தமிழ் ஒருகாலத்தில் இவ்வுலகம் முழுவதிலும் வழங்கிற்று. இவ்வாறு கூறுதல் வியப்பாயிராது, ஏன் ஆதியிற்தோன்றிப் பெருகிய மக்கள் தமிழரே என்று நமது நாடு முன் பதிவுகளில் படித்தோம். கூட்டங் கூட்டமாகச் சென்று ஆங்காங்குத் தனித்து வாழ்ந்த மக்கள் பேசிய தமிழ் சிறிது சிறிதாக வேறுபட்டது. அவ்வாறு வேறுபட்ட மொழி நெடுநாட்களின் பின் வெவ்வேறு மொழிகள் ஆயின.
ஆதியில் மொழி எப்படி உண்டாயிற்று தொடக்கத்தில் மக்கள் தமது எண்ணங்களை வெளியிடச் சில ஒலிக்குறிகளை வழங்கினர். காலஞ் செல்லச் செல்ல இவ்வொலிக் குறிகள் சிறிது சிறிதாகப்பெருகி மொழி ஆயின. பேச்சு வாழக்கிலுள்ள மொழிக்குப் பின் எழுத்துக்கள் உண்டாயின. பின்பு இலங்கியங்கள் உண்டாயின. இவைகளுக்குப்பின் இலக்கணங்கள் தோன்றின. இவ்வாறு மொழிதோன்றிப் படிப்படியே வளர்ச்சியடைந்தது.
கடவுள் தமிழையும் சமக்கிருத்தையும் அருளிச்சேய்தார் எனப்பலர் நம்பிவருகின்றனர். இக்கருத்து மொழி வளர்ச்சி நூலுக்கு மாறுபட்டது. இம்மொழிகளின் உயர்வை மக்கள் ஏற்றுக் கொள்ளும் பொருட்டு முற்கால மக்கள் இவ்வகைக் கதைகளை எழுதிவைத்தார்கள்.
ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழுக்கு எழுத்துகள் இருந்தன. அவ்வெழுத்துகளின் திரிபே இக்காலத்து மக்கள் எல்லோருடைய எழுத்துக்களும் ஆகும். ஆதியில் தோன்றியது ஓவிய எழுத்து. ஓவிய எழுத்து என்றால், கால், கை, நடத்தல், இருத்தல், படுத்தல் போன்றவைகளை விளக்க அவ்வவ்வுறுப்புகளையும் அவ்வகைச் செயல்களையும் படத்தின்மூலம் வரைந்து காட்டுதல்.
பட எழுத்துக்கள் விரைந்து எழுதி விடத்துக் கீறுகளாக அமைந்தன. பின்பு ஒவ்வொரு சொல்லின் ஒலிப்பையுங் குறிக்க ஒவ்வொரு குறி கண்டுபிடிக்கப்பட்டது இதற்குப்பின் மொழியிலுள்ள ஓசைகள் எத்தனை என்று ஒலித்துப்பார்த்து ஒவ்வொரு ஓசைக்கும் ஒவ்வொர் எழுத்து உண்டாக்கப்பட்டது. மொகஞ்சொதரோவில் வழங்கிய தமிழ் எழுத்துகள் சில மாற்றம் அடைந்து பிராமி எழுத்துகள் ஆயின. இவ்வெழுத்துக்களைப் பினீசிய மக்கள் வழங்கினர். பிசினியரிடமிருந்து கிரேக்கர் எழுத்தெழுத அறிந்தனர். கிரேக்கரிடமிருந்து உரோமரும், உரோமரிடமிருந்து மற்றைய ஐரோப்பிய மக்களும், எழுத்தெழுத அறிந்தனர். இன்று ஆங்கில மொழியில் வழங்கும் எழுத்துகளும் பழந்தமிழ் எழுத்துக்களினின்றும் பிறந்தனவே.
தமிழில் பல அரிய நூல்கள் முற்காலங்களில் இருந்தன. அவை ஏடுகளில் எழுத்தாணியால் எழுதப்பட்டன. அப்போது ஒவ்வொரு நூலிலும் ஒன்று அல்லது சில படிகளே இருந்தன. ஓலைச்சுவடிகள் சில காலத்திற்குப்பின் பூச்சிகளால் துளைக்கப்பட்டும், ஓடிந்தும் இறந்துவிடும். இக்காரணத்தினால் தமிழ் நூல்கள் பல இறந்தன. தமிழ் நாட்டைப் பலமுறைகளிற் கடல் கொண்டது. கடல்கோள் போன்ற இக்கட்டுக் காலங்களில் மக்கள் தமது பொருள் பண்டங்களை எல்லாம் போட்டுவிட்டு உயிர் பிழைப்பதற்காக ஓடியிருப்பார்கள். இக்காரணத்தினாலும் பழைய நூல்கள் இறந்தொழிந்தன. ஆகையினாலேயே தமிழ் மொழியில் எழுதப்பட்ட மிகப் பழைய நூல்கள் கிடைக்கவில்லை.
நமது நாடு தொடரும்...
இயற்கை அழகு, புத்துணர்ச்சி, உற்சாகம் இவையனைத்தையும் தரும் ...

No comments:
Post a Comment