Thursday, March 10, 2011

நமது நாடு 6. எகிப்தியர்


    தமிழ் நாட்டினின்றும் புறப்பட்ட இன்னெரு கூட்டத்தினர் மேற்கு நோக்கிச் சென்றனர், அவர்கள் செங்கடல் வழியாக வட ஆப்பிரிக்காவை அடைந்தனர். அங்கு என்றும் நீர் வற்றாத ஆறு ஒன்று உண்டு. அதற்கு நீல ஆறு (நைல்) எனேபது பெயர். அதன் பள்ளத்தாக்குகள் பயிர் இடுவதற்கு மிகவும் வாய்ப்புடையன. இவ்வாற்றேரங்களில் வந்து அக்கூட்டத்தினர் தங்கினர், நாடு நகரங்கள் உண்டாயின. அங்கு எழுந்த நகரங்களுள் மெம்பிஸ், தீப்ஸ் என்னும் பட்டினங்கள் சிறந்திருந்தன. அம்மக்கள் குடியேறிப் பெருகிய இடம் எகிப்து எனப் பெயர் பெற்றது. எகிப்தில் வாழ்ந்த மக்கள் எகிப்தியர் எனப்பட்டனர்.

   எகிப்தியர் பைபிரஸ் என்னும் ஒருவகைத் தாளில் எழுதினார்கள். அவர்கள் நூல்களில் அவர்கள் பண்டு நாட்டினின்றும் வந்து குடியேறினார்கள் எனக் கூறப்படுகின்றது. பண்டு என்பது பாண்டிநாட்டின் பழைய பெயர்.

    ஐயாயிரம் ஆண்டுகளுக்குமுன் எகிப்தியர் தென்னிந்தியாவோடு வாணிகம் நடத்தினார்கள். குரங்குக்கும் யானைத் தந்தத்துக்கும் அவர்கள் மொழியில் வழங்கிய பெயர்கள் இன்றும் தமிழில் காணப்படுவன. அவை கவு, எவு என்பன. இவை கவி, இபம் என்னும் தமிழ்ச் சொற்களின் திரிபுகள். தமிழர்களிடையும் பழைய எகிப்தியரிடையும் காணப்பட்ட பழக்கவழக்கங்கள் பெரும் பாலும் ஒரே வகையின. அவர்கள் எழுதுவதற்கு ஓவியங்களைப் பயன்படுத்தினர். ஓவியங்களே தமிழ் மக்களின் எழுத்துக்களாக ஒருகாலத்தில் இருந்தன. அவர்கள் தினமும் பருகும் ஏனங்களைச் (பாத்திரம்) சுத்தஞ் செய்தார்கள். குருமார் தோய்த்துலர்ந்த ஆடையுடுத்தினர், ஒவ்வொரு மூன்றாவது நாளும் உடல் முழுவதையும் மழித்துக்கொண்டனர், காலில் மிதியடி தரித்தனர், இடபத்துக்கும் ஞாயிற்றுக் காடவுளுக்கும் பூசை செய்தனர், விரதமிருந்தனர், மரணத்துக்குப்பின் உயிர் நிலைபெறுவதை நம்பினர். இறந்தவர்களை அடக்கம் செய்யும் போது உணவும், அவர்கள் பயன்படுத்திய பொருள்களும் பக்கத்தேவைக்கப்பட்டன. எகிப்தியர் வழிபட்ட தாய்க்கடவுளுக்கு ஊர்தி சிங்கம். எகிப்தியரின் மரக்கலங்கள் இன்றும் இந்தியநாட்டில் காணப்படுவன போன்றவை.

   எகிப்திய மக்கள் ஆறாயிரம் ஆண்டுகளின் முன் பெரிய கூர்நுதிக் கோபுரங்களைக் கட்டினார்கள். இவை அரசரின் உடலை அடக்கஞ் செய்வதற்காகக் கட்டப்பட்டன. இவை இன்னும் உலக வியப்புகளுள் ஒன்றாக விளங்குகின்றன. இவர்களின் நாகரிகம் மிகப் பழமையுடையது.

No comments: