Tuesday, February 28, 2012

4.மரம் வளர்த்தனால் ஆய பயனென் கொல் ?

    விண்ணும் மண்ணும் இணைந்த அற்புதப் படைப்பே மரம். மரங்களின் இலைகளில் பச்சையம் எனும் வண்ணக்கலவைப் பொருள், சூரியனின் ஒளிக்கதிர்களை ஈர்த்து, அதனை உணவாக மாற்றுகிறது. ஒரு ஹெக்டேரில் உள்ள காடு, ஆண்டு ஒன்றுக்கு 3.7 டன் கரியமிலவாயுவை உட்கொண்டு 2 டன் பிராணவாயுவை தரும். கரியமிலவாயு மண்ணின் ஆழத்திலுள்ள பல்வேறு மூலங்கள், வற்றாத கடலிலிருந்து முகிலாக மாறிக் மழையாக் கியைக்கும் நீர், இவற்றைக் கொண்டு அனைத்து உயிரினங்களுக்கும் அடிப்படையான உணவையும். உலகத்துக்குப் பயன்படும் ஆயிரமாயிரம் பொருள்களையும் தரும் ஆற்றலைக்கொண்டது மரம். இந்த அபாகர ஆற்றலால் அனைத்து உயிர்களுக்கும் அமுதசுரப்பியாக விளங்குகிற மரத்தால்தான் உலகிலுள்ள அனைத்து உயிர்களும் வாழ முடிகிறது.
    1900-ல் உலகிலுள்ள மொத்தக் காடுகள் 7,000 மில்லியன் ஹெக்டேர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 1975-ல் இது 2,980 மில்லியன் ஹெக்டேர்களாகக் குறைந்துள்ளது. ஓராண்டில் 2,50,000 சதுர கிலோ மீட்டர் வீதம் காடுகள் அழிக்கப்படுகின்றன.

மரம் வளர்ப்பு தொடரும்...

மரம் வளர்த்து பசுமை நிறைந்த உலகை உருவாக்குவோம்.....

Monday, February 27, 2012

3.மரம் வளர்த்தனால் ஆய பயனென் கொல்?.

   இந்தப் பரந்த உலகில் மூன்றில் ஒரு பங்கு காடுகள் இருக்க வேண்டியது அவசியம். காடுகள் அழிந்தால் நாடுகளில் நச்சுப் பரவும். ஓசோன் பாதுகாப்பு திரை கிழிந்து, பசுமைக்குடில் விளைவை ஏற்படுத்தி, சமநிலை பாதிக்கப்படும். இன்றைய இதே நிலை தொடர்ந்தால் புவி வெப்ம் அதிகமாகி உலகம் பாலைவனமாகிவிடும் என எச்சரிக்கின்றனர் சுற்றுச்சூழல் வல்லுநர்கள். ஆனால், ஆடம்பரம், ஆர்பாட்டம், எதிர்காலத்தைச் சிந்திக்காமல் வனவளம் அனைத்தையும் அழித்து இயற்கையை எதிர்த்து வாழத் தலைப்பட்ட மனிதன் காடுகளை அழித்து தட்பவெப்பநிலையை மாற்றி மழையை மறந்துவிட்டான். காடுகளால் மனிதன் பெறும் பயன்கள் எண்ணிலடங்கா. நேரிடைப் பயன்கள், மறைமுகப் பயன்கள் என இருவகையாக அதன் பயன்களைப் பிரிக்கலாம். காடுகளாள் மனிதன் மட்டுமல்லாமல் பறவையினங்களும், விலங்கினங்களும் பயனடைகின். மரங்கள் இந்த உலகைச் செழுமையாகவும், பசுமையாகவும் வைத்திருக்க உதவுகின்றன. தன்னலம் கருதா மரங்கள் பல உயிரினங்கள் இளைப்பாற நிழல் தருகின்றன. இந்தப் பிரபஞ்சத்தில் நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் ஆகிய பஞ்ச பூதங்களின் இயக்கத்துக்கு மரங்கள் துனை நின்று உயிரினங்களுக்கு சேவைகள் செய்து வருகின்றன. காடுகள் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தி மண் அரிப்பைத் தடுத்து நிறுத்துகின்றன. மேலும் தட்பவெப்ப நிலையைச் சமன்படுத்துகின்றன. மக்களுக்கு உணவு வழங்கும் மண்ணை மரங்கள் காப்பாற்றுகின்றன. வளப்படுத்துகின்றன. காடுகள் அதிகப்படியாக அழ்க்கப்பட்டதால் இந்தியாவில் ஆண்டுக்கு ஏற்படும் மண் இழப்பு சுமார் 6000 மில்லியன் டன் ஆகும். ஒரு ஹெக்டேர் பரப்பில் ஆண்டுக்கு சராசரியாக 17 டன் மண் விளை நிலத்திலிருந்து மண் அரிப்பால் அடித்துச் செல்லப்படுகிறது.
   இதனை ஈடுசெய்ய ஆண்டுக்கு 120 ஆயிரம் கோடி ரூபாய் தொடர்ந்து செலவிட வேண்டும் காடுகள் அழியும் போது நிலமும் அழிந்து விடும். ஆகாயத்தைத் தூய்மைப்படுத்தவும், விண்ணிலே மிதந்து செல்லும் மேகத்தை கவர்ந்திழுத்து அமிழ்தமான மழையைப் பொழியச் செய்யவும் மரங்கள் அவசியம். ஒலி, ஒளி, வெம்மை இவற்றின் கடுமையைத் தணிக்க மரங்கள் உதவுகின்றன. மனிதன் உயிர் வாழ்வதற்குத் தேவையான பிரானவாயுவை மரங்கள் வெளியிடுகிந்றன. தூசியையும், புகையையும், மரங்களால் கட்டுப்படுத்த முடியும். சுமாரான அடர்த்தியான மரமே ஆண்டு ஒன்றுக்கு ஒருவருட தூசியைத் தக்கவைத்துக்கொள்ளும். புகையிலுள்ள நச்சுப் பொருள்களையும் மரங்கள் உள்ளிழுத்துக் காற்றைச் சுத்திகரித்து விடும் திறன் வாய்ந்தது.
மரம் வளர்ப்பு தொடரும்...
மரம் வளர்ப்போம் புவிகாப்போம்......

Saturday, February 25, 2012

2.மரம் வளர்த்தனால் ஆய பயனென் கொல்?


   நம் தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மரங்களின் மாண்பையும், பெருமையையும் உணர்ந்து பேணி வளர்த்தனர்.
   சேரன் பனம் பூமாலை, சோழன் ஆத்திமாலை, பாண்டியன் வேப்பம் பூமாலை அணிந்து மரங்களுக்குச் சிறப்புச் சேர்த்தனர். நாட்டைக் காக்கும் அரண்களில் ஒன்று காட்டரண் என்பதை அறிந்திருந்தனர். பண்டு தொட்டு தமிழ்ப் பெருங்குடி மக்கள் காடுகளை முல்லை, வல்லை, இறும்பு, குறுங்காடு, அரில், ஏறல், பதுகை, பொச்சை, சுரம், பொதி, இணையம், மிளை, அரண் என்று பாகு படுத்தியிருந்தார்கள்.
   தமிழகத்தில் முந்பு எங்கும் காடுகள் மண்டி அடர்ந்து கிடந்தன. அன்நாளில் ஊர்களுக்கு மரத்தை ஒட்டியே பெயர் வைத்திருந்தனர்.
   தலவிருட்சங்கள் என்று ஊர்தோறும் அப்பகுதிக்குரிய மரங்களை நட்டார்கள். அரசூர், பனையூர், ரனங்காட்டூர், திருப்பனமூர், திருப்பனந்தாள், திருநெல்லிக்கா, திருநாவலூர், வேலம், தாமரைக்குளம், மூங்கில்பட்டு, மருதமலை, திருவேற்காடு, புங்கனூர், நாவல்பாக்கம், திருமுல்லைவாயில், காரைக்காடு, எருக்கம்பூண்டி, திருவீழிமிழலை, செங்காடு, திருப்பராய்த்துறை, திருவிடைமதூர், காட்டுப்பாடி, ஆற்காடு, ஆலங்காடு, திருமறைக்காடு, காட்டுப்பாக்கம், காதாம்பட்டு, புரசைவாக்கம் பூவரசம்வாக்கம் வேப்பம்பட்டு முதலிய ஊர்களின் பெயர்களிலிருந்து தமிழகத்தில் எங்கும் காடுகள் அடர்ந்து எங்கும் மண்டிக் கிடந்தன என்பதை அறியலாம். அதனாலே அக்காலத்தில் மாதம் மும்மாரி பொழிந்தது. பழங்காலம் முதற்கொம்டு பழகிய மரத்தை வெட்டக்கூடாது. இளம்வயதில் அது எனக்கு நிழலைத் தந்தது. பச்சை மரத்தை வெட்டுவது பாவம் என்பது பண்டைக்காலம் தொட்டே நம் நாட்டு மக்களின் இரத்தத்தில் ஊறிய பண்பாடு. மரங்களை வெட்டிச் சாய்த்து  விட்டால் அந்த இடத்தை மீண்டும் நிறப்ப பல ஆண்டுகள் ஆகும் என்பதை நினைவில் கொண்டிருந்தார்கள். எனவேதான் மரங்களை உறையாண்மையோடு இணைத்துப் போற்றிப் புகழ்ந்தார்கள்.

மழைக்காடுகள் இற்கையின் பொக்கிஷம்...
2.மரம் வளர்ப்பு தொடரும்...

Friday, February 24, 2012

1மரம் வளர்த்தனால் ஆய பயனென் கொல்?

   வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலார்," கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே தருநிழலே' என இயற்கையை இறைவனது சொரூபமாக வர்ணிக்கிறார். காடு வளர்த்தால், இறைவனை வணங்குதல், தருமம் செய்தல் ஆகிய மூன்று கடமைகளுள் மரம் வளர்த்தல் மனிதனின் தலையாய கயமை என்கிறார் திருமூலர்.
   "நல்ல காடு வளர்ப்போம்" என்றார் பாரதியார். நம் மக்கள் இயற்கையை தெய்வமாய், அன்னையாய் வணங்கினார்கள். துளசியாகட்டும், அரசமரமாகட்டும், வேப்பமரமாகட்டும், அத்தானை செடி, கொடிகளும் இறைவனின் இருப்பிடம், உயிரினங்களின் உறைவிடம், நோய்தீர்க்கும் மருந்துகளின் பிறப்பிடம். "ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரோடி மூங்கில்போல் கிளைந்து வாழவேண்டும்" என்று வாழ்க்கை நெறியை உணர்த்துகிறது மரம்.
    "வெயில் நுழை பறியா குயில் நுழை பொதும்பர்" என்ரும் "முட்புதர்கள் மொய்த்த தரை - எதிர் முட்டும் கருங்கற்களும் நெருங்கும் - மக்கள் இட்டு அடி எடுத்து வைக்கயிலையே கால் நடுங்கும் உள் நாடுங்கும் என்றும் இலக்கியங்கள் காட்டைச் சிறப்பித்துப் பாடுகின்றன. மரங்கள் நிழல், இலை, காய், கனி, மணம், குனம், தனம், பானம், ஞானம், சாந்தம், மழை, குளுமை, தூய்மை, எண்ணெய், உறைவிடம், விறகு இப்படி மனித சமுதாயத்திற்குப் பல நன்மைகள் தருவதால் பண்டைய காலத்தில் மரங்களை "தரு" என அழைத்தார்கள்.
   இன்று காடு வளர்க்கும் பண்பு மனிதர்களிடையே அருகி வருகிறது. மரங்களும் ஏனைய தாவரங்களும் அடர்த்தியாகவும், அதைச்சார்ந்த உயிரினங்களும் வாழும் இடம் காடு எனப்படும். நம் நாட்டில், மெளர்ய, குப்த அரசர்கள் காலத்திலிருந்து முகலாய அரசர்கள் காலம் வரை வனங்களைப் பேனுவதிலும், சாலைகளில் நிழல்தரும் மரங்களை வைப்பதிலும் ஆர்வம் காட்டி இயற்கையோடு இனைந்த வாழ்வை வாழ்ந்தார்கள்,

ஒருவர் ஒரு மரம் வளர்த்து நம சந்ததிகளு......

மரம் வளர்ப்பு தொடரும்...

Saturday, February 18, 2012

நமக்கு நாமே மின்சாரத்தை உற்பத்தி செய்யலாமே

   மின் வெட்டு இது நாம் தினமும் எதிர் கொள்ளும் ஒரு பிரச்சினை. மின் உற்பத்தியில் பற்றாக்குறை நமது தமிழகத்தை பொருத்தவரை மின் தேவை  மாநில உற்பத்தி போக மத்திய தொகுப்பில் இருந்து 2500 மெகாவாட் வழங்கப்பட வேண்டும் ஆனால் 1000 மெகாவாட் மின்சாரம்தான் வழங்கப்படுகிறது என்பது தமிழகத்தின் வாதம். அதலால் நகர் புரத்தில் 1மணி நேரம் மின் வெட்டு, கிராமப்புரம் பல மணி நேரம் மின் வெட்டு. இதை ஓரளவு சரிக்கட்ட நமக்கு நாமே மின்சாரம் தயாரிப்பதுதான் ஒரே தீர்வு. இது சாத்தியமா எனும் கேள்வி எழும் இது சாத்தியமே. 
   தினமும் நமக்கு தேவையான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்து கொள்ளலாம் தெரியுமா? என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம் உண்மைதான், அதுதான் சூரிய சக்தி. சூரிய ஒளியை நவின வி்ஞ்ஞான தொழில் நுப்பத்தின் மூலம் உபயோகித்துக் கொள்ள முடியுமா என்ற ஆராய்ச்சி பல வருடங்களாக நடந்து வருகிறது. ஒரு வருடத்தில் நமக்கு கிடைக்கும் சூரிய ஒளியைக் கொண்டு அடுத்த பத்து வருடங்ளுக்கு நம் நாட்டின் மொத்த மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்கிறது ஆராய்ச்சி புள்ளி விவரங்கள்.
   சூரிய ஒளியை இரண்டு விதத்தில் உபயோகிக்க முடியும். சூரிய ஒளியின் வெப்பத்தை ஒன்று திரட்டி அதை உபயோகித்து செப்பு கம்பியின் மூலம் தண்ணீரை கொதிக்க வைக்து நீராவி உற்பத்தி செய்து, அதிலிருந்து மின்சாரம் தயாரிப்பது ஒரு முறை. மற்றெரு முறை சூரிய அலைக் கதிர்களை சோலார் செல்கள் 'ஃபோட்டோவோல்டைக்' மூலம் நேரடியாக மின்சார சக்தியாக மாற்றுவது ஆகும். சாதரன கால்குலேட்டர் முதல் விண்வெளி ராக்கெட் வரை இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. ஃபோட்டோவோல்டைக் என்ற பிவி மூலம் சூரிய ஒளியை மின்சக்தியாக மாற்றும் தொழில்நுட்பம் 1950 ஆம் ஆண்டுகளில் அமெரிக்க விண்வெளி சாட்டிலைட்டுகளில் பயன்படுத்தப்பட்டன. சோலர் செல்களில் (ஃபோட்டோவோல்டைக்) உள்ளே ஒளிபடும் போது அதில் உள்ள எலக்ட்ரான்கள் தகர்ந்து வெளிவருகின்றன. இந்த எலக்ட்ரான்களின் தொகுப்பே மின்சாரமாக உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த மின்சாரம் நேரடியாக வீட்டு உபயோக மின்சாரப் பொருட்களான லைட், ஃபேன், ஹிட்டர், ஃபிரிட்ஜ் போன்றவைகளுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மேலும் உள்ள மின்சாரத்தை பாட்டரி மூலம் சேமித்து வைத்துக் கொண்டு பின்னர் உபயோகித்துக் கொள்ளலாம். ஒவ்வொரு வீட்டிலும் மொட்டை மாடியில் சோலார் பேனலை (ஃபோட்டோவோல்டைக்) செல்கள் பொருத்தி அவரவர்க்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ளலாம். ஜெர்மன் போன்ற நகரங்களின் மக்கள் இவ்வாறு உற்பத்தி செய்யும் மின்சாரத்தை தங்கள் தேவை போக மீதம் உள்ளதை அரசு மின்சாரத்துறைக்கு விற்று விடுகின்றனர். இந்தியா போன்ற வெப்ப பிரதேசங்களில் இவ்வாறு மின்சாரம் தயாரிப்பது மிகவும் சுலபமானதும் பயனுள்ளதாகவும் இருக்கும்.
   சூரிய ஒளியில் இயங்கும் பல பொருட்கள் இன்று உலக சந்தையில் கிடைக்கின்றன. அவை வீட்டு உபயோக லைட், ஃபேன், அவசரகால லைட்டுகள், தோட்டத்து விளக்குகள், சோலார் தண்ணீர் இரைக்கும் பம்பு, யுபிஎஸ் இன்வெர்டர் சிஸ்டம் மற்றும் சோலார் வாட்டர் ஹீட்டர் போன்றவை. 3000 ரூபாயில் ஒரு சோலார் பேனலை வாங்கி வீட்டு பால்கனியில் பொருத்திவிட்டால் பகல் நேரத்தில் லைட் ஃபேன் போன்றவற்றிற்கான மின்சாரத்தை எடுத்துக் கொள்ளலாம். மேலும் சோலார் உபகரணங்களுக்கு குறைந்தபட்சம் எந்த பிரச்சினையோ, செலவோ ஏற்படுவதில்லை.
   நம் வீட்டு மாடியில் சோலார் சிஸ்டம் வைக்க விரும்பினால் அதற்கு அரசு மானியம் கிடைக்கிறது. ஒரு கிலோவாட் சோலார் பேனலை நாம் அமைக்க ரூ.2 முதல் ரூ. 3 லட்சம் வரை செலவு செய்கிறோம் என்றால், ரூ.50 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை அரசு மானியம் கிடைக்கிறது. இதற்கு மானியம் மட்டும் போதாது அரசின் நேரடிஉதவி மிகவும் அவசியம். இதுபோல் நமக்கு தேவையான மின்சாரத்தை நாமே தயாரிக்கலாம். அரசு இலவசங்களை கொடுப்பதை தவிர்த்துவிட்டு ஒவ்வொரு வீட்டுக்கும் இது போல் பயனுள்தை செய்தால் மின்வெட்டு இல்லாத மாநிலமாக நமது தமிழகம் இருக்கும்.

மனிதன் இயற்கையை இயற்கையாக இருக்கவிடாமல் இருப்பதே இயற்கை அழிவிற்கு காரனம். இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்...