Wednesday, March 30, 2011

நமது நாடு 9. ஆரியர்


  நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்திய நாட்டுக்குப் புதிய மக்கட் கூட்டத்தினர் ஒருவகையினர் வந்தனர். அவர்கள் மத்திய ஆசியாவில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் ஆடு மாடுகளை மேய்த்து அவை கொடுக்கும் பால் முதலிய பயன்களைக்கொண்டு வாழ்ந்தனர். ஒரு காலத்தில் பல ஆண்டுகள் மழை இல்லாமையால் அவர்களின் ஆடு, மாடுகள் மேய்வதற்கு எவ்விடத்தும் புல் கிடைக்கவில்லை. அதனால் அவர்கள் கூட்டங் கூட்டமாகத் தமது ஆடு, மாடுகளுடனும் பெண்டு பிள்ளைகளுடலும் பல திசைகளை நோக்கிச் சென்றார்கள். அவ்வாறு சென்றவர்களுள் ஒரு கூட்டத்தினர் இந்தியாவின் வட மேற்கே உள்ள கைபர் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் புகுந்தனர். அவர்கள் புகுந்தபோது இந்தியா முழுவதும் வாழ்ந்துகொண்டிருந்தோர் தமிழ் மக்களேயாவர்.

     ஆரியர் நிறத்தில் வெண்ணிறமுடையோர். உலகில் மக்களின் நிறங்கள் வெவ்வேறாகக் காணப்படுவதற்குச் சில இயற்கைக் காரணங்கள் உண்டு. இவ்வுலகில் எல்லா இடங்களும் ஒத்த வெப்ப தட்ப நிலையுடையன வல்ல. இடங்களின் வெப்ப தட்ப நிலைகளுக் கேற்ப மக்களின் நிறம் மாறுபடுகிறது. பூமியின் நடுக்கோட்டை (மத்திய இரேகை) அடுத்த நாடுகள் மிக வெப்ப முடையன. நடுக்கோட்டில் இருந்து வடக்கு அல்லது தெற்கு நோக்கிச் செல்லச் செல்லப் படிப்படி கருமைகுறைந்து வெண்மை அடைந்த மக்களைக் காணலாம். மத்திய தரைக்கடலை அடுத்த நாடுகளில் தமிழர் சென்று குடியேறினார்கள் என முன் பதிவில் படித்தோம். அம்மக்களின் ஒரு கூட்டத்தினர் வட துருவ நாடுகளில் நீண்ட காலம் வாழ்ந்து வெண்ணிற மடைந்தனர். அவர்களே பின்னர் மத்திய ஆசியாவிற்றங்கிப் பின் இந்தியாவுக்குள் நுழைந்த ஆரியராவர்.

  இந்தியாவை அடைந்த ஆரியர் அங்கு தமது மாடு முதலியன மேய்வதற்கு ஏற்ற புல் வளர்ந்திருப்பதைக் கண்டனர். தொடக்கத்தில் அவர்கள் இன்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் தங்கி வாழ்ந்தனர். அவர்கள் வந்த வழியைப் பின்பற்றி இன்னும் அவர் கூட்டத்தினர் பலர் வந்தடைந்தார்கள்.

  அவர்கள் அங்குத் தங்கிப் பெருகலாயினர். அவர்கள் அங்கு வாழ்ந்துகொண்டிருந்த தமிழர்களை வென்று நிலங்களைத் தமக்குச் தொந்தமாக்க விரும்பினார்கள். ஆரியர், தமிழரிலும் பார்க்க உடல் வலியும் முரட்டுத் தன்மையும் உடையவர்களாயிருந்தனர். அவர்களிடத்தில் குதிரைகளும் இருந்தன. ஆரியர் வருகைக்கு முன் தமிழர் குதிரையைப்பற்றி அறிந்ததில்லை. தமிழர் நாகரிக உயர்வும் அமைதியும் உடையவர்களாய் வாழ்ந்துகொண்டு இருந்தனர்.


தொடரும்..

No comments: