Showing posts with label ஆவாரம் பூ. Show all posts
Showing posts with label ஆவாரம் பூ. Show all posts

Monday, April 7, 2014

ஆவாரம் பூ

 
இன்று நீரிழிவு நோயில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டேவருகிறது. 40 வயதைக் கடந்தவர்கள் முக்கால் வாசிப் பேர் நீரிழிவு நோயின் பாதிப்புக்கு ஆளானவர்களாக உள்ளனர்.நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரைச் சத்தை சக்தியாக மாற்றுவதற்கு கணையத்திலிருந்து கணைய நீர் அதாவது இன்சுலின் சுரக்கிறது. அவ்வாறு கணைய நீர் சீராக சுரந்து சக்தியாக மாற்றாமல் அது சர்க்கரைச் சத்தாகவே ரத்தத்துடன் கலப்பதால்  இரத்தத்தில்  சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதனால் சர்க்கரை நோய் உருவாகிறது.
  மேலும் உடல் உழைப்பு இன்மை, மன அழுத்தம், உடலுக்கு சீரான சத்துக்களைக் கொண்ட உணவு இல்லாமை, பரம்பரையாக வரும் நீரிழிவு போன்ற காரணங்களால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இந்த நீரிழிவு நோயின் தன்மை வாத, பித்த, கப உடற்கூறுகளுக்கு தகுந்தவாறு பாதிப்பை உண்டு பண்ணும். நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது என்கிறது  நவீன மருத்துவ உலகம். ஆனால் முறையான உணவு முறையாலும், உடற் பயிற்சியாலும்  நம் கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம் என்கிறது  மருத்துவம்.
  சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும்,  அந்த நோயினால் உண்டாகும் பாதிப்புகளை கட்டுப்படுத்தலாம்.  பொதுவாக  சர்க்கரை நோயின் பாதிப்பானது மயக்கம், உடல் தளர்வு, கை கால் சோர்வு, ஞாபக மறதி, கண் பார்வைக் குறைபாடு என பல குறிகுணங்கள் இருந்தால், இரத்தப் பரிசோதனை மூலம் சர்க்கரையின் அளவைப் பரிசோதித்து, ஆரம்ப காலத்திலேயே உணவுக் கட்டுப்பாடு, தியானம், உடற் பயிற்சி, போன்றவற்றால் கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.
  பொன்னாவரை பூ பளிச்சிடும் மஞ்சள் நிறப் பூக்களையுடைய அழகிய குறுஞ்செடி. இது சர்க்கரை நோயை குணப்படுத்த மருந்தாகப் பயன்படுகிறது. பொன்னாவாரை பூ 10 கிராம், மிளகு 5, திப்பிலி3, சுக்கு1 துண்டு, சிற்றரத்தை 1 துண்டு, இவற்றை இடித்து பொடியாக்கி ஒரு தம்ளர் நீரில் போட்டு பாதியாக வற்றக் காய்ச்சி காலை வேளையில் அருந்தினால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுவதுடன், கை கால் மறமறப்பு, உடல் சோர்வு, மயக்கம், படபடப்பு, கண் பார்வைக் கோளாறு முதலியவை படிப்படியாகக் குறையும்.
  பொன்னாவாரைப் பூவை நீரிலிட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தினால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். உடலின் வியர்வை நாற்றமும் மாறும். பொன்னாவாரைப் பூவுடன் பச்சை பயறு சேர்த்து அரைத்து உடலெங்கும் பூசி குளித்து வந்தால் சர்க்கரை நோயினால் முழங்காலுக்குக் கீழே உண்டான சரும கருப்பு நீங்கி சருமம் பழைய நிலையை அடையும். உடல் எரிச்சல் தீரும்

இயற்கை நமக்கு அளித்த மகத்துவங்கள் ஏராளம்.  ஒவ்வொரு பூ, பழத்திலும் நோய்களுக்கான மருத்துவ குணங்கள் உள்ளடங்கியுள்ளன...