Thursday 10 May 2012

ஏரிகளைக் காப்போம்! மீன் வளம் பெருக்குவோம்!


     உலக மக்களின் முதன்மையான கடல் உணவு மீன்களே ஆகும். 1950 ஆம் ஆண்டில் ஒரு கோடியே 93 இலட்சம் டன் மீன்கள் பிடிக்கப்பட்டன. தாமாகவே வளர்ந்த இந்த மீன்கள் ஆறுகள், குளங்கள், ஏரிகள், மற்றும் கடலின் மூலமாக கிடைத்தவை. இதுவே 2003 ஆம் ஆண்டில் பிடிக்கப்பட்ட மீன் அளவு 13 கோடியே 25 இலட்சம் டன்கள். மனிதர்களினால் வளர்க்கப்பட்டு பிடிக்கப்பட்டவை 5 கோடியே 48 இலட்சம் டன்கள்.

     உலகில் கிடைக்கும் மொத்த மீன்களில் மூன்றில் இரண்டு பங்கு சீனா, பெரு, இந்தியா, இந்தோனேசியா, அமெரிக்கா, ஜப்பான், சிலி ஆகிய ஏழு நாட்டு மக்களால் உட்கொள்ளப்படுகிறது. இந்திய மக்கள் 2003 ஆம் ஆண்டில் 59 இலட்சம் டன் மீன்களை சாப்பிட்டு இருக்கின்றனர்.

     மனிதர்களின் உணவில் முக்கிய இடத்தைப் பிடித்து வந்த மீன்கள் தற்போது சூழல் மாசுபாடு காரணமாக அழியும் நிலைக்கு வந்து விட்டது. இயற்கையாக மீன்கள் உற்பத்தி ஆகும் வேகத்தை விட, அவைகள் மனிதர்களினால் பிடிக்கப்படும் வேகமும், அளவும் அதிகமாகி வருவதும் இந்த அழிவிற்கு ஒரு முக்கியமான காரணமாகும். சூழல் மாசுபாட்டினால் மீன்களின் கிடைக்கும் அளவு குறைவதுடன், அவற்றின் பருமனும் குறைகிறது. இதன் காரணமாக பல மீன் இனங்கள் முற்றிலுமாகவே அழிந்து போய்விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

     கடலிலும் ஆறுகளிலும் கழிவுநீர் கலப்பதாலும், ரசாயன குப்பைகள் கொட்டப்படுவதாலும் மீன்களின் இனப்பெருக்கம் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. சுற்றுச்சூழல் சீர்கேட்டைத் தடுக்காவிட்டால் மீன்கள் அழிவதையும் தடுக்கமுடியாது. எனவே சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த கடல் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அந்தப் பகுதிகளில் மீன்பிடிக்கத்தடை விதிக்கவேண்டும். அப்போதுதான் மீன்வளத்தைப் பெருக்க முடியும். தற்போது இது போன்ற நடவடிக்கைகள் உலக நாடுகள் பலவற்றிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

     தற்காலத்தில் ஏரிகளினால் நீர்ப்பாசனம் பெறும் நஞ்சை நிலங்கள் எல்லாம் குடியிருப்பு பகுதிகளாக மாற்றம் பெற்று வருகின்றன. ஒரு ஏரியில் நிறைந்திருக்கின்ற நீர் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வேளாண் கிணறு வற்றாமல் பார்த்துக் கொள்ளும். தற்போது பெரும்பாலான கிராமங்களில் மக்கள் குளித்தல், துணிதுவைத்தல், வீட்டு உபயோகம் போன்றவற்றுக்கு நிலத்தடி நீரையே நம்பி இருக்கின்றனர். ஏரிகள் மறையும் போது நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்பது உறுதி.

     மேலும் ஏரிகள் மறையுமானால் கால்நடைகளுக்குத் தேவையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். குளிப்பதற்கும், குடிப்பதற்கும் கால்நடைகள் மற்ற விலங்குகள் ஏரி, குளம், குட்டைகளையே நம்பி இருக்கின்றன. இந்த நீர் நிலைகள் மறையுமானால் அந்தப் பகுதியில் வாழும் கால்நடைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும் அபாயம் ஏற்படும்.

     ஏரிகள் இருக்கும் பகுதியில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். ஏரிகள் மறையும் போது நீர் இருப்பதில்லை. காற்றில் ஈரப்பதமும் குறைந்துவிடும். வெப்பமும் அதிகரிக்கும். வெப்பமான சூழ்நிலையில் வாழுவதற்கு அந்தப் பகுதியில் வாழும் மக்கள் தள்ளப்படுவார்கள். எனவே ஏரிகளைக் காப்போம்.

     ஏரிகள் என்பவை நன்னீர் சூழல் தொகுப்பு வகையைச் சார்ந்தவை. ஏரியில் உணவு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாக விளங்குபவை பாசிகள். இவை தவிர ஒருவிதையிலை தாவரங்கள், இருவிதையிலைத் தாவரங்கள் ஆகியவையும் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த தாவரங்கள் உற்பத்தி செய்கின்ற உணவினை பூச்சிகள், புழுக்கள், மீன்கள், நன்னீர் மட்டிகள், நத்தைகள், தவளைகள், நண்டுகள் போன்றவை உள்ளன. இந்த உயிரினங்களை நுகர்வோர் என்று அழைக்கலாம்.

     இந்த விலங்கினங்களை உட்கொண்டு வாழ்பவை கொக்கு, கழுகு, நாரை, மீன்கொத்தி, போன்ற பறவை இனங்கள். இவை அல்லாமல், ஏரிகளில் அழுகிப்போகும் விலங்குகளின் இறந்த உடல்களையும், தாவரங்களை சிதைக்கும் பாக்டீரியா போன்ற உயிரினங்களும் அங்கு காணப்படுகின்றன.

     ஒரு ஏரி அழியுமானால் வெறும் தண்ணீர் மட்டும் குறைவது பிரச்சினையல்ல, நாம் மேலே பார்த்த உற்பத்தியாளர்கள், நுகர்வோர்கள், சிதைப்பான்கள் என்று ஒரு கூட்டமே அழியும். அதோடு இயற்கையில் ஏற்பட்ட விலங்கு, பறவை, பூச்சி இனங்களின் உணவுச் சங்கிலியும் அறுந்து விடும்.

     அயிரை, விரால், விலாங்கு போன்ற மீன்வகைகளும், அவற்றை உண்டு வாழும் கொக்கு, நாரை, வாத்து மீன் போன்ற பறவை இனங்களும் இந்த பூமிப்பந்தில் இருந்தே மறைந்து விடும் அபாயம் ஏற்படும். எனவே ஏரிகளைக் காப்பது என்பது நம் அனைவருடைய கடமையாகும்.
நன்றி கட்டுரையாளர்
வேணுசீனிவாசன்
இயற்கையின் கொடை நதிகளை மாசுபடாமல் இருக்க உதவுவோம்.

Saturday 24 March 2012

எத்தனால் பெட்ரோல், டீசலுக்கு பதில் மாற்று எரிபொருள்.

 
   பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த எண்ணெய் நிருவனங்கள் திட்டம். இது அன்றாடம் நாம் பார்க்கும் பத்திரிக்கை செய்தி. மத்திய அரசும் டீசல், மண்எண்ணெய், சமையல் எரிவாயு விலையை உயர்த்திவிடுகிறது. சர்வதேச அளவில் கச்சாஎண்ணெய் விலை உயர்வாதால் இந்த விலையேற்றம் என்கிறது எண்ணெய் நிருவனங்களும், மத்திய அரசும். இந்த விலை சுமையிலிருந்து விடுபட பெட்ரோல், டீசலுக்கு பதில் மாற்று எரிபொருள் எத்தனால்.
  நினைத்தவுடன் பெட்ரோல் விலையை உயர்த்துவது இந்தியாவில் சகஜமான ஒன்றாகிவிட்டது. ஆனால் உலகில் பல நாடுகள் பெட்ரோல், டீசல் விலையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றன. அப்படி வைத்திருக்கும் நாடுகளில் பிரேசிலும் ஒன்று.
   பெட்ரோலின் பயன்பாட்டை குறைக்கவும், அதில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்தவும். 1927 ஆண்டே எத்தனாலை வாகன எரிபொருளாக விற்பனை செய்யத் தொடங்கிவிட்டது பிரேசில். இங்கு 1942-ல் எத்தனால் உற்பத்தி 16 ஆயிரம் டன்னாக இருந்தது. இன்று 2.5 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. 2019-ல் இதை 5 கோடி டன்னாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
    உலகிலேயே கரும்பு உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்திலும் இந்தியா 2-ம் இடத்திலும் உள்ளன. இந்தியாவில் எத்தனால் உற்பத்தி 4.8 லட்சம் டன்தான். இதன் உற்பத்தியை பெருக்குவதற்கு இந்திய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் இந்த வருட இறுதிக்குள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.100 ஆகவும், டீசல் விலையை ரூ.70 ஆகவும் உயர்த்த திய்யமிட்டுள்ளது.
   பிரேசில் ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் எத்தனால் பம்ப் இருக்கும். வாகன ஓட்டிகள் தங்கள் விருப்பம் போல் பெட்ரோலுடன் எத்தன்ல் கலந்து கொள்ளலாம். மேலும் அங்கு எத்தனால்ல் மட்டுமே ஓடும் வாகனங்களும் உண்டு. எத்தனாலின் விலையும் லிட்டருக்கு ரூ.20 தான். இது மட்டுமின்றி எத்தனால் அல்லது பெட்ரோலில் ஓடும் வாகன என்ஜின்களையும் உற்பத்தி செய்கின்றனர்.
   பெட்ரோலுடன் 24 சதவீதம் எத்தனால் கலந்து ஓட்டலாம். இதற்கு வாகனத்தில் எந்த மாற்றமும் செய்யவேண்டியதில்லை. இதேபோல் எத்தனால் 85 சதவிதமும், பெட்ரோல் 15 சதவீதமும் கலந்து பயன்படுத்தலாம். இதற்கு என்ஜினில் சில மாற்றங்கள் செய்யவேண்டும். இதுபோக 100 சதவீதம் எத்தனாலில் ஓடும் வாகனங்களும் உண்டு. பிரேசிலில் உள்ள போர்டு நிறுவனம் இரண்டு வகையான என்ஜின்களையும் தயாரித்து வருகிறது.
   இந்தியாவில் எத்தனால் விலையை லிட்டருக்கு ரூ.27 என்று அரசு நிர்ணயித்து உள்ளது. ஆனால் ஒரு டன் கரும்புக்கு ரூ.2,500 கொடுக்க வேண்டும் என்றால், எத்தனாலை லிட்டர் ரூ.32க்கு விற்க வேண்டும் என்கிறார்கள். இதுதவிர மத்திய அரசின் வரி 16 சதவீதம், விற்பனையாளர் கமிஷன் 5 சதவீதம், போக்குவரத்து செலவு 50பைசா இதர செலவுகள் 53 காசு ஆக மொத்தம் ஒரு லிட்டர் எத்தனால் ரூ.40 ஆகும்.
   அமெரிக்கா போன்ற நாடுகள் ஒரு லிட்டர் எத்தனாலுக்கு ரூ.6 மானியமாக கொடுக்கின்றன. இந்தியாவிலும் இதுபோல் செய்தால், எத்தனால் உற்பத்தி அதிகமாகும். மக்களும் 72 ரூபாய்க்கு பெட்ரோல் போடுவதை விட 24 சதவீதம் எத்தனால் கலக்கும் போது லிட்டருக்கு ரூ.9 குறையும். 85சதவீதம் எத்தனாலை கலந்தால், ரூ. 30 குறையும். சுற்றுச்சூழலும் மாசுபடமல் இருக்கும்..

இயற்கையின் எழிலினை நாம் கண்டு ரசிக்கும் போது அவற்றைப் படைத்த ஆண்டவன் நம் கண்களுக்குத் தெரியாமலா போவான்?

Wednesday 14 March 2012

பூச்சிகள் (INSECTS)

  பூச்சிகள் நம்மைச் சுற்றி எங்கும் உள்ளன. நம்முடைய வீட்டில் வசித்துக்கொண்டு, நமது உடலையும், உடையையும்   துளைக்கின்றன. ஆயுளையே அழிக்கின்றன. பூமியில் பூச்சிகள் இல்லாத இடமே கிடையாது. ஆழமான குகைகளிலும் அவை காணப்படுகின்றன. சுமார் 40 பூச்சியினங்கள், பனிக்கட்டிப் பிரதேசமான தென் துருவத்தில் வசிக்கினறன.
   உதாரணமாக, தேனீக்கள், வண்டுகள், விட்டில்பூச்சிகள், வண்ணத்துப்பூச்சிகள் ஆகியவை விறைத்துப்போன நிலையிலும் உயிர் வாழ்கின்றன. விலங்குகளின் உடலைத் துளைத்து அவற்றின் இறைச்சியை உண்ணும் பூச்சிகளும் உள்ளன. கொடுமையான பாலைவனங்களிலும், நீர்ப்பெருக்கம் உள்ள ஆறுகளிலும், நடுக்கடலின் நீர்மட்டத்திலும் பூச்சிகள் உல்லாசமாக வாழ்கின்றன. பாறைகளின் பிளவுகளிலும் கூட பூச்சிகள் வாழ்கின்றன.
   பூச்சிகள் கொடிய வெப்பநிலையையும், கடுமையான தப்பவெப்பநிலையையும் பொருட்படுத்துவதில்லை. மனிதன் ஓர் இடத்திலிருந்து காற்றை அகற்றி அதை வெற்றிடமாக்கினாலும் அங்கும் பூச்சிகள் வாழ முடியும்.
   சில ஈக்கள் முற்றிலும் உப்பிலேயே வாழ்கின்றன. அவற்றின் சில உறவினர்கள் பெட்ரோல் ஈக்கள் எனப்படுகின்றன. அவை அமரிக்காவின் வட கலிபோர்னியாவில் உள்ள பெட்ரோல் ஊற்றுகளின் அருகில் உள்ள கழிவு எண்ணைக் குட்டைகளில் வசிக்கின்றன.
   மனிதனுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் நஞ்சாக உள்ள கரியமில வாயுவில் அந்தப் பூச்சிகள் மணிக்கணக்கில் வசிக்கின்றன. சில பூச்சிகள் தண்ணீர் இல்லாத இடங்களில் தாமே தண்ணீர் உற்பத்தி செய்து கொண்டு வாழ்கின்றன. அவை தமது உடலில் உள்ள மாவுச் சத்து எரி பொருளை எரித்துத் தமக்கு வேண்டிய தண்ணீரைப் பெறுகின்றன.
   பூச்சியினங்களிள் பொதுவாக மனிதகுலத்துக்குத் தீங்கு விளைவித்தாலும் நன்மை செய்யும் பூச்சிகளும் இருக்கின்றன என்பது ஆறுதல் அளிக்கும் விஷயம்!

வனவிலங்குகள், பறவைகள் காத்து இயற்கையை காப்போம்...

Tuesday 13 March 2012

எங்களை வளர்த்து நீங்களும் வாழுங்கள்!

   ஒரு மனிதன் ஒரு நாளில் மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்சிஜனை சுவாசிக்கிறான். ஒரு சிலிண்டர் விலை சுமாரர் ரூ.700. ஒரு நாள் ஆக்சிஜன் 2,100 ரூபாய் மதிப்புள்ளது ஓராண்டுக்கு இது ரூபாய் 7,66,500. மனிதனின் சராசரி ஆயுள் 65 வருடங்கள் என்றால் இந்த செலவு ஆகாயத்தைத் தொடும் அளவுக்கு 5,00,00,000 ரூபாய்கள் ஆகிறது. இதெல்லாம் நமக்கு இலவசமாக சுற்றிலுமுள்ள மரங்களிலிருந்து கிடைக்கிறது. மரங்கள் இயற்கை நமக்கு தந்த பொக்கிஷங்கள். இதை பொக்கிஷமாக பார்ப்பவர்கள் மிகக் குறைவு. கண் மூடித்தனமாக அவற்றை வெட்டுவது நடந்து கொண்டே தான்  இருக்கிறது இனிமேலாவது நாமெலாம்  மரங்கள் நட்டு, வளர்த்து அவற்றைக் கவனமாகப் பாதுகாத்து, காடுகள் வளர்த்து, இயற்கையை காத்து, மாசுபாடு இல்லாமல் செய்து வளரும் தலைமுறையைக் காப்போம்...

இயற்கையை நீ அழித்தால் இயற்கையோடு நீயும் அழிவாய்...

 





Friday 2 March 2012

6.மரம் வளர்த்தனால் ஆய பயனென் கொல்?

  வேளான்மை கற்றுக்கொண்ட நாளில் அதற்காக காடுகளை அழித்து, கழனி திருத்தி,  விவசாயம் செய்தான். நகர்ப்புரங்களின் விரிவாக்கம், விளை நிலைகளை சுருக்கி விளை நிலைகளை அதிகப்படுத்துதல், அளவுக்கு மீறிய தரிசு நிலம் ஆகியவைகளின் காரணமாக விவசாயம் அழகிறது. நகர விரிவாக்கத் திட்டங்களினாலும், விளை நிலங்களில் பெருகும் குடியிருப்புத் திட்டங்களிலும், பூங்காக்களும், மரங்ளும் அதிமுக்கியத்துவத்தை அரசு அளிக்கவேண்டும். நகரங்களில் மாசு அகற்றும் பணியில் மரங்களுக்குப் பிரதான இடமுண்டு. ஓடி உழைத்து அலுத்து சோர்வடையும் மக்களுக்கு அமைதியும், ஆறுதலும், ஆரோக்கியமும் மரங்கள் அளிக்கும். அதனால் பாடும் பறவைகளும் நம்மை நாடி வரும்.
    காட்டில் உள்ள மரங்கள் அழிந்தால் மரங்கள் மட்டும் அழிவதில்லை. மரங்களைச் சிற்றி வளரும் செடி, கொடிகளும் வியப்புக்குரிய விந்தையான விலங்குகளும் மடிகின்றன. காடு ஓர் ஆலயம். மரம் ஒரு தெய்வம். காடு அழிந்தால் நாடு செழிக்காது. நாட்டு வளம் காட்டு வளத்திலேயே அடங்கியுள்ளது. மரங்களையும், வனங்களையும் வளர்த்துக் காப்பாற்ற வேண்டும். மரங்களின் உபயோகத்துக்கு மாற்றுப் பொருள்களையும் கண்டறிய வேண்டும். ரங்கள் இன்றி மனிதன் இல்லை என்ற உண்மையை மனிதன் உணர வேண்டும். மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை மரங்களின் உபயத்தில் தான் வாழ்கிறான். 
  "மரந்தான் மரந்தான் எல்லாம் மரந்தான், மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான். மனிதா! மனிதனாக வேண்டுமா மரத்திடம் வா ஒவ்வொரு மரமும் போதிமரம்".

நன்றி தினமணி....

கட்டுறையாளர் திரு. பாறப்புறத் இராதாகிருஷ்ணன், அவர்கள்.

Thursday 1 March 2012

5.மரம் வளர்த்தனால் ஆய பயனென் கொல் ?

    நம்நாட்டில் ஆண்டு வன இழப்பு 1.3 மில்லியன் ஹெக்டேர். ஒவ்வொரு ஆண்டிலும் இந்தியாவின் வன இழப்பு 1.5 மில்லியன் ஹெக்டேர்களாகும். இந்தியாவில் 19 சதவீதம் நிலம் காடுகளாக உள்ளது. இது உலகத்தின் சராசரியான 29.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் இது மிகமிகக் குறைவானதாகும். மேற்கு ஜெர்மனியில் 28.1, ஐக்கிய அமெரிக்க நாடுகள் 32.8, ரஷ்யாவில் 33.9, ஜப்பான் 61.8, பின்லாந்து 70.9, தாய்லாந்து 77.2 சதவீதம் காடுகள் உள்ளன. 2012-ம் ஆண்டில் இந்தியாவில் காட்டுப் பகுதியை 30 சதவீதம் கூடுதலாக்க வேண்டும் என அரசால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் 13 சதவீதம் நிலம் காடுகளாக உள்ளது. பெட்ரோல் டீசலுக்கு மாற்றாக தாவரங்களிலிருந்து எரிபொருள் பெறுவதற்கான திட்டத்தை உலக நாடுகள் மேற்கொண்டு, காடுகளை அழிப்பதால் பருவநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு புவி வெப்பமடைதல் அதிகரித்து வருகிறது என சுற்றுச்சூழல் வி்ஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். நாட்டில் 3-ல் ஒரு பங்கு வனம் இருக்க வேண்டிய நிலையில், தற்போது 20 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. இதனால், ஆண்டுக்கு 50 தினங்கள் பெய்ய வேண்டிய மழை இப்போது 20 தினங்களுக்கும் குறைவாகவே பெய்கிறது. அனைத்து ஜீவராசிகளும் உயிர்வாழ இது அவசியம். மழை வளம் பெருக, மரம் வளம் அவசியம் ஒரு மரம் 2.50 ரூபாய் மதிப்புள்ள பிராண வாயுவை உற்பத்தி செய்து, ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள மண் வளத்தைக் கொடுக்கிறது. ஒரு மரம் தனது 50 ஆண்டு கால ஆயுட்கால இடைவெளியில் 15,70,000 ரூபாய் மதிப்பிலான சேவை செய்கிறது. ஒரு ஹெக்டேரில் உள்ள காடு ஆண்டு ஒன்றுக்கு 3.7 டன் கரியமிலவாயுவை உட்கொண்டு 2 டன் பிராணவாயுவைத் தருகிறது. வளரும் பயிர்களை வாழ்த்தி வரவேற்கும் வரவேற்பு வளையங்களாக மரங்கள் உள்ளன. காட்டு வளமே நாட்டு வளம், மரம் வளமின்றிப் போனால் உலகில் இன மின்றிப் போகும். அதனால் சோலைவனம் மறையும், பாலைவனம் விரியும்.

மரம் வளர்ப்பு தொடரும்...

காடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசுபாடு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்...

Tuesday 28 February 2012

4.மரம் வளர்த்தனால் ஆய பயனென் கொல் ?

    விண்ணும் மண்ணும் இணைந்த அற்புதப் படைப்பே மரம். மரங்களின் இலைகளில் பச்சையம் எனும் வண்ணக்கலவைப் பொருள், சூரியனின் ஒளிக்கதிர்களை ஈர்த்து, அதனை உணவாக மாற்றுகிறது. ஒரு ஹெக்டேரில் உள்ள காடு, ஆண்டு ஒன்றுக்கு 3.7 டன் கரியமிலவாயுவை உட்கொண்டு 2 டன் பிராணவாயுவை தரும். கரியமிலவாயு மண்ணின் ஆழத்திலுள்ள பல்வேறு மூலங்கள், வற்றாத கடலிலிருந்து முகிலாக மாறிக் மழையாக் கியைக்கும் நீர், இவற்றைக் கொண்டு அனைத்து உயிரினங்களுக்கும் அடிப்படையான உணவையும். உலகத்துக்குப் பயன்படும் ஆயிரமாயிரம் பொருள்களையும் தரும் ஆற்றலைக்கொண்டது மரம். இந்த அபாகர ஆற்றலால் அனைத்து உயிர்களுக்கும் அமுதசுரப்பியாக விளங்குகிற மரத்தால்தான் உலகிலுள்ள அனைத்து உயிர்களும் வாழ முடிகிறது.
    1900-ல் உலகிலுள்ள மொத்தக் காடுகள் 7,000 மில்லியன் ஹெக்டேர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 1975-ல் இது 2,980 மில்லியன் ஹெக்டேர்களாகக் குறைந்துள்ளது. ஓராண்டில் 2,50,000 சதுர கிலோ மீட்டர் வீதம் காடுகள் அழிக்கப்படுகின்றன.

மரம் வளர்ப்பு தொடரும்...

மரம் வளர்த்து பசுமை நிறைந்த உலகை உருவாக்குவோம்.....