Thursday, October 8, 2009

மனம் மகிழ்ச்சி

மனம் மகிழ்ச்சி
குழந்தை தத்தித்தத்தி நடைபழகுவதை காணும் பெற்றோர் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
கண்ட கண்ட பெண்களின் பின்னால் சுற்றித் திரிவது சிலருக்கு மகிழ்ச்சி. அவள் அவனை திரும்பி பார்த்தால் இன்னும் சந்தோஷம்.
துணைக்கு ஆளின்றி வருபவர்களை கண்டால் திருடனுக்கு மகிழ்ச்சி. இப்படி பலருக்கு பலவித மகிழ்ச்சி.
உண்மையில் மகிழ்ச்சி என்பது என்ன? அதன் இலக்கணந்தான் என்ன?
மகிழ்ச்சிக்கென்று தனி இலக்கணம் கூற முடியாது. அது மனித மனத்தின் ஒருவகை உணர்ச்சி, அவ்வளவுதான். அந்த மனதில் அவரவர் நிலைக்கும், சக்கிக்கும், இயல்புக்கும் ஏற்றபடி ஏற்படும் உணர்ச்சி அலைகள்தான் மகிழ்ச்சி எனும் பெயர் பெறுகின்றன. அந்த மனநிலைதான் நாமும், மற்றவர்களும் விரும்புவதாக இருக்கிறது. நாம் மகிழ்சியாக இருக்கும்போது நம்மை விரும்புகிறோம், மற்றவர்களையும் விரும்புகிறோம், எல்லாமே நமக்கு சந்தோஷம் தருபவையாக இருக்கின்றன.
ஒருவருடைய மனம் எத்தைகைய பயிற்சியைப் பெற்றுள்ளது என்பதைப் பொருத்தே அவருடைய மனம் இன்பத்தையும், துன்பத்தையும் அனுபவிக்கிறது. இதனால்தான் ஒருவருக்கு இன்பமாகத் தோன்றும் ஒன்று மற்றொருவரருக்கு துன்பமாகத் தோன்றுகிறது. தித்திக்கும் இனிப்பைக்கூட வெறுப்பவர்கள் இருக்கின்றனர். எனவே மகிழ்ச்சி என்பது ஒரு மனப்பழக்கம்தான்.
மனம் பொதுவாக புறமனம், ஆழ்மனம் என இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. இந்த மனம்தான் மகிழ்ச்சிக்குக் காரனமாக அமைகிறது. அதாவது மனதின் ஒருவித அனுபவம்தான் மகிழ்ச்சி எனப்படுகிறது.அது போலவே மகிழ்ச்சிக்கு நேர் எதிரான துயரமும் மனதின் ஒரு அனுபவம்தான். இன்பத்தையும், துன்பத்தையும் மனம்தான் அனுபவிக்கிறது.
இன்பத்துக்கும், துன்பத்துக்கும் பொதுவாக இரண்டுவகையான காரணங்கள் உள்ளன. ஒன்று புறக்காரணம் மற்றது அகக்காரணம். புறக்காரணங்களால் ஏற்படும் இன்பத்துக்கும், துன்பத்துக்கும் மனதின் எதிர்பார்ப்புகளும், லட்சியங்களும்தான் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியுடன் கழித்தால் நம் ஆயுள் முழுவதையும் மகிழ்சியுடன் கழித்து விட முடியும். நம்முடைய மனதில்தான் மகிழ்ச்சி புதையுணடு கிடைக்கிறது. நாம் அதை வெளியே கொண்டு வரவேண்டும். நம்முடைய மனதின் ஆற்றல் அளவிட முடியாதது. அதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஆழமான சுரங்கத்தில் அதிக கவனட்டுடன் தோண்டும் போது தங்கம் கிடைப்பது போல், நம்முடைய மனமாகிய சுரங்கத்தில் ஆழமாகத் தோண்டினால் மகிழ்ச்சி என்னும் நவரத்தினங்கள் ஏராளமாகக் கிடைக்கும்.
மனதில் உண்டாகும் மகிழ்ச்சியான எண்ணங்களால் உடல் அழகு பெறும். தைரியமும், மகிழ்ச்சியான எண்ணங்களும் உடலுக்கு வலுவைத் தருகின்றன. நம்முடைய உள்ளத்தில் மகிழ்ச்சியும், நல்லெண்மமும், சாந்தமும் குடி கொண்டால் உடலின் ஆரோக்கியமும், திடமும் அதிகரிக்கும். மகிழ்ச்சியான மனதையும், பரிசுத்தம்ன எண்ணங்களையும் கொண்டிருந்தால் நாமும் இன்பமாக வாழ முடியும். நம்முடைய மனதில் மகிழ்ச்சியான காட்சிகளைக் கண்டு வந்தால் நம்முடைய வாழ்க்கையிலும் விரைவிலேயே மகிழ்ச்சி நிச்சயம்.
நன்றி குடும்ப மலர் தினத்தந்தி...
சோ.ஞானசேகர்..

No comments: