Monday, December 7, 2009


தக்காளி    இன்று தக்காளி ஒரு பிரசித்தமான காய்கறி. தக்காளி இல்லாமல் நமது இந்திய உணவுகள் இல்லை. ஆனால் மக்கள் முதன் முதலாகத் தக்காளியைப் பார்த்தபோது அவர்கள் மனதில் இரண்டு கேள்விகள் தோன்றின: இது நஞ்சானதா? சாப்பிடக்கூடியதா? இது பழமா அல்லது காய்கறியா?

   ஸ்பானிய சாகசப் பயணியான ஹெர்னாண்டோ கோர்ட்டஸ், தென் அமெரிக்காவில் இருந்து ஐரோப்பாவிற்க்குத் தக்காளி விதைகளைக் கொண்டு வந்தார். ஆனால் இது ஆரம்ப காலத்தில் ஓர் அலங்காரத் தாவரமாகத்தான் வளர்க்கப்பட்டது. தக்காளி ஒரு நச்சுவகைத் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது என்பதால் பலரும் இதை விலக்கினர். தக்காளியானது 'குடல் வால்' பிரச்சினையையும், புறறுநோயையும் கூட ஏற்படுத்தக்கூடும் என்று 18-ம் நூற்றாண்டு வரை மருத்துவர்கள் மக்களை எச்சரித்து வந்தனர்.

  அதன்பின் தக்காளியின் இலைகளும், தண்டுகளும்தான் நச்சுத்தன்மை வாய்ந்தவை, ஆனால் தக்காளிப் பழம் ருசியானது என்ற முடிவுக்கு மக்கள் வந்தனர். அதையடுத்து தக்காளி விறுவிறு வென்று புகழ் பெறத் தொடங்கியது. பிரெஞ்சுக்காரர்கள் இது நேசத்தைத் தூண்டுவதாகக் கருதி 'பொம்மே டாமர்' என்று பெயர் சூட்டினர். அதவது 'அன்பு ஆப்பிள்' என்று அர்த்தம்.

  தக்காளியை முதன்முதலில் பெருமளவில் விளைவித்தவர்கள் இத்தாலியர்களும், ஸ்பானியர்களும் ஆவர். அவர்கள் இதை 'பொம்மி டோரோ' (தங்க ஆப்பிள்) என்று அழைத்தனர். காரனம் அவர்கள் விளைவித்த தக்காளி வகை மஞ்சள் நிறமாக இருந்தது.

  தாவரவியல்படி தக்காளியானது ஒரு பழமாகும். 1893-ல் அமெரிக்காவில் காய்கறிகளுக்கு விதிக்கப்படும் வரியைத் தவிர்க்க, அந்நாட்டில் தக்காளியை இறக்குமதி செய்த ஒருவர் இது ஒரு பழம் என்று வாதிட்டார். ஆனால் அந்நாட்டு உச்ச நீதிமன்றம், தக்காளி ஒரு காய்கறி என்று தீர்பளித்தது. தக்காளி எப்போதும் ஒரு காய்கறியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிததே தவிர, பழமாக அல்ல; எனவே அது வரிவிதிப்புக்கு உரியது என்றது அமெரிக்க நீதிமன்றம்.

  தக்காளியானது 10சென்டி மீட்டர் சுற்றளவுக்குப் பெரிதாகவும் இருக்கலாம், வெறும் 2சென்டி மீட்டர் அகலத்தில் சிறிதாகவும் இருக்கலாம். தக்காளி என்றாலே நமக்குச் சிவப்பு நிறம்தான ஞாபகத்துக்கு வரும். ஆனால் பச்சை, மஞ்சள், ஆரஞ்சு நிறத்திலும் கூட தக்காளி இருக்கும். கறுப்பு, இளஞ்சிவப்பு, பழுப்பு, ஊதா நிறம் உடைய அறிய வகை தக்காளிகளும் உண்டு.

  தக்காளியானது கச்சிதமான உருண்டை வடிவிலோ, பேரிக்காய் வடிவிலோ இருக்கலாம்.

  செர்ரி தக்காளி, திராட்சைத் தக்காளி போன்றவை அப்படியே சாப்பிடப்படுகின்றன அல்லது பச்சை காய்கறிக் கூட்டுகளில் பயண்படுத்தப்படுகின்றன. பொதுவாகத் தக்காளியானது சூப், தக்காளிப் பசை அல்லது 'சாஸ்' தயாரிக்கப்படுகிறது.

  தக்காளி பல்வேறு வைட்டமின்களுடன், 'லைக்கோபீன்' என்ற வேதியப் பொருளையும் கொண்டுள்ளது. அதுதான் தக்காளிக்கு சிவப்பு நிறத்தை அளிக்கிறது. 'லைக்கோபீன்' இதைய நோயையும், புற்று நோயையும் தடுக்கிறது. சமைத்த தக்காளியில் இருந்து 'லைக்கோபீனை' நமது உடம்பு உடனே ஏற்றுககொள்கிறது.

  தக்காளி தனது இலைகளை பூச்சிகள் சாப்பிடுவதை தடுக்க, சில வேதியப் பொருட்களைச் சுரக்கிறது. அவை பூச்சிகளுக்கு அஜீரணத்தை ஏற்படுத்துகின்றன.

  தற்போது உலக அளவில் அதிகமாக விளைவிக்கப்படும் காய்கறிகளில் ஆறவது இடத்தில் தக்காளி உள்ளது. இன்று உலகளவில் பனிரெண்டரைக் கோடி டன் தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது. தக்காளி விளைவிப்பதில் சீனா உலகத்திலேயே முதலிடத்தில் உள்ளது. நமது இந்தியா நான்காவது உளளது.

நன்றி தினத்தந்தி

சோ.ஞானசேகர்

2 comments:

ஆ.ஞானசேகரன் said...

நல்ல பகிர்வு,... பகிர்வுக்கு நன்றியும்

S.Gnanasekar said...

தொடர்பு கொண்டு இருப்பதற்க்கு நண்றி நன்பர் ஆ.ஞானசேகரன் அவர்களே.