Thursday, October 1, 2009

இதயம்


ண்களை விட பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்க்கான சூழ்நிலைகள் குறைவு. அதற்கு காரனமாக இருப்பது, பெண்களின் உடம்பில் சுரக்கின்ற ஈஸ்ட்ரஜன் ஹார்மோன்தான். ஆனால் பெண்களின் மாதவிலக்கு நிலைத்துப்போகும் 'மெனோபாஸ்' காலகட்டத்திற்குப் பிறகு, ஈஸ்ட்ரஜன் சுரப்பு படிப்படியாகக் குறைந்து விடும். அதற்குப் பிறகு பெண்களுக்கும் ஹார்ட் அட்டாக் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகி விடும்.

தயத்தை நோக்கிச் செல்லுகின்ற ரத்த குழாய்களில் கொழுப்பு படிந்து விட்டால், அந்த குழாய்களின் வழியே ரத்தம் சீராகப் பாயாது. ஒருவித தடுமாற்றம் இருக்கும். இதைத்தான் ஹார்ட் அட்டாக் என்கிறோம் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், சர்க்கரை வியாதி, உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் மாரடைப்பு ஏற்படும் சூழல் அதிகரிக்கிறது. உணவுக் கட்டுபாடும், உடற்பயிற்சியும் இந்த தாக்குதலை தடுக்க உதவும்.

நெஞ்சு வலி வந்தால், அதற்குரிய மாத்திரையை நாக்குக்கு அடியில் வைத்துக் கொள்ள டாக்டர்கள் பரிந்துரைப்பார்கள். மாத்திரை பயன்படுத்தினாலும் உடனடியாக பக்கத்தில் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு கொண்டுப்போக வேண்டும். ஹார்ட் அட்டாக் வரும்போது, முதல் ஒரு மணி நேரம் மிக முக்கியமானது. இதய நாளங்களில் உள்ள ரத்தக்கட்டியை கரைக்க டாக்டர்கள் உடனடியாக அதற்குறிய ஊசி மருந்துகளை செலுத்துவார்கள்.

பெரும்பாலானோர் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக வீட்டிலேயே டிரெட்மில்லில் நடைபயிற்ச்சி செய்கிந்றனர். நடக்கும் போது நன்றாக வியர்க்கும். ஆனால், நீங்கள் நடக்கும் போது வழக்கத்தைவிட அதிகமான வியர்வை, படபடப்பு, நெஞ்சுவலி, ஒருவித அசவுகரியம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே பயிற்சியை நிறுத்திவிட்டு, உடலை பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இவைகள் கூட ஓரளவு இதய பிரச்சினையின் அறிகுறிதான்.

தோல்பட்டையில் வலி வந்தாலே, அது இதயத்தின் பிரச்சினைக்கான அறிகுறியாக சொல்லப்படுவதில் உண்மை இல்லை. இதயத்தில் பிரச்சினை என்றால், நடு நெஞ்சில் வலி உருவாகி, அந்த வலி தோல்பட்டையில் பரவி, சில நிமிடங்கள் வரை நீடித்து, பிறகு சரியாகிவிடும். இப்படி அடிக்கடி் ஏற்ப்பட்டால், நீங்கள் உஷாராகி உடனடியாக டாக்டரிடம் செல்ல வேண்டும்.

ந்த எளிதான வழியை கடைப்பிடித்துப் பாருங்கள். வாகன நெருக்கடி இல்லாத ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். மனதில் இருக்கும் கவலை அனைத்தையும் ஒதுக்கிவிட்டு, மெதுவாக நடக்க ஆரம்பியுங்கள். பத்து நிமிடம் இப்படி நடந்த பிறகு, உங்கள் நடையின் வேகத்தை அதிகப்படுத்துங்கள். பத்து நிமிடம் வேகமாக நடந்த பிறகு, மீண்டும் பத்து நிமிடங்கள் மெதுவாக நடந்து செல்லுங்கள். இப்படி தினமும் நாற்பது நிமிடங்கள் நடந்தால், இதய நோய் அண்டாது.

பொதுவாக ஒரு மனிதன் ஓய்வில் இருக்கும் போது அவனது இதயம் நிமிடத்துக்கு 70 முதல் 80 தடவை துடிக்கலாம். அதுவே அவன் ஓடியாடி வேகமாக வேலை செய்யும்போது, நிமிடத்திற்கு 150 தடவை துடிக்கலாம், ஆனால், இதயத்துடிப்பு மேலே சொன்ன அளவிலிருந்து குறையும் போது மயக்கம் வரும். இந்தப் பிரச்சினையை சரி செய்ய மருத்துவ ரீதியாக டாக்டர்கள் பொருத்தும் கருவிக்கு பேஸ் மேக்கர் என்று பெயர்.

பெண்கள் தாய்மை அடைந்திருக்கும் போது உடம்பில் உள்ள மூட்டு இணைப்புகள் சற்று நெகிழ்ச்சியடைய ஆரம்பிக்கும். அதே சமயத்தில் உடம்பும் சற்று தளர்ந்து விடும். அப்போது இதயத்துக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் ரத்தக்குழாய் (மகாதமணி) சீரில்லாமல் செயல்படக்கூடும். கர்பினிகளுக்கு நெஞ்சு வலி, மூச்சுத் திணறல், மயக்கம் ஆகிய அறிகுறிகள் தெண்பட்டால், உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்லவேண்டும்.

ருத்துவரிடம் கலந்தாலோசிக்காமல் கருத்தடை மாத்திரைகளை தாங்களாகவே கடைகளில் வாங்கி பயன்படுத்தும் போது இதயப் பிரச்சினை வரலம். காரணம், இது போன்ற மாத்திரைகள் தொடைப் பகுதியில் உள்ள ரத்தக் குழாய்களை உறைய வைத்து, அதன் மூலம் நுரையீரலைப் பாதிக்கிறது. அதனால் பென்கள், டாக்டரின் ஆலோசனை இல்லாமல் கர்பத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக் கூடாது.

ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்க விரும்புகிறவர்கள் அதிகக் கொழுப்புள்ள உணவை உண்ணக்கூடாது. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சிகிச்சை மற்றும் உணவு பழக்கம் மூலம் நோயை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உடல் பருமன் கூடவே கூடாது. நாற்பது வயதுக்கு மேல் உடல் பரிசோதனை மிக அவசியம். அடிக்கடி டென்ஷன் ஆகாமல், மனதை எப்போதும் ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளுங்கள்.யோகா, தியானம் செய்வது நல்லது.

தய நோய் பிரச்சினை உள்ளவர்கள் வனஸ்பதி, வெண்ணை, நெய் போன்ற உணவுப் பொருட்களை அறவே தவிர்க்க வேம்டும். நிறைய பழங்கள் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை நோயாளிகள் இனிப்புச் சத்து குறைந்த பழங்களை கொஞ்சம்க எடுத்துக் கொள்வது நல்லது. அசைவம் சாப்பிடுவோர் தோல் நீக்கிய கோழி இறைச்சியையும், மஞ்சள் கரு நீக்கிய முட்டையையும் சாப்பிடலாம்.
நன்றி...
சோ.ஞானசேகர்....

1 comment:

ஆ.ஞானசேகரன் said...

நல்ல தகவல்கள் ... மிக்க நன்றிங்க