள்ளை இது ஒரு கூட்டம் ஒரு இடத்தை தேர்வு செய்து கொள்ளை அடிப்பார்கள். திருட்டு இது தனிநபர் அல்லது 2,3 பேர் சேர்ந்து செய்வார்கள். இவர்கள் எல்லாம் இதுதான் அவர்கள் தொழில்.ஆனால் இந்தசங்கிலி பறிப்பு வழக்கமாக ஒரு கூட்டம் செய்து கொண்டு இருந்தது ஆனால் இப்பொழுது இந்தமாதிரி சங்கிலி பறிக்கும் நபர்கள யார் அறியும் போது மனது மிகவும் வேதனையாக உள்ளது.யார் என்று நினைக்கிறேங்க படித்த இளைஞர்கள், வேலையில் உள்ள, வேலை இல்லாத இளைஞர்கள், கல்லுரி மாணவர்கள் தான் அதிகம் ஈடுபடுகின்றனர். அதிர்சியா இருக்குல வேதனையாக இருக்கிறது.இதற்கெளளாம் காரனம் என்ன கூடபலகுற நன்பர்கள் வட்டம்தான். நன்பர்கள் தாராளமாக பணம் செலலு செய்கிறார்கள் நம்மிடம் அவ்வளவு பணம் கிடைக்கவில்லை பெற்றேர்கள் சொஞ்சம் பணம்தான் கொடுக்கிறார்கள் அவர்களுக்கு இணையாக செலவு செய்ய முடியவில்லை அதனால் இந்த வழியை ஆரம்பித்து விடுகிறார்கள்.இது தவருனு தெரிவதில்லை பிடிபட்டவுடன்தான் இதன் பின் விலைவு தெரிய ஆரம்பிக்கிறது.இளைஞர்கலே சொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் இதனால் உங்கள் எதிர்காலம் மட்டும் அல்ல உங்கள் பெற்றோர், சகோதரியின் வாழ்க்கை, சகோதரின் எதிர்காலமும்தான்சிந்தியுங்கள் கெட்ட சகவாசத்தை விட்டுவிடுங்கள். உங்கள் தாய், தந்தை வருமாணத்தை மனதில் வைத்து படித்து நல்ல வேலையில் சேர்ந்து வாழ்க்கையில் முன்னுக்கு வரவும்.

சோ.ஞானசேகர்

Saturday, July 4, 2009

இரயில் பயணங்கள்
எத்தனையே வண்டிகளில் பயணம் செய்தாலும் இரயில் வண்டியில் பயணம் செய்யும் போது ஏற்படும் அனுபவம் இருக்கே அதுவே தனிசுகம். அதை நிறையப் பேர் அனுபவித்து இருப்பார்கள். சுகம் என்றவுடன் சுகம் மட்டும் இல்லை கஷ்டமும்தான். முதலில் கஷ்டம் பின்பு சுகமும் சுவராசியமும் கூட நான் நிறையத்தடவை அனுபவித்து இருக்கிறேன். நீங்கள் எப்படி அங்கேயும் அப்படித்தானே.
இரயில் பயணம் மூண்று வகை முதல் வகுப்பு பயணம், இரண்டாம் வகுப்பு பயணம், பொதுவகுப்பு பயணம். (முன்பு மூன்றாம் வகுப்பு) முதல் வகுப்பு பயணம் இதில் ஏசி கோச், ஏசி இல்லாத கோச்.
ஏசி கோச்சில் பயணம்
ஏசி கோச்சில் பயணம் செய்பவர்கள் இரயில் புறப்படுவதற்க்கு 10 நிமிடம் முன்பு வருவார்கள் அவர்கள் யாரையும் கண்டுகொள்ள மாட்டார்கள் சகபயணிகள் இருப்பதையே கண்டுகொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்து கொண்டு ஒரு இந்தியன் எக்ஸ் பிரஸ் பேப்பர், அல்லது இந்து பேப்பரை பொரட்ட அரம்பித்துவிடுவார்கள். இரயில் தன் பயணத்தை தொடங்கிவிடும். ஒரு அரைமணி நேரம் ஆனவுடன் சாப்பாட்டு பொட்டனத்தை பிரித்து கோழி முழுங்கின மாதிரி முழுங்கிங்கிட்டு யாரைப் பற்றியும் கவலைப் படாமல் பேக்கை துறந்து லுங்கியை எடுத்து தனக்கு எதிரில் இருப்பவர் ஆனா பென்னா என்ற என்பது பற்றி கவலைப்படாமல் பேண்டை கலட்டி மாட்டுவார் உடனே படுக்கையை போட்டு படுத்து விடுவார் படுத்த ஐந்து நிமிடத்தில் எட்டுக்கட்டை ராகத்தில் குறட்டை விட்டு தூங்கி விடுவார் காலையில் அவர் இறங்க வேண்டிய இடம் வந்தவுடன் இறங்கி விடுவார் இதுதான் முதல் ஏசி கோச் பயணம்.
ஏசி கோச்சில் பயணம் செய்பவர்கள் பெரும்பாலும் பிஸ்னஸ் மேன், அரசியல் வாதி, ( பயணம் செய்பவர்) நம் பணம் கம்பனி ஆபிசர் இவரும்
ஓசி கிரக்கி தெழிழாலர் இரத்தத்தை உறிஞ்சும் அட்டை இவர்கள்தான் முதல் வகுப்பு பயணம் இதில் ஏசி கோச்சில் பயணம் செய்பவர்கள். இப்போது நிலமை சொஞ்சம் மாரி வருகிறது சாமானியனும் முதல் வகுப்பு ஏசியில் பயணம் செய்யும் நிலமை வந்துள்ளது.
முதல் வகுப்பு
இந்த பயணம் செய்வோர் பெரும்பாலும் நடுத்தரவர்க்கம் ஆபிஸ் டூர் செல்வேர்தான் அதிகமாக பயணம்செய்வார்கள். இவர்கள் இரயில் பெட்டியில் ஏரியஉடன் தன்னுடைய உரிமையை நிலைநாட்டுவார் எப்படினா தன் அமர சீட்டுக்கு அடியில் வேரு யாரவது பேக், பை ஏதாவது வைத்திருந்தால் அதை நகட்டிவைத்துவிட்டு தன்னுடயதை அதன்கில்வைப்பார் யாரவது அவர் இடத்தில் உக்கார்திருந்தால் எழுப்பிவிட்டு அவர் உக்கார்வார். பின்பு பக்கத்தில் உள்ள நபர் தமக்கு தகுதியானவரா என்று பார்த்து லேசாக புன்முருவல் செய்வார் பதிலுக்கு அவர் புன்முருவல் செய்தால் அவரிடம் ஒரு சில வார்த்தைகள் பேசுவார் நேரம் கடந்தவுடன் கொண்டுவந்த சாப்பாடை சாப்பிட்டவுடன் தன்னுடைய படுக்கையை போட்டு படுத்து விடுவார். அவர் இறங்கவேண்டிய இடம் வந்தவுடன் எந்த சலனமும் இல்லாமல் இறங்கி விடுவார். இதுதான் முதல்வகுப்பு பயணம்.
இரண்டாம் வகுப்பு பயணம்
இந்த இரண்டாம் வகுப்பு பயணம் கொஞ்சம் சுவரஸ்யமாக இருக்கும் ரிசர்வ் செய்த டிக்கட்டை ஒரு கையில் வைத்துக்கொண்டு லக்கேசை ஒரு கையில் தூக்கிக்கிட்டு குழந்தை குட்டிகளுடன் தன்னுடைய கோச் எதுனு தேடுவார் பாருங்கங்க அவர் மட்டுமல்ல நாமும்தான் கோச்சை கண்டுபிடித்தவுடன் ஒரு சந்தேகம் வந்துவிடும் நம்முடைய சீட் நம்பர் சார்ட்டில் வந்துருக்கானு பார்ப்பார் அவர் பெயர் சார்டில் பார்த்தவுடன் அவர் முகம் பிகாசமாக மாரும். உடண் கோச்சில் ஏரியவுடன் இருக்கை தேடுவார் ஒரு வழியா கண்டுபிடித்தவுடன் யாராவது அவர் இடத்தில் உக்கார்ந்து இருந்தால் பிலிஸ் சார் உங்க நம்பர்னு கேப்பார் சிலபேர் எந்திருச்சிருவாங்க சிலபேர் உக்காருங்க அதுதான் இடம் இருக்கில உடனே இவர் முனங்கிக்கொண்டே லக்கேசை பொத்துனு போடுவார் ஒரு வழியா உக்காருவார். தனனை ஒருவாரு அசிவாசப்படுத்திக் கொண்டுசுத்தி ஒரு பார்வை பார்ப்பார் பக்கத்தில் குழந்தை இருந்தால் பார்த்துச் சிரிப்பார் பெயர் என்ன என்று கேப்பார் பக்கத்தில் பத்திரிக்கை ஏதாவது இருந்தால் வாங்கி புரட்டுவார். பிறகு சகபயணிகளிடம் சகசமாக பேச ஆரம்பித்துவிடுவார் பாலவிசயங்கலை அலசுவார்கள். சாப்பாடு நேரம் வரும் சாப்பிட்டு முடித்தவுடன் பக்கத்தில் உள்ளவரிடம் உங்கபெர்த் எதுனு கேப்பார் எங்க பெர்த் அப்பர், மிடில் லேடீஸ் மேலே ஏற முடியாது அதனால் உங்க லேயர் பெர்த்தை கொடுத்தால் நன்றாக இருக்கும் நீங்கள் எங்கள் இடத்தில் படுத்துக் கொள்ளுங்கள்னு கேப்பார் சிலபேர் தாரலமாக எடுத்துக்கொள்ளுங்கள்னு சொல்வார் சிலபேர் சாரிசார் எனக்கு ஆபரேசன் ஆகியிருக்கிறது என்னால் முடியாதுனு சொல்வார். ஒருவழியா படுத்து தூங்கி அர்கள் இறங்கவேண்டிய இடம் வந்தவுடன் இறங்கிப் போயிட்டு இருப்பார். இதுதான் இரண்டாம் வகுப்பு.
பொதுவகுப்பு பயணம்.
பொதுவகுப்பு பயணம் (செனரல் கம்பார்ட்மண்ட்) இதிலபாருங்க மத்த இரண்டு வகுப்புல பயணம் செய்யும் போது கிடைக்காத நல்ல அனுபவம் இதில் கிடைக்கும் இந்த கோச்சில் பயணம் செய்யத் தனித்திரமை வேண்டும் இரயில் புரப்படுகிற நேரத்திற்க்கு 1மணி அல்லது 2மணி நேரத்துக்கு முன்பு இரயில் நிலையம் வந்து விட வேண்டும் டிக்கட் எடுக்க நீண்ட வரிசை நிற்க வேண்டும் டிக்கட்டு ஒரு வழியா எடுத்து இரயில் பிளாட்பாம் வந்தவுடன் நிற்பதற்க்குள் முண்டியடித்து அடித்து பிடித்து ஒருத்தரை ஒருத்தர் தள்ளி சண்டை போட்டு ஒருவர் பேகமுடியும் வழியில் 4பேர் நுலைவார் எப்படியே உள்ளே போய் சீட் பிடிப்பதற்க்கு சண்டை முதலில் போனவர் ஒருபகுதியை மொத்தமாக அவர் குடும்பத்திற்க்கு பிடித்து விடுவார் பின்னால் வருபவர் இடம் கியைக்காமல் சண்டை பிடிப்பார். ஒரு வழியாக வண்டி புறப்பட்டவுடன் பிளாட்பாரச் சத்தம் வண்டியில் உள்ள சனங்கள் சத்தம் கொஞ்சம் அடங்கும். மூட்டை முடிச்சு சரியாக இருக்கிறதா என்று எண்னிப்பார்ப்பார்கள் மக்கள் எங்கேல்லாம் இடம் கிடைக்கிறதே அங்ககல்லாம் உக்கார்ந்து விடுவார்கள் பக்கத்தில் உள்ளவர்கலை யெல்லாம் நீங்கள் எங்கே போரேங்க என்று விசாரிப்பார்கள் ஒரே ஊர் என்றால் சந்தோசம் ஆகி ஒன்னுக்குள் ஒன்றாக ஆகிவிடுவார்கள். அப்பரம் கேக்கவே வேன்டாம். உடனே பையனை எழுப்பி டேய் மாமா உக்காரட்டும் அத்தைக்கு வழியவிடு ஒரே உபசரிப்புதான் போங்க அவுங்க கொண்டு வந்த தின்பண்டங்கலை இவர்களுக்கு கொடுத்து உபசரிப்பார்கள் இவர்கள் அவர்களுக்கு கொடுப்பார்கள். இவர்கள் அட்ரசை வாங்கி வைத்துக்கொள்வார் போன் நம்பரை வாங்கி கொள்வார்கள். இறங்க வேண்டிய இடம் வந்தவுடன் ஏறும் போது சண்டை போட்டவர்கள் இறங்கும்போது நல்ல நன்பர்கள் போல் உறவுக்காரர் போல் ஆகிவிடுவார். சிலபேர் இரயில் நண்பர்கள் போல் என்பார்கள் சிலபேருக்கு இரயில் பயணத்தில் நல்ல நன்பர்கள் கிடைத்துள்ளார்கள். ஒரே இரயில் பயணத்தில் ஒவ்வெரு வேருபட்ட மனிதர்கள்.இரயில் பயணத்தில் எத்தனையோ சம்பவங்கள் நடந்துள்ளன எனக்கு எத்தனையோ சம்பவங்கள் நடந்துள்ளன அதில் நல்லதும் கெட்டதும் நடந்துள்ளது நாம் நல்லத என்னி நல்லது செய்வோம்.
முக்கியமாக இரயில் பயணத்தின் போது யார் எதைக் கொடுத்தாலும் காபி, டீ, குளிர்பாணங்கள், பிஸ்கட், தண்ணீர், சாப்பிடும் பொருள்கள் எதையும் சாப்பிட வேண்டாம்.
சகபயணிகலிடம் சுகுகமான உறவு வைப்பது நன்று. அதிகம் வேண்டாம். உங்கள் விலாசம், போன் நம்பர், செல் நம்பர் எதைடும் கொடுக்க வேண்டாம். உரவினர், நண்பர்கள் போன் நம்பரை உறக்கசொல்ல வேண்டாம். நன்றி...சோ.ஞானசேகர்..

Monday, June 22, 2009

தமிழ்நாட்டு இளைஞர்களே விழித்திடுங்கள்

கடந்த இரண்டு ஆண்டுகலாக நமது செண்ரல் ரயில் நிலையத்தில் வரும் பயனிகலை கவனித்தால் தினமும் வெளிமாநில இளைஞர்கள் என்னிக்கை அதிகமாக உள்ளது.

இவர்கள் பீகார், ஒரிசா, அசாம், மணிப்பூர், திரிபுரா, நகலாந்து இப்படி வடமாநில மக்கள் இவர்கள் எதற்க்கு வருகிறார்கள் என்றால் வேலை தேடி அவர்களின் ஊரில் வேலை கிடையாது. வேலை கிடைத்தாலும் வேலைக்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை. இவர்கள் எப்படி இங்கு முதலில் ஒருவர் வருகிறார் அவர் மூலம் அடுத்தவர் வருகிறார் இப்படியாக குறைந்த காலத்தில் பல்லாயிரக்கனக்கானவர்கள் வந்தவன்னம் உள்ளார்கள்.
ஓட்டல், கடைகள், ஜவுளிக்கடை, வர்ததக நிருவனங்கள், கட்டட வேலைகள் என்று எல்லா வேலைகலையும் செய்கிறார்கள் குறைந்த கூலிக்கு அதிகநேரம் வேலை இதைத்தான் வேலை கொடுக்கும் நிருவனர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதில் மட்டும் மல்ல அம்பத்தூர் போன்ற தொழிற்சாலைகளிலும் இவர்கள் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்கிறார்கள்.

ஓட்டல், வர்த்தகநிருவனர்கள், மற்றும் கம்பனிகளின் முதலாலிகள் சொல்கிறார்கள் நம்வர்கள் அதிகநேரம் வேலை, செய்வதில்லை, கூலி அதிகமாகக் கேக்கிறார்கள், சரியாக வேலை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டை கூருகிறார்கள்தமிழ்நாட்டு இளைஞர்களே விழித்திருங்கள் வடமாநில ஆட்கள் எல்லா நிருவனங்களிலும் வேலையை அவர்கள் செய்தால் எதிர் காலத்தில் உங்களுக்கு வேலை கிடைப்பகாது நாம் நமது தாய் மாநிலத்தில் தமிழர்களின் என்னிக்கை குறைந்து வேறு மாநிலத்தின் மக்கள் தொகை அதிகமாகி நாம் அன்னியராக இருப்போம். விழிப்போடு இரு.. விழிப்போடு இரு.. விழிப்போடு இரு..
சோ.ஞானசேகர்

Saturday, June 13, 2009

தங்கம் என நினைத்து செம்பு துண்டுகளை சேகரித்த மக்கள்
தங்கம் என நினைத்து செம்பு துண்டுகளை சேகரித்த மக்கள் சென்னையை அடுத்த மதுரவாயிலில் லாரியில் இரிந்து சிந்திய செம்பு துண்டுகளை தங்கம் என நினைத்து சேகரிக்க குவிந்த பொதுமக்கள் கூட்டத்தால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்க்குள் தங்கத் துண்ட்கள் சாலையில் கிடப்பதாகவும், பெதுமக்கள் பலர் சேகரிப்பதாகவும் மதுரவாயில் பகுதியில் வதந்திபரவியது. இதனை நம்பி சாலையில் திரண்ட மக்கள் தங்ம் என நிணைத்து செம்பு துண்டுகளை போட்டி போட்டு சேகரிக்கத் தொடங்கினர். சாலையில் கிடந்தது தங்கம் இல்லை செம்புத் துண்டுகள் என்பது தெரிந்து பலர் ஏமாற்றத்துடன் சென்றனர். இது போல்தான் ஆயில், பெட்ரோல், டீசல் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகள் சமயத்தில் விபத்துக்கு உள்ளாவது உண்டு. அந்த நேரத்தில் லாரியில் இருக்கும் ஆயில் சிந்தும் அதைபிடிக்க பொதுமக்கள் போட்டா போட்டி நடக்கும். அந்தநேரத்தில் திடிர் என்று தீ பற்றிக் கொள்ளும் மக்களும் சேர்ந்து எரிந்து சாவார்கள் இது அடிக்கடி நடக்கும் சம்பவம். இலவசமாக எது கிடைத்தாலும் அடித்து பிடித்து ஓடுவது உயிரை விடுவது வாடிக்கையான ஒன்றுதான் மக்கள் எதையும் சிந்திகாமல் செயல்படுவது வேதனையானது வெக்கக்கேடான செயல். இந்த பலக்கத்தை மாற்றினால் நல்லது. ஆபத்தை விலை கொடுத்து வாங்காதீர்...
சோ.ஞானசேகர்.

Saturday, June 6, 2009

ஒருநாள் கூத்துக்கு மீசையை எடுத்த கதை போல்

பயணிகளிடம் சோதனை தென் மாநிலங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரித்ததை தொடர்ந்து ரயில் பயணிகளிடம் பரிசோதனை என்ற பெயரில் போலிசார் நடத்தும் கூத்து இருக்கே இதை சொல்லி மாலாது. ஒரு அசம்பாவிதம் நடந்தாலோ, நடத்ப்படலாம் என எச்சரித்தாலோ உடனே மெட்டல் டிடக்டர், ஸ்கேன் என்று தடபுடல் பன்னுவாங்க பாருங்க அனுபவித்தாள்தான் தெரியும்.

பயணிகள் பைகள், பேக், பிரிப்கேஸ் எல்லாத்தையும் அக்குவேர் ஆணிவேராக பிரிச்சு போட்டு. வீட்டில் இருந்து துணிகளை நன்கு தேய்த்து எடுத்து வச்சது இப்படி ஆனால் எப்படி இருக்கும் பயணிகளிடம் நாகரிகமாக நடக்கவும். இதில் சில பயணிகளின் உடமைகள் கானாமல் போய்விடுகிறது. பயணிகள் உள்ளே செல்லும் வழியில்தான் காவல் துறை சோதனை செய்கிரார்கள்.ஆனால் இரயில், பஸ் நிலையங்களில் நிறைய ஓட்டை வழிகள் உள்ளது அங்கு எந்த கண்கானிப்பும் கிடையாது. எப்பொழுதும் விழிப்புடன் இருப்பது கிடையாது. அந்தந்த நேரத்துக்கு தான் நடவடிக்கை எடுக்கிறார்கள்.தினமும் சோதனை செய்தாள் பயணிகள் அதற்க்கு தயாராக வருவார்கள் முன்கூட்டியே வந்து விடுவார்கள். காவல் துறைக்கும் சோதனை செய்வது எளிமையாக இருக்கும். தவரு செய்ய வருபவனும் பயப்படுவான்.அதனால் ஒருநாள் கூத்துக்கு மீசையை எடுத்த கதை போல் இல்லாமல் தினமும் எச்சரிக்கையுடன் இருக்கலாம்.

சோ.ஞானசேகர்.

Thursday, June 4, 2009

அரக்கர் கூட்டத்தில் ஒரு மனிதர்

முகாம்களில் வாழும் அப்பாவித் தமிழ் மக்களின் துன்பங்களைச் சொற்களில் விளக்க முடியாது: சிறிலங்காவின் தலைமை நீதிபதி கவலை

முகாம்களில் வாழும் இடம்பெயர்ந்த அப்பாவித் தமிழ் மக்களின் துன்பங்களை சொற்களில் விளக்க முடியாது என்று சிறிலங்காவின் தலைமை நீதிபதி சரத் என்.சில்வா என் உணர்வுகளை என்னால் அவர்களிடம் வெளிப்படுத்த முடியவில்லை. அவர்களின் துன்பங்களைக் கண்டு நாங்களும் அழுகிறோம் என்பதை அவர்களிடம் என்னால் சொல்ல முடியவில்லை. அவர்களுக்கு நிவாரண உதவிகளை நாம் போதிய அளவுக்கு வழங்க வேண்டும். அதைச் செய்யத் தவறினால் நாம் பழிக்கு ஆளாவோம்.
இந்த நாட்டின் சட்டத்தில் நீதி கிடைக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்க முடியாது. அந்த மக்களின் துன்பங்கள் இந்த நாட்டின் நீதிமன்றங்களுக்குக் கொண்டு வரப்படவில்லை.
இடம்பெயர்ந்த மக்களின் நலனில் இந்த நாட்டின் சட்டம் எந்த அக்கறையும் காட்டவில்லை. இதை நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். இவ்வாறு சொல்வதற்காக நான் தண்டிக்கப்படலாம் என்று சிறிலங்கா தலைமை நீதிபதி சரத் என்.சில்வா குறிப்பிட்டார்.
புதினம் காம் வெளியானதின் சுருக்கம்.
நன்றி புதினம் காம்...
சோ.ஞானசேகர்.

Tuesday, June 2, 2009

ஈழத்தின் தீயூழ்!

மாவீரன் பிரபாகரன் மாண்டான் என்னும் செய்தி தொலைக்காட்சிப் பெட்டிகளைத் துளைத்துக்கொண்டு வெளிப்பட்டபோது, அடிவயிற்றை முறுக்கிக் கொண்டு, இனம் புரியாத பீதி யாவரையும் ஆட்கொண்டது. தமிழ்நாடு இழவு வீடாக மாறியது! 'ஈழம் எங்கள் தாகம்' என்று போர் முரசு கொட்டியவன், தன்னுடைய தாய் நாட்டு விடுதலைக்காகப் பதினெட்டு வயதில் களம் புகுந்தவன், களத்திலேயே செயல்பட்டு, களத்திலேயே உண்டு, களத்திலேயே உறங்கி, சிங்களக் காடையர்களுக்கு முப்பதுதாண்டு காலம் சிம்மசொப்பனமாக விளங்கியவன், களத்திலேயே நீடு துயில் கொண்டுவிட்டான் என்று சிங்களச் செய்திகள் சொல்லுகின்றன! ஒரு புறநானூற்றுத் தாய் சொன்னாள்: ''அவனை ஈன்ற வயிறு இதுதான்; அதன்பிறகு அவனை நான் எங்கே அறிந்தேன்! பகைவர்களின் கருவறுக்கப் போர்க் களங்களில் தென்படுவான்! அங்கே போய்ப் பாருங்கள்!'' ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அப்படி ஒரு மகனை ஈழத் தாய் ஒருத்தி அந்த மன்னின் விடுதலைக்காகச் சுமந்தாள்! இலங்கை மக்கள் ஒரேநாட்டின் மக்கள் என்று முழங்குகிறாரே ராஜபட்ச! சிங்கள ராணுவக் குண்டு வீச்சுக்கு அஞ்சி ஈழ மக்கள் ஊர்களைக் காலி செய்து கொண்டு போன பிறகு, அந்தப் பகுதியிலே கூட அன்று அந்தத் தமிழர்களின் வீடுகளிலேயே சிங்களவர்களைக் கொண்டு வந்து ராணுவப்பாதுகாப்போடு குடியேற்றுகிறாரே ஏன்? வஞ்சகம்தானே! தமிழினத்தை முற்றாக அழித்து, அந்தப் பகுதிகளையும் சிங்களப் பகுதிகளாக்கும் அவருடைய வஞ்சகச் செயலை அறிந்தும், மன்மோகன்சிங் - கருணாநிதி கூட்டணி அரசு அவருக்கு வகைதொகை இல்லாமல் போர்க் கருவிகளை வழங்கியதே! போரால் அவருடைய கருவூலம் வறண்டு விட்டது என்று வகை தொகை இல்லாமல் கடன் கொடுத்து உதவியதே! வாலி வலிமையானவன்; நேரியவன்; பெருந்தன்மையானவன்; ஆனால் தன்னால் வாலில் கட்டி அடிக்கப்பட்ட ராவணன் தன்னுடைய நட்புக்காக இறைஞ்சுகிறான் என்று இரங்கி, தீயவனோடு நட்புப் பூண்டான். ராவணனின் நட்பால் வாலிக்கு எந்தப்பயனுமில்லை. ஆனால், சிற்றினச் சேர்க்கை காரணமாக ராமனின் அம்புக்கு இரையாக நேரிடவில்லையா? ராவணவதம் நிகழ்வதற்க்கு வாலி வதம் நிகழ்ந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லையா வலிமையான நாடு இந்தியா! பல்லாயிரக் கணக்கில் தமிழ் மக்களைக் கொன்று மாபாதகம் புரிகின்ற ராஜபட்சவுடன் சேராத கூட்டு ஏன் சேர வேண்டும்? அந்த நீச ஆட்சிக்கு ஆயுதங்கள் ஏன் வழங்க வேண்டும்? இந்த நீச நட்பால் இந்தியா மானக்கேடடைந்தைத் தவிர பெற்ற பயன் என்ன நடந்து முடிந்த தமிழினப் பேரழிவு குறித்துச் சிங்களக் காடையர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். தமிழினத்தைச் சின்னா பின்னாப்படுத்தி விட்டதாகக் குதூகலிக்குறார் ராஜபட்ச! மண்டியிட்டு மண்ணை மித்தமிடுகிறார்! அந்தக்குறியீட்டின் மூலம் அவர் சிங்கள இனத்திற்க்குச் சொல்லும் செய்தி இந்த மண்ணை உங்களுக்கு மட்டுமே உரித்தாக்கிவிட்டேன் என்பதுதானே! சிறுபான்மை, பெரும்பான்மை என்பதெல்லாம் கிடையாது ஒருபான்மைதான் உண்டு என்று வெற்றிக்குப்பிந்தைய பாராளுமன்றத்தில் விளம்பி இருக்கிறார் ராஜபட்ச! அதனுடைய பொருள் இதுவரை இருந்து வந்த, இடையில் கேள்விக்குள்ளான, ஒற்றையாட்சி முறையை மீண்டும் உறுதிப்படுத்தி விட்டேன் என்பதுதானே! ஈழப்பிரிவினைக்குக் கூட பாரளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து, முடித்தால் நிறைவேற்றிக்கொள் என்பது ராஜபட்சவின் அறை கூவல்! அப்படி முடியாதென்றால் ''ஜனநாயகத்தில் நமக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்" என்று சமதானமாகப் போய்விட வேண்டும் என்பது ராஜபட்சவின் அறிவுரை! அதை விட்டுவிட்டு உரிமை பற்றி போராடினால் சிங்கள ராணுவம் சுட்டுப்பொசுக்கும்; அதற்க்குச் சுடத் தெரியவில்லை என்றால் இந்தியாவைத் துணைக்கழைத்துக் கொள்ளும் என்பது ராஜபட்சவின் எச்சரிக்கை. இலங்கையை ஆண்ட அத்தனை சிங்கள அதிபர்களும் தங்கள் தங்கள் பங்குக்குத் தமிழின அழிப்பு வேலையை மேற்கொண்டவர்கள்தான்! ஆனால் கடைசியாக ஒரு கசாப்புக் கடைக்காரரிடம் அந்தப்பகுதி சிக்கிக் கொண்டதுதான் பேரவலம்! இந்தியா அந்தக் கசாப்புக் கடைக்காரருக்கு வெட்டுக்கத்தி கொடுத்து உதவியது அதை விடக் கொடுமை! அந்த வெட்டுக்கத்தியைக் கொடுக்கவிடாமல் தடுத்து, ஆடுகளைக் காக்கும் அதிகார பீடத்தில் கருணாநிதியைத் தமிழ் மக்கள் கீழேயும் மேலேயும் ஏற்றி வைத்திருந்தும், இருவரும் சேர்ந்து கொண்டு ஐயோ! ஆடுகள் வெட்டப்படுகின்றனவே! என்று நீலிக் கண்ணீர் வடித்துக் குரலெடுத்து ஒப்பாரி வைத்து, வஞ்சகத்திலெல்லாம் வஞ்சகம்! ஈழத்தமினத்திற்க்கு எதிராக நினைக்கவே நெஞ்சு நடுங்குங்கும் கொடுஞ்செயல்கள் ஜெயவர்த்தன காலத்திலேயே தெடங்கி விட்டன! ஆனால் அவருடைய கழுத்தை அப்போதைக்கப்போது பிடித்துக் கட்டுக்குள் வைக்க இந்திரா காந்தி போன்ற வீராங்கனைகளும், எ.ம்.ஜி.ஆர். போன்ற பொன்மனச் செம்மல்களும் ஆட்சிகளில் இருந்தார்கள்! ஈழப் போரளிகளை ரானுவரீதியாக வளர்த்தவர்கல் அவர்கல்தான்! முதல் மூன்று ஈழப் போர்களிலும் மூன்றில் இருபகுதிச் சிங்களவர்கள் மூன்றில் ஒருபகுதித் தமிழர்களிடம் மண்ணைக் கவ்வியதன் விளைவாக தமிழீழம் அறிவிக்கப்படாத விடுதலை பெற்ற நாடாகச் செயல்பட்டது! ஈழத்தில் போராளிகளிடம் தரைப்படை இருந்தது; சிறு கப்பல்களும், விமானங்களும் இருந்தன. ஈழத்தின் 16,000 சதுர கிலோ மீட்டர் பரப்புப் போராளிகளின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. அவர்களின் நாடு ஐக்கியநாடுகள் அவையில் உறுப்பினராக இல்லையே தவிர மற்ற எல்லாம் நடந்தேறின.இதற்கிடையே ரணில்விக்கிரமசிங்க வரவேண்டிய இடத்திற்க்கு ராஜபட்ச வருவதுக்குத் தங்களை அறியாமலேயே ஈழப் போராளிகள் உதவி விட்டார்கள்! எத்தனையோ பிழைகள் செய்திருக்கிறார்கள்! யானை படுத்தாலும் குதிரை மட்ட்ம் என்பது போலத்தான் அது! இவர்களின் இடத்தில் டக்ளஸ் தேவானந்தாவையும், இத்தனை லட்சம் தமிழர்கள் அழிவதற்க்குச் சிங்களவர்களுக்கு உளவு சொல்லி, ஈழப்பிழைப்புக்கு பதிலாக ஈனப் பிழைப்பு பிழைத்த கருணாவையும் நினைத்துப் பாருங்கள்! மலத்தை மிதித்துவிட்டது போன்ற அருவருப்பு ஏற்படவில்லையா? ரணிலுக்கு பதிலாக ராஜபட்ச வந்து தமிழின அழிவிற்க்கு முதற்காரணம். சோனியாவின் 'ரப்பர் முத்திரை' என்று புகழ்கொண்ட மன்மோகன்சிங் பிரதமரான காலமும், சொல் வேறாகவும், செயல் வேறாகவும் வாழ்ந்து பழக்கப்பட்ட கருணாநிதி தமிழ்நாட்டின் முதலமைச்சரான காலமும் ராஜபட்சவின் ஆட்சிக் காலத்தோடு பொருந்தி அமைந்துவிட்டதை ஈழத்தின் தீ யூழ் எந்றுதான் வள்ளுவமொழியில் சொல்ல வேண்டும்! இவ்வளவு கொடுமைகளுக்கும் ஈழம் கசாப்புகடை ஆனதற்க்கும் ராஜபட்ச முதற்காரணம்! ஆயுதம் வழங்கிய மன்மோகன்சிங் துணைக்காரனம்! மன்மோகன்சிங்கை முடக்குகின்ற அதிகாரம் முற்றாகவாய்த்திருந்தும், அந்த அதிகாரத்தை உரியவழியில் பயன்படுத்தி இந்தியாவின் அயல்விவகாரக் கொள்கையையே மாற்றுவதை விடுத்து, நாளைக்கொரு மனிதச்சங்கிலி, ஒருவேளை தொடங்கி மறுவேலை வரும்வரை உண்ணா நோன்பு என்று பல்வேறு நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்த கருணாநிதி இன்னெரு துணைக்காரணம்! ராஜபட்ச என்னும் முதற் காரணமும் மன்மோகன்சிங், கருணாநிதி என்னும் துணைக் காரணங்களும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பிணமாவதற்க்கும் நான்காம் விடுதலைப் போர் முடிவுக்கு வரவும் காரணங்களாயின! நான்காம் விடுதலைப் போர் முடிவுற்று விட்டது. அதனுடைய பொருள் ஐந்தாம் விடுதலைப் போர் அடுத்து தொடங்கும் என்பதே! நான்கோடு எண்ணிக்கை முடிந்து விட்டதாக ராஜபட்சவோ, மன்மோகன்சிங்கோ, கருணாநிதியோ, கருணாவோ கருத மாட்டார்கள். நான்கின் வளர்ச்சி ஐந்து என்பதை அவர்கள் அறியாதவர்களில்லை! எந்த விடுதலைப் போராட்டமும் இலக்கை அடையாமல் முற்றுப் பெற்றதாக வரலாறு கிடையாது. ஒருவேளை அந்த ஒற்றைப் பிரபாகரன் இல்லையென்றே ஆகிவிட்டாலும் ஓராயிரம் பிரபாகரன்களை காலம் உடனடியாக உருவாக்கும்! ஈழத்தின் தேவைக்கு ஏற்பக் காலத்தால் வடிவமைக்கப்பட்டவன்தானே பிரபாகரன்! ஈழம்தான் அற்றுப்போய்விட்டதா? உலகின் மூத்த இனம், சிந்து சமவெளி நாகரிகம்கண்ட இனம், தெய்வப்புலமைத் திருவள்ளுவனைப் பெற்ற இனம் நாதியற்றுப்போக இயற்க்கை அனுமதிக்காது! ஒற்றைப் பிரபாகரன் இல்லையென்றே ஆகிவிட்டாலும் ஓராயிரம் பிரபாகரன்களை காலம் உடனடியாக உருவாக்கும்!

நன்றி தினமணி...

தினமணியில் வெளியான பழ.கருப்பையா அவர்களின் கட்டுரை
சோ.ஞானசேகர்