வேட்டையாடப்படும் விலங்குகள் மனிதன் விலங்குகளை வேட்டயாடுவது மட்டுமின்றி, விலங்குகளே விலங்குகளை வேட்டையாடுவதும் உண்டு. வேட்டை என்பது ஆதிமனிதன் காலத்தில் இருந்தோ அதற்கு முன்னர் விலங்குகளின் காலத்தில் தோன்றி இருக்கலாம். அசைவ உணவுகளைச் சாப்பிடக்கூடிய விலங்குகள் மனிதனி உட்பட வேட்டையின் மூலமே தங்களுடைய உணவைத் தேடிக் கொண்டன. எந்த மாதிரியான விலங்குகள் வேட்டையாடப்படுகின்றன
ஏதாவது ஒரு இனத்தைச் சேர்ந்த விவங்குகளை வேட்டையாடும் ஒரு விலங்கு, வேறு ஒரு இன விலங்கால் வேட்டையாடப்படுவதுதான் இயற்கையின் அதிசயம். எனவே, இந்த விலங்கு தான் வேட்டையாடும், இந்த மாதிரியான விலங்குகள் தான் வேட்டையாடப்படும் என்றெல்லாம் நாம் குறிப்பாட்டுச் சொல்ல முடியாது. இருந்தாலும், ஒட முடியாதவை, வயதானவை, நோய்வாய்பட்டவை போன்றவற்றைத்தான் மற்ற விலங்குகள் வேட்டையாடுகின்றன என்பது பொதுவான நம்பிக்கை. அந்த நம்பிக்கையை உண்மையென நிருபித்திருக்கிறார்கள் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள்.
வீட்டுப்பூனைகளின் வேட்டையாடும் பழக்கம் குறித்து கொல்லப்பட்ட பறவைகள், விபத்தில் சிக்கி இறந்த பறவைகள் போன்றவற்றை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். அதிலும் குறிப்பாக அந்த விலங்குகளின் மண்ணீரலை ஆய்வு செய்தனர். காரனம், ஆரோக்கியமான பறவைகளின் மண்ணீரல் பெரிதாக இருக்கும். ஆரோக்கியமில்லாத அல்லது சிறிய பறவைகளின் மண்ணீரல் சிறிதாக இருக்கும். பொதுவாக பறவைககளின் நோய் எதிர்ப்புச் சக்தியை மண்ணீரல் தான் தீர்மானிக்கிறது. எனவே, பூனைகளால் கொல்லப்பட்ட பறவைகளின் மண்ணீரல் அளவைக்கொண்டு அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
மொத்தம் 18 வகையைச் சேர்ந்த 500 பறவைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில், விபத்தில் இறந்த பறவைகளின் மண்ணீரலைக் காட்டிலும், பூனைகளால் கொல்லப்பட்ட பறவைகளின் மண்ணீரல் சிறிதாக இருந்தது. மேலும், பூனைகளால் கொல்லப்பட்ட பறவைகளில் பல இளம் வயதாகவும் இருந்தன. பூனைகளிடம் இருந்து எப்படி தப்புவது என்று அவைகளுக்குத் தெரியாமல் இருக்கலாம் அல்லது பூனைகளிடம் இருந்து தப்பிக்கும் ஆற்றல் அவற்றுக்கு இல்லாமல் இருக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
எனவே, தன்னைவிட சிறிய, நோய்வாய்ப்பட்ட விலங்குகளையே பிற விலங்குகள் வேட்டையாடுகின்றன என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இயற்கை அன்னையின் குழந்தைகள் விலங்குகள், பறவைகளைக் காப்போம்....

No comments:
Post a Comment