Tuesday, September 14, 2010

இளநீர்

இளநீரால் ஏற்படும் உடல் ஆரோக்கிய பலன்கள்.

     இயற்கையன்னை நமக்கு கொடுத்த சிறந்த குடி நீர் இளநீர். இது நமக்கு இயற்க்கையின் வரப்பிரசாதம் என்று கூட சொல்லலாம். இளநீரை சுவைக்காக உபயோகப்படுத்தும் பானம் என்று சொல்லமுடியாது. உலகில் சிறந்த இயற்கை மூலிகை பானமாக கூறப்படுகிறது.
இளநீரின் பலன்களைப்பற்றி சில குறிப்புகள்.
     இளரநீர் நம் உடலை குளுமையாகவும், சரியான தட்பவெப்ப நிலையிலும் வைக்கிறது. இளரநீர் ஒரு நோய் தடுப்பாற்றல் பானமாகும் இளநீரில் "மோனோலாரின்" என்னும் நோய் தடுக்கும் மருந்து உள்ளது. இதனால் நோய்தடுக்கும்சக்தி இதை குடித்தவுடன் நம் உடலில் பரவுகிறது. மேலும் ஒரு செல் உயிரினங்களினால் ஏற்படும் நோய்கிருமிகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
    மேலும் கொடுமையான நோயாகிய ஹெச்ஐவி, ப்ளு போன்ற நோய்களில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி இளநீரில் உள்ளது. சிறு நீரகத்தில் ஏற்படும் அனைத்து நோய்களிலிருந்து இளநீர் நம்மை பாதுகாக்கிறது. சிறு நீரகத்தில் உண்டாகும் கற்களை கரைப்பதற்கு இது சிறந்த மருந்து.
  குழந்தை பருவத்தில் அதாவது 1முதல் 3வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அனைத்து விதமான வயிறு சம்பந்தப்பட்ட நோய், புழுக்கள் பரவுதல் ஆகியவற்றைத் தடுக்கிறது. சிறு நீரக கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் இளநீரை உட்கொள்வதால் சிறந்த பயன் அடையலாம்.மலேரியா, டைபாய்டு, வாந்தி போன்றவற்றை கட்டுப்படுத்தும்.
உடம்பு எடை அதிகாமா உள்ளவர்கள் இளநீரை உட்கொள்வதன் மூலம் எடையைக் குறைக்கலாம். இளநீரில் ஆக்கசக்கிகள் அதிகம்க உள்ளது.

இளநீரில் உள்ள வேதிப் பொருட்களின் அளவு
மொத்த திடப்பொருள் கி  % 6.5
குளுக்கோஸ், பிராக்டோஸ் மி.கி % 4.4
தாதுப்பொருட்கள் மி.கி  % 0.6
புரதச்சத்து  மி.கி % 0.01
கொழுப்புச்சத்து மி.கி % 0.01
அமிலத்தன்மை மி.கி 4.5
பொட்டாசியம் மி.கி % 290.0
சோடியம் மி.கி % 42.0
கால்சியம் மி.கி % 44.0
மக்னீசியம் மி.கி % 10.0
பாஸ்பரஸ் மி.கி % 9.2
இரும்புச்சத்து மி.கி % 106.0
காப்பர் மி.கி % 26.0

100 கிராம் இளநீரில் கொடுக்கும் கலோரி
அளவு 17.4
இளநீரின் இயல்புகள்
· இனிப்புச் சுவை நிறைந்தது.
· குளுமை தரக்கூடியது.
· எளிதில் ஜீரணமாகக்கூடியது.
· பித்த வாதத்தை குணப்படுத்தும் தன்மையுடையது.
· பசியைத் தூண்டக்கூடியது
· நீர்ப்பெருக்கியாக செயல்படக்கூடியது.
· புத்துணர்வு தரக்கூடியது.
· உடல் வெப்பத்தைத் தணிக்கக்கூடியது.
· உடலில் உள்ள நீர்ச்சத்துக் குறையைப் போக்கும் தன்மை கொண்டது

இவ்வளவு பயன் உள்ள இளநீரை உட்கொண்டு நோயற்றவாழ்வு வாழ்வோமாக!

இயற்கை நேசியுங்கள் இயற்கையோடு ஒத்து வாழுங்கள்.

படித்ததை பகிர்கிறேன்.

சோ.ஞானசேகர்..Monday, September 13, 2010

காட்விட் பறவை.

உணவில்லாமல் 11 ஆயிரம் கி.மீ. தூரம் பறக்கும் பறவை

      ஓய்வே எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து 11 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பறப்பதைக் கற்பனை செய்து பாருங்கள். தலை கிறுகிறுத்துவிடும். ஆனால் அந்தச் 'சாதனையைப்' புரிகிறது, 'காட்விட்' என்ற பறவை, தொடர்ந்து எட்டு நாள் பறக்கும் இப்பறவை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை தனது உடல் எடையில் 0.41 சதவீதம் அளவு உணவைக் கிரகித்துக் கொண்டு புயல் வேகத்தில் பயணத்தை மேற்கொள்கிறது.
  ஒவ்வொரு இலையுதிர்க் காலத்திலும் அலாஸ்காவில் இருந்து நியூசிலாந்துக்கு இந்த எட்டு நாள் பயணத்தை மேற்கொள்கிறது காட்விட்.
  இந்தப் பறவையானது இடைவிடாது தொடர்ந்து பறக்கிறது. ஓய்வெடுப்பதற்கோ, உணவு உட்கொள்வதற்கோ ஒருமுறை கூட பயணத்தை முறிப்பதில்லை. வசந்த காலம் வந்ததும் மறுபடி நியூசிலாந்தில் இருந்து அலாஸ்காவுக்கு 11 ஆயிரம் கிலோமீட்டர் பயணத்தை மேற்கொள்கிறது.
  ஸ்வீடனின்லண்ட் பல்கலைக்கழகம் சுற்றுச்சூழலியல் பேராசிரியர் ஆண்டர்ஸ் ஹெடன்ஸ்ட்ராம், எப்படி இந்தப் பறவை இனத்தால் இவ்வளவு தூரம் இடைவிடாமல் பறக்க முடிகிறது என்று வியந்தார், அதுகுறித்து ஆராய்ந்தார்.
  தொடர்ச்சியாக நீண்ட துரத்துக்குப் பறப்பதில், மனிதனால் உருவாக்கப்பட்ட விமானங்களை விட மிகச் சிறந்தது இந்தப் பறவை என்கிறார் ஆண்டர்ஸ்.
    தொடர்ந்து நீண்ட தூரம் பறந்த விமானத்துக்கான சாதனைக்குரிய கின்டிக் ஸெபர். அது ஓர் ஆளில்லாத சூரியசக்கி விமானம். அது தொடர்ந்து 82 மணி நேரம் காற்றில் பறக்கும். அதவது தொடர்ந்து மூன்றரை நாட்களுக்குப் பறந்து கொண்டே இருக்கும். ஆனால் காட்விக் பறப்பதோ தொடர்ச்சியாக எட்டு நாளைக்கு.
  ஆனால் இந்தப் பறவையை இடைநிற்காமல் தொடர்ந்து 11 ஆயிரம் கிலோமீட்டர் பறக்க வைப்பது எது? எப்படி 8 முழு நாட்களும் இவை உறக்கம் உணவின்றிச் சமாளிக்கின்றன?
    அதற்கான ஒரு விளக்கம், மற்ற பறவைகளுடன் ஒப்பிடும்போது இவை பறப்பதற்க்குக் குறைவான சக்தியையே பயன்படுத்துகின்றன என்பது. இப்பறவைகள் தாம் பறக்கும் ஒவ்வெரு மணி நேரத்துக்கும் ஒரு முறை தனது உடல் எடையில் 0.41 சதவீத அளவை உணவாகக் கிரகித்துக் கொள்கின்றன என்கிறார் ஆன்டர்ஸ்.
   "மற்ற பறவைகளுடன் ஒப்பிடும்போது இது மிக மிகக் குறைவான அளவு" என்று விளக்குகிறார் ஆண்டர்ஸ். இது தவிர வேறு சில காரணங்களும் இருக்கின்றன. முழுப் பயணத்துக்கும் சக்தியை எடுத்துச் செல்லும் வகையில் பறவையின் உடல் எடையும் அளவும் சரியான விகிதத்தில் இருப்பது முக்கியாமான ஒன்று.
  'காட்விட்' பறவைக்குச் சக்தியை அளிப்பது கொழுப்பும், புரதமும்தான். காற்றின் எதிர்ப்பைக் குறைக்கும் 'ஏரோடைனமிக்' உடல் அமைப்பும் உதவுகிறது என்று தெரியவந்திருகிறது.
  மற்று ஒருபறவை ஆராய்ச்சியாளராகிய ராபர்ட், "காட்விட்ச்' பறவையின் உடலில், "சேட்டிலைட் டிரான்ஸ் மிட்டர்'களை அமைத்தார். அந்த, "டிரான்ஸ் மிட்டர்' ராபர்ட் டின் கம்ப்யூட்டருக்கு, பறவை பறக்கும் திசையிலிருந்து சிக்னல்களைக் கொடுத்தபடி இருந் தது. அந்த பறவை பறக்கத் துவங்கியது. அப்பறவை, ஒன்பது நாட் களில் 11 ஆயிரம் கி.மீ., பறந்தது. "இந்த பறவைகளின் நீண்ட தூர பயணம் மிகப்பெரிய சாதனை, இதை விவரிக்க வார்த்தைகளே இல்லை' என, ராபர்ட் தெரிவித்துள்ளார்.

படித்தது..

சோ.ஞானசேகர்..

Wednesday, September 8, 2010

தேனீக்கள் குறைவதால் உணவு உற்பத்தி பாதிப்பு


  தேனீக்கள் குறைந்து வருவதால் செடிகளில் மகரந்த சேர்க்கையும் குறைந்து உலக அளவில் இது உணவு தானியங்கள் உற்பத்தியில் பாதிப்பை எற்படுத்தும் என்று கனடாவை சேர்ந்த விஞ்ஞானி வருத்தம் தெரிவித்துள்ளார். கனடாவில்டோரண்டோ பல்கலை ஆராய்ச்சியாளர் ஜெம்ஸ் தாமஸ். இவர் கொலராடோவின் பாறைகள் நிறைந்த மலைப்பகுதியில் கடந்த 17 ஆண்டுகளாக தேனீகள் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார்.

    இவரது ஆராய்ச்சியில், பிரிட்டனில் தேனீக்கள் பெரிய அளவில் குறைந்து செடிகளில் மகரந்தசேர்க்கை 50 சதவீதம் குறைந்துள்ளது. இது பெரிய அளவில் உணவு தானியங்கள் உற்பத்தியில் பாதிப்பை எற்படுத்தும். பிரிட்டனில் இந்த பாதிப்பு அதிகளவில் உள்ளது. மற்ற நாடுகளுக்கும் இது ஒரு எச்சரிக்கை.

  பிரிட்டனில் தான் தேனீக்கள் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. பட்டாம்பூச்சி மற்றும் சில பூச்சிகள் இருப்பிட பற்றாக்குறை, சீதோஷண மாற்றம் போன்ற காரணங்களால் குறைந்து வருகின்றன என்று தெதிவித்துள்ளார்.

நன்றி தினகரன்..

இற்கையுடன் உயிரினங்களை வாழவிடுவோம்.


சோ.ஞானசேகர்.

Saturday, September 4, 2010

இயறக்கை நமக்கு என்ன தருகிறது?

    இயற்கைதான் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், பூமி தோன்றியது முதல் தாய் போல அனைத்து உயிரினங்களையும் காலங்காலமாக சந்தோஷமாக வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. நாம் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு பொழுதைக் கழிப்பதற்ககு பணம் சேர்ப்பதற்கு இற்கைதான் அடிப்படைக் காரணமாக இருக்கிறது.

   காடுகள், புல்வெளிகள், சதுப்பு நிலங்கள், கடற்கரையோர கழிமுகப் பகுதிகள், மீன்வளம் மிகுந்த ஆழ்கடல் பகுதிகள் உள்பட இற்கையின் பல்வேறு அம்சங்கள், நாம் உயிர் வாழத்தேவையான காற்று, நீர், உயிர்சத்து, ஊட்டச்சத்து போன்ற வற்றை உற்பத்தி செய்து வருகின்றன. நம்மிடம் எந்தப் பிரதிபலனும் எதிர்பாரமல் இவ்வளவையும் செய்து கொண்டிருகின்றன. இவை அனைத்தின் உற்பத்தியும் அதிவேகமாகக் குறைந்து வருவதைப் பற்றித்தான் விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்.

  உலகிலுள்ள 650 கோடி பேரும் இயற்கையைச் சார்ந்தே வாழ்க்கை நடத்தினாலும் அதிலிருந்து நாம் வெகுதுரம் விலகி வந்துவிட்டோம். இற்கை வளங்களின்றி நம்மால் வாழ முடியாது என்பதை இந்த நிலையிலும் உணர மறுக்கிறோமா? ''இற்கை இன்றி நம்மால் வாழ முடியுமா?'' இந்தக் கேள்வியை மீண்டும் ஒரு முறை நமக்குள்ளேயே சிந்தித்துப் பார்ப்போம்.இயற்கையைப் பாதுகாப்போம்.

இயற்கையோடு ஒத்து வாழுங்கள்.


நன்றி தினமணி, சிறுவர்மணி.

சோ.ஞானசேகர்.