Friday, June 24, 2011

நமது நாடு 25.இசைத் தமிழ்



   மனிதனுடைய உள்ளத்தெழும் உணர்ச்சிகளுக்கேற்றவாறு எழும் மெய்ப்பாட்டிலிருந்து நாடகம் வளர்ச்சி யுற்றதென்று முன் இடுகையில் பார்த்தோம். உணர்ச்சிகளுக் கேற்ப மனிதன் தோற்றுவிக்கும் ஓசைகளிலிருந்து இடை வளர்ச்சியுற்றது. வீரம், மகிழ்ச்சி, அழுகை போன்றவைகளை உணர்த்தப் பாடப்படும் பாடல்கள் வெவ்வேறு ஓசைகளிற் பாடப்படுதலை நாம் காண்கின்றேம். இசையினால் மணிதனின் உள்ளத்தில் எவ்வகை உணர்ச்சியும் எழுப்பலாம் எனக் கருதப்பட்டது. ஆகவே கால இடங்களுகேற்ற இசைகள் பாடப்பட்டன. தமிழர் மிகப் பழைய காலத்திலேயே மிக்க இசைப்பயிற்சி யுடையவர்களாயிருந்தார்கள். குழந்தைகளைத் தாலாட்டுதல் முதல் எல்லாவற்றுக்கும் இசை பயன்படுத்தப்பட்டது. இறந்தவர்களைக் குறித்து அழும் அழுகைதானும் இசையுடையதாகும். ஆடவரும் மகளிரும் இசையைப்பற்றி நன்கு அறிந்திருந்தார்கள். அரசர் அவைகளில் பாடி அவர்களை மகிழ்விக்கும் பாடன்மகளிர் பலர் இருந்தனர். கதைகள் நாடக முறையில் நடிக்கப்பட்டன. அவைகளுக்கு இசை வேண்டப்பட்டது.
   தமிழ் நாட்டில் வழங்கிய இடைக்கருவிகளுட் சில யாழ், வீணை, குழல், மத்தளம், கொம்பு, சங்கு, தாளம் முதலியன. அவை தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி என நால்வகையாக வழங்கின. வாய்ப்பட்டு மிடற்றுப்பட்டு எனப்பட்டது. தமிழில் வழங்கிய ஆதியிசைகள் ஏழு. அவை குரல், துத்தம், கைக்கிளை, உளை, இளி, விளரி, தாரம் என்பன.
   பண்டைய நாளில் பாணர் என்னும் ஒரு வகுப்பினர் இருந்தனர். அவர்கள் இசை பாசுவதில் மிகத் தேர்ச்சியுடையவர். அவர்கள் ஊர் ஊராகச்சோன்று அரசரையும் செல்வரையும் பாடினார்கள். அவர்களின் இசைப்பாடல்களுக்கு உவந்து அன்றேர் அவர்களுக்குப் பொருள் வழங்கினர். பெரிய புராணத்திலும் நாலாயிரப் பிரபந்தத்திலும் காணப்படும் திரு நீலகண்ட யாழ்ப்பாணரும் திருப்பாணாழ்வாரும் பாணர் மரபினரேயாவர் திரு நீலகண்டயாழ்ப்பாணர் மரபில் வந்த ஒரு பெண்மணியாரே சைவத் திருமுறைகளுக்குப் பண் வகுத்தார்.
   இசைத்தொடர்ராக மூன்று பொருள்கள் கருத்திற் கொள்ளத்தக்கன. பாடல்கள் எளிதில் பொருள் விளங்கத்தக்கனவா யிருத்தல் ஒன்று. பாடல்களில் இனிய சொற்களும் மேலான கருத்தும் அமைந்திருத்தல் மற்றென்று ஆகும். பொருள் விளங்கமுடியாத பாடலில் நுகர்வதற்குரியது மூன்றில் ஒரு பகுதியேயாகும்.
   தமிழ் நாட்டில் தெலுங்கு கன்னட இந்திப் பாடல்கள் பெரிதும் இசைப்புலவர்களால் பாடப்பட்டு வந்தன. அவைகளின் குறையைத் தமிழ் மக்கள் அறியலானர்கள். தமிழ்மக்கள் இசையைக்கேட்டு நுகர்வதற்குத் தமிழ்ப் பாடல்களே வேண்டும் என்னும் கிளர்ச்சி எழுந்தது. இதனை எதிர்த்து வழக்காடிய ஒரு சார்பும் உண்டு. இப்பொழுது தமிழ் இசை உணர்ச்சி நாடெங்கும் கமழ்கின்றது.

நமது நாடு தொடரும்.

இயற்கையை நீ அழித்தால் இயற்கையோடு நீயும் அழிவாய்...

No comments: