Monday, February 28, 2011

நமது நாடு 3.குமரி நாடு

3.குமரி நாடு
      குமரி நாட்டிலே குமரி,பஃறுளி, பேராறு முதலிய ஆறுகள் பாய்ந்தன. குமரிக்குன்று, மணிமலை முதலிய மலைகள் இருந்தன. தெங்கு நாடு, பனை நாடு, பெருவள நாடு முதலிய நாடுகள் விளங்கின. நாடு மிகச் செழிப்புற்றிருந்தது. மக்கள் தமிழ்மொழியை வழங்கினார்கள். அந்தநாட்டை ஒருகாலத்தில் செங்கோன் என்னும் அரசன் ஆண்டான். இவன் பல நாடுகளைத் தன்னடிப்படுத்திப் பேரரசனாய் விளங்கினான். இவன் தமிழில் மிகப் பற்றுடையவன். இவன், நாட்டில் விளங்கிய தமிழ்ப் பெரும் புலவர்களைத் தன் தலைநகருக்கு அழைத்தான், தமிழ்ப்பேரவை கூட்டினான், புலவர்களுக்கு ஊக்கம் அளித்தான். அவர்கள் அரிய தமிழ் நூல்கள் பல இயற்றினர். நாடெங்கும் தமிழ் மணம் கமழ்ந்தது.

  செங்கோன் மீது பாடிய பழைய நூல் ஒன்று உள்ளது. அதற்குச் செங்கோன் தரைச்செலவு என்பது பெயர். தரைச்செலவு என்பதற்குப் படை எடுத்துச் சென்று வெற்றி பெறுதல் என்று பொருள். அந்நூல் முழுவதும் இப்பொழுது கிடைக்கவில்லை, சில பாட்டுக்களே கிடைத்துள்ளன. குமரி நாடு ஒரு காலத்தில் நாகரிகத்தின் உச்சநிலை அடைந்திருந்தது. அப்பொழுது அந்நாட்டைச் சிறிது சிறிதாகக் கடல் விழுங்கிற்று. கடல் கோளுக்கு அஞ்சி மக்கள் வடக்குநோக்கி ஓடிச் சென்றனர், சென்றமக்கள் தென்னிந்தியாவில் தங்கி வாழ்ந்தனர்.

      கடல் கோளினால் தமிழரின் பழைய நாகரிகக் குறிகள் மறைந்தன. அவர்களின் நூல்களும் மாண்டன. கடல் கோளுக்குப் பிழைத்து வந்த மக்கள் தெற்கில் கன்னித் தெய்வத்தின் திருவுருவை நாட்டி வழிபட்டார்கள். அவ்வுருவம் வைக்கப்பட்ட இடம் கன்னியா குமரி என்னும் பெயர் பெற்ரது. இரண்டாயிரம் ஆண்டுகளின் முன் அத்திருவுருவம் அங்குக் காணப்பட்டது. அதனை இந்தியாவுக்குவந்து மீண்ட உரோமைப் பிரயாணிகள் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

Saturday, February 26, 2011

தாவரங்களின் வகைகள்


  நம்மைச் சுற்றிலும் பலவிதமான தாவரங்கள் இருக்கின்றன. நாம் சாதாரணமாகப் பார்க்கும் தாவரங்களுக்கு தண்டும் வேரும் உள்ளன. வேர், மண்ணுக்கு அடியில் புதைந்துருக்கும், தண்டில், கிளைகள் பரவி இருக்கும். கிளையில் இலைகளும், பூக்களும் உள்ளன. பூக்கள் காய்களாகி, பின்னர் கனியாகின்றன. கனியில் விதைகள் உள்ளன. விதைகளை மண்ணுக்கு அடியில் புதைத்தால், வேரும், தண்டும் உருவாகி புதுத்தாவரமாக முளைக்கிறது. ஆனால், எல்லா தாவரங்களும் இந்த வரையறைக்குள் அடங்குவதில்லை. தாவரங்களை பாசி, பெரணி, ஊசியிலை மற்றும் பூ பூப்பவை என நான்கு பிரிவுகளாக பிரிக்கின்றனர்.

பாசி
   காலை வைத்தால் வழுக்கும் பாசியை நீங்கள் பார்த்திருக்கலாம். இவை, ஈரமான பரப்பில் மெத்தென்று வளர்ந்திருக்கும். குறிப்பாகக் குளங்கள், பெரிய மரங்களின் அடியில் இவை காணப்படுகின்றன. ஒன்றிலிருந்து 10செ.மீ. உயரத்துக்கு வளரக்கூடியது. இவற்றுக்கு மெலிந்த தண்டும், மெல்லிய ஊசி போன்ற இலைகளும் உண்டு. ஆனால் வேர் கிடையாது. தாவரவியலில் இவற்றுக்கு 'பிரையோபைட்டா' என்று பெயர். உலக அளவில் சுமார் 10 ஆயிரம் பாசிகள் உள்ளன.

பெரணி
  நீண்டு வளரும் இந்தத் தாவர வகைக்கு, தண்டுகள், இளைகள், கிளைகள் உண்டு. இலைகள், ஊசிபோல இருக்கும். இவற்றுக்கு பூ கிடையாது. ஆனால், விதைகள் உண்டு. பல விதைகள் கொத்தாக இருக்கும். இவற்றின் தாவரவியல் பெயர் 'பினோபைட்டா' சில நூறு தாவரங்களே இந்த வகையில் உள்ளன.

ஊசியிலை
  இவற்றுக்கும் தண்டும், இலைகள் உண்டு. வேர்கூட உண்டு, ஆனால், பூவும், விதையும் கிடையாது. காடுகள், மலைகள் என பல்வேறு தட்பவெப்பநிலைகளில் வளரக்கூடியவை. தாவரவியலில் இவற்றுக்கு 'டெரிடோபைட்டா' என்று பெயர். உலக அளவில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரணி வகைகள் உள்ளன.

பூ பூப்பவை
   இதுதான் நாம் தினமும் பார்க்கும் தாவரவகை. வேர், தண்டு, கிளைகள், இலைகள், பூக்கள், விதைகள் என எல்லாமே இவற்றுக்கு உண்டு. இவற்றின் தாவரவியல் பெயர் 'மேகேனோலியோபைட்டா'. இந்த வகையில் தான் பெரும் பாலான தாவரங்கள் உள்ளன. மிகச்சிறிய செடியில் இருந்து, மிகப்பெரிய மரங்களும், நேராக நிற்க முடியாத கொடிகளும் கூட இந்த வகையில் அடங்கும்.

படித்ததில் கிடைத்தது...

 இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்


Friday, February 25, 2011

நமது நாடு 2. நம் முன்னேர்


2. நம் முன்னேர்   
  உலகிற் காணப்படும் படைப்புகள் எல்லாவற்றிற்கும் ஒரு தொடக்கம் உண்டு. அது போலவே மக்கட் படைப்புக்கும் ஒரு தொடக்கம் உண்டு. ஆதி மக்கள் நாவலந்தீவிலேயே தோன்றிய பகுதி இப்பொழுது சுமத்திரா, யாவாத் தீவுகள் இருக்குமிடமா யிருக்கலாமென ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். ஒரு தாய் தந்தையரினின்று மக்கள் பெருகத் தொடங்கினால், 1750 ஆண்டுகளில் இன்றைய மக்கள் அளவு பெருகி விடுவார்கள். இவ்வாறு மேல் நாட்டு அறிஞர் ஒருவர் கணக்கிட்டுள்ளார். மக்கள் இவ்வளவு வேகமாகப் பெருகுவார்களானால் அவர்கள் இருப்பதற்கு இவ்வுலகம் போதாமல் இருக்குமல்லவா மக்கள் இவ்வளவு வேகமாகப் பெருகுவதில்லை. இடையிடையே கொள்ளை நோயிம் போரும் தோன்றி மக்களின் தொகையைக் குறைத்துவிடுகின்றன.

  மனிதன் உயிர் நூல் முறைப்படி விலங்கினத்தைச் சேர்ந்தவன், விலங்குகளிலும் பார்க்க நிறைவுடையவன், சிந்தித்து ஒன்றினைக் கண்டுபிடிக்கும் அறிவு ஆற்றல் உடையவன். மனிதனுடைய பற்களும் குடலும் காய், கனி, விதை முதலிய தாவரப் பொருள்களை உண்டு வாழ்தற்கேற்ற அமைப்பு உடையவன். ஆதிகாலத்து மனிதர் காடுகளிற் கிடைக்கும் காய், கனி, விதைகளை உண்டனர், சுனை நீரைப் பருகினர், மலைத் தாழ்வாரங்களிலும் நிழல் மரங்களின் கீழும் ஒதுங்கினர், சுருங்கக் கூறுமிடத்துக் குரங்குகளைப் போலவே வாழ்ந்தனர்.
 
   அவர்களின் தொகைபெருகத் தொடங்கிற்று. அப்பொழுது எல்லோருக்கும் போதிட உணவு ஒரே இடத்திலேயே கிடைத்தல் அரிதாயிற்று. அகவே அவர்கள் தமது இருப்பிடங்களை விட்டு சிறிது சிறிதாக அகன்று சென்று வாவத் தொடங்கினர். அப்போது அவர்கள் நிலம், வீடு, பொருள், பண்டங்கள் வைத்துக் கொள்லவில்லை. ஆகவே அவர்கள் தாம்சென்ற இடங்களிலேயே தங்கி வாழ்ந்தனர். முன் வாழ்ந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்லும் கட்டாயம் அவர்களுக்கு உண்டாகவில்லை. இவ்வாறு மக்கள் இவ்வுலகின் எல்லாப் பாகங்களுக்குஞ் சென்று பரவினர்.

   அவர்கள் பிரியத் தொடங்கிய நடு இடத்தில் சிலர் தங்கி வாழ்ந்தனர். அவர்கள் படிப்படியே நாகரிக வளர்ச்சி யடைந்தனர். நாகரிகம் எப்படி வளர்ச்சி யடைகின்றது வாழ்க்கைக்கு வேண்டும் ஊணும் உடையும் பிறவும் தேடும் வகைகளினாலேயே அது வளர்கின்றது. ஆதியில் மக்கள் காய், கனி, விதைகளை உண்டு வாழ்ந்தனர். அவை எல்லாக் காலங்களிலும் கிடைப்பது அரிதாயின. ஆகவே அவர்கள் விலங்குகளையும் பறவைகளையும் கொன்று அவற்றின் ஊனையும் உணவாகக் கொண்டனர். பறவைகளையும் விலங்குகளையும் வேட்டையாடிக் கொல்வது எந்நேரமும் முடியாமல் இருந்தது. பின்பு அவர்கள் காட்டில் வாழும் ஆடு, மாடு முதலிய விலங்குகளைப் பிடித்துப் பழக்கி வளர்த்தனர், தமக்கு கிசைக்கும் மற்ற உணவுகளுடன் அவை தரும் பால் முதலிய பயன்களையும் உண்டு வாழ அறிந்தனர், பின்பு மழைபெய்யும் பருவங்களை அறிந்து தானியங்களை விளைவித்தனர். இவ்வாறு நாகரிகம் படிப்படியாக வளர்ந்தது.

  இவ்வாறு நாகரிக வளர்ச்சியடைந்த மக்கள் நாவலந் தீவிலே வாழ்ந்தார்கள். எரிமலைக் குழப்பங்களால் நாவலந் தீவின் பல பகுதிகள் தீவுக்கூட்டங்ளாக மாறின. அப்பொழுது இம் மக்களுள் பலர் கூட்டங் கூட்டமாகத் தனித்து வாழ நேர்ந்தது, பெரும் பகுதியினர் வடக்கு நோக்கிச் சென்றனர். நாவலந் தீவின் வடக்கே குமரிநாடு இருந்தது. குமரிநாட்டில் வாழ்ந்த மக்கள் திருந்திய நாகரிகம் அடைந்திருந்தார்கள்.

நமது நாடு வளரும்...

Thursday, February 24, 2011

நமது நாடு 1.நமது தாயகம்நமது நாடு   

      தமிழர்கள்தான் ஆதியின் முன்னேடிகள் என்பதை நமது நாடு என்ற புத்தகத்தின் மூலம் ஆசிரியர் யாழ்ப்பாணத்து நாவாலியூர் திருவாளர் ந.சி.கந்தையா பிள்ளை அர்கள் 1945 ஆம் ஆண்டு இதன் முதல் பதிப்பை 95பக்கங்களாக  800 பிரதி வெளியிட்டுள்ளது, திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட் திருநெல்வேலி & சென்னை.

நன்றி. திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட் திருநெல்வேலி    &   சென்னை.
முன்னுரை
 "நமது நாடு" எனினும் இந்நூல் சிறுவர் தமிழ் மக்களின் வரலாற்றைக் கற்று அறிந்து கொள்ளும் முறையில் சுருங்க எழுதப்பட்ட தொன்றாகும். இதண்கண் யாம் கூறியுள்ள ஒவ்வொன்றுக்கும் தக்க சான்றுகள் உள்ளன. அவைகளை இப்பொருள்பற்றிக் கூறும் விரிந்த நூலாகிய "தமிழ் இந்தியா" விற் காண்க. ஆதிமக்கள் ஒரே வகையினர். அவர் சமயம் ஒன்று, மொழி ஒன்று என்னும் கொள்கைகள் வலி பெற்று வருகின்றன. மேல்நாட்டு ஆராய்ச்சி அறிஞர்களின் ஆய்வுகளை ஒழுங்கு வைத்து ஆராயிமிடத்து அவ்வாதி மக்கள் தமிழரே என நன்கு தெளிவாகின்றது. இது மிக வியப்புக்குரிய தொன்றாகும். ஆராய்ச்சி நூலை இளைஞர் எளிதில் கற்று விளங்கிக்கொள்ளமாட்டாதவர்களாவர். அகவே ஆராய்ச்சியிற் கண்ட முடிவுகள் வரலாறுபோலத தொடர்பு படுத்தி எழுதப்பட்டிருக்கின்றன.

  1.நமது தாயகம்          
  நாம் எல்லாரும் தமிழர்; நம்மைப்பற்றி அறிதல்வேண்டும், நம் நாட்டைப்பற்றியும் அறிதல்வேன்டும்; வேண்டுமாயின் பின்பு மற்ற நாட்டவர்களைப்பற்றி அறியலாம்.
     தமிழர், உலகின் மிகப் பழைய சாதியினர். தமிழகத்தினின்றே உலகின் பல பாகங்களுக்கு நாகரிகம் பரந்து சென்றது. இதனை மேல்நாட்டு அறிஞர் சிலர் நன்கு ஆராய்ந்து கூறியிருக்கின்றனர். இவ்வாறு கூறுதல் பலருக்கு வியப்பைத் தரும். இப்பொழுது தமிழர் உலகில் பெரிய சாதியினராகக் காணப்படவில்லை அல்லவா? இதுவே அவ்வியப்பிற்குக் காரணமாகும். வறியவர் செல்வராதலும் செல்வர் வறியவராதலும் உலக இயல்பு. ஒருகாலத்தில் ஒருவரின் பின் ஒருவராகச்சாதியினர் பலர் உயர் நிலை அடைந்திர்ந்தனர், பின்பு வீழ் நிலை அடைந்தனர். வீழ் நிலை அடைந்த சாதியாருள் தமிழரும் ஒருவர்.
  மற்ற சாதியரின் வரலாற்று நூல்கள் பல இருக்கின்றன. தமிழரின் வரலாறு கூறும் நூல்கள் பல வெளிவரவில்லை. ஆகவே நாம் நம்மைப்பற்றிய வரலாறுகளை எளிதில் அறிய முடியவில்லை. இப்பொழுது நமது நாட்டைப்பற்றிச் சிறிது படிப்போம்.
   பூகோள படத்தில் இந்தியாவைப் பாருங்கள். அதன் தென்பகுதியில் கன்னியாகமரி என்னும் முனை இருக்கிறது. அதற்குத் தெற்கே பெரிய கடல் ஒன்று அலைமோதுகின்றது. அதற்கு இக்காலத்தில் இந்துமாக் கடல் என்று பெயர். நம் வாழும் உலகம் தேன்றி எண்ணில்லாத காலம் ஆகின்றது. இவ்வளவு எண்ணில்லாத காலத்திள், இது பல மாறுதல்கள் அடைந்துள்து. இந்துமகாக் கடல் தோன்றுமும் அங்கே பெரிய நிலப்பரப்பு ஒன்று இருந்தது. அது நாவலந்தீவு எனப்பட்டது. ஐரோப்பிய மக்கள் அதற்கு "லெமூரியா" எனப் பெயர் இட்டுள்ளார்கள். "கொந்வானா" என்பதும் அவர்கள் அதற்கு கொடுத்த மற்றெரு பெயர். இதன் நடுவில் மோருமலை நின்றது. அதன் ஒரு கொடுமுடியே இலங்கைத்தீவு. நாவலந்தீவு அல்லது லெமூரியா இப்பொழுது வடக்கே ஆசியாக்கணடம் இருப்பதுபோலத் தெற்கில் இருந்தது.

   

படம் 1. (ஏகபாதமூர்த்தி) திருவரங்கம்.
படம் 2. கித்தைதி (சின்ன ஆசிய) மக்களின் தந்தைக் கடவுள்.
படம் 3. சிரியா நாட்டிற் கிடைத்த தந்தைக் கடவுளின் வடிவம்.


  நிலவுருண்டை ஒருகாலத்தில் அனற்பந்து போல இருந்தது. இதனுள் இன்னும் நெருப்பு இருக்கின்றது. இந்நெருப்பு இடையிடையே பூமியைக் கிழித்துக்கொண்டு வெளியே கிளம்புவதுண்டு. அப்பொழுது அது உள்ளே இருந்து கல்லையும் மம்ணையும் மேலே கக்கும். அதனால் அவ்வெடிப்புகளின் வாய்களில் பெரிய மலைகள் உண்டாகும். இவ்வாறு பூமியினின்றும் நெருப்பு வெளியே வரும் இடங்கள் எரிமலைகள் எனப்படும். எரிமலைக் குழப்பங்களிளால் சில சமயங்களில் தரை கடலுள் மறைந்து போகும். நாவலந் தீவில் எரிமலைக் குழப்பங்கள் பல தோன்றின. அப்பொழுது அதன் பல பகுதிகள் கடலுள் மறைந்தன. அப்பொழுது கன்னியா குமரியைத் தொடர்ந்து ஒரு பெரிய நிலப்பரப்பு நீண்டிருந்தது. அங்கு வாழ்ந்த மக்கள் தாய்க்கடவுளை வழிபட்டார்கள். தாய்க் கடவுளுக்குக் கன்னி அல்லது குமரி என்பது பெயர். ஆகவே அந்தத் தரைக்குக் குமரிநாடு என்று பெயருண்டாயிற்று. நாவலந்தீவும் அதனைச் சார்ந்த குமரி நாடுமே தமிழ் மக்களின் தாயகம்.

நமது நாடு தொடரும்

Wednesday, February 16, 2011

கடல் ஆழி  கடலில் வாழும்  பல வகையான விநோத உயிரினங்களில் முத்துச் சிப்பியின் குடும்பத்தைச் சேர்ந்த உயிரினமே கடல் ஆழி. மேலை நாடுகள் பலவற்றில் பிரபலமான நட்சத்திர ஹோட்டல்களில் சுவை மிகுந்த உணவாக விற்பனை செய்யப்படும் இந்த உயிரினத்தின் சிறப்புகள்
கடலில் வாழும் ஓடுகளையுடைய பல உயிரினங்களில் தனக்கென்று ஒரு குறிப்பிட்ட உருவம் இல்லாத ஓர் உயிரினம்தான் கடல் ஆழி. கிரோஸோஸ்டீரியா என்ற விலங்கியல் பெயருடைய இதன் ஓடுகளின் விளிம்புகள் அடர்த்தியான கால்சியத்தால் ஆக்கப்பட்டிருக்கிறது. இவை ஒரு பிளேடைப் போன்று மிகவும் கூர்மையாக இருப்பதால், இதன் மீது தப்பித் தவறி கால் வைத்து விட்டால் கூட, "சரக்'கென்று வெட்டிவிடும் தன்மையுடையது.

  ஆறுகளின் கழிமுகத் துவாரங்களிலும், சென்னையை ஒட்டியிருக்கிற கடற்கரைகளிலும் அதிக எண்ணிக்கையில் வாழும் கடல் ஆழிகளுக்கு விஞ்ஞானிகள் கிரோஸோஸ்டீரியா மெட்ராஸென்சீஸ் என்றும் பெயர் வைத்திருக்கின்றனர். இவ்வினங்கள் மட்டும் மற்ற கடல் ஆழிகளைக் காட்டிலும் விரைவாக வளர்வதுடன், மிகவும் சுவையாகவும் இருக்கின்றன. கடலில் அதிகமான பரப்பளவில் ஆழிகள் படர்ந்து காணப்படும் இடங்களை ஆழிப்படுகைகள் என்கிறார்கள்.

   உலகிலேயே மிகப் பெரிய ஆழிப்படுகை சிஸ்பாக் வளைகுடாவில் இருக்கிறது. கடலில் வாழும் பவளப் பாறைகளுக்கு அடுத்தபடியாக அதிகமான கடல்வாழ் உயிரினங்களுக்கு உண்டு, உறைவிடமாகவும் இருக்க ஆழிப் படுகைகள் பெரிதும் உதவியாக இருக்கின்றன.
கடல் தாமரைகள், கடல் விசிறிகள், நத்தைகள் போன்றவை உயிர் வாழவும் இவை சிறந்த உறைவிடமாக உள்ளன.

   இந்த உயிரினங்களைத் தின்று வாழும் பெரிய வகை மீன்களும் ஆழிப் படுகைகள் இருக்கும் பகுதிக்கு அவ்வப்போது வந்து செல்கின்றன. பழைய ஆழிகளுக்கு மேற்புறத்திலேயே புதிய ஆழிகளும் ஒட்டிக் கொண்டே உருவாகி விடுவதால், ஆழிப் படுகைகள் பரப்பளவிலும், கொள்ளளவிலும் அதிகரித்து கடலுக்குள் அவை ஒரு தனி உலகமாகவே காட்சியளிக்கின்றன.
தினமணி...

இயற்கையின் அதிசயம் கடல் வாழ்  உயிரினம்

Thursday, February 10, 2011

நம்ம ஊர் ரோடு

    ரோடு ஒரு நாடு வளர்ச்சி அடைந்தது என்று கருதப்பட்டால், அந்த நாடு போக்குவரத்து     வசதியில் நல்ல முறையில் இருக்கும். அது தரை, நீர், ஆகாய மார்கம் இருக்கும்.
   நம் நாட்டில் தரை மார்க்கம்தான் அதிகம் பயன் படுத்துகிறோம். ஆனால் நமது சாலை வசதி எப்படியுள்ளது குண்டும் குழியுமாக சமமாக இல்லாமல், இது எல்லாம் எப்போதிருந்து 20,25 வருடங்களாக. ரோடு அனேக இடங்களில் போடப்படுகிறது ஆனால் அதன் நிலமை மிவும் மகாமட்டமான ரோடு, இது எதனால் தரமில்லாத பொருள்கள், அனுபவம் இல்லாத பொது நலத்தில் அக்கரை இல்லாத காண்டிராக்டர்களால், அதிகாரிகள் கண்டித்து கேக்க முடியாத நிலை, அரசியல் தலையிடு, அதிக லாபநோக்கோடு செயல்படுவது.
  முன்பு ரோடு போடுவது என்றால் முதலில் டெண்டர் விட்டு, மதிப்பீட்டு தொகையில் யார் குறைந்த தொகை கேப்பவருக்கு முன்னுரிமை.
இது போக ரோட்டை நீலம் அகலம் அளந்து, ஒரு அடிக்கு இத்தனை கன அடி கருங்கல், என்று அளவு கணக்கு எடுத்து, தார் கருங்கள் நன்கு நனைந்து இருக்கும் படி கலந்து போடுவார்கள். ரோடு தார் கருங்கல் உயரம் இத்தனை அங்குலம் இருக்கவேண்டும், என்று வறைமுறை இருந்தது. அதுவும் இப்போது கிடையாது.
   அதிக டன் எடைகொண்ட ரோடு ரோலரை ஓட்டினால் தார் சாலை நன்றாகப் பதியும். எவ்வளவு அழுத்தம் கொடுக்கிறோமோ, அவ்வளவு தூரம் சாலை திடமாக இருக்கும்.  ஆனால் குறைந்த எடையுள்ள ரோடு ரோலரை பயன்படுத்துவதால் தார் சாலை நன்றாகப் பதியாது. தார் கலவை நன்றாக  கலக்காமல் போடுவதால் மழைகாலத்தில் மழை நீர் வடிவதற்கு ரோட்டின் இரண்டு பக்கமும் வடிகால் இல்லாததால், மழைநீர் உட்பெயர்ந்து மழைநீர் தேங்கி ரோடு பெயர்ந்துபோகும்.  வெயில் காலத்தில் ரோடு போடமல் மழைகாலத்தில் போட்டு, ரோடு இப்பத்தான் போட்டார்கள் அதற்குள் மழை பெயர்த்து விட்டது என்று எனினும்படி செய்கிறார்கள். எங்கள் பகுதியில் இரவில் போட்ட ரோடு காலையில் பார்க்கும் போது எப்போதோ போட்ட ரோடுபோல் உள்ளது.
   இப்படி இருப்பதால் நமது வாகனங்கள் எவ்வளவு தேய்மானம், எரிபொருள் எவ்வளவு விரயம், பொருள் இழப்பு, காலம் விரயம் குண்டும் குழியுமாக இருப்பாதால் எத்தனை விபத்து. 
   நான்  ஒரு ஆங்கில சினிமா படம் டிவியில் பார்க நேர்ந்தது சைக்கிள்ரேஸ் அந்த ரேஸ் நடக்கும் இடமாகக் காட்டப்பட்ட இடம் மலைப்பாதை அதிக தூரம் அதை பார்க்கும் போது  அவ்வளவு நேர்த்தியாக இருந்தது. என் மகன் ரோட்டைப் பார்த்தவுடன் நம்ம நாட்டில் இது சான்சேயில்லப்பா என்றான் பாருங்க என்னால் பதில் சொல்லமுடியவில்லை போங்க. நம்ம சந்ததிக்காவது கிடைக்குமா? நல்ல ரோடு!

மரம் வளர்த்து மழை வளம் காப்போம்...

Wednesday, February 9, 2011

ஓடை

   ஓடை என்ற ஒரு இடம் இருந்த அடையாளமே, கிராமங்களில் இல்லாமல் போகும் அபாய நிலை, இப்போது ஏற்பட்டுவிட்டது என்று தோன்றுகிறது.    
   
நான் வருடத்தில் இரண்டு, அல்லது மூன்று தடவை எங்கள் கிராமத்திற்கு செல்வது உண்டு. அப்படி செல்லும் போது ஏதாவது ஒரு மாற்றம் தெரியும். பெரிதாக வளர்ச்சி எதுவும் இருக்காது. அடிப்படையைத்தவிற, ஒரு சமயம் செல்லும் போது பலவருடங்கள் இருந்த நாவல்மரம் அந்த இடத்தில் இல்லை. மற்றெரு சமயம் அதே வயதுடைய அரசமரத்தையும் கானவில்லை.
 
  இப்போது ஒரு நான்கு நாள் தொடர்ந்து ஊரில் இருக்க வேண்டிய நிலமை ஏற்பட்டது. அப்போது முன்பு சின்ன வயதில் சுற்றித் திரிந்த  இடத்தை பார்கலாம் என்று போனால், அந்த இடங்களை அடையாளம் கானமுடியவில்லை. ஓடை, ஊருணி, ஊத்து இது எல்லாம் குறிகி அடையாளமே தெரியவில்லை.
  
   ரோட்டோரம் இரண்டு பக்கமும் வயல் அல்லது கரிசல்காடுகள் இருக்கும். இதற்கிடையில் முன்பு பெரிய ஓடை இருந்தது, ஒரு பெரிய யானை உள்ளே இருந்தாலும் தெரியாது, அந்த அளவு பெரியது. மரம், செடி, கொடி படர்ந்து இருந்தது.
   மழை காலத்தில் அதிகமாக மழை பெய்யும் சமயம் உபரிநீர் எல்லாம் காட்டில் இருந்து வடிந்து ஓடையில் விழும். சிறிய ஓடையில் ஆரம்பித்து, பெறிய ஓடையில் கலந்து கண்மாய்க்கு வந்து சேரும். ஓடையில் தேங்கியிருக்கும் நீரில் மீன்கள் இருக்கும் மீன்களை பிடித்து வீட்டுக்கு எடுத்துச் செல்வோம், சில நேரங்களில் அங்கே மீனைச் சுட்டுச் சாப்பிடுவேம். மீன் மட்டுமல்ல குருவி, சில நேரங்களில் முயல் கூட சிக்கும், கொக்குக்கு கண்ணி வைத்து பிடிபோம், கிடைத்தால் சுட்டுச் சாப்பிடுவோம். தேன் எடுப்போம், இவ்வளவு பெருமை உள்ள ஓடை இப்போது இல்லை.

   ஆனால் இப்போ சிறிய ஓடைகள் இருந்த சுவடே இல்லை, பெறிய ஓடைகள் சின்ன வாய்கால்களாக இருக்கிறது. அதில் இருந்த மரம், செடி, கொடிகள் எங்கு போனது என்று தெரியவில்லை.இப்படி வடிகால் இல்லாமல் போனதே, மழைகாலத்தில் மழை நீர் தேங்கி பயிர்கள் நாசமாகிண்றன. கண்மாக்கு தண்ணீர் சரிவர வந்து சேரமல் தண்ணீர் வீனாகிறது.
   ஓடையில் இருந்த காட்டு சின்ன விலங்கு நரி, முயல், மறறும் பறவை இருக்க இடமில்லாமல் அழிவின் விளிம்பிற்கு செனறு விட்டது. இதைவிட மழைகாலத்தில் மலையில் இருந்து, கண்மாய்க்கு தண்ணீர் வரும் ஆறு பல நூறு அடிகளாக இருந்தது, சில அடிகளாக மாறிவிட்டது. இதில் மணல்களை அள்ளி நீர் வரும் போக்கையே மாற்றிவிட்டார்கள். இது எங்கள் கிராம் மட்டும்மல்ல, எல்லா தமிழகக் கிராமங்கள் நிலையும் இதுவாகத்தான் இருக்கும்.

  மனிதன் இயற்கையை இயற்கையாக இருக்கவிடாமல் இருப்பதே இயற்கை அழிவிற்கு காரனம்.

Monday, February 7, 2011

கசகசா ஓபியெம் "பாப்பி மலர்"


   கசகசா "பாப்பி விதை" நமது கசகசா என்பது எண்ணெய் சத்துள்ள ஒரு வகையான வித்து.  இதை இந்தியாவின் எல்லா பாகங்களிலும் சமையலுக்கு பயன்படுத்தப்படுகின்றது. இந்த விதைகள் பெரும்பாலும் சைவ, அசைவ எல்லா வித குழம்பு, குருமா, மற்றும் கறிகளுக்கு அரைத்துப் பயன்படுத்தப்படுகின்றது.

  இந்திய உணவில் பயன்படுத்தப்படும் முக்கியமான ஒன்று. ஆனால் வளைகுடா நாடுகளில் கசகசா தடைசெய்யப்பட்ட ஒரு போதைப்பொருள். வளைகுடா நாடுகளுக்கு செல்பவர்கள் கசகசா கொண்டு செல்வதை தவிர்க்கவும் இந்த பாப்பி செடியில் உள்ள காய் முற்றி, காய்ந்தபிறகு அதில் இருந்து எடுப்பதுதான் கசகசா. ஆனால் காயாக இருக்கும்போது காயைக் கீறி அதிலிருந்து வடிகிற பால் சேகரிக்கப்படுகிறது அதுதான் ஓபியம். இதில் இன்னெரு பாப்பி மலர் பல நாடுகளில் அலங்காரத்திற்கு பயன்படுத்துகிறார்கள்.

  ஒரு பயிர் நன்றாக விளைந்தால் யாராவது கவலைப்படுவார்களா? ஆனால் ஐக்கிய நாடுகள் சபை கவலைப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் விளையும் ஒரு பயிருக்காக- அதன் அமோக விளைச்சலுக்காக- ஐ.நா. "ஜாக்கிரதை... ஜாக்கிரதை' என்று எச்சரிக்கை மணி அடிக்கிறது. அந்தப் பயிர் ஓபியெம். போதைப் பொருள். இதில் ஆபத்து என்பது, தெற்கு ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் நிறைய விளைகிறது என்பதில் உண்மை இருக்கிறது.
 
   தாலிபன்கள் ஓபியெம்மை விவசாயிகளிடமிருந்து விளைச்சலை வாங்கி பதுக்கி வைத்துக் கொள்கிறார்கள். அவர்களின் அதிர்ஷ்டம் பாருங்கள், ஆப்கானிஸ்தான் பயிர்களில் மற்றவையெல்லாம் விலை குறைகின்றன. ஓபியெம் மட்டும் விலை உயர்கிறது. இதனை தாலிபன்கள் ஓபியெம்மை வாங்கி ஸ்டாக் வைத்துக் கொண்டு அதை சேவிங்க்ஸ் அக்கவுண்ட்ஸ் போலக் கருதுகிறார்கள். பணம் வேண்டும்போது பேங்க்கில் "வித்ட்ரா' பண்ணுவது போல, ஓபியெம்மை வெளிச் சந்தையில் விற்று பணம் பண்ணுகிறார்கள்.

  இந்தப் பணம் பயங்கரவாதச் செயல்களுக்குத் துணை போகின்றது. இதுதான் உலகநாடுகளை அச்சுறுத்துகின்றது.

   ஒரு புள்ளி விவரத்தின்படி 2009 ஆம் ஆண்டு ஓபியெம் எந்த விலைக்கு விற்கப்பட்டதோ அதைவிட 2010 இல் 164 சதவீதம் உயர்ந்துவிட்டது.

  ஆப்கனில் ஓபியெம், கோதுமை இரண்டும்தான் பிரதான பயிர்கள். கோதுமையின் விலை குறைந்து, ஓபியெம் உச்சத்தில் இருக்கிறது. ஓபியெம் விவசாயிகள் கோதுமை விவசாயிகளைவிட ஆறு மடங்கு அதிக லாபம் சம்பாதிக்கிறார்கள். உலகில் விளையும் ஓபியெம்மில் மூன்றில் இரண்டு பங்கு   ஆப்கானிஸ்தானில் விளைகிறது. இந்த மூன்றில் இரண்டில் 98 சதவீதம் தாலிபன் பகுதிகளில் ஒன்பது மாகாணங்களில் விளைகிறது.
தினமணி...

காடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசுபாடு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்...

Saturday, February 5, 2011

இலைதான் போர்வை


  பெரும்பாலான மரங்கள், தங்களின் அடி மரத்தினை சிற்றிய வளர்ச்சியில் கவனம் செலுத்தும். அங்கிருந்து கிளம்பும் கிளைகள் அந்த இடத்தில் அடர்த்தியான இலைகளான போர்வை போன்ற அமைப்பை ஏற்படுத்திவிடும். இந்த இலை போர்வையை மீறி கொண்டு உயரமாய் வளரும் மரங்களும் உண்டு. அது போன்ற மரங்களில் மிக அறியப்பட்டவைகள் கபோக் மற்றும் பெரிய இலைகள் கொண்ட மஹாகோனி மரங்கள்.
  இவற்றை விட மேல், பிரூம்லியட் மரங்கள் எல்லா மரங்களை விடவும் உடரமாய் வளர்ந்து, தனக்கு தேவையான சூரிய ஒளிடை போட்டியின்றி பெறும். மேலே உயரமாய் வளர்ந்த மரங்களின் விதானத்தின் கீழே சிறிய மரங்கள். சூரிய ஒளிக்காக தன் வளர்ச்சியை அதிகப்படுத்தும். பெரிய வயதான மரங்களை போல இலைகளுக்கு நீண்ட குறுகிய உச்சி உண்டு. இதன் மூலம் சூரிய ஒளியை பெற்றுவிடும். இந்த மத்திய மர அடுக்குக்கு கீழே புதர், குத்து செடி அடுக்கு ஏற்பட்டிருக்கும்.
  இங்கே இயற்கையான உருவ அளவில் குறைந்திருக்கும் மரங்கள், புதர்களாக வளர்ந்திருக்கும்.வெகு சிலவே 6மீ., (20) அடி உயரம் வளரும்.

இயற்கையை காப்பது நம் கடமை...

காட்டுமரம் தான் எனக்கு ஏனி


  லியானாஸ் இவை மிக பிரமாண்டமான படரும் கொடிவகை தாவரம். மழை காட்டு மரங்களை இயற்கை அமைத்த பந்தலாக கருதி அவைகளின் மீது படர்ந்து திரை சீலையாக மூடி விடும். தரையிலிருந்து மரங்களின் அவ்வளவு உயரத்திற்கு இவை வளரும். இந்த தாவரத்தின் பிரமாண்ட வளர்ச்சியால் கிளைகளுக்கு இடையேயான இடைவெளிகள் அனைத்தும் அடைப்பட்டுவிடும். இவை மனிதன் தொடை தடிமனுக்கு இருக்கும்.
 
வனவிலங்குகளை காத்து இயற்கையை காப்போம்..

Friday, February 4, 2011

சின்ன வேட்டைக்காரன்


  அடர்த்தியான பசுமை, இருட்டான, ஈரக் கசிவான ஆச்சர்யமாக அமைதியாக இருக்கும் காட்டின் தரைப்பகுதியில், வெகு சில உயிரினங்கள்தான் வாழ்கிறது. தாவர தின்னியான, 'டாப்பிர்' விலங்கு தன் உணவாக விதைகளையும், பழங்களையும் உண்கிறது. இங்கிருக்கும் பல பிராணிகள் தங்கள் பெரும்பாலான பொழுதை மரங்களில் செலவிடுகின்றன. ஆனால், கோடிஸ் என்னும் விலங்கு மரத்திலும், தரையிலும் தீவனம் தேடும்.
   பிற விலங்குகளை தாக்கி உண்ணும் விலங்குகளுக்கு அருமையான மறைவிடமாக அமைந்து விடுகிறது. அதோடு அந்த விலங்குகளின் உடல் நிறமும் சூழலுக்கு ஏற்ப இருக்கும். புள்ளிகள் நிறைந்த பூனை வகைகளில் மேக வண்ண சிறுத்தை, ஒசிலாட், கோலி குண்டு பூனை போன்ற பெரும் பாலானவை இங்கேதான் வாழ்கின்றன.
  சின்ன வேட்டைக்காரன், அட்டகாசமாய் இருக்கும் இந்த குட்டி (மியாவ்) "மார்கே பாப்பா" அமேசான் மழை காட்டு பூனைகளில் ஒன்றாகும்.
பூமியை காக்க, பிளாஸ்டிக்கை ஒழிப்போம்!

வெப்ப மண்டல மழை காடுகள்


   வெப்ப மண்டல மழை காடுகள்தான் அதிகப்படியான மற்றும் சிறப்புமிக்க அழகிய தாவர வகைகளின் இருப்பிடமாக உள்ளது. உலகின் 40 சதவீத விலங்கு மற்றும் தாவர வகைகள் இங்குதான் காணப்படுகிறது.
  
 இங்கே வெப்ப நிலை சமமாக இருக்கும். டெம்பரேச்சர் பொதுவாக 20 டிகிரி முதல் 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
 மழை வருடத்தின் பெரும்பாலான அனைத்து நாட்களிலும் பெய்கிறது. வருட மவைபொழிவு 1500 மி.மி., (60 இன்ச்) என்ற அளவினைவிட குறைவதே இல்லை. அதோடு சில சமயம் இந்த அளவு 4000 மி.மி., (160 இன்ச்) என்பதை கூட எட்டிவிடும்.
 வெப்ப மண்டல காடுகளில் தாவரங்கள் பல்வேறு அடுக்குகளில் தோன்றுகின்றன. சூரிய ஒளி பூமியில் படாதவாறு வளர்ந்திடும் மரங்கள் பொதுவாக 25 மீ (150 அடி) உயரமும், புதர் செடி அடுக்கு அதிகபட்சமாக 10 மீ (30 அடி) உயரமும், குறைந்த காலம் தோன்றி மறையும் மரங்கள் 45 மீ (150 அடி) உயரமும் வளர்ந்திடும்.
  
   எங்கும் பச்சைமயம். வெப்ப மண்டல மழை காடுகள் டிராபிக் ஆப் கேன்சர் மற்றும் கேப்ரிகார்னின் இடைப்பட்ட பகுதியில் காணப்படும் மத்திய மற்றும் தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களின் நிலப்பகுதிகளில் வளர்கின்றன. இதுதான் உலகின் தாவர சாம்ராஜ்யம். இந்த வெப்ப மண்டல பருவ காடுகள். மலைகள் மற்றும் பெரிய புல்தரை பரப்புகள் உள்ளன.
  பெரிய காட்டுப் பகுதி, அமேசான் பகுதிதான் உலகின் தனிப் பெரிய வெப்ப மண்டல காட்டு பகுதியாகும்.

இயற்கை வனவளமே நாட்டின் வளம்...

Thursday, February 3, 2011

கடல் எலி


   கடற்கரையோரம்  கடல் மண்ணுக்குள் இருந்து ஒரு வினோத உயிரினம் அடிக்கடி வெளிப்படும். யாராவது பார்த்துவிட்டால் நொடிப்பொழுதில் குழிதோண்டி மறைந்து கொள்கிறது. அடுத்தடுத்து கடல் அலைகள் கடற்கரை மணலில் மோதி மீண்டும் கடல் நீர் கடலுக்குள் செல்லும் சமயங்களில் கூட்டமாக வெளிப்படும் இந்த உயிரினம், சாதுர்யமாக இரையை பிடித்துக் கொண்டு மீண்டும் மண்ணுக்குள் மறைந்து கொள்கின்றன. நிலத்தில் உள்ள எலி போல் தோற்றமளிக்கும் இந்த வினோத கடல் உயிரினம்.

   இந்த உயிரினம் நண்டு வகையை சேர்ந்த மச்ச நண்டு ஆகும். இதன் அறிவியல் பெயர் "எமிரிட்டா ஆசியாடிக்கா'. இது,"ஹிப்பாய்டியே' குடும்பத்தை சேர்ந்தது. உள்நாட்டு மீனவர்கள் இதை "கடல் எலி' என்று அழைக்கின்றனர். இவற்றுக்கு ஐந்து இணை கால்கள் இருந்தாலும், நண்டுகளைப் போல் வெட்டு கொடுக்குகள் இல்லை. இவை பக்கவாட்டில் நகராது. பின்னோக்கி நகரும் தன்மை கொண்டவை.

   நேரில் பார்த்தால் அப்படி தெரியாது. கடற்பறவைகள், இவற்றை கண்டால் குஷியாகி பிடித்து தின்று விடும். கடற்பறவைகளிடம் இருந்து தப்பிக்க, அலை அடிக்கும் அரிப்பள்ளம் அருகே மச்ச நண்டுகள் வலை தோண்டி மறைந்து கொண்டு வாழும். இந்த மச்ச நண்டுகளுக்கு இரண்டு நீண்ட உணர்வு தண்டுகள் முகப் பகுதியில் உள்ளன. கடல் நீர் ஏற்றத்தையும் வற்றலையும் தெரிந்து கொள்ள இந்த உணர்வு தண்டுகள் உதவுகின்றன. மற்ற நண்டுகளைப் போல் இதன் ஓடுகள் தோலுரிக்கும் தன்மை உடையது.

    இவற்றில் ஆண், பெண் உண்டு. சில ஆண் மச்ச நண்டுகள் ஓட்டின் அளவு 3.5 மி.மீட்டர் வளர்ந்த பிறகு, ஆண் தன்மை மறைந்து, பெண் இனமாக மாறும். அதே நேரத்தில், அது முழு வளர்ச்சி பெற்ற பெண்ணாகவும் இருக்காது. பின்பக்க பகுதியில் சினை முட்டைகள் காணப்படும். கடல் அலை கரையைத் தொட்டு திரும்பும் நேரத்தில், கடல் நீரிலுள்ள மிதவை உயிர் பொருள், மற்றும் சிறு உயிரிகளை உண்டு இவை உயிர் வாழும். மீனவர்கள் தூண்டில்களில் மீன் பிடிக்க இரையாக பயன்படுத்துகின்றனர்.

படித்தும் கண்டும் அறிந்தது...
  
இயற்கையை ரசித்து இயற்கையாக வாழவும்.

Tuesday, February 1, 2011

பசு மீன்தலையில் இரண்டு கூர்மையான கொம்புகள் உள்ள இந்த வித்தியாசமான பிராணியைப் பாருங்கள். இது ஒரு மீன் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். அதிலும் இது பசு மீன். ஆமாம்.  பசுவிற்கு இருப்பதைப்போன்று இரண்டு கொம்புகள் உள்ளதுதான் இந்த மீனின் சிறப்புத் தன்மை. இதற்கு இப்படிப்பட்ட கொம்புகள் உள்ளதால் எதிரிகளால் இதை அவ்வளவு எளிதாக விழுங்க முடியாது. அது மட்டும் அல்ல, தன் மேல் தோலில் கடும் விஷத்தைக்கொண்ட மீன் இது. ஆயினும் மஞ்சள் நிறத்தில் நிறைய வெண்புள்ளிகள் உடைய இவற்றைத்தான் வெளிநாட்டுக்காரர்கள் தங்கள் மீன் காட்சிச் சாலைகளில் மிகவும் அதிகமாக வளர்க்கிறார்கள். 

இயற்கையின் அதிசயம் நமக்கு மகிழ்ச்சி