சப்பாத்திக்கள்ளி இது ஒரு பாலைவனத்தாவரம் வறண்டபகுதியில் செழித்து, வளர்ந்து காணப்படும் ஒருவகை தாவரம்தான் சப்பாத்திக்கள்ளி. கள்ளிச் செடிகள் பலவகையுள்ளது. திருகுகள்ளி இலைக்கள்ளி, சதுரக்கள்ளி, மண்டங்கள்ளி, சப்பாத்திக்கள்ளி
இந்தச்செடி மற்ற செடிகள்போல் இலைகள் கிடையாது. இதன்தண்டுகள் வட்டவடிவில் ஒன்றுடன் ஒன்று இனைந்து எல்லா இடத்திலும் முட்கள் நிறைந்து இருக்கும். எழிதில் தாவரங்களை உண்ணும் பிராணிகளிடமிருந்து தப்பிக்க யாரும் நெருங்கமுடியாத படி பாதுகாப்பாக இருக்கும். தன்னைப் பாதுகாத்துக்கொள்ள தனக்குத்தானே அந்தத் தாவரம் போட்டுக்கிட்ட வேலி தான் முட்கள். இந்தச் செடிகள் எல்லாமே பாலைவனத் தாவரங்கள். இதனால் இளையில் இருக்கிற தண்ணீர் முழுவதும் பாலைவனச் சூட்டுல ஆவியாகி வெளியேறிவிடும். எனவேதாண், கள்ளித்தாவரங்கள் தண்டிலேயே நீரைத் தேக்கி வச்சிருக்கும். அதேபோல இலைகள் செய்ய வேண்டிய உணவுத் தயாரிப்பையும் தண்டுகளே செய்துகொள்கிறது.
இதனுடைய பூ மிகவும் அழகாகயிருக்கும் இதன் பழம் சிவப்பு கலராக இருக்கும். பழம் சுவையாக இருக்கும். அந்த பழங்களை பறித்துச் சாப்பிடுவது அவ்வளவு எளிதல்ல முதலில் முட்கள் எதுவும் கையில் குத்தாமல் அந்தப் பழத்தை பறிக்க வேண்டும். பறித்தவுடன் எல்லாப் பழங்களையும் போல் சாப்பிட முடியாது அந்த பழங்களின் தோலைச் சுற்றிலும் மிக நுண்ணிய முட்கள் இருக்கும் அதை தேய்த்து நீக்க வேண்டும். பழத்தை இரண்டாக பிளந்தால் அதன் நடுவில் ரவுண்டாக ஒரு முள் இருக்கும். பின்பு மிகவும் கவனமாகச்சாப்பிட வேண்டும் மிகவும் சுவையாக இருக்கும். இந்தப்பழத்தை மிகவும் கவனமாகச் சாப்பிட வேண்டும் இல்லையென்றால் ஆபத்து. அதன்ல் இதை யாரும் எழிதில் நெருங்குவதற்கு பயப்படுவார்கள்.
மாவுப்பூச்சி இந்தப்பூச்சிகள் நம் ஊரிலுள்ள சப்பாத்திக்கள்ளிகளை அழிப்பதற்காக வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. சப்பாத்திக்கள்ளி ஒழிந்து விட்டது. ஆனால் இந்தப்பூச்சிகள் ஒழியவில்லை.
இந்தப்பூச்சி அவைகள் சாப்பிடுவதற்கு சப்பாத்திக்கள்ளிகள் இல்லாததால் எல்லாவற்றையும் சாப்பிட ஆரம்பித்துவிட்டன.
இந்தப்பூச்சி அவைகள் சாப்பிடுவதற்கு சப்பாத்திக்கள்ளிகள் இல்லாததால் எல்லாவற்றையும் சாப்பிட ஆரம்பித்துவிட்டன.
இதுபோல் நமது இயற்கை வழங்களை அழிப்பதற்கு நிறைய விஷச் செடிகள் மறைமுகமாக இறக்குமதியாகியுள்ளது......
இயற்கை இயல்புகளைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துவோம்...
No comments:
Post a Comment