Showing posts with label தேயிலை. Show all posts
Showing posts with label தேயிலை. Show all posts

Thursday, August 16, 2012

தேயிலை கதிர்வீச்சை தடுக்கும்

 தலைவலியாக இருந்தாலும் சரி, கொஞ்சம் டல்லாக இருப்பது போல தெரிந்தாலும் சரி, சூடாக டீ என்ற தேநீரை சாப்பிட்டால், புத்துணர்ச்சி  நிச்சயம். அந்தளவுக்கு தேநீருக்கு சக்தி உண்டு. தேநீரின் மூலப்பொருளான தேயிலையில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது? இதயம் மற்றும் நரம்பு மண்டலம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் சக்தியாக உள்ளது தேயிலை. மூளையில் உள்ள ரத்தக் குழாய்களை சற்று விரிவடையச் செய்ய வைப்பதிலும் இதற்கு  முக்கிய பங்கு உண்டு. மனதிற்குப் புத்துணர்ச்சியூட்டி நமது வேலை செய்யும் திறனை அது முறுக்கேற்றுகிறது. தேநீரில் உள்ள அமினோ அமிலமான ‘காட்டாசின்’ உடலில் சேருகிறது. இந்தக் காட்டாசினில் வைட்டமின் ‘பி’ சக்தி நிறைந்திருக்கிறது. இது தந்துகிக் குழாய்களைப் வலுப் படுத்தும் சக்தி படைத்தது. மருந்துப் பொருட்களாகப் பயன்படுத்தப்படும் சிட்ரின், ருட்டின், எஸ்குலைன் போன்ற பொருட்களைக் காட்டிலும் காட்டாசினுக்கு சக்தி அதிகம்.  ‘காட்டாசின்’ என்ற பொருளுக்கு கதிர்வீச்சு முறிப்புக் குணமும் உண்டு. மனித உடலில் ‘ஸ்டிரான் ஷியம் 90’ ஏற்படுத்தும் தீய விளைவுகளை முற்றிலும் அகற்றி விடும் இது.
 கதிர்வீச்சு ‘ஐஸோடோப்’ எலும்பு மஜ்ஜையை அடையும் முன்னர் அதனை இப்பொருள் உறிஞ்சி விடுகிறது  என்கின்றனர் ஆய்வாளர்கள். தந்துகிகளை வலுவாக்குவதன் மூலம் மனித உடலில் ‘அஸ்கார்பிக்’ அமில அளவு சீராகிறது. காட்டாசினுக்கு நுண்ணுயிர் எதிர்ப்புத் தன்மையும் உண்டு என்று லேட்டஸ்ட் ஆய்வுகள் கூறுகின்றன. விதவிதமான தேநீர் வகைகள் யாவும் ஒரே செடியில் இருந்து பறிக்கப்படும் இலைகளை வெவ்வெறு வித மாகப் பதப்படுத்துவதன் மூலம் கிடைப்பவைதான். பதப்படுத்தும் முறையைப் பொறுத்து அவற்றின் தரங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. தேயிலையில் இரண்டு வகை உள்ளன. அவை சீனத் தேயிலை (சைனன்சிஸ் வகை), அசாம் தேயிலை (அசாமிக்கா வகை). பச்சைத் தேயிலை சீனாவின் தென்மேற்கு மலைப்பகுதிகளில் விளைவிக்கப்படுகின்றது. இது ‘கேமில்லியா’ என்ற தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. இது படிப்படியாக மேற்கு மற்றும் கீழை நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பச்சைத் தேயிலைத் தயாரிப்பின்போது இலைகள் உலர்த்தப்படுகின்றன. ஊற வைத்து நொதிக்க வைக்கப் படுவதில்லை. வியாபார ரீதியாகத் தயாரிக்கப்படும் பச்சைத் தேயிலையில் முக்கியமாக நான்கு ‘பாலிஃபீனால்கள்’ உள்ளன. இவை மொத்தமாக ‘கேட்டகின்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இவை மிகுந்த சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடண்டுகள் ஆகும். அதாவது இவை நமது வேதியியல் பண்பினால் ஆக்ஸிகரணமாகும் செயல்களைத் தடைப்படுத்துகின்றன. இதனால்  கேட்டகின்களால் வைரஸ்களை எதிர்கொள்ள முடிகிறது.
 பச்சைத் தேயிலையில் ஒருவர் தேநீர் தயாரித்து குடித்து வந்தால், நீண்ட நாட்கள் இளமையாக இருக்கலாம். அதேபோல புற்றுநோய் செல்கள் பிரிந்து வளர்வதையும் இது தடுக்கிறது. பல வகையான புற்று நோய்களில் இருந்து பச்சைத் தேயிலை நமக்குப் பாதுகாப்பு அளிக்கின்றது என்று அண்மைக்கால ஆராய்ச்சி முடிவுகள் காட்டுகின்றன.
 வளர்ந்த நாடுகளுள் சீனாவில் இதய மற்றும் ரத்தக் குழாய் நோய்கள் 80% குறைவாக இருக்க இதுவே காரணம். ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் பச்சைத் தேயிலை மூளையில் முதுமை ஏற்படுவதைக் குறைக்கிறது என்று கண்டறிந்துள்ளனர். இதுபோன்ற மருத்துவக் குணங்கள் அதிகம் இருப் பதால்தான், உலகில் பல நாட்டு மக்கள் தேநீர் அதிகமாக அருந்துகிறார்கள். ஆனால், அமெரிக்காவில் காஃபியைத்தான் அதிகமாக அருந்துவதாகச் சொல்லும் ஆய்வுத் தகவல்தான் வினோதமாக இருக்கிறது!

இயற்கையின் எழிலினை நாம் கண்டு ரசிக்கும் போது அவற்றைப் படைத்த ஆண்டவன் நம் கண்களுக்குத் தெரியாமலா போவான்?

Monday, July 11, 2011

தேயிலை

   தேநீர் நம் அன்றாட வாழ்க்கையில் ஒன்றாகிப்போன ஒன்று. தேயிலை…என்று சொல்லும்போதே தேநீரின் சுவை நாவில் ஊறுகிறது. இதை உபயோகிப்போர் அதிகம். தெரியாதவர்கள் மிகவும் சிலர்.
    தேயிலை சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் சீனர்கள் தற்செயலாக கண்டுபிடித்தார்கள் என்று சொல்லப்படுகிறது. சீன பேரரசர் ஷேன் நாங் அவருககாக குடிநீர் கொதிக்க வைக்கும் போது, அருகில் உள்ள ஒரு புதரில் இருந்து காய்ந்த இலைகள் கொதிநீரில் விழுந்தது, தண்ணீர் குறைந்த போது கலர் மாற்றம் ஏற்பட்டது. அதை சுவைத்துப் பார்ததில் அதுசுவைக இருந்திருக்கிறது  பருகியபின் சுறுசுறுப்பு எற்பட்டதின் விளைவாக தேயிலை சீனர்களால் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
தேயிலைச் செடிகள் வெப்பமான காலநிலை மற்றும் சூரிய ஒளி குறைந்தபட்சம் 5-6 மணி நேரம் ஒவ்வொரு நாளும் வேண்டும்.  பெரும்பாலும் வெப்பமண்டல அல்லது துணை வெப்பமண்டல காலநிலையில் வளர்க்கப்படுகின்றன.
    தேயிலை உற்பத்தியில் முன்னணி உள்ள முக்கிய நாடுகள், சீனா, ஜப்பான், வியட்நாம், இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா, மற்றும் தென் ஆப்பிரிக்கா.
   சீனா இவர்களது, கேமில்லியா சைனஸிஸ், தேயிலை செடி, இப்போது உலகம் முழுவதும் பயிரிடப்படுகிறது. இன்று, இந்தியா, ஜப்பான்  இலங்கை, தைவான், ஆப்பிரிக்கா, மற்றும் இந்தோனேஷியா உள்ள தேயிலை தோட்டங்கள், உலகின் தேயிலை தேவையை பூர்த்திசெய்கிறது.
   வெவ்வேறு தேயிலைகள் அனைத்தும் பல்வேறு வகைகள் இருக்கின்றன, வெள்ளை, பச்சை, ஊலோங், சிவப்பு, கருப்பு போன்ற அவைகள்.  கேமில்லியா சைனஸிஸ், பொதுவான தேயிலை.  தேயிலை வளர்க்க மண்வளம் முக்கியம் தண்ணீர் தேங்காத மலை பகுதியாக இருக்கவேண்டும்.
தேயிலை செடிகளின் உயரம்1.5 மீட்டர் வரை வளரவிடலாம் அதற்குமேல் விட்டால் கொழுந்து பறிக்கமுடியாது. தேயிலை செடியினை வளர விட்டுவிட்டால், 30 அடி உயரம் மேல் வளர்ந்து விடும். தேயிலை செடி உண்மையில் செடி அல்ல அது மரம் அதை வெட்டி வளர்காமல் விட்டால் மரமாகிவிடும். இந்தத் தாவரத்தின் கிளைகளின் நுனியிலுள்ள இலையரும்பையும், அதற்கு அடுத்ததாக இருக்கும் இரு இளம் இலைகளையும் கொய்து அதனை உலர வைத்து, நொதிக்கச் செய்து, பொடியாக்கி, பின்னர் படிப்படியாக பக்குவப்படுத்தி தேனீர் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
  நமது நாட்டில் அஸாம், கர்நாடகா, தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. இவ்வளவு சுவை மிக்க தேநீர் நாம் சுவைக்கும் போது, அதில் வேலை செய்யும் தோட்டத் தொழிலாளர்களின் நிலமை படுமோசமாக இருக்கும். 

இயற்கை நேசியுங்கள் இயற்கையோடு ஒத்து வாழுங்கள். இயற்கை அழகு, புத்துணர்ச்சி, உற்சாகம் இவையனைத்தையும் தரும் ...