Saturday, October 30, 2010

புதிய விலங்கினங்கள்

புதிய விலங்கினங்கள்
  உலகில் இன்னும் கண்டுபிடிக்கப்படாத அறிய விலங்கினங்கள் இருக்கின்றது அவற்றில் கண்டுபிடிக்கப்பட்ட சில புதிய உயிரினங்கள் பசிப்பிக் பெருங்கடலில் அமைந்துள்ள பாப்புவா நியூகினியா தீவில் 200-க்கும் மேற்பட்ட புதிய தாவர, விலங்கினங்களை வி்ஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவற்றில் வெள்ளை வால் எலி, நீண்ட மூக்கு கொண்ட தவளை போன்ற விந்தை உயிரினங்களும் அடக்கம்.
   இந்த பாலூட்டிகள், இருவாழ்விகள், பூச்சிகள், தாவரங்கள் இதுவரை உலகம் அறியாதவை.
   இதுபற்றி ஆய்வாளர் ஸ்டீவ் ரிச்சர்ட்ஸ் கூறும்போது, "இன்று, முற்றிலும் புதுவகையான பாலூட்டிகளைக் கண்டுபிடித்திருப்பது மிகவும் அதிசயமானது. மரம் ஏறும் கங்காரு போன்ற உயிரினங்கள் பற்றி கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால் இதுமாதிரியான விந்தையான சின்னச்சின்ன உயிரினங்களைக் காணும்போது நமது ஆச்சரியம் கூடுகிறது" என்கிறார்.
  இன்று உலகில் எஞ்சியிருக்கும் இரண்டு செழுமையான மழைக் காடுகளான அமேசான் காங்கோ வடிநிலப்பகுதி ஆகியவற்றுக்கு இணையானது பாப்புவா நியூகினியா மழைக்காடு.
  "பல்லுயிரினங்களின் கிடங்காகத் திகழும் பாப்புவா நியூகினியாவில் எண்ணற்ற புதிய உயிரினங்களை கண்டுபிடித்திருக்கிறார்கள்" ரிச்சர்ட்ஸ் குழுவினர்.
   இவர்கள் கண்டுபிடித்திருக்கும் புதிய உயிரினங்களில் 'மிகவும் அழகான' வெளளை வால் எலி, இரண்டு சென்டி மீட்டர் அளவுக்கு நீளமான மூக்குக் கொண்ட தவளை, பளிச்சென்ற மஞ்சள் நிறப் புள்ளிகள் கொண்ட தவளை ஆகியவை குறிபிடத்தக்கவை. மேலும் பூச்சியினங்கள், சிலந்திகளில் மட்டும் தலா 100 புதிய வகைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
   தவளைகள், ஊர்வனவற்றில் நிபுணரான ரிச்சர்ட்ஸ் கூறுகையில், ''பாப்புவா நியூகினியாவில் புதிய உயிரினங்களைக் கண்டுபிடிப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. நீங்கள் சாதாரணமாக ஓர் உலா சென்றாலே ஒரு புதிய உயிரினத்தையோ, அதிகம் அறியப்படத அதிசயமான ஒன்றையோ காணலாம்'' என்கிறார்.
  பாப்புவா நியூகினியாவின் கரடு முரடான, மலைப்பாங்கான நிலப்பரப்பு காரணமாக அங்கு அதிகமாக உயிரியல் ஆய்வாளர்கள் செல்லவில்லை. தற்போது புதிய உயிரினங்களைக் கண்டுபிடித்திருக்கும் ஆய்வாளர்கள், இன்னும் இங்கு பெரும்பாலன பகுதிகள் ஆய்வு செய்யப்படவில்லை என்று கூறுகின்றனர்.


சோ.ஞானசேகர்...

செழுமையான மழைக் காடுகள் இயற்கையின் அழகு.....

Wednesday, October 13, 2010

பறவைகள்

   பறவைகள் தன் இருப்பை மற்றவர்களுக்குத் தெரிவிக்கவும், தன் இணைப் பறவைக்குத் தெரிவித்து அவற்றை கவர்ந்திழுக்கவும் பறவைகள் ஏற்படுத்துகின்ற இனிய ஓசைதான் பறவைகளின் பாட்டு என்று வழங்கப்படுகிறது.தங்கள் தொண்டையில் இருகின்ற ஸைரின்க்ஸ் (syrinx) எனும் உறுப்பின் உதவியுடன்தான் பறவைகள் பாடுகின்றன.தனித்துவமான இந்த உறுப்பு பறவைகளுக்கு மட்டும்தான் உள்ளது.
   பறவைகள் சில சமயம் வித்தியாசமான குரல் எழுப்பும். உணவு வேண்டி பறவைக் குஞ்சுகள் கொடுக்கும் குரலும், அபாய எச்சரிக்கை செய்வதற்காக எழுப்புகின்ற குரலும் வழக்கமான குரலைவிட வித்தியாசமாக இருக்கும்.
  பறவைகளில் ஆண், பெண் வித்தியாசத்தை மிகப் பொதுவாகவும், வெளிப்படையாகவும் பார்க்கலாம். தன் வண்ணத்தோகையை விரித்து அழகாக நடனமாடுபவை ஆண் மயில்கள். பல நிறங்களுடைய இறகுகளும் கொண்டையுமுடைய சேவல்தான் பெட்டைக் கோழியைவிட அழகாக இருககிறது.
   பறவை முட்டைகளை பொதுவாக இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். சிலவகைப் பறவைகளின் முட்டைகள் வெண்ணிறமாகவோ, அல்லது இளம் நிறமுடையதாகவோ இருக்கும். புறாக்கள், ஆந்தைகள், மரம் கொத்திகள், மீன் கொத்திகள் ஆகியவற்றின் முட்டைகள் இவ்வகையைச் சேர்ந்தவை. இப்பறவைகள், பொந்துகளிலோ மரக் கிளைகளிலோ கூடு கட்டி முட்டையிடுகின்றன. எனவே எதிரிகளால் அவ்வளவு விரைவாக கூட்டில் உள்ள முட்டைகளைக் கவர்ந்துவிட முடியாது.
  எனவே, இப்பறவைகளின் முட்டைகளின் பாதுகாப்பு குறித்த விஷயத்தில் நிறம் அவ்வளவு முக்கியமானதல்ல என்று சொல்லலாம். வேறு சில பறவைகளின் முட்டைகள் அடர்ந்த நிறமுடையதாகவோ,புள்ளிகளுடையதாகவோ இருக்கும்.இவ்வகையான முட்டைகள் தரையிலோ, திறந்த வெளிகளிலோ பொரிய வேண்டியவையாக இருக்கும். எனவேதான் இவை சுற்றுச்சூழலிருந்து எளிதில் பிரித்தறிய முடியாதபடி அடர்ந்த நிறங்களுடனோ, புள்ளிகளுடனோ இருக்கின்றன. எதிரிகளின் பார்வையிலிருந்து தப்புவதற்குதான் இந்த ஏற்பாடு.
  விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய சிலவகைப் பறவைகள் மட்டுமே முட்டைகளின்மீது அமர்ந்து அடைகாப்பதில்லை. கருவளர்கிற சமயத்தில் வெப்பநிலையை சீராக வைத்திருக்கும் நோக்கில்தான் பறவைகள் தங்கள் முட்டைகளின் மீது அமர்ந்து அடைகாக்கின்றன. ஆனால் சில இடங்களில் பறவைகள் அடைகாக்காமலேயே தங்கள் முட்டைகளின் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்கின்றன.
  ஆஸ்திரேலியா, நியூகினி தீவுகள் ஆகிய இடங்களில் உள்ள 'Scrub fowl' எனும் ஒருவகைப் பறவைகள் புற்களையும், இளைகளையும், சிறிய செடிகளையும், மண் துகள்களையும் ஒன்று சேர்த்து பதினைந்தடி உயரமும் முப்பத்தைந்தடி பரப்பளவும் உள்ள ஒரு வகையான குவியலை உருவாக்குகின்றன. சில சமயம் பல் பறவைகள் சேர்ந்து தங்களுக்கான ஒரே குவியலை உருவாக்கின்றன. பிறகு குவியலில் மூன்றடி நீளமுள்ள சிறு சுரங்கங்களை உருவாக்கி அதனுள் முட்டையிடுகின்றன. அந்த தாவரக் குவியலிலிருந்து கிடைக்கிற வெப்பத்தால் முட்டைகள் பொரிகின்றன. வேறொரு வகை பறவையான 'mallee fowl' இலைகளுக்குப் பதிலாக மண்ணைப் பயன்படுத்தி குவியல் அமைக்கின்றன.
  தங்கள் முட்டைகளின் மீது அமர்ந்து அடைகாக்காத சில பறவைகள் உள்ளன. மற்ற பறவைகளின் கூட்டில் முட்டையிட்டுவிட்டு அவை பறந்துவிடும். அந்தக்கூட்டில் வசிக்கும் பறவை அது தன் முட்டைதான் என்று தவறாகக் கருதிக்கொண்டு அந்த முட்டையையும் அடைகாத்து குஞ்சு பொரிக்கும். வெளிவந்த குஞ்சை தன் சொந்தக் குஞ்சுபோல வளர்க்கும். காக்கையின் கூட்டில் முட்டையிடும் குயில் (indian cucoo) இதற்கு ஒரு உதரணம்.
   தங்கள் இறகுகளைச் சுத்தப்படுத்திக் கொள்வதற்கும், ஒரு அளவு வரை இறகுகளின் ஈரம் சேராதிருக்கவும் பறவைகள் தங்கள் இறகுகளைக் கோதிக்கொள்கின்றன. இப்படி இறகுகளைத் தூய்மையாக வைத்திருப்பதனால் அவற்றின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. இறகுகள் வளரத் தொடங்கும்போதே பறவைக் குஞ்சுகள் கோதிக்கொள்ள ஆரம்பிக்கின்றன. சிறுவயதில் இதற்காக நிறைய நேரம் செலவிடுகின்றன பறவைகள்.
   முதிர்ந்த பறவைகள் இந்தப் பழக்கத்தை கடைசிவரை தொடர்கின்றன. அவற்றின் உடலின் பின் முனையில் வாலுக்குச் சற்று மேலுள்ள எண்ணெய்ச் சுரப்பியிலிருந்து எண்ணெயை அலகால் கொத்தியெடுத்து இறகுகளில் தடவிக் கொள்கின்றன. இந்த எண்ணெய்ப் பிசுபிசுப்பு இறகுகளில் திடிரென்று நீர் சேராமலும், இறகுகளின் மென்மையையும் காக்கிறது. இறகுகளின் வெப்ப நிலையைக் கட்டுப்படுத்தவும் இந்த எண்ணெய் உதவுகிறது.
   இறகுகளைக் கோதிக்கொள்வதுடன் இவை மண்ணில் புரளவோ அல்லது தண்ணீரில் குளிக்கவோ செய்கின்றன. வாத்துக்கள் தலையைத் தண்ணீரில் முக்குகின்றன. பிறகு சிறகு விரித்து உடம்பை உதரிக் கொள்கின்றன,
   முதுகைச் சொறிந்து கொள்ளவேண்டும் என்று தோன்றும் போது, நமக்கு மற்றவர்களின் உதவி தேவைப்படுகிறதல்லவா. அதைப் போல பரவைகளுக்கும் தங்கள் உடலில் அலகு எட்டாத இடத்தில் எண்ணெய்த் தேய்ப்பதற்கு இணைப் பறவையின் உதவியை நாடுகின்றன.

சோ.ஞானசேகர்.

இயற்கை வளங்களை காப்போம் பறவைகளை வாழவிடுவோம்

Wednesday, October 6, 2010

பூச்சிகளும், வண்டுகளும்

பூச்சிகளுக்கும் பெர்சனாலிட்டி உண்டு
   நமது கண்களுக்கு எல்லா பூச்சிகளும், வண்டுகளும் ஒரே மாதிரிதான் தெரிகின்றன. ஆனால் அவற்றுக்கும் தனித்தனியான ஆளுமை (பெர்சனாலிட்டி) உண்டு. நம்பமுடியவில்லை அல்லவா? ஆனால் விஞ்ஞானிகள் அப்படித்தான் கூறுகின்றனர்.
   சில பூச்சிகள் மணிதர்களைப் போலவே 'கூச்ச சுபாவம்' உள்ளவையாக இருக்கின்றன, சில பூச்சிகளோ அதிரடிப் பார்ட்டிகளாக இருக்கின்றன என்று டெப்ரிசென் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
  "உறுதி, தடாலடியாகச் செயல்படுவது, சுறுசுறுப்பு, மற்றவற்றைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறுவது போன்றவை பூச்சியினங்களில் கணக்கிடப்பட்ட பொதுவான ஆளுமைப் பண்புகள். இவை, ஒவ்வொரு பூச்சி, வண்சுகளுக்கும் வேறுபடுவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பூச்சி, கூச்சமானதா அல்லது துணிவானதா என்பதை, அவை அபாயகரமான சூழலில் எப்படி செயல்படுகின்றன அல்லது தங்களின் இருப்பிடங்களில் இருந்து எவ்வளவு நேரத்தல் வெளியே வருகின்றன என்பதை கொண்டு அறியலாம்" என்கிறார், இந்த ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவரன எனிககோ கையரிஸ்.
   இந்த ஆய்வின்போது, ஒரு குறிப்பிட்ட பூச்சியின் வசிப்பிடத்தின் அருகே சில பொருட்களை விஞ்ஞானிகள் வைத்தர்கள். அப்போது எவ்வளவு வேகமாகப் பூச்சகள் அந்தப் பொருட்களை அடைகின்றன, ஆராய்கின்றன, எந்த வேகத்தில் அவை நகர்கின்றன என்று கவனமாகக் கண்கணித்தார்கள். அந்த ஆய்வில், ஒவ்வொரு பூச்சியும் ஒவ்வொரு விதமாக நடநது கொண்டது. ஒரு பூச்சி தயக்கம் கொண்டது அல்லது துணிச்சலானது என்று கண்டபிடிக்கப்பட்டல், அது எல்லா சூழ்நிலைகளிலும் அப்படியே நடந்து கொண்டது.
  'கிரிக்கெட்' பூச்சிகளில் ஆதிக்கம் செலத்தும், தலைவர்களைப் போல நடந்துகொள்ளும் ஆண் பூச்சிகள், பெண் பூச்சிகளை எளிதில் கவர்ந்து விடுவது தெரிய வந்திருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

படித்தது...

சோ.ஞானசேகர்.

இயற்கையை இயற்கையாக இருக்க உதவுங்கள்.

Tuesday, October 5, 2010

கரையான் புற்றுகள்

பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்
   கிராமப்புறங்களில், கரையான்கள் உயரமாகக் கட்டியிருக்கும் கரையான் புற்றுகளைக் காணலாம். அந்தக் கரையான் புற்றுகளைக் கொண்டு பருவ மாற்றம்,சுற்றுச்சூழல் மாற்றத்தை கணிக்கலாம் என்ற புதிய தகவலைக் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.
   கார்னகி நிறுவனத்தின் உலக சுற்றுச்சூழலியல் துறை ஆய்வாளர்கள், இது தொடர்பான ஆய்வை ஆப்பிர்க்காவின் சவான்னா புல்வெளிகளில் மேற்கொண்டனர். அவர்கள் இதற்கென்று வானில் இருந்து படமெடுப்பது, வரைபடங்களை அலசுவது போன்ற நவீன உத்திகளைப் பயன்படுத்தினர். அவற்றின் மூலம், 192 சதுர மைல் பரப்பளவில் அமைந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரையான் புற்றுகள் ஆய்வு செய்யப்பட்டன.
   கரையான் புற்றுகளின் அளவு, அவை ஒரு பகுதியில் அதிகமாக அல்லது குறைவக அமைந்திருக்கும் விதம் ஆகியவற்றுக்கும், வருடாந்திர மழையளவுடன் இணைநத தாவரவியல், நில அமைபபு ஆகியவற்றுக்கும் தொடர்பு இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
  கரையான்கள் அதிக ஈரபபதமாகவும், அதிக உலர்வாகவம் இல்லாத, எளிதாக தண்ணீர் வடியக்கூடிய பகுதியை தேர்ந்தெடுத்துத் தங்களின் புற்றுகளை அமைக்கின்றன. அப்படி சவான்னா நிலபபகுதியில் சீப்லைன்ஸ் எனப்படும் சரிவுகளில் கரயான்கள் அதிகமாகப் புற்றுகளை அமைத்திருந்தன.
  கரயான் புற்றுக்கும், இயற்கைச் சூழலுக்கும் நல்ல உறவு உள்ளது. மணணியல், நீரியல் போன்றவற்றில் மாற்றங்களைச் சுடடிக்காட்டுபவையாக புற்றுகளை மாற்றியுள்ளது. கரையான் புற்று உள்ள இடத்தில் எந்த மாதிரியன தாவரம் வளரும், சுற்றுச்சூழலில் என்ன மாற்றம் ஏற்படக்கூடும் என்பதை எலலாம் புற்றுகள் மூலமே அறியமுடிகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

படத்தது..

சோ.ஞானசேகர்.

சுற்றுச்சூழலைப் பதுகாப்போம்.