Wednesday, October 30, 2013

வெளிநாட்டு வண்ணக் குயில்

 
சிட்டுக்குருவி போன்ற சிறிய பறவை இனம் குக்கூ பின்ச். மஞ்சள் நிறத்தில் அழகாகத் தோன்றும். அளவில் சிறிதாக இருந்தாலும் மிகத் தந்திரமான பறவை இது.
 குக்கூ பறவைக்கும் குயில்கள் போலவே கூடுகட்டத் தெரியாது. அதனால் மற்ற பறவைகளின் கூட்டில்தான் முட்டையிடும். குயிலானது காகக்த்தின் கூட்டில் மட்டுமே  முட்டையிடும். ஆனால் இந்த குக்கூ பின்ச் பறவையோ சிஸிடி கோலா மற்றும் பிரினியா ஆகியவற்றின் கூடுகளில் முட்டையிடும். இந்த 3 பறவை இனத்தின் முட்டைகளும் ஒன்றுபோலவே இருக்கும்.
  குக்கூ பின்சின் முட்டை இளஞ் சிவப்பு அல்லது இளம்பச்சை நிறத்தில் இருக்கும். முட்டை ஓட்டில் 'மார்டன் ஆர்ட்' வரைந்ததை போன்று காட்சியளிக்கும். இது மற்ற பறவையின் கூட்டில் முட்டையிட்டாலும், அவைகள் இது தங்கள் முட்டையில்லை என்பதை எண்ணிக்கையின் அடிப்படையில் கண்டுபிடித்துவிடும். ஆனால் தங்கள் முட்டையை மாற்றி உடைத்துவிடக்கூடாதே என்ற அச்சத்தில் குக்கூவின் முட்டையையும் சேர்ந்தே அடைகாக்கின்றன. குஞ்சு பொரித்த தங்கள் குஞ்சு போன்று கருதியே நன்கு உணவூட்டி பராமரிக்கிறது. ஆனால் அத்தனை நிகழ்வுகளையும் தந்திரமாக கண்காணிட்டு வரும் குக்கூ பின்ச்கள், குஞ்சு பொரித்த 3 நாட்களுக்குள்ளாக தனது குஞ்சுகளை மட்டும் அடையாளம் கண்டு தூக்கிச் சென்றுவிடுகிறது.
 தந்திரத்தில் கெட்டிக்கார பறவையாக திகழும் குக்கூவை வெளிநாட்டு வண்ணக்குயில் என்று சொல்லிவிடலாம்.

இவ்வளவு அதிசயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் பூமியின் இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்... 

Tuesday, October 29, 2013

'உன்னிச் செடிகளால் புலிகளுக்கு ஆபத்து'

 

 தமிழகத்தில் பற்றிப்படருகின்ற தாவரங்களான உன்னிச் செடிகளால் முதுமலை உட்பட பல இடங்களிலும் உள்ள புலிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் ஒரு வகை அழகிய மலர்ச்செடிகளாக இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட ''லண்டனா'' எனப்படுகின்ற 
 இந்த உன்னிச் செடிகள், ஒருவகை பற்றிப்படருகின்ற களைகளாக தற்போது உருவெடுத்துள்ளதாகவும் அவற்றால் உள்ளூர் புல் வகைகள் பலவும்  அழிந்துபோவதாகவும் கூறப்படுகின்றது.
பொதுவாக, ஒரு இடத்தில் புலிகள் வாழ வேண்டுமானால், அவற்றுக்கான உணவான மான்களும் அங்கு அவசியமாகின்றன. ஒரு புலி உயிர்வாழ 500 மான்களாவது வேண்டுமாம்.
  ஆனால், இந்த உன்னிச் செடிகள் தற்போது காடுகளில் புதர் போன்று படர்ந்து உள்ளூர் புற்களை அழித்து வருகின்றன. இதனால், மான்களுக்கு உணவு இல்லாமல் போகிறது அதனால், அவை குறைந்து வருவதாகவும், அதனால் அவற்றை உண்ணும் புலிகளுக்கு உணவு இன்றி அவையும் அருகி வருவதாகவும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
மிகவும் குறைந்த பரப்பில் அதிகம் புலிகள் வாழ்கின்ற ஒர் அபூர்வமான இடமாக இருக்கும் முதுமலையில், அவற்றுக்கு உணவாக ஆயிரக்கணக்கில் மான்களும் இருக்கின்றன  ஆனால் உன்னிச் செடிகளின் விருத்தியால் ஏனைய புல்லினங்கள் அழிந்து வருவதாகவும், அதனால் அங்கு வாழும் மான்கள் குறைய அதனால் புலிகளுக்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
  முன்பெல்லாம் வேட்டையாடப்படுவதால்தான் அதிகம் புலிகள் அழிந்தன என்றும், இப்போது இந்த தாவரங்கள் அவற்றுக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.

இயற்கை காடுகள் உயிரினங்களுக்கு பெரும் நன்மை செய்கின்றன, பெருமளவில்  மனிதகுலத்திற்கு...

'மம்மொத்துகளின் அழிவுக்கு காலநிலை மாற்றமே காரணம்'


 புராதன காலத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படும் மம்மொத் எனப்படும் உரோமங்களுடன் கூடிய யானைபோன்ற ஆனால் அதனையும் விடப் பெரிதான விலங்குகளின் அழிவுக்கு காலநிலை மாற்றம்தான் காரணம் என்பதற்கு ஆய்வாளர்கள் மேலும் வலுவன ஆதாரங்களைக் கண்டறிந்திருக்கிறார்கள்.
இவை மனிதர்களால் அழிக்கப்பட்டிருக்கலாம் என்று முன்னர் நம்பப்பட்டது.

 காலநிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக முன்னர் நம்பப்பட்டதற்கு நீண்ட காலம் முன்னதாகவே இவை அழிந்துபோனதாக அவற்றின் மரபணுக்களில் செய்யப்பட்ட ஆய்வுகள் காண்பித்தன.
ஐரோப்பாவில்கூட ஒரு வகை மம்மொத்துகள் வாழ்ந்ததாகவும் 30,000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அவை அழிந்துவிட்டதாகவும் அறியப்பட்டுள்ளது.
பிரிட்டனின் விஞ்ஞான ஆய்வு நிலையமான றோயல் சொஷைட்டியின் அறிக்கை ஒன்று கூறிகிறது.

 காடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசுபாடு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்... 

விவசாயிகளின் நண்பன் ஆந்தை!

 
  அபசகுணமாகவும், அச்சத்தின் அடையாளமாகவும், மரணத்தின் குறியீடாகவும்  மக்களால் கருதப்படும் ஆந்தைகள் வேளாண் தொழிலின் உற்ற நண்பன். உலகெங்கும் 132 ஆந்தை வகைகள் உள்ளன. நாம் வசிக்கும் இடங்களில் மூன்று வகை ஆந்தைகள்  உள்ளன.புள்ளி ஆந்தை, கூகை என்ற வெண்ணாந்தை, கொம்பன் ஆந்தை.
 வெண்ணாந்தை ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தது என்ற தவறான கருத்து உள்ளது.
 இது நம் நாட்டுக்கே உரித்தான அழகான பறவை. அவற்றின் முகம் ஆப்பிள் அல்லது இதய வடிவில் இருக்கும். பழைய கோட்டைகள், பாழடைந்த வீடுகள், கிணறுகளில் வாழும். வட்ட வடிவமான வெள்ளை முகம் தட்டுப் போலவும், உடலின் முன்பகுதி வெண்மையாகவும், பின்பகுதி மஞ்சள் நிறத்தில் சிறுசிறு கறுப்புப் புள்ளிகளுடனும் காணப்படும். கரகரப்பான குரலில் கிறீச்சிடும். அந்தி சாய்ந்த நேரத்தில் கூட்டை விட்டு
 வேட்டைக்கு புறப்படும். இரவில் இதனுடைய தோற்றம் அச்சமூட்டக் கூடிய விதத்தில் இருப்பதாகக் கருதப்பட்டதால், சாக்குருவி என்றும் அழைக்கப்படுகிறது.
 இரவு முழுவதும் தங்கள் மென்மையான சிறகுகளால் துளி கூட சப்தமின்றிப் பறந்து திரியும். வயல் வெளிகளில் திரியும் எலி,சுண்டெலிகளை அலகால் பிடித்து தூக்கிச் செல்லும். ஒரே இரவில் மூன்று முதல் நான்கு எலிகளை விழுங்கி விடும்.
 சிறிது நேரத்தில் கடுந்திறன் கொண்ட ஜீரண உறுப்புகளால் சத்துப் பொருட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது போக, எலும்புத் துண்டுகள், முடி, நகம் போன்றவற்றை சிறு உருண்டைகளாகக் கக்கிவிடும்.
 இதன் இனப்பெருக்கக் காலம் நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை. மரப் பொந்துகள், பாழடைந்த கட்டடங்களில் நான்கு முதல் ஏழு முட்டைகளை இடும்.
 மனிதர்களுக்கு நோய் பரப்பும், அழிவு சக்தியாக இருக்கும் எலிகள், ஆந்தைகளின் உடலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருப்பது இயற்கையின் விந்தைகளில் ஒன்று. மூடநம்பிக்கையாலும் அச்சத்தின் காரணமாகவும் ஆந்தைகள் கொன்று அழிக்கப்படுகின்றன.
 வேளாண்மைக்குத் தீங்கு செய்யும் எலி, வெட்டுக்கிளி, புழு பூச்சிகளை உணவாக்கிக் கொண்டு விவசாயிகளுக்கு உற்ற நண்பனாகத் திகழ்கிறது.
 கூகைகளை பாதுகாப்பது வேளாண் தொழிலுக்கு பெரும் நன்மை புரியும்.
 சுற்றுப் புறப்பகுதிகளில் வயல் வெளிகள் அழிக்கப்பட்டு வானுயர்ந்த கட்டடங்கள் கட்டப்படுவதால் இவைகள் உணவுக்காக வெகுதூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு செல்லும் போது பொதுமக்களால் தாக்குவதால் இவைகள் அழிந்து வருகின்றன.

 இயற்கை காடுகள் உயிரினங்களுக்கு பெரும் நன்மை செய்கின்றன,பெருமளவில் மனிதகுலத்திற்கு வனவிலங்குகள், பறவைகள்,பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்...

Saturday, October 19, 2013

பினோச்சியோ பல்லி (Pinocchio lizard)


   அழிந்து வரும் விலங்குகள் பட்டியலில்  பினோச்சியோ பல்லி இனங்களும் சேர உள்ளன. இவை 1953-ம் ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டவை. கடைசியாக அமெரிக்காவின் மேகக்காடு பகுதிகளில் தென்பட்டன. ஆனால் அதன் பிறகு எங்கும் எளிதில் காணப்படவில்லை. இன்னும் 15 ஆண்டுகளில் இவை அழிந்த உயிரினங்களில் ஒன்றாக மாறிவிடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

  பினோச்சியோ பல்லியிடம் சில அபூர்வ குணங்கள் உண்டு. கூர்மையான மூக்கைக கொண்டவை ஆண் பல்லி, பெண் பல்லிகளை கவர கூர் மூக்கு உதவுகிறது. மெல்லிய இலைகளிலும் நடக்கும் திறன் கொண்டது. இவை எங்கிருக்கிறது என்பதை இரவு நேரங்களில் எளிதில் கணேடுபிடித்துவிடலாம்.
ஏனெனில் இவற்றின் தோல்பரப்பில் காணப்படும் வெள்ளைத் திட்டுக்கள் இவைகளை பிரகாசப்படுத்தி காட்டுகின்றன.

இயற்கை வளங்கள் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் வனவிலங்குகள், பறவைகள் ,பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்...

Friday, October 4, 2013

உலக விலங்கு நாள்


உலக விலங்கு நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 4 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், விலங்குகளின் அனைத்து வாழ்க்கை முறைகள் கொண்டாடப்பட்டு, உலகனைத்தும் முக்கிய நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இயற்கை ஆர்வலரும் விலங்குகளின் தெய்வமாக மதிக்கப்படுபவருமான பிரான்சிஸ் அசிசி என்பவரின் வணக்க நிகழ்வு அக்டோபர் 4-ல் வருவதால் இந்நாள் வன விலங்கு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

காடுகளை வளர்த்து இயற்கையை காத்து எங்களையும் வாழவிடுங்கள்..