Tuesday, November 17, 2009

ஜப்பான் ரெயில் நிலையங்கள் உஜாலாவுக்கு மாறுகிறது.



   ஜப்பனில் ஓடும் ரெயில்கள் முன்பு குதித்து தற்கெலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு போகிறது. தற்கொலை எண்ணத்தை மாற்ற என்ன செய்யலாம் என்ற ஆராய்ச்சிகள் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க, தற்சமயம் ஒரு புதுமையான ஐடியாவை ஜப்பானில் செயல்படுத்துகிறார்கள்.

  பிளாட்பாரங்களின் முனைகளில், நீல வண்ணத்தை மென்மையாகப் பரப்பும் விளக்குகளைப் பெருத்தியிருக்கிறார்கள். நீல வண்ணம் சஞ்சலமற்ற மனதுக்கு ஒருவித ஆறுதலையும் நிம்மதியையும் தருவதக ஆராய்ச்சிகள் ஓரளவு நிரூபிக்கின்றன.

  டோக்கியோவின் மத்திய ரெயில் பாதையில் உள்ள 29 ரெயில் நிலையங்களிலும் 'ப்ளு லைட்' போடப்பட்டிருக்கிறது.

    நீல வெளிச்சம் மனித மனத்தின் எண்ணங்களை மாற்றுகிறது என்பது அறிவியல் ரீதியாக நூற்றுக்கு நூறு நிருபிக்கப்படவில்லை என்றாலும், நீலம் மனதை அமைதிப்படுத்துகிறது என்கிறார்கள் சில மனவியல் நிபுணர்கள்.

   தற்கொலை எண்ணிக்கையை குறைத்தே ஆக வேண்டும் என்ற அவசியத்தில் இப்போது ஜப்பான் இருக்கிறது. 2003 இல் தற்கொலை செய்து கொண்டவர்கள் 34427.

  சென்ற ஆண்டு ரெயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை மட்டும் கிட்டத்தட்ட இரண்டாயிரம். இந்த ஆண்டு எண்ணிக்கை அதை முறியடிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இப்படித் தற்கொலை செய்து கொள்பவர்கள் பெரும்பாலானவர்கள் பிளாட்பாரத்தின் முனைகளில் தயாரக நின்று கொண்டிருந்து ரெயில் வரும்போது சரியாகக் குதித்து விடுகிறார்கள் என்பதால் அந்த அந்த முனைகளில் நீல விளக்கு மாட்டப்பட்டு அங்கிருந்து பிளாட்பாரம் முழுவதும் நீல வண்ணத்தில் குளிக்கும்படியாக வெளிச்சம் அமைக்கப்பட்டிருக்கிறது.

    ஜப்பானில் நீல விளக்கை மாட்டியிருக்கிறார்கள்  நம்நாட்டில் ரெயிலில் தற்கொலை, எதிர்பாரமல் அடிபடுவது, செல்போனில் பேசிக்கொண்டு அடிபடுவது இவர்களை எப்படி திருத்துவது. எந்த விளக்கை மாட்டுவது. என்று தெரிந்தால் சொல்லுங்களேன்.

நீலம் நல்லது செய்தால் சரி.


படித்தது...
நன்றி....


சோ.ஞானசேகர்.

Friday, November 13, 2009

கொசு, மனிதனை விரும்பி கடிப்பது ஏன்?



   "வீட்டுல நிம்மதியா படுத்து தூங்க முடியல, கொசுத் தொல்லை தாங்க முடியல" என்கிறோம். 'எப்படித்தான் அடையாளம் கண்டு வருமோ இடம் மாற்றி படுத்தாலும் தேடி வந்து கடிக்கிறது' என்று சிலர் புலம்புவதுண்டு. அப்படி என்ன விஷேசம் மனித ரத்தத்துக்கு. நாமே காரணம் சொல்லிவிடுவோம். 'உன் ரத்தம் கொசுவுக்கு ரெம்ப பிடிச்சிருக்கு, ரத்தவாடை கண்டுபிடித்து வந்து கடிக்கிறது என்போம். ஆனால் அந்த ரத்தத்தில் கொசுவுக்கு பிடித்தது எது? இந்தக் கேள்விக்கு விடை கண்டுபிடித்து இருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

   கொசுக்கள் மனிதனையும், விலங்குகளையும் கடிக்கும் தன்மை உடையது. குறிப்பாக மனிதர்களையே கொசுக்கள் அதிகம் கடிக்கிறது. கியூலெக்ஸ் என்னும் ஒருவகை கொசுவே பலவித நோய்கள் உருவாவதற்கும் காரனமாக இருக்கிறது.

   கலிபோர்னியா பல்கலைக்கழக பூச்சியியல் பற்றிய ஆய்வுக்குழு இதுகுறித்து ஆய்வில் ஈடுபட்டது. ஆய்வில் மனிதனை கொசு விரும்பி கடிப்பது ஏன் என்று தெரியவந்துள்ளது. நாமறிந்த படியே நமது உடல் வாசனையே கொசுக்களை நம்மை நோக்கி ஈர்த்து வருகிறது. கொசுவின் தலைப்பக்கத்தில் உள்ள ரத்தம் உறிஞ்சும் குழாய்தான் வாசனை அறியும் உறுப்பாக செயல்படுகிறது. மற்ற கொசுக்களைவிட கியுலெக்ஸ் இன கொசுக்களுக்கு இந்த உறுப்பு சிறப்பான அளவில் வளர்ச்சி அடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

   மேலும் நமது ரத்தத்தில் கலந்துள்ள சில ரசாயனங்களே கொசுவின் விருப்ப உணவு. இந்த குறிப்பிட்ட ரசாயனமே கொசுக்களுக்கு அழைப்பு விடுகிறது. உங்களை கொசு தேடி வந்து கடித்தால் கொசுவுக்கு பிடித்தமான ரசாயனக் கலவை உங்கள் ரத்தத்தில் அதிகம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

   "காற்றாடியை வேகமாக வைத்தும் பயனில்லை என்றால் கொசுவலை விரித்து வலைக்குள் நாம் போய்விட வேண்டியதுதான். வேறென்ன செய்ய?" இரவில் தூங்க செல்லும் முன் குளித்விட்டு தூங்க சென்றால் கொசு கடியில் இருந்து கொஞ்சம் தப்பிக்கலாம்.

படித்தது..

சோ.ஞானசேகர்.

Tuesday, November 10, 2009

துப்பாக்கிக்கலாச்சாரம்

     இன்றைய தினத்தில் உலகிலேயே துப்பாக்கிக்கலாச்சாரம் வேகமாகப் பெருகி வருவது தென்ஆப்பிரிக்காவில்தான். அதுவும் எப்படி? ஆளுக்கு ஆள் சுட்டுக் கொள்வது.

   அதிலும் சமிபத்தில் ஒரு வெள்ளை இன போலீஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் பெரும் பீதியையும், பரபரப்பையும் பிரிடோரியாவில் ஏற்படுத்திவிட்டது. அங்கே ஒரு பெரிய ஷாப்பிங் சென்டரில் ஒருவன் கம்ப்யூட்டர் திருவதைப் பார்த்த சார்ஸ் ஷீப்பரிஸ் என்ற வெள்ளை போலீஸ் அதிகாரி அவனை பாய்ந்து சென்று பிடித்தார். ஆனால் அந்தக் கொள்ளையன் அவரைச் சுட்டுக் கொன்றான். அந்த அதிகாரிக்கு மூன்று குழந்தைகள். கண்ணீர் மல்க அவரது மனைவி வெளியிட்ட அறிக்கையில் 'நாட்டில் இப்போது கிரிமினல்கள் வென்று வருகிறார்கள். இதை அனுமதிக்க கூடாது. என் கனவர் அந்தப் பாவியைச் சுட்டுக் கொன்றிருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை.துப்பாக்கியை கீழே போடு என்று மூன்று முறை அவர் கேட்டும் அவன் கேட்கவில்லை' என்று கூறியிருக்றார்.

     போலீஸ் கமிஷனர் எனக்கு 'வரும் கேள்விகள் பெரும்பாலும் சுட்டுக் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரிகளின் குடும்பங்களிடமிருந்துதான். இன்னும் எத்தனை போலீஸ் விதவைகளும், அனாதைகளும் எண்ணிக்கையில் கூட வேண்டும்? என்று கேட்கிறார்கள். என்ன பதில் சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை' என்கிறார்.

தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேகப் ஸூமாவும் குழம்பிப் போய் எப்படி இந்தத் துப்பாக்கி கலாசாரத்தை நசுக்குவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

         அவரே தெரிவித்த சில புள்ளி விவரங்கள்: 1. உலகில் அதிக கொலைகள் நடைபெரும் நாடுகளில் தென் ஆப்பிரிக்காவும் ஒன்று. 2. சென்ற ஆண்டில் மட்டும் 18 ஆயிரம் கொலைகள் நடைபெற்றிருக்கின்றன. 3. இந்த நாட்டில் அனேகமாக ஒவ்வொருவனும் துப்பாக்கி வைத்திருக்கிறான்.

         சமிபத்திய ஆய்வின்படி வானவில் நாடு என்று அழைக்கப்படும் தென் ஆப்பிரிகாவில் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 50 பேர் கொல்லப்படுகிறார்கள்.

   'எவனாவது துப்பாக்கியை எடுத்தால் உடனே அவனைச் சுடு' என்று போலீஸூக்கு அனுமதி தந்திருக்கிறார் ஸூமா.

     அடுத்த ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் அங்கு நடை பெற இருக்கின்றன.

       துப்பாக்கிகள் கோல் போட்டுவிடக்கூடாது.
S.Gnanasekar

Monday, November 9, 2009

பட்டாம்பூச்சிகள்



மனிதனின் மனதை ஈர்க்கும் அதிசயங்கள் பல அவற்றில் வணணத்துப்பூச்சிக்கு சிறப்பிடம் உண்டு. பல வண்ணங்களில் சிறகடிக்கும் பட்டாம்பூச்சிகள் பார்பவர்களை பரவசப்படுத்திவிடும்.

பட்டாம்பூச்சிகளில் 15,000 முதல் 20,000 வகையான பல்வேறு உள்ளினங்கள் உள்ளன. பட்டாம்பூச்சியின் இறக்கைகளில் காணப்படும் நிறங்கள் மிகப்பலவாகும். அதில் காணப்படும் நிறவடிவங்களும் கோலங்களும் அழகு வாய்ந்தவை. பட்டாம்பூச்சிகள் உலகில் பெரும்பாலான இடங்களில் வாழ்கின்றன.

ஒரு சில பட்டாம்பூச்சி இனங்கள் ஒராண்டு, ஒன்றரை ஆண்டு வரையும் வாழுகின்றன.

சில பட்டாம்பூச்சிகள் வியப்பூட்டும் விதமாக வெகுதொலைவு (3,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவு) பறந்து செல்கின்றன.

அந்த அழகு பட்டாம்பூசியைப் பற்றிய ஒரு கூடுதல் தகவல் இது. வண்ணத்துப்பூச்சிகளுக்கு காதுகள் கிடையாது என்றோ, அதன் உறிஞ்சுகுழல் மூலம் உணர்ந்து கொள்ளும் என்றோ நினைத்துக் கொண்டிருந்தால் அது தவறு.

இங்லாந்தில் உள்ள பிரிஸ்டோல் பல்கலைக்கழக குழு ஒன்று இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டது. அவர்கள் புளுமார்போ இன வண்ணத்துப்பூச்சிகளில் காதுகள் இருக்கும் ரகசியத்தை கண்டுபிடித்தனர். அதன் வண்ணமயமான இறகுகள் உடலோடு இணையும் பகுதியில் இந்தகாதுகள் அமைந்துள்ளன. இது சிறிய புள்ளி போன்ற சற்று மேலேழும்பிய குமிழ் போல காணப்படும். சாயம்போன மஞ்சள் நிறத்தில் இது அமைந்திருக்கும்.

இந்தபகுதியே வண்ணத்துப்பூச்சிகள் ஒலியை கேட்கத் துணைபுரிகிறது. 1000 முதல் 5 ஆயிரம் ஹெர்ட்ஸ் வரையிலான ஒலியை கேட்கும் தன்மையைப் பெற்றிருக்கின்றன. (மனிதனின் ஒலி உணரும் திறன் 20 மிதல் 20 ஆயிரம் ஹெர்ட்ஸ் அளவாகும். நமது பேட்டின் அதிர்வு 100 முதல் 4 ஆயிரம் ஹெர்ட்ஸ் வரை இருக்கும்.)

அதிர்வுகளை  காதுகளின் மேற்புற செல்களே அறிந்து கொள்கின்றன. மற்ற ஒலி அலைகளை உட்புற செல்கள் நரம்புகள் கடத்தும் அதிர்வுகளாக மாற்ரி நரம்பு செல்கல் மூலம் அறிந்து கொள்கின்றன.

பறவைகளின் பாட்டுக்களை கேட்கவும், தன்னை நெருங்கிவரும் ஆபத்துக்களை அறியவும், திசைமாற்றி பறக்கவேண்டிய நேரத்திலும் இந்த உறுப்பை அதிகமாக பயன்படுத்துகின்றன.

1912 வரை வண்ணத்துப்பூச்சிகளுக்கு காது கேக்காது என்றே நம்பப்பட்டது. அதன் பிறகு சிலவகை பட்டாம்பூச்சிகள் ஒலி அதிர்வை அறிந்து கொள்வது கண்டுபிடிக்கப்பட்டது.

வண்ணத்துப்பூச்சிகளை கண்டு ரசியுங்கள், அதன் காதை தேடாதீர்கள்.

படித்தது...
சோ.ஞானசேகர்...