Saturday, December 19, 2009இந்தமாதம் எலக்ட்ரிக் பில்லை பார்த்தவுடன் ஒரே ஷாக். பில் எக்கச்சக்கமா எகிறி போயிருந்தது.


மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்த சில டிப்ஸ்...

   பேன் மற்றும் லைட்டின் தேவை இல்லாதபோது, அதை நிருத்தி வையுங்கள். அறையைவிட்டு வெளியே சென்றால் பேன் மற்றும் லைட் சுவிட்சை ஆப் செய்துவிட்டு செல்லுங்கள். நீங்கள் மட்டுமின்றி, உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் இந்தப் பழக்கத்தை கடைப்பிடிக்கும்படி வலியுறுத்துங்கள்.

     மிக்சி, பிரிஜ், அயன் பாக்ஸ், கிரைண்டர், வாஷிங் மெஷின், போன்ற வீட்டு உபயேகப் பொருட்களின் தேவை இல்லாதபோது, அவற்றின் பிளக்கை பிடுங்கி வைத்துவிடுங்கள் அல்லது சுவிட்சை ஆப் செய்யுங்கள். பிரிஜ்ஜை அனாவசியமாக அடிக்கடித் திறந்து மூட வேண்டாம். நீங்கள் திறந்து மூடும் ஒவ்வோரு முறையும் ஏகப்பட்ட மின்சாரம் வீணாகிறது.
அரை மணி நேரத்திற்கு அதிகமாக அதிகமாக கம்ப்யூட்டரைப் பயன்படுத்தாமல் இருக்க நேரிட்டால், கம்ப்யூட்டரை ஷட்டவுன் செய்துவிடுங்கள்.
     டிம்மர் விளக்குகளைப் பயன்படுத்தினால் மின்சாரமும் குறைவாகவே செலவாகும். இந்த டிம்மர் விளக்குகள் குறைவான வெளிச்சத்தை கொடுக்க கூடியவை. தேவைபட்டால் வெளிச்சத்தின் அளவை அதிகமாகக் கூட்டியும் வைத்துக் கொள்ளலாம். படிக்கும் போதும் எழுதும்போதும் மேஜை விளக்குகளைப் பயன்படுத்துங்கள். இதன் மூலம் அறை முழுவதும் ஒளிரக்கூடிய விளக்குகளைப் பயன்படுத்துவது தவிர்க்கப்படும். மின்சாரமும் சேமிக்கப்படும்.

முடிந்த அளவு பகலில் இயற்கையாகக் கிடைக்கும் சூரிய வெளிச்சத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மின்சாரத்தை சிக்கனமாகப் பயன் படுத்தி வீட்டுக்கும், நாட்டுக்கும் பயன் அடையச் செய்வோம்.

சோ.ஞானசேகர்.

Tuesday, December 15, 2009

சுவாமி ஐயப்பன்


    கார்த்திகை மதம் ஆரம்பித்து விட்டால் போதும் பலர் ஐயப்பன் சாமி கோவிலுக்கு மாலை போட்டு 41 நாள் விரதம் இருந்து சென்று வருவார்கள். நிறையப்பேருக்கு ஐயப்பன் கோவிலுக்கு ஏன் போகிறோம் என்று தெரியாது. எல்லோரும் போகிறார்கள் நாமும் போய்வருவோம் என்று போய்வருகிறார்கள்.

   அந்தக்காலத்தில் (மலைதேசம்) கேரளா மன்னன் போட்ட திட்டம். அங்கு நிலப்பரப்பு அதிகம் கிடையாது எல்லாம் மலைப்பரப்பு அதிகம். அதனால் அடிக்கடி உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டது இதை போக்க என்ன செய்யலாம் என்று யோசனை செய்தபோது தான் ஒரு திட்டம் உறுவானதுதான் இந்த ஐயப்பன் கோவில் வழிபாடு.

   ஆடி மாதம் விதைவிதைத்து ஆவனி, புரட்டாசி மாதங்களில் நடவு முடிந்திருக்கும். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் அடைமழை பெய்யும் தைமாதம்தான் அறுவடை நடைபெரும் அதுவரை உணவுத்தானியம் கையிருப்பு குறைவாக இருக்கும். இதை சமாளிக்க ஐயப்பனுக்கு கோவிலுக்கு மாலைபோடுதல் ஆரம்பித்தது. எப்படி இதில்சாத்தியம் இதில் என்ன என்ன அடங்கியிருக்கிறது. இதில் பல திட்டங்கள் அடங்கியிருக்கிறது.  உணவுப்பற்றாக்குறையை போக்கும் வீட்டுக்கு ஒருவர், அல்லது இருவர் மாலை போட்டு இருந்தால் ஒருவர் ஒரு வேலை சாப்பாடு மட்டும் சாப்பிட்டால் இரண்டு வேலை சாப்பாடு மிச்சம். இதேமாதிரி வீட்டுக்கு ஒருவர் இருவர் இருந்தால் நாட்டில் எவ்வளவு உணவுத் தானியங்கள் சேமிக்கப்படும். இதில் உணவு பகிர்வு நடைபெருகிறது.ஒரு வேலை உணவு உண்டு இரண்டு வேலை நோம்பு இருந்து மலை மேல் சென்று அங்கு உள்ள மூலிகை செடிகளின் காற்றை சுவாசித்து வரும் போது உடல் ஆரோக்கியம் அடைகிறது. இந்த இரண்டு மாதம் குளிராக இருக்கும் அந்தநேரத்தில் கனவன் மனைவி சேர்ந்தால் குழந்தை உருவாகக்கூடிய வாய்புகள் அதிகம் அதனால் மாலை போட்டுவிட்டால் அதை தவிற்கலாம்.

  பொருளாதரம், மருத்துவம், குடும்பகட்டுப்பாடு இப்படி பலவழிகளில் நாட்டுக்கு நன்மை உண்டு.

   இது மட்டும் அல்ல அந்த மாநிலத்துக்கு நாம் தெரிந்தோ தெரியாமலே நிறைய நன்மை செய்து கொண்டு இருக்கிறோம்.

  இங்கு இருந்து ஒரு ஐயப்ப பக்தர் இருமுடி கட்டி போகும் போது அதற்குள் தேங்காய், நெய், அரிசி இத்தனையும் கொண்டு செல்வார். அரிசி அவர் சாப்பாட்டுக்கு அவரே இங்கிருந்து அரிசி கொண்டு செல்கிறார். தேங்காய் இது அதிகமாக விளையும் மாநிலம் கேரளா அங்கு விளைந்த தேங்காயை நம்மிடம் விற்று காசாக்கிவிட்டு நம்மலை வைத்தே மீண்டும் அங்கே கொண்டு வரவைக்கிறார்கள். நெய் அங்கு ஆடு, மாடு, மற்றும் கால்நடைகள் அதிகம் வளர்பது கிடையாது. ஏன்னென்றால் கால்நடைகள் வளர்த்தால் காடுகள் அழிந்து விடும் என்று அதிகம் வளர்பதில்லை. அதலால் பசு நெய் கிடைப்பது குறைவு. அதனால் இங்கிருந்து நெய் கொண்டு செல்வார்கள். நாம் கொண்டு சென்ற நெய் டின்களில் அடைத்து நம்மிடம்மே காசாக்கிறார்கள். இதுமட்டும் அல்லாமல் ஒரு ஆற்றை கடக்கும் போது அழுதா நதி கடக்கும் போது ஆளுக்கு ஒரு கல் எடுத்து கல்லிடும் குன்றில் கொண்டு போடவேண்டும். எப்படி நம்மலை வைத்தே நதியை தூர்வாரும் ஐடியா. இது போக ஆள்கள் வந்து போனதால் காடு அழிந்து விடும் என்று 18 வருடம் வந்தால் ஆளுக்கு ஒரு தென்னங்கன்று கொண்டுவர வேண்டும் எண்று ஒரு நிபந்தனை. ஆக நம்மலை வைத்தே காடு அழியாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள்.

   இங்கிருந்து கோடிக்கணக்கான பக்தர்களால் பல கோடிக்கணக்கான பணம் வருமானம் பெருகிறது கேரளா மாநிலம். அனால் நமக்கு உரிமையுள்ள முல்லை பெரியார் அணை மற்றும் பல இடத்தில் ஓடும் ஆறுகளின் நீர் வீனாக கடலில் கலக்கும் தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கொடுக்க மறுக்கிறார்கள். நாம் எப்படி இருக்கிறோம் என்று பாருங்கள். இங்கு எத்தனை லட்சம் கேரள மக்கள் இருக்கிறார்கள் வீடு, நிலம் என்று வசதியாக இருக்கிறார்கள் ஆனால் நாம் அங்கு கை அகல நிலம் வாங்கமுடியாது. மேலும் இங்கு டீகடை நடத்தும் ஆள் யார் 100க்கு 90பேர் மளையாளி எப்படி நம்முடைய தண்ணீரை எடுத்து நமக்கே விற்று காசாக்குறங்க பாருங்க. மேலும் தமிழ்நாட்டில் புகழ்பெற்ற கோவில்கள் நிறைய உண்டு அங்கே போய் வாருங்கள் மலைமேல் நிறைய கோவில் இருக்கிறது அங்கு சென்று வரலாம் மேற்கு தொடர்ச்சி மலையில் நிறைய இடம் உண்டு சதுரகிரி மலை, (அகத்தியர்வாழ்த பூமி) பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை சித்தர்கள் நிறைந்த வணங்கள் உண்டு அங்கு சென்று வாருங்கள் உடம்பும் மணமும் மகிழ்சியாக இருக்கும்.

  இதை பார்க்கும் அன்பர்கள் நான் பிரிவினை வாதியாகவும், நாத்திகனகவும், பார்க்கவேண்டாம் எனக்கு கடவுள் நம்பிக்கையுண்டு ஆனால் மூடநம்பிக்கை இல்லை. தாய்நாட்டு பற்று உண்டு,  தாய்மொழி பற்று உண்டு.

சோ.ஞானசேகர்..

Saturday, December 12, 2009

கிரடிட் கார்டு உபயோகிப்போர் உசார்  சமிபகாலமாக கிரடிட் கார்டு உபயோகிப்போர் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. அதை சரியான முறையில் உபயோகித்தால் நல்லது. ஒவ்வெரு பேங்கும் சில விதி முறைகள் வைத்துள்ளது.  கார்டு உபயோகிப்போர் சரியான முறையில் பேங்குக்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் பணத்தை செலுத்தினால் எந்த பிரச்சனையும் இல்லை. மாறாக செலுத்தினால் மிகவும் சிக்கலைச் சந்திக்க நேரிடும். இது ஒருபுறம் இருக்க நாம் கார்டு நம் கையில் இருக்க வேரு ஒரு நபர் நம் கணக்கில் லட்சக்கணக்கில் பணம், பொருள் வாங்கியிருப்பார்.

   இது எப்படி சாத்தியம் இதோ இப்படியும் நடக்கிறது. ரெஸ்ட்ராரெண்ட், பெட்ரோல்பங், நகைக்கடை இன்னும் சில இடங்களில் நாம் கார்டை உபயோகிக்கிறேம். அப்படி உபயோகிக்கும் போது அங்குள்ள ஊழியர்களால் நம்முடைய கார்டின் அடையாள எண் பதிவு செய்யப்படுகிறது. எப்படியென்றால் ஸ்கிரிம்மர் (படம்) மூலம் நம் கார்டு அவர்கள் கையில் கொடுத்தவுடன் அவர்கள் உள்ளங்கையில் வைத்துள்ள ஸ்கிரிம்மர் மூலம் நம் கார்டில் உள்ள டீட்டைலை பதிவுசெய்து விடுகிறார்கள். பின்பு யூஎஸ்பிகனைக்ட் மூலம் கம்பியூட்டரில் பதிவுசெய்து வெளிநாட்டில் உள்ள அவர்கள் பாஸ்களுக்கு அனிப்பிவிடுவார்கள். அவர்கள் சைனீஸ் மேட் பிளாஷ்டிக்கார்டில் அவர்கள் ஸ்கிரிம்மர் மூலம் பதிவு செய்துவிடுவார்கள். உண்மையான கார்டு பர்சில் நம்மிடம் பத்திரமாக இருக்கும் போலிகார்டுல நம் பணத்தில் பொருள் வாங்கி குவிப்பார்கள். இங்கு உள்ள ஏஜண்டுகளுக்கு கமிஷன் கிடைக்கும். எப்படி எல்லாம் நாட்டில் நடக்குது பாருங்க.

சோ.ஞானசேகர்.

Thursday, December 10, 2009

சுற்றுச்சூழல் பாதிப்பு,​பருவநிலை மாறுபாடு அச்சுறுத்தல்:40 ஆண்டுகளில் 100 கோடி மக்கள் இடம்​பெயரும் அபாயம்
     பரு​வ​நிலை மாறு​பாடு மற்​றும் சுற்​றுச்​சூ​ழல் பாதிப்​பால் வரும் காலங்​க​ளில் மனித சமு​தா​யம் பெரும் பாதிப்​புக்​குள்​ளாக உள்​ள​தாக ஆய்​வில் தெரி​ய​வந்​துள்​ளது.​

​ ​ இத​னால் தென்​கி​ழக்கு ஆசியா,​​ மத்​திய அமெ​ரிக்கா,​​ மேற்கு ஆப்​பி​ரிக்​கா​வின் ஒரு பகுதி ஆகிய பகு​தி​க​ளில் வாழும் மக்​கள்​தான் கடும் பாதிப்​புக்​குள்​ளாக உள்​ள​தா​க​வும் புலம்​பெ​யர்ந்த மக்​க​ளுக்​கான சர்​வ​தேச அமைப்பு நடத்​திய ஆய்​வில் தெரி​ய​வந்​துள்​ளது.​

​   பரு​வ​நிலை மாறு​பாடு,​​ சுற்​றுச்​சூ​ழல் பாதிப்​பால் இந்த பகு​தி​க​ளில் இருந்து அடுத்த 40 ஆண்​டு​க​ளில் 100 கோடி மக்​கள் இடம்​பெ​யர்வு மற்​றும் புலம்​பெ​ய​ர​லாம்.​

​  கடந்த 20 ஆண்​டு​க​ளாக இயற்கை பேர​ழி​வு​கள் இரு​ம​டங்கு அதி​க​ரித்​துள்​ளன.​ சமீ​ப​கா​ல​மாக பூகம்​பம்,​​ வறட்சி,​​ வெள்​ளம் ஆகி​யவை மனித சமு​தா​யத்​துக்கே பெரும் சவா​லாக உரு​வெ​டுத்​துள்​ளன.​

மனி​தன் உயிர்​வாழ்​வ​தற்கு அவ​சி​ய​மான காற்று,​​ நீர்,​​ நிலம் ஆகிய சீர்​கே​டும் அதி​க​ரித்து வரு​கி​றது.​

​ அதே​போல,​​ இந்த நூற்​றாண்​டின் இறு​திக்​குள் புவி​யின் வெப்​ப​நி​லை​யும் 2 டிகிரி சென்​டி​கி​ரேட் முதல் 5 டிகிரி சென்​டி​கி​ரேட் வரை அதி​க​ரிக்க வாய்ப்​புள்​ளது.​

​ இது​போன்ற கார​ணங்​க​ளால் மனித சமு​தா​யம் அதிக இன்​னல்​களை சந்​திக்க வேண்​டி​யுள்​ளது.​ பசுமை இல்ல வாயுக்​க​ளால் ஏற்​ப​டும் பரு​வ​நிலை மாறு​பாட்​டால் கடல் மட்​டம் உயர்ந்து வரு​கி​றது.​ இது கட​லுக்கு மத்​தி​யில் அமைந்​துள்ள நாடு​க​ளுக்கு அச்​சு​றுத்​த​லாக உள்​ளது.​ கடல் மட்​டம் தொடர்ந்து உய​ரு​மா​னால் கட​லுக்கு மத்​தி​யில் உள்ள நாடு​கள் மூழ்​கிப்​போ​கும் அபா​ய​மும் உள்​ளது.​

​ இத​னால் இது​போன்ற நாடு​க​ளில் வசிக்​கும் மக்​கள் தற்​போதே எதிர்​கால அபா​யத்தை நினைத்து பிற நாடு​க​ளுக்கு புலம்​பெ​யர ஆரம்​பித்​து​விட்​ட​னர்.​ எங்​கெல்​லாம் சுற்​றுச்​சூ​ழல் அதி​க​ரித்​துள்​ளதோ அந்​நாட்​டைச் சேர்ந்த மக்​கள் அரு​கில் உள்ள நாடு​க​ளுக்கு புலம்​பெ​ய​ரத் தொடங்​கி​யுள்​ள​னர்.​

​ சில நாடு​க​ளில் சுற்​றுச்​சூ​ழல் பாதிப்​பு​மிக்க பகு​தி​க​ளில் வசிப்​ப​வர்​கள் பாதிப்​பில்​லாத பகுதி நோக்கி இடம்​பெ​யர்​கின்​ற​னர்.​ இத​னால் ஓரி​டத்​தி​லேயே அதிக மக்​கள் குவி​யும் நிலை ஏற்​பட்​டுள்​ளது.​ இது மேலும் சுற்​றுச்​சூ​ழல் பாதிப்​புக்கு வழி ஏற்​ப​டுத்​து​கி​றது.​

​ அது​மட்​டு​மல்​லா​மல் ஓரி​டத்​தில் இருந்து மற்​றொரு இடத்​துக்கு மக்​கள் இடம்​பெ​ய​ரும் போது சில நேரங்​க​ளில் மக்​க​ளி​டையே மோத​லும் தவிர்க்க முடி​யா​த​தாகி விடு​கி​றது.​

இது எதிர்​கா​லத்​தில் பெரிய பிரச்​னை​யாக உரு​வெ​டுக்க வாய்ப்​புள்​ள​தா​க​வும் புலம்​பெ​ய​ரும் மக்​க​ளுக்​கான சர்​வ​தேச அமைப்​பின் ஆய்​வில் தெரி​ய​வந்​துள்​ளது.

நன்றி தினமணி நாளிதழ்...

சோ.ஞானசேகர்.

Monday, December 7, 2009


தக்காளி    இன்று தக்காளி ஒரு பிரசித்தமான காய்கறி. தக்காளி இல்லாமல் நமது இந்திய உணவுகள் இல்லை. ஆனால் மக்கள் முதன் முதலாகத் தக்காளியைப் பார்த்தபோது அவர்கள் மனதில் இரண்டு கேள்விகள் தோன்றின: இது நஞ்சானதா? சாப்பிடக்கூடியதா? இது பழமா அல்லது காய்கறியா?

   ஸ்பானிய சாகசப் பயணியான ஹெர்னாண்டோ கோர்ட்டஸ், தென் அமெரிக்காவில் இருந்து ஐரோப்பாவிற்க்குத் தக்காளி விதைகளைக் கொண்டு வந்தார். ஆனால் இது ஆரம்ப காலத்தில் ஓர் அலங்காரத் தாவரமாகத்தான் வளர்க்கப்பட்டது. தக்காளி ஒரு நச்சுவகைத் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது என்பதால் பலரும் இதை விலக்கினர். தக்காளியானது 'குடல் வால்' பிரச்சினையையும், புறறுநோயையும் கூட ஏற்படுத்தக்கூடும் என்று 18-ம் நூற்றாண்டு வரை மருத்துவர்கள் மக்களை எச்சரித்து வந்தனர்.

  அதன்பின் தக்காளியின் இலைகளும், தண்டுகளும்தான் நச்சுத்தன்மை வாய்ந்தவை, ஆனால் தக்காளிப் பழம் ருசியானது என்ற முடிவுக்கு மக்கள் வந்தனர். அதையடுத்து தக்காளி விறுவிறு வென்று புகழ் பெறத் தொடங்கியது. பிரெஞ்சுக்காரர்கள் இது நேசத்தைத் தூண்டுவதாகக் கருதி 'பொம்மே டாமர்' என்று பெயர் சூட்டினர். அதவது 'அன்பு ஆப்பிள்' என்று அர்த்தம்.

  தக்காளியை முதன்முதலில் பெருமளவில் விளைவித்தவர்கள் இத்தாலியர்களும், ஸ்பானியர்களும் ஆவர். அவர்கள் இதை 'பொம்மி டோரோ' (தங்க ஆப்பிள்) என்று அழைத்தனர். காரனம் அவர்கள் விளைவித்த தக்காளி வகை மஞ்சள் நிறமாக இருந்தது.

  தாவரவியல்படி தக்காளியானது ஒரு பழமாகும். 1893-ல் அமெரிக்காவில் காய்கறிகளுக்கு விதிக்கப்படும் வரியைத் தவிர்க்க, அந்நாட்டில் தக்காளியை இறக்குமதி செய்த ஒருவர் இது ஒரு பழம் என்று வாதிட்டார். ஆனால் அந்நாட்டு உச்ச நீதிமன்றம், தக்காளி ஒரு காய்கறி என்று தீர்பளித்தது. தக்காளி எப்போதும் ஒரு காய்கறியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிததே தவிர, பழமாக அல்ல; எனவே அது வரிவிதிப்புக்கு உரியது என்றது அமெரிக்க நீதிமன்றம்.

  தக்காளியானது 10சென்டி மீட்டர் சுற்றளவுக்குப் பெரிதாகவும் இருக்கலாம், வெறும் 2சென்டி மீட்டர் அகலத்தில் சிறிதாகவும் இருக்கலாம். தக்காளி என்றாலே நமக்குச் சிவப்பு நிறம்தான ஞாபகத்துக்கு வரும். ஆனால் பச்சை, மஞ்சள், ஆரஞ்சு நிறத்திலும் கூட தக்காளி இருக்கும். கறுப்பு, இளஞ்சிவப்பு, பழுப்பு, ஊதா நிறம் உடைய அறிய வகை தக்காளிகளும் உண்டு.

  தக்காளியானது கச்சிதமான உருண்டை வடிவிலோ, பேரிக்காய் வடிவிலோ இருக்கலாம்.

  செர்ரி தக்காளி, திராட்சைத் தக்காளி போன்றவை அப்படியே சாப்பிடப்படுகின்றன அல்லது பச்சை காய்கறிக் கூட்டுகளில் பயண்படுத்தப்படுகின்றன. பொதுவாகத் தக்காளியானது சூப், தக்காளிப் பசை அல்லது 'சாஸ்' தயாரிக்கப்படுகிறது.

  தக்காளி பல்வேறு வைட்டமின்களுடன், 'லைக்கோபீன்' என்ற வேதியப் பொருளையும் கொண்டுள்ளது. அதுதான் தக்காளிக்கு சிவப்பு நிறத்தை அளிக்கிறது. 'லைக்கோபீன்' இதைய நோயையும், புற்று நோயையும் தடுக்கிறது. சமைத்த தக்காளியில் இருந்து 'லைக்கோபீனை' நமது உடம்பு உடனே ஏற்றுககொள்கிறது.

  தக்காளி தனது இலைகளை பூச்சிகள் சாப்பிடுவதை தடுக்க, சில வேதியப் பொருட்களைச் சுரக்கிறது. அவை பூச்சிகளுக்கு அஜீரணத்தை ஏற்படுத்துகின்றன.

  தற்போது உலக அளவில் அதிகமாக விளைவிக்கப்படும் காய்கறிகளில் ஆறவது இடத்தில் தக்காளி உள்ளது. இன்று உலகளவில் பனிரெண்டரைக் கோடி டன் தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது. தக்காளி விளைவிப்பதில் சீனா உலகத்திலேயே முதலிடத்தில் உள்ளது. நமது இந்தியா நான்காவது உளளது.

நன்றி தினத்தந்தி

சோ.ஞானசேகர்