Saturday, December 19, 2009



இந்தமாதம் எலக்ட்ரிக் பில்லை பார்த்தவுடன் ஒரே ஷாக். பில் எக்கச்சக்கமா எகிறி போயிருந்தது.


மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்த சில டிப்ஸ்...

   பேன் மற்றும் லைட்டின் தேவை இல்லாதபோது, அதை நிருத்தி வையுங்கள். அறையைவிட்டு வெளியே சென்றால் பேன் மற்றும் லைட் சுவிட்சை ஆப் செய்துவிட்டு செல்லுங்கள். நீங்கள் மட்டுமின்றி, உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் இந்தப் பழக்கத்தை கடைப்பிடிக்கும்படி வலியுறுத்துங்கள்.

     மிக்சி, பிரிஜ், அயன் பாக்ஸ், கிரைண்டர், வாஷிங் மெஷின், போன்ற வீட்டு உபயேகப் பொருட்களின் தேவை இல்லாதபோது, அவற்றின் பிளக்கை பிடுங்கி வைத்துவிடுங்கள் அல்லது சுவிட்சை ஆப் செய்யுங்கள். பிரிஜ்ஜை அனாவசியமாக அடிக்கடித் திறந்து மூட வேண்டாம். நீங்கள் திறந்து மூடும் ஒவ்வோரு முறையும் ஏகப்பட்ட மின்சாரம் வீணாகிறது.
அரை மணி நேரத்திற்கு அதிகமாக அதிகமாக கம்ப்யூட்டரைப் பயன்படுத்தாமல் இருக்க நேரிட்டால், கம்ப்யூட்டரை ஷட்டவுன் செய்துவிடுங்கள்.
     டிம்மர் விளக்குகளைப் பயன்படுத்தினால் மின்சாரமும் குறைவாகவே செலவாகும். இந்த டிம்மர் விளக்குகள் குறைவான வெளிச்சத்தை கொடுக்க கூடியவை. தேவைபட்டால் வெளிச்சத்தின் அளவை அதிகமாகக் கூட்டியும் வைத்துக் கொள்ளலாம். படிக்கும் போதும் எழுதும்போதும் மேஜை விளக்குகளைப் பயன்படுத்துங்கள். இதன் மூலம் அறை முழுவதும் ஒளிரக்கூடிய விளக்குகளைப் பயன்படுத்துவது தவிர்க்கப்படும். மின்சாரமும் சேமிக்கப்படும்.

முடிந்த அளவு பகலில் இயற்கையாகக் கிடைக்கும் சூரிய வெளிச்சத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மின்சாரத்தை சிக்கனமாகப் பயன் படுத்தி வீட்டுக்கும், நாட்டுக்கும் பயன் அடையச் செய்வோம்.

சோ.ஞானசேகர்.

No comments: