Thursday, May 19, 2011

நமது நாடு 21. பாலைநில மக்கள்


     மணல்வெளிகள் பாலை நிலம் எனப்பட்டன. அவைகளின் இடை இடையே புல் பூண்டுகளும் மரஞ்செடிகளும் கானப்பட்டன. வெயிலின் வெம்மையால் கரிந்துபோகாத பாலை என்னும் மரங்கள் அவ்விடங்களில் பெரிதும் வளர்ந்தன. ஆகவே மணல் வெளிகளும் அவைகளைச் சார்ந்த இடங்களும் பாலை என்னும் பெயர் பெற்றன பாலை நிலம் மிக வெப்பமுடையது.

    அங்கு வாழ்ந்த மக்கள் புளிஞர், வேடர் எயினர், மறவர் எனப்பட்டனர். அவர்கள் குன்றுகளில் வாழ்ந்த குறவரிலும் பார்க்க நாகரிகத்தில் கீழ் நிலையினர். அவர்கள் கூலங்களைப் பயிரிடவும் ஆடுமாடுகளை வளர்த்து அவை தரும் பயன்களைப் பெறவும் அறிந்திருக்கவில்லை, வேட்டை ஆடுதலாற் கிடைக்கும் விலங்குகள் பறவைகளின் ஊனையே அவர்கள் பெரிதும் உண்டு வாழ்ந்தனர்.

   அவர்கள் வழிப்பறிப்போரும், கொள்லையிடுவோருமாயிருந்தனர். சில சமயங்களில் அவர்கள் அயல் இடங்களிற் சென்று ஆடுமாடுகளைக் கொள்ளையிடுவர். வணிகர் பண்டங்கலைக் கழுதைகள் மீது ஏற்றிக்கொன்டு மணல் வெளிகளைக் கடந்து செல்வார்கள். வேடவர் அவர்களைக் கொன்று பண்டங்களைக் கொள்ளையிடுவர். ஆன்மையின் அவர்கள் முற்காலங்களில் மணல் வெளிகளைக் கடந்து செல்ல நேர்ந்தால் கூட்டங்களாக ஆயுதங்கல் தாங்கிச் செல்வது வழக்கம். அக்கால வணிகர் சிறந்த போர்வீரர்களாகளாயும் இருந்தனர்.

    எயினர் சிறு குடிசைகள் கட்டி வாழ்ந்தனர். அவை ஈந்தின் ஓலையால் வேயப்பட்டிருந்தன. அவைகளின் மேற்புரம் முள்ளம்பன்றியின் முதுகுபோல் தோன்றின. வேடவப்பெண்கள் பாரையினால் எறும்புப்புற்றுகளைக் கிண்டி எறும்புகள் சேர்த்து வைத்திருக்கும் புல் அரிசியைச் சேர்த்தார்கள் அதனை முற்றத்தே கிடக்கும் நில உரலில் தீட்டி ஆக்கி, வேட்டைநாய் பிடித்துக்கொண்டுவந்த உடும்பின் இறைச்சியோடு தேக்கிலையில் இட்டு உண்டனர். அவர்கள் மாந்தோலில் படுத்து உறங்கினார்கள், சங்குமணி, சோகி, என்பு முதலியவைகளை நகைகளாக அணிந்தனர்.

  பாலை நில மக்கள் காளியைத் தமது குல தெய்வமாகக்கொண்டு வவிபட்டனர். காளிக்கு ஊர்தி சிங்கம். வேடவர் காளிக்கு உயிர்ப்பலி இட்டு வழிபட்டனர். மக்கள் வேடன், இடையன், உழவன் என்ற மூவரின் வாழ்க்கை நிலைகளை ஒன்றன்பின் ஒன்றாக முறையே அடைந்தார்கள். அவைகளில் வேடரின் வாழ்க்கைமுறை முதல் நிலையானது. இந் நிலையில் மக்கள் உணவு ஒன்ருக்காக மாத்திரம் முயன்றுகொண்டிருந்தார்கள். ஆகவே அவர்கள் ஓர் இடத்தில் தங்கி ஆறியிருந்து நாகரிகம் பெற முடியவில்லை.

மழைக்காடுகள் இற்கையின் பொக்கிஷம்...

Saturday, May 14, 2011

நமது நாடு 20.கடற்கரை மக்கள்


   கடற்கரையில்  நெய்தல் என்னும் ஒருவகை நீர்ச்செடி பெரிதும் வளர்ந்திருக்கும். அக்காரணத்தால் கடலும் கடல் சார்ந்த இடங்களும் நெய்தல் என்னும் பெயர்பெற்றன. நெய்தல் நிலத்தே, புன்னை, பனை, தெங்கு முதலியன செழித்து வழர்ந்தள. அவ்விடங்களில் வாழுநர் பரதவர் எனப்பட்டனர்.

    பரதவர் கட்டுமரங்களிற் கடலிடத்தே சென்று மீன் பிடித்தனர். அவர்கள் மீனைத் தமது முதன்மை உணவாகக் கொண்டனர். பரதவர் கொண்டுவந்த மீனை பரத்தியர் மற்ற இடங்களுக்குக் கொண்டு சென்று விற்றனர், மீனின் விலையாகக் கூலங்களையும் தமக்கு வேண்டிம் பிற பண்டங்களையும் பெற்றனர். கடற்கரைகளில் உப்பு விளைக்கும் பாத்திகள் உண்டு. அவர்கள் கடல் நீரை அப்பாத்திகளிற் பாய்ச்சி உப்பு விளைவித்தனர். உப்பு வணிகர்கள் உமணர் எனப்பட்டனர். உமணர் உப்பை வண்டிகளின் மேலும் கழுதைகளின் மீதும் ஏற்றிச் சென்று மற்றைய இடங்களில் விலைப்படுத்தினர்.

    கட்டுமரத்துக்குத் திமில் என்பது மற்றெரு பெயர். திமில்களிலே கடலிற் சென்றோர் திமிலர் எனவும் பட்டனர். திமில்களிலே சென்று மீன் பிடித்த பரதவர் நாளடைவில் பெரிய மரக்கலங்களில் கடல் கடந்து அயல்நாடுகளுக்குச் செந்றனர். அவர்கள் அந்நாடுகளிலுள்ள அரிய பண்டங்களை இந்நாட்டுக்குக் கொண்டுவந்தனர், இந்தநாட்டுப் பண்டங்களை அந்நாட்டுக்கு கொண்டு சென்றனர். நாளடைவில் பிறநாட்டு மரக்கலங்கள் தமிழ்நாட்டுக் கடற்கரைக்கு வரத்தொடங்கின. இவேவாறு கடற்கரைகளில் வாணிகம் தொடங்கிற்று. உள்நாட்டுப் பண்டங்கள் வண்டிகளிலும், கழுதைகளிலும், பொதிமாடுகளிலும் கடற்கரைகளுக்குக் கொண்டுவரப்பட்டன. கடற்கரைகளில் வந்திறங்கிய பிறநாட்டுப் பண்டங்கள் உள்நாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டன. உள் நாடுகளிலிருந்து கடற்கரைத் துறைமுகங்கள் வரையில் வண்டிகளும் மக்களும் செல்லக்கூடிய தெருக்கள் அமைக்கப்பட்டன. இவ்வாறு கடற்கரைகளில் பட்டினங்கள் உண்டாயின. அவ்விடங்களில் வணிகரும் மரக்கலங்கள் வைத்திருப்போரும் பெரிய மளிகைகள் அமைத்து அவைகளில் வாழ்ந்தனர். ஏற்றுமதியாகும் பண்டங்களுக்கும் இறக்குமதியாகும் பண்டங்களுக்கும் தீர்வை பெறும்பொருட்டு அரசினராற் பண்டசாலைகள் அவ்விடங்களில் அமைக்கப்பட்டன. பல்வேறு நாடுகளிலிருந்தும் மக்கள் வாணிகத்தின் பொருட்டுத் துறைமுகப் பட்டிணங்களுக்கு வந்தார்கள். தொழில் செய்து பிழைக்கும் பொருட்டு அவ்விடங்களுக்கு உள்நாடுகளினின்றும் மக்கள் சென்று தங்கினார்கள். பட்டிணங்கள் மக்கள நெருங்கி நடமாடும் இடங்களாயின. மக்கள் நெருங்கிவாழும் இடங்களில் பொழுது போக்குக் கேற்ற பலவகைக் களியாட்டங்கள் நடைபெற்றன. இராக்காலங்களில் மரக்கலங்கள் திசை அறிந்து துறைபிடிக்கும் பொருட்டுத் துறைமுகங்களில் வெளிச்சவீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. அவை கலங்கரை விளக்கங்கள் எனப்பட்டன.

    தமிழ்நாட்டில் காவிரி ஆற்று முகத்துவாரத்திலிருந்த புகார் என்னும் நகர் பெரிய துறை முகப்பட்டினமாயிருந்தது. அங்குப் பல மொழிகளைப் பேசும் பிறநாட்டுமக்கள் தங்கி வாழ்ந்தனர்.

     பட்டினங்களல்லாத மற்றைய கடற்கரைப் பக்கங்களில் பரதவர் மீன்பிக்கும் தொழிலையே பெரிதும் கைக்கொண்டிருந்தனர். அவர்கள் பனந்தோப்புக்களில் சிறு சிறு குடிசைகள் கட்டி வாழ்ந்தனர், மீன், இறால் முதலியவைகளை வெயிலில் உலர்த்தினர். பரதவர் சிறுமியர் புன்னை நிழலில் இருந்து மீனைக் கவரவரும் புட்களை ஓட்டினர். பரதவர் பனை தென்னை முதலியவைகளினின்றும் எடுக்கப்படும் கள்ளை உண்டு மகின்ந்தனர்.

   பரதவரிந் குல தெய்வம் வருணன். அவர்கள் சுறாக்கொம்பை நட்டு, மாலைகள் சூட்டி, ஆடல் புரிந்து அக்கடவுளை வழிபட்டனர். தமிழர் கடவுளாகிய வருணனை ஆரியமக்களும் வழிபட்டனர். வருணன் என்னும் கடவுளை வாழ்த்திப் பாடிய பாடல்கள் பல அவர்கள் வேதங்களிற் காணப்படுகின்றன.
  
நமது நாடு தொடரும்...

வனவிலங்குகள், பறவைகள் காத்து இயற்கையை காப்போம்...

Wednesday, May 11, 2011

நமதுநாடு 19. வேளான் மக்கள்


   ஆற்றேரங்களில் வாழ்ந்து தானியங்களை விளைவித்தோர் வேளாளர் எனப்பட்டனர். வேளாளர் என்பதற்கு நிலத்தை ஆள்பவர் என்பது பொருள். வேள் என்பது நிலத்தைக் குறிக்கும். வேளாளரைக் குறிக்க வெள்ளாளர் என்னும் சொல்லும் வழங்கும். இச்சொல்லில் வெள் என்பது வெள்ளம் என்பதன் மருஉ. வெள்ளாளர் என்பதற்கு வெள்ளத்தை ஆள்பவர் என்பது பொருள். வயல் நிலங்களில் மருத மரங்கள் செழித்து வளர்ந்தன. ஆகவே வயலும் வயல் சார்ந்த இடங்களும் மருத நிலம் அல்லது மருதம் என்னும் பெயர் பெற்றன. வேளாண்மை செய்யும் ஒருவன் தனக்கு நீண்ட நாட்களுக்குப் போதுமான உணவைப் பெறக்கூடியவளாயிருந்தான். வேளாண்மக்கள் பயிரிட்டுக் கூலங்களை அறுக்குங் காலங்கள்போக மற்ற காலங்களில் ஓய்ந்திருந்தனர். இந்த நல்ல நிலைமையில்தான் மக்கள் ஓரிடத்தில் தங்கியிருந்து தம் அறிவைப் பெருக்க நினைத்துப் பல்வகை நற்கலைகளை வளர்த்தனர். மனிதனுக்குப் போதுமான உணவும் உடையும் கிடைப்பின் அவன் உள்ளக்களிப்பாக வாழவும், பொழுது போக்கவும் விரும்புகிறான். தனக்கு அவ்வகைப் பொழுதுபோக்கும் முறைகளைக் காண்பிப்பவர்களுக்கு அவன் தனது களஞ்சியத்தினின்றும் தானியங்களைக் கொடுக்கிறான். ஆதலின், பொழுது போழுது போக்குக்கும் அறிவு வளர்ச்சிக்கும் உரிய நற்கலைகளைப் பலர் பயின்றதனால் கலைகள் வளர்ச்சியடைந்தன.

   கூலம் விளைவிக்கும் வேளாளர் செல்வராயிருந்தனர். அவர்களின் பெண்டுபிள்ளைகள் அணிவதற்கு அழகிய பொன் அணிகள் வேண்டப்பட்டன. வீட்டிற் பயன்படுத்துதற்கு வேண்டிய நாற்காலி, முக்காலி, கட்டில், பெட்டி, ஏணி போன்ற பல பொருள்கள் தேவைப்பட்டன. பயிரிடுவதற்கு உதவியான கலப்பை, நுகம், கொழு, மண்வெட்டி, அரிவாள் போன்ற பல பொருள்களும் தேவையாயிருந்தன. இவைகளை எல்லாம் செய்து அளிக்கும் தொழிலாளர் வந்து வேளாண்மக்கள் வாழ்ந்த இடங்களைச் சுற்றிக் குடியிருந்தார்கள். அவர்கள் தாம் வேளானுக்குச் செய்து உதவும் பொருள்களுக்கு விலையாகக் கூலங்களைப் பெற்றனர்.

   வேளாளர் வேந்தன் என்னும் கடவுளைத் தமது குலதெய்வமாகக் கொண்டு வழிபட்டனர். வேந்தன் என்பதற்கு அரசண் எனவும் பொருள் உண்டு. கடவுள் உலகுக்கு அரசன் எனவும், அரசன் அக்கடவுளுக்கு ஏற்ப மக்களைக் காக்கும் உரிமையாளன் எனவும் முற்கால மக்கள் நம்பினார்கள். இந் நம்பிக்கை தமிழர்களிடையே மட்டுமன்று, பழையமக்கள் எல்லாரிடையும் காணப்பட்டது.

     வேளான்மக்கள் கொலையும் புலையும் நீக்கித் தூயவாழ்க்கை நடத்தினர். மக்கள் கடவுளை வழிபடும்பொருட்டு அவர்கள் ஊர்கள் தோறும் பெரிய கோவில்களைக் கட்டினார்கள், பிறர் நலங் கருதிப் பல்வேறு அறங்களைப் புரிந்தார்கள். வேளாளர் விருந்தினரை அகமலர்ந்து வரவேற்றனர். கம்பரும், திருவள்ளுவரும் வேளாண் மக்களின் சிறப்பை வேண்டிய அளவு விளக்கிக் கூறியுள்ளார்கள். வேளாண்மக்கள் உலகுக்கு அச்சாணி போன்றோர். அவர்களே உலகில் சிறந்த வள்ளல்களாக விளங்கினார்கள்.

நமது நாடு தொடரும்...

இயற்கை நேசியுங்கள் இயற்கையோடு ஒத்து வாழுங்கள். இயற்கை அழகு, புத்துணர்ச்சி, உற்சாகம் இவையனைத்தையும் தரும் ...

Tuesday, May 3, 2011

மங்குஸ்தான் பழம்



      மங்குஸ்தான் பழம் இது மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிறது. இந்தியாவில் தென்னிந்தியாவில் மலைப்பகுதியில் தோட்டப்பயிராக இது விளைகிறது. தென் அமெரிக்க நாடுகள், பிலிபைன்ஸ் ஆகிய நாடுகளிலும் இது விளைகிறது.

   மங்குஸ்தான் பழம் மலைப் பகுதியில் விளையக்கூடியவை, இந்தப்பழத்தின் தோல் தடிப்பாக இருக்கும். பழம் நீலம் கலந்த சிவப்பு கலரில் இருக்கும். இப்பழத்தின் தோல் பகுதியை உடைத்தால் நுங்கு போன்று நான்கு அல்லது ஐந்து, ஆறு சுளைகள் சுளைகள் இருக்கும். சுளைகள் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்திலும் இருக்கும்.

    மங்குஸ்தான் பழம் பல நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டதாக கூறப்படுகிறது.  இருமலை தடுக்கும் சூதக வலியை குணமாக்கும் தலைவலியை போக்கும் நாவறட்சியை தணிக்கும்.

மங்குஸ்தான் பழத்தில்
நீர் (ஈரப்பதம்) - 83.9 கிராம்
கொழுப்பு - 0.1 கிராம்
புரதம் - 0.4 கிராம்
மாவுப் பொருள் - 14.8 கிராம்
பாஸ்பரஸ் - 15 மி.கி.
இரும்புச் சத்து - 0.2 மி.கி

   உடலுக்குத்தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்ட இப்பழத்தை உண்டு பயனடைவோம். இது கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு பயனடையவும். மே, ஏப்ரல், ஜீன், ஜீலை மாதங்களில் கிடைக்கும். இது குற்றால சீசன் மாதங்களில் அங்கு அதிகமா விற்பனையாகும்.

இயற்கை நமக்கு அளித்த மகத்துவங்கள் ஏராளம்.  ஒவ்வொரு பழத்திலும் நோய்களுக்கான மருத்துவ குணங்கள் உள்ளடங்கியுள்ளன...

Monday, May 2, 2011

தாட்பூட் பழம் (பேசன் ஃபுரூட்)


     தாட்பூட் பழம் இந்ப்பழத்தை நான் சிறுவயதில் கேரளா மாநிலம் மூனாரில் இருந்தபோது சாப்பிட்டது. காட்டில் உள்ள மரங்களில் இதன் கொடி படர்ந்து இருக்கும் காய்கள் காய்த்து பழம் பழுக்கும். நல்ல சுவையுடன் இருக்கும். யான கூட இதை விரும்பி சாப்பிடும் என்பார்கள்.

     தாட்பூட் என்ற பெயரில் அழைக்கப்படும் மருத்துவ குணம் வாய்ந்த  பழம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதோடு, சர்க்கரை நோய்க்கும் நிவாரணியாகச் செயல்படுகிறது.

     தாட்பூட் என்ற பெயரில் பொதுவாக அனைவராலும் அழைக்கப்படும் இப்பழம் ஆங்கிலத்தில் பேசன் ஃபுரூட் என அழைக்கப்படுகிறது.

   பேசி புளோரா என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்த இப்பழத்தை ஆங்கிலேயர்கள்தான் பேசன் புரூட் என்ற பெயரில் அழைத்தனர். பேசன் என்றால் ஆசை என்று பொருள். பார்த்தவுடன் இப்பழத்தை ஆசையுடன் சாப்பிடத் தோன்றுவதாலேயே இப்பழம் பேசன் ஃபுரூட் எனப்பெயர் பெற்றதாகவும் கூறப்படுவதுண்டு.

    பேசி புளோரா தாவரக் குடும்பத்தில் உலகில் 400 வகைகள் உள்ளன. இவற்றில் நீலகிரி மலைப்பகுதிகளில் 5 வகைகள் உள்ளன. இவற்றில் பழுக்கும் பழங்கள் வெளிர் நீல நிறத்திலும், தங்க மஞ்சள் நிறத்திலுமாக இரு நிறங்களில் காணப்படும். பெரும்பாலும் வனப்பகுதிகளில்தான் இப்பழங்கள் கிடைக்குமென்பதால் கருங்குரங்குகள் விரும்பி உண்ணும் பழமாக இது அமைந்துள்ளது.

   தற்போது கருங்குரங்குகளுக்குத் தேவைப்படும் உணவு வகைகளில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இவ்வகை இனம் அழிவின் விளிம்பிலுள்ளது தனிக்கதை.

   அமெரிக்காவில் வெப்ப மண்டல பகுதிகளிலும், பிரேசிலில் அமேசான் காடுகளிலும், தென் அமெரிக்காவில் பராகுவே உள்ளிட்ட பகுதிகளிலும் இவ்வகைப் பழங்கள் அதிகளவில் விளைகின்றன. அதைத் தவிர இலங்கை, கென்யா, கேமரூன், ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பகுதிகளிலும் இப்பழங்கள் கிடைக்கின்றன.

   வைட்டமின் ஏ,பி,சி என அனைத்தும் நிரம்பிய இவ்வகைப் பழங்களை அப்படியே சாப்பிடலாம். மேலை நாடுகளில் இப்பழத்திலிருந்து சாலட், சர்பத், ஐஸ்கிரீம், ஜூஸ், கார்டியல் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.

     இப்பழங்கள் இரத்த அழுத்தத்திற்கும், சர்க்கரை நோய்க்கும் நிவாரணியாக செயல்படுவதாக மக்கள் நம்புவதால் இதற்கு அனைத்து தரப்பிலும் அமோக வரவேற்பு உள்ளது. இப்பழத்தின் சிறப்பிற்காகவே கோவாவில் பேசியோ என்ற பெயரில் மதுபானமும் தயாரிக்கப்படுகிறது. உலகளவிலான ரசிகர்களைக் கொண்டுள்ளது இவ்வகை மதுபானம்.

   வழக்கமாக செடிகளில் மலரும் மலர்களில் சூலகம் மலருக்குள்ளேயே அமைந்திருக்கும். ஆனால், இந்த ரகத்தில் மட்டும் சூலகம் இதழ்களுக்கு வெளியே தனியே வளர்ந்திருக்கும். அதன் தோற்றம் சிலுவையின் தோற்றத்தைப் போலவே இருக்கும் .

    நீலகிரி மாவட்டத்தில் பேசி புளோரா கல்கரேட்டா, எடிபிள், போட்டிடா, லென்னாட்டி, மொல்லிசிமா என்ற ரகங்களைக் கொண்டுள்ளது. சில இடங்களில் இப்பழங்கள் உருண்டையாகவும், சில இடங்களில் கூம்பைப் போலவும் வளரும். இவை செடியாக இல்லாமல் கொடியாக வளரும் தன்மை கொண்டவை என்பதால் மரங்களின் மீது படர்ந்திருக்கும். இதன் காரணமாகவே குரங்கு இனங்கள் இப்பழங்களை விரும்பி உண்கின்றன.

  இப்பழத்துக்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பைக் கருதி குன்னூரிலுள்ள அரசு தோட்டக்கலை பழவியல் நிலையத்தில் பேசன் ஃபுரூட் பழச்சாறு விற்பனை செய்யப்படுகிறது. இதைத்தவிர பழக்கன்றுகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

நன்றி- தினமணி...


இயற்கை அண்ணை அழகு, புத்துணர்ச்சி, உற்சாகம் இவையனைத்தையும் தரும் ...