இரவு நேரங்களில் மின்னிக்கொண்டே செல்லும் சில பூச்சிகளை நாம் பார்த்திருக்கிறோம். இதைத்தான் மின்மினிப்பூச்சி என்று அழைப்பார்கள். விலங்கினங்களைப் பொறுத்தவரை, ஒருசெல் உயிரியில் இருந்து ஆழ்கடல் மீன்கள் வரை பல்வேறு உயிரினங்கள் ஒளியை உமிழக்கூடிய ஆற்றல் பெற்றவையாக விழங்குன்றன. அவற்றுள் மின்மினிப் பூச்சிகள் கூட்டமாக ஒளியை உமிழ்ந்து கொண்டு செல்வதைப் பார்க்க மிக அழகாக இருக்கும்.
மின்மினி ஒளியை உமிழ்வது உயிர் வேதியியல் செயலாகும். இந்தப் பூச்சிகள், சுவாசத்துளைகளின் வழியாகச் செல்லும் சுவாசக் குழல்கள் மூலம் சுவாசிக்கின்றன. இவற்றின் அடிவயிற்றுப் பகுதியில் தனிச்சிறப்பு மிக்க செல்கள் காணப்படுகின்றன. இந்தச் செல்களில் லூஸிபெரின் என்ற வேதிப்பொருள் காணப்படுகிறது. இந்தச் செல்களுடன் சுவாசக்குழல்கள் தொடர்பு கொண்டிருப்பதால், இதனுடன் ஆக்சிஜன் வினைபுரிந்து ஒளியைத் தருகிறது. இந்த வேதிவினைக்கு ஆற்றலும் தேவைப்படுகிறது. இந்தப் பூச்சிகள் பச்சை, சிகப்பு, மஞ்சள், ஆரஞ்சு என பல்வேறு வகையான ஒளியை உமிழ்கின்றன.
காட்டைவளர்த்து நாட்டைக்காப்போம்...
No comments:
Post a Comment