Saturday, May 23, 2009

பதவி பேரம்

பதவி பேரம்

அப்பன் எப்பசாவான் சொத்தை எப்ப பிரிக்கலாம் என்று சொல்வது போல நடக்குது பதவி பேரங்கள்.

15வது மக்களவைத் தேர்தலில் தாங்களே எதிர்பாராத அளவிற்கு ‘அமோக வெற்றி’ பெற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, தனது தோழமைக் கட்சிகளுடன் கடந்த இரண்டு நாட்களாக நடத்தும் பதவி பேரக் கூத்து, நாட்டை ஆள நாம் தேர்ந்தெடுத்த தலைவர்களின் யோக்கியதையை அப்பட்டமாக காட்டிக் கொண்டிருக்கிறது.

18 உறுப்பினர்களைக் கொண்டுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர் கருணாநிதி சோனியாவுடன் நடத்தும் பேரம், மக்கள் நலனை நாடுகின்றனவா அல்லது தங்கள் கட்சிக்கும் தங்களுக்கும் தேவையான நிதியை அள்ளிக் குவிக்க அமைச்சகங்களைத் தேடுகின்றனவா என்கின்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

தனது மகன் மு.க. அழகிரி, மகள் கனிமொழி, முரசொலி மாறன் மகன் தயாநிதி மாறன், டி.ஆர். பாலு, ஆ. ராசா ஆகிய 5 பேருக்கு காபினட் அமைச்சர்கள் பதவி தரவேண்டும் என்றும், இது தவிர மேலும் 4 இணை அமைச்சர்கள் பதவியையும் திமுக தலைவர் கேட்கிறார்.

மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்வார் தம் மக்கள் நலம் ஒன்றே தான் கருத்தில் கொள்வார் என்று புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களின் சினிமா படப்பாடல் எவ்வளவு பெருத்தமாக இருக்கிறது.

தமிழ்நாட்டின் 6 கோடிமக்கள் தேர்ந்தெடுத்த உறுப்பினர்களில் பதவிக்கு மகன், மகள், பேரன், பேத்திகளுக்குதான் பதவியா திமுக வில் வேற ஆள் கிடையாதா! இப்பெழுது பேரம் பேசும் நேரமா இது கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி தற்போது எத்தனை அமைச்சர்கள் பதவியை கேட்பது, அல்லது பெருவது, பெற்றுக்கொள்ள மறுப்பது, அதற்க்கு நேரம் இதுவா? இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் தன்தலைவன் நிலமை என்ன என்ற கவலையிலும் பட்டினியாலும் செத்து மடிவது கண்டு வேதனை படாமல் பதவி பேரம் செய்வது முறையை, தருமமா, வேதனை அழிக்கிறது. கண்ட இலாக்கா கேட்பதை விட தமிழர் நலன்காக்கும் ஒரு இலாக்கா கேட்டு தமிழர்களை அழியாமல் காக்கலாம் அதை விட்டு விட்டு பதவி பேரம் நடத்திக் கொண்டு இருப்பது வெக்ககேடானது.

சோ.ஞானசேகர்

Wednesday, May 20, 2009

மாவீரன் பிரபாகரன் சாகவில்லை
எங்கள் ''தலைவர் பிரபாகரன் போரில் இறந்துவிட்டதாக சொல்லப்படுவதை நாங்கள் நம்பத் தயாரில்லை, ஒரு வேளை அவர் இறந்துவிட்டால் இலங்கைக்கு சென்று நாங்கள் இறப்பதைவிட இந்திய மண்ணிலே சாக விரும்புகிறோம் என்று அகதிகள் முகாமில் வசிக்கும் தமிழர்கள் உருக்கமுடன் கூறியுள்ளனர்.
இலங்கையில் நடைபெற்று வரும் போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்ததை தொடர்ந்து இலங்கை தமிழர் முகாமில் மக்களிடையே மிகுந்த பதற்றம் காணப்படுகிறது. மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்திருந்தனர்.
கடந்த இரண்டு நாள்களாக மிகுந்த கவலையோடு இருக்கின்றனர். ஆண்கள் வேலைக்கு போகாமல் உள்ளனர். கூட்டமாக தொலைக்காட்சி செய்திகளை பார்த்து அழுதவண்ணம் இருக்கின்றனர்.இலங்கை நிலவரம் குறித்து முகாம் மக்கள் போரில் பிரபாகரன் இறந்ததாக இலங்கை அரசு கூறும் செய்தியை நாங்கள் நம்பவில்லை, ஒரு வேளை பிரபாகரன் இறந்திருப்பாரானால் அந்த வேதனையோடு திரும்ப இலங்கைக்கு நாங்கள் செல்வதைவிட இந்தியாவிலேயே விஷம் குடித்து இறக்க ஆசைப்படுகிறேம் என்கிறார்கள்.
''போருக்கு பின்னர் இலங்கையில் தமிழர் பகுதியில் சிங்களவர்களை குடியேற்ற இலங்கை அரசு முயற்சித்து வருவதாகவும், தாய்,தந்தை, உற்றார் உறவுகளை இலங்கை அரசு கொன்று குவித்த பிறகு சிங்கள மக்களுடன் ஒற்றுமையாய் வாழ்வது என்பது இயலாத காரியம்'' என்று முகாம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் குறிப்பிட்டார்.
''இலங்கையில் ஆயிரக்கனக்கான மக்களை கொன்று குவித்த இலங்கை அரசு தனது செயலை மறைத்து உலக நாடுகளின் கவனத்தை திசை திருப்பவே பிரபாகரன் போன்ற உருவ முக அமைப்பை செய்து இவர்தான் பிரபாகரன் என்று கூறி வருவதாகவும் அதை நம்பத் தயாராய் இல்லை என்றும் முகாம் பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவித்தனர். இலங்கையில் உறவினர்களிடம் தொலைபேசியில் பேசி உண்மை நிலவரம் பற்றி கேட்க முயற்ச்சிக்கும் போது அங்கு தொலைபேசி பேச்சு ஒட்டு கேட்கப்படுவதால் அவர்கள் இது குறித்து எதுவும் தெரிவிப்பதில்லை'' என்றும் முகாம் தமிழர்கள் தெரிவித்தனர். விடுதலைப் புலிகள் தலைமையகத்திலிருந்து அறிவிப்பு வரும் வரை பிரபாகரனை பற்றி வரும் எந்தத் தகவலையும் நாங்கள் நம்பமாட்டோம் என்றும் அவர்கள் கூறினார்கள்.
நன்றி தினமணி...
சோ.ஞானசேகர்

Tuesday, May 19, 2009

தமிழ் தாய் தன் தலைமகனை இழந்தாள்

தமிழ் தாய் தன் தலைமகனை இழந்தாள்

பிரபாகரன் வீர மரணம் அடைந்தார்.தமிழீழத்துக்காக விடுதலைப் புலிகலாள் நடத்தப்பட்டுவந்த 33 ஆண்டு கால போராட்டத்துக்கு கசப்பான முடிவு ஏற்ப்பட்டுள்ளது. அவர் கொலை செய்யப்படவில்லை அவர் ஒரு போராளி சயனைடு அருந்தி தற்கொலை செய்து கொள்வாரே தவிர தப்பி ஓடமாட்டார் ஏன் என்றால் அவர் மாவீரன். இன்று புலிகள் அழிக்கப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு நினைக்கலாம் அங்கே ஒவ்வெரு பெண்ணின் வயிற்றிலும் ஒரு புலி பிறந்துகொண்டிருக்கும்.
சோ.ஞானசேகர்.

Monday, May 11, 2009

மாவீரன்

மாவீரன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்
தொடர்ந்து போரிடுவதற்கு பிரபாகரனுக்கு இன்னும் போதிய
மன உறுதி இருக்கிறது: பிரபல ஊடகவியலாளர் அனிதா பிரதாப் [ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2009, 10:30 மு.ப ஈழம்]
[பா.பார்த்தீபன்] தொடர்ந்து போரிடுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின்
தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இன்னும் போதிய மன
உறுதி இருக்கிறது என்று இந்தியாவின் பிரபல ஊடகவியலாளர்
அனிதா பிரதாப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'த வீக்' ஆங்கில வார இதழுக்கு அவர் எழுதிய
கட்டுரையின் தமிழ் வடிவம் வருமாறு:
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை
பிரபாகரன் ஒரு தேசியத் தலைவர், விடுதலைப் போராளி,
புரட்சியாளர், கெரில்லா வீரர், கொலையாளி, பாதுகாவலர்,
கொடுங்கோலர், தொலைநோக்குப் பார்வை கொண்டவர்,
பயங்கரவாதி எனப் பலருக்கும் பலவகையில் தோற்றம்
அளிக்கிறார். அவரைப் போற்றுவதும், தூற்றுவதும்
அவரவரின் கொள்கை நிலையைப் பொறுத்தது.
பிரபாகரனின் சிந்தனையில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது
என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் அவர்
அச்சம் அடையவோ, விரக்தி அடையவோ இல்லை என்பதை என்னால்
உறுதியாகக் கூற முடியும்.
சாவைக் கண்டு அவர் அஞ்சவில்லை. 17 வயதிலிருந்தே அவர்
சாவுடன் உறவாடி வருகிறார்.
அவர் சிறிதும் தளர்ச்சி
அடையாத போர் வீரர். அனைத்து நடைமுறை விடயங்களில்
இருந்தும் தத்துவஞானி போல விலகி நிற்பவர்.
எனினும், தனது கொள்கைத் திட்டக் குறிக்கோளான தமிழ்
ஈழத்தை அடைவதில், ஊசலாட்டம் அற்ற ஈடுபாட்டை
வெளிப்படுத்தி வருபவர்.
இந்தப் போர்ப் பின்னடைவுகள், இலட்சியத்தின் மீதான
அவரின் நம்பிக்கையை அல்லது உறுதிப்பாட்டை தளர்வடையச்
செய்துவிடுமோ, சீர்குலைத்துவிடுமோ, அழித்துவிடுமோ
என்பது எனக்கு ஐயம்தான். அவர் தனது மக்களின்
விடுதலைக்காகவே போராடி வருகிறார் என்பதில் அவர்
மனத்தில் மிகவும் தெளிவாக இருக்கிறார். அந்தக்
கோட்பாட்டுக்காகவே அவர் வாழ்ந்து வருகிறார். அந்தக்
கோட்பாட்டுக்காகவே அவர் போராடி வருகிறார். அந்தக்
கோட்பாட்டுக்காகவே அவர் சாவதற்கும் தயாராக
இருக்கிறார்.
வெற்றிகளும் தோல்விகளும் வரும், போகும். பிரதேசங்களை
இழப்பதும், வெல்வதும் உண்டு. போராளிகள் இறப்பார்கள்,
தோழர்கள் துரோகம் செய்வார்கள். ஆனால் அவரின் இறுதி
மூச்சு வரையில், தமிழ் ஈழத்துக்கே அவர் உண்மையானவராக
இருப்பார்.
இந்த மோதல் குறித்து நான் 30 ஆண்டுகளாக எழுதி வருகிறேன்.
ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கம் அதனுடைய
போராட்டத்தில் இந்த அளவுக்குத் தனியாகவும், நண்பர்கள்
இல்லாமலும் இதற்கு முன் ஒருபோதும் இருந்தது இல்லை.
பிரபாகரன் அவரின் சொந்தச் செயற்பாடுகள் மற்றும் உலகச்
சூழ்நிலைமைகள் ஆகிய இரண்டும் சேர்ந்த
கூட்டுக்கலவையினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதன் காரணமாக,
இந்தியாவை மாற்ற முடியாத கருணையற்ற எதிரியாக அவர்
ஆக்கிக் கொண்டார்.
அமெரிக்கா மீது செப்ரெம்பர் 11 இல் நடத்தப்பட்ட
பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ஜோர்ஜ் புஸ்
அறிவித்த பயங்கரவாதத்துக்கு எதிரான போர்க் கொள்கையால்,
உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை சிறிதும் சகித்துக்
கொள்ளாத ஒரு சூழ்நிலைமை உருவாக்கப்பட்டு இருக்கிறது.
பயங்கரவாத அமைப்புகளுக்கும் தேசிய விடுதலைக்
குழுக்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை இது மங்கச்
செய்துவிட்டது.
உலகில் அரசு பயங்கரவாதத்தை எதிர்கொள்ளாத விடுதலைப்
படையோ, பதிலுக்குத் தங்களது தேசியவாதக் குறிக்கோள்களை
அடைவதற்காக பயங்கரவாதத்தை ஒரு நடைமுறைத் தந்திரமாகப்
பின்பற்றாத விடுதலைப் படையோ எதுவும் இல்லை. தான் போற்றி
வணங்கும் மாவீரர்களாகப் பிரபாகரன் கருதும் நேதாஜி
சுபாஷ் சந்திர போசும், பகத் சிங்கும் இந்தியாவை ஆண்ட
இங்கிலாந்து ஆட்சியாளர்களால் பயங்கரவாதிகள் என்று
அறிவிக்கப்பட்டவர்கள்தான்.
அண்மைக் காலம் வரையில் நெல்சன் மண்டேலாவும் கூட
பயங்கரவாதிகளின் பட்டியலில்தான்
வைக்கப்பட்டிருந்தார்.
விடுதலைப் புலிகள் இயக்கம் 30 நாடுகளில் பயங்கரவாத
அமைப்பு எனத் தடை செய்யப்பட்டுள்ளது. இது விடுதலைப்
புலிகள் இயக்கத்தை அழிப்பதற்கான உலகளாவிய ஒப்புதலை
சிறிலங்கா அரசுக்கு வழங்கியிருக்கிறது. இவ்வாறு
செய்ததன் மூலம், வரலாற்றில் பெரும் பேரழிவு ஆபத்து
ஏற்பட உலகச் சமுதாயம் அனுமதித்து விட்டது.
இது விடுதலைப் புலிகளுக்கு நேர்ந்த துன்பம் அல்ல,
தமிழர்களுக்கு நேர்ந்த துன்பம்.
ஓராண்டுக்கும் மேலாக, அப்பாவிகளான தனது சொந்த மக்கள்
மீதே குண்டு வீசித் தாக்கி வரும் அரசு உலகில் வேறு
எங்குமே இருக்காது. இதுபோன்ற குற்றத்துக்கு இஸ்ரேலிய,
அமெரிக்க, நேட்டோ படைகள் கூட உள்ளானதில்லை.
மோதல் அற்ற பாதுகாப்புப் பகுதி என்று அறிவிக்கப்பட்ட
பகுதியே, தாக்குதல் நடத்தும் படைகளுக்கும் விடுதலைப்
புலிகளுக்கும் இடையே சிக்கியுள்ள அப்பாவித் தமிழ்
மக்களுக்குப் பெரிய சாவுக் களமாக மாறி வருகிறது.
வெளி ஆட்கள், சுதந்திரமான சாட்சிகள் இல்லாமல் உலகில்
எங்குமே போர் நடத்தப்பட்டது இல்லை. ஈராக்கில் இல்லை,
ஆப்கானிஸ்தானில் இல்லை, காசா பகுதியில் இல்லை. ஆனால்
இலங்கையில், போர்ப் பகுதிக்குச் செல்ல செய்தி
ஊடகங்களுக்கும், தன்னார்வ அமைப்புகளுக்கும் தடை
விதிக்கப்பட்டுள்ளது. அங்கு உதவிப் பணியாளர்களைக்
கொண்டுள்ள ஒரே அமைப்பான அனைத்துலக செஞ்சிலுவைச்
சங்கம், அங்கு அப்பாவி மக்கள் பேரழிவு நிலைமையில்
இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
இரண்டரை இலட்சம் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
பல்லாயிரக்கணக்கானோர் அகதிகள் முகாம்களில் சிறை
வைக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர்
கொல்லப்பட்டுள்ளனர், முடமாக்கப்பட்டுள்ளனர்.
பிரபாகரனை ஆதரித்ததால் தமிழ் மக்களுக்கு இந்தக் கதி
வேண்டியதுதான் என்று சொல்பவர்கள் இதயமற்றவர்கள்,
குருடாகிப் போனவர்கள். பிரபாகரனை ஆதரிக்கிறவர்களும்
இருக்கிறார்கள், ஆதரிக்காதவர்களும் இருக்கிறார்கள்.
எப்படி இருந்தாலும், அவர் மீது செல்வாக்கு
செலுத்தக்கூடிய சக்தி அவர்களுக்கு இல்லை.
இந்நிலையில் சாதாரண அப்பாவி மக்களைத் தண்டிப்பதை
நியாயப்படுத்த முடியுமா? ஈராக்கில் புஷ் செய்த
பாவத்துக்காக அமெரிக்கமக்களை கொல்வது, அவர்கள் புஷ்சை இருமுறை
தேர்ந்தெடுத்தவர்கள் என்ற போதிலும், நியாயம் ஆகுமா?
சிறிலங்கா படைகள் விடுதலைப் புலிகளை அழிக்க முயல்வதில்
தவறு காண முடியாது. ஆனால், அந்த நடைமுறையில், தமிழ்
மக்களையும் அவர்களது தாயகத்தையும் சிறிலங்கா அரசு
அழிப்பதை நியாயப்படுத்தவோ மன்னிக்கவோ முடியாது.
ஆனால் இது பிரபாகரனை வலுப்படுத்தவே செய்யும்.
விடுதலைப் புலிகள் போரை வரவேற்கிறார்கள் என்பதை
அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் புரிந்துகொள்ள
மறுக்கிறார்கள்.
ஏனெனில் அது அவர்களின் அணிகளை பெருகச் செய்கிறது,
குறிக்கோள் மீது அவர்களின் உறுதிப்பாட்டை மீண்டும்
வலுப்படுத்துகிறது, தனிநாடு கோரிக்கைக்கு இன்னும்
உணர்ச்சிமயமான ஆதரவை உருவாக்குகிறது. நான் பார்த்த
முந்தைய போர்களில் (அப்போது செய்தியாளர்கள்
போர்ப்பகுதிக்குள் செல்ல முடிந்தது) இருந்து,
விடுதலைப் புலி போராளிகள் போரிடுவதை
விரும்புகிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடிந்தது.
சமாதான காலத்தில் விடுதலைப் புலி கெரில்லாக்கள்
கட்டுப்பாட்டுடனும், நிதானத்துடனும் இருக்கிறார்கள்.
போர்க் காலத்தில் முற்றிலும் மாறுபட்டு அதிக
உணர்ச்சியும் மகிழ்ச்சியும் கொண்டவர்களாக
இருக்கிறார்கள்.
விடுதலைப் புலிகளின் கதை முடிந்துவிட்டது என்று இதற்கு
முன்பும் பலமுறை கூறப்பட்டுள்ளது. கடந்த காலத்தில்
பிரபாகரன் பலமுறை 'கொல்லப்பட்டிருக்கிறார்' அல்லது
'கொல்லப்படும் நிலையை நெருங்கியிருக்கிறார்.' அவரது
பதுங்கு குழியைப் படையினர் எப்போதேனும் நெருங்கும்
எனில், பிரபாகரன் தனது சயனைட் குப்பியைக் கடித்து
விழுங்கி காவிய நாயகன் நிலையை அடைந்துவிடுவார்.
"தந்திரமான மதிப்பீடுகள் இல்லாத நிலையில், இதுதான்
முடிவு ஆட்டம் என்றும், இதுதான் பிரபாகரனின் கடைசி நிலை
என்றும் சிறிலங்கா அரசு கூறி வருவதையே
பத்திரிகையாளர்களும் திருப்பிச் சொல்லி வருகிறார்கள்.
கடந்த கால அனுபவத்தை வைத்து மதிப்பிடும்போது, இதை நான்
சந்தேகிக்கிறேன். பிரபாகரனின் பிடியில் இருந்து
கடைசித் துண்டு நிலத்தையும் சிறிலங்கா படை
கைப்பற்றிவிடும் என்பது உறுதி. ஆனால், விடுதலைப்
புலிகள் இயக்கமே முடிந்துவிட்டது என அதற்குப்
பொருளாகாது. அவர்கள் தாங்கள் சிறப்பாகத் தேர்ச்சி
பெற்றுள்ள, யாரும் எதிர்பாராத நிலையில் தாக்கும்
கொரில்லா போர்முறைக்குத் திரும்புவார்கள். ஒரு
பிரதேசத்தைக் கைப்பற்றுவது வேறு என்பதையும், அதைத்
தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பல்வேறு
சிக்கல்களை எழுப்பும் என்பதையும் ஏற்கெனவே பல்வேறு
படைகள் உணர்ந்திருக்கின்றன.
பிரபாகரன் இதற்கு முன்பும் போர்களில்
தோற்றிருக்கிறார். சொந்தப் படை, காவல்துறை,
நீதிமன்றங்கள், வரி விதிப்பு முறை முதலியவற்றைக் கடந்த
காலத்தில் ஒருமுறை அல்ல பலமுறை அவர் உருவாக்கி
இருக்கிறார் அவை எல்லாம் அழித்து
ஒழிக்கப்பட்டிருக்கின்றன. எல்லாவற்றையும் மீண்டும்
அவர் தொடங்கி உருவாக்கி இருக்கிறார்.
54 வயதாகும் பிரபாகரனிடம், மீண்டும் தொடங்குவதற்கும்,
மேலும் 20 ஆண்டுக் காலம் தொடர்வதற்கும் இன்னும் போதிய மன
உறுதி இருக்கிறது. இன்று பிரபாகரனின் நிலைமை
ஆபத்துக்கும் அச்சத்துக்கும் உரியதாகத் தோன்றுகிறது.
ஆனால் நல்வாய்ப்புச் சக்கரம் அப்படியே நிற்பதில்லை.
நிலைமைகள் மாறும். அமெரிக்கா மாறியிருக்கிறது. உலகம்
மாறிக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவம் மதிப்பிழந்து
விட்டது. சோசலிசம் பின்வாசல் வழியாக நுழைந்து
கொண்டிருக்கிறது. பெரிய வங்கிகள் எல்லாம் நொடித்துப்
போய்விட்டன. தலைப்புச் செய்திகளில் வளவாழ்வுச்
செய்திகளுக்கு மாற்றாக துன்பச் செய்திகள்
இடம்பிடித்து வருகின்றன.
புதிய காற்று கடந்த காலத்தின் அதீத நம்பிக்கைகள்
பலவற்றையும் தூக்கி வீசி வருகிறது. உலக அரங்கில் புதிய
வாய்ப்புகள், அணி மாற்றங்கள், முன்மாதிரிகள் நிகழ்ந்து
வருகின்றன. அவற்றின் தாக்கம் வெகுதொலைவில் இலங்கையில்
உள்ள மூலை முடுக்குகளிலும் உணரப்படும். கண்ணீர்த் துளி
வடிவில் அமைந்த அந்த அழகிய மரகதத் தீவு அமைதியுடன்
உறவாடுவதற்காக காத்திருக்கிறது என அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி
புதினம்.காம்
சோ.ஞானசேகர்

Friday, March 20, 2009

பேரையூர்


பேரையூர்
இந்ஊர் பெயரில் நிறைய ஊர்கள் இருக்கிறது இது மதுரை மாவட்டத்தில் உள்ளது. இதை சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு இந்த ஊர்தான் பெரிய டவுன். ஒரு முக்கிய விசயம் இந்த ஊரின் பெயர் முத்துக்குமாரசாமி தும்பிச்சநாயக்கணூர் பிரிட்டிஸ் காலத்தில் வந்த அதிகாரி ஊர் பேர் என்ன என்று கேட்டதற்க்கு ஊர் மக்கள் ஜமின்தார் பெயர்தான் ஊர் பேர் என்று சொல்ல பேரேஊரா என்று கேக்க அன்றிலிருந்து பேரையூர் ஆனது என்று சொல்லக் கேள்வி எவ்வளவு உண்மை என்று தெரியாது நாங்கள் படிக்கும் போது இங்குதான் உயர் நிலைப் பள்ளிக்கு வரவேண்டும். இங்கு நான் 7ஆம் வகுப்பு வந்து சேர்ந்தேன். முதலில் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது நான் அடிக்கடி ஸ்கூல் மாரியதால் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை கூடிய சீக்கிரம் நிறைய நன்பர்கள் வட்டம் அதிகமாகியது 6,7,8 வகுப்புகள் ஊருக்குள் இருக்கும் 9,10,11 ஆகிய வகுப்புகள் முக்கு ரோட்டில் இருக்கும் முக்கு ரோடு என்றல் நான்கு ரோடு சேரும் கல்லுப்பட்டி ரோடு, உசிலம்பட்டி ரோடு, சாப்டூர் ரோடு, ஊருக்குள் வரும் ரோடு. ஆண்கள் மேல் நிலை பள்ளி, பெண்கள் மேல் நிலை பள்ளி இது ஊருக்குள் உள்ளது. எல்லா மதத்தவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் எந்த பாகுபாடும் இல்லாமல். மேற்கு தொடர்ச்சி மலை பக்கததில் இருக்கிறது ஆனால் வறச்சியாக இருக்கும். ஸ்கூல் பக்கத்தில் உள்ள மலை மண்மலை என்று பெயர் அடுத்து மெட்டை மலை உள்ளது இதன் அடிவாரத்தில் சுப்பிரமணி கோவில் உள்ளது. இதற்க்கு எதோ ஒரு கிரி ஞாபகம் இல்லை தெரிந்தவுடன் ஞாபகப்படுத்துகிறேன். இது ஒரு பழைமையான கோவில். இங்கு சரவணபொய்கை உள்ளது பொய்கையில் குகை போன்ற அமைப்பில் நீர்விழும் தூம்புவா கல்லில் செதுக்கப்பட்டுள்ளது அதில் எப்போதும் எந்த காலத்திலும் தண்ணீர் வந்துகொண்டே இருக்கும்தண்ணீர் மிகவும் சுவையாக இருக்கும். மாமரம் நிறைய உண்டு நாங்கள் மாங்காயை அடித்து சாப்பிட்டு இருக்கிறேம். ஸ்கூல் அரை நாள் லீவு என்றால் பாதி ஸ்கூல் அங்குதான் இருக்கும் ஸ்கூலுக்கு போகாமல் கட் அடித்து திரிபவர்கள் எல்லாம் இங்குதான் இருப்பார்கள் இதுதான் எங்களுக்கு சரணாலயம். மெட்டைமலை மேல் மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக அங்கு ஒரு இஸ்மாமிய தர்க்கா உள்ளது. ஸ்கூல் ஆசிரியர்கள் எல்லாம் நன்றாக பாடம் எடுக்கூடியவர்கள் நாம்தான் சரியாக அவர்களை பயன்படுத்தவில்லை. ஆனால் இப்பெழுது ஊர் ரெம்ப மாரிவிட்டது. அப்போது இங்கு உள்ள ஒரே பொழுது போக்கு முருகன் சிணிமா தியேட்டர் 45 பைசா டிக்கட் அப்போது. பள்ளியில் இருந்து பிக்னிக் செல்லும் இடம் சாப்டடூர் கேணி இங்கு மலை மேல் செல்லவேண்டும் ரெம்ப நல்ல இடம். கேணியில் குளித்து கும்மாலம் போட்டு எடுத்துச்சென்ற சாப்பாட்டை சாப்பிட்டு மலைமேல் ஏரி விளையாடி கலைத்து மீண்டும் சாப்டடூர் வந்து பஸ்பிடித்து பேரையூர் வந்து அவரவர் ஊர் போய் சேர்வேம். இன்னும் ஒரு சிறப்பு எல்லா ஊர்களிளும் சந்தனக்கடை இருக்கும் ஆனால் இங்கு கருப்பு கலவை சந்தனம் பெயர் பெற்றது வாப்பா சந்தனக்கடையில் என்னுடைய நன்பரின் வாப்பா இருப்பார் அவரை நாங்கள் மாமா என்றுதான் சொல்வோம் எங்களை மாப்புள்ளை மார்கள் என்று சொல்வார்கள். கடையில் நிறைய வித்தியாசமான பாட்டில்கள் இருக்கும் அதில் கலர் கலரா தைலவகை சென்ட், அத்தர், பண்ணீர்,புணுகு, ஜவ்வாது என்னென்ன வாசனை திதவியங்கள் உண்டே அத்தனையும் இருக்கும் சந்தனம் கலக்கும் போது ஒரு சைக்கிள் போக்ஸ் கம்பியை பாட்டலில் விட்டு சந்தனத்தில் இரண்டு சொட்டு விட்டுட்டு கம்பியை நம் சட்டையில் தடவி விடுவார் சட்டையில் தடவாதீர்கள் மாமா நார்துன்னு சொன்னா சென்ட் போட்டாத்தான் பொண்ணுங்க பின்னால் வரும் என்று கேலிசெய்வார் ரெம்ப நல்ல மனிதர். அடுத்து ஒரு மனிதர் கிட்டு அய்யர் இவர் ஹோட்டலில் படிக்கிர பசங்க சாப்பிட போனால் நன்றாக பேசுவார் பைசா கொஞ்சமாக கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார் என்னுடைய பசங்கள்தான் படிக்கமாட்டான்கள் நீங்களாவது நன்றாக படியுங்கள் என்பார் இவர்கடையில் எனக்கு பிடித்தது பூரி கிழங்கு அதன் சுவை இன்னும் என் நாக்கில் இருக்கிறது. இப்பொழுது எத்தனையே இடத்தில் சாப்பிட்டும் அதற்க்கு ஈடு இல்லை. அடுத்து பஸ்டாண்ட்டில் உள்ள பழய பஸ்டாண்ட்டில் பரோட்டா கடை இங்கு நைட்தான் எங்கள் படைகள் செல்லும் அப்பொழுதான் ஒரு தாத்தா இருப்பார் அவரும் நல்லமனிதர் கொடுகிர காசை வாங்கிக்கொண்டு படிக்கிற பசங்க நல்லா சாப்பிடடுங்கடா என்று உரிமையேடு சொல்வார். இதனால் அவருக்கும் அவர் மகனுக்கும் ஒருநாள் சண்டை வந்து விட்டது சர்வர் போட்டுக் கொடுத்துவிட்டார். ஆனால் தாத்தா இது நான் வைத்தகடை பசி, படிப்புனா என்ன என்று உனக்கு தெரியாது ஆனால் எனக்கு தெரியும் பசிக்காக சின்னவயதில் வேலை செய்திருக்கிறேன் வசதி இருந்தும் நீ படிக்கவில்லை. அதனால் நான் தானம் பன்னவில்லை அவன்களும் சும்மா சாப்பிடவில்லை காசு கொடுத்துதான் சாப்பிடுகிறான்கள் என்று சொல்வார். அதனால் அவர் பையன் இருக்கும்போது நாங்கள் அதிகம் போகமாட்டோம். ரெம்ப நல்லமனிதர். அடுத்து நாங்கள் தங்கியிருந்த ரூம் பரிட்சை நேரத்தில் ஒரு 3 மாதம் தங்கியிருப்போம் ஒரே ரூம் 20 பேர்க்குமேல் தங்கியிருப்போம் சிலபேர் காசு கொடுக்க முடியாது அர்களும் சேர்ந்து தங்கியிருப்போம் இடத்தின் சொந்தக்காரர் நல்லமனிதர் படிக்கிற பையன்களிடம் அதிகம் பைசா வாங்க மாட்டார் ஆனால் மிகவும் கண்டிப்பானவர் எதுவும் தப்பு பண்ணினால் தண்டிக்காமல் விடமாட்டார் அவங்க கணக்குபிள்ளை தான் வந்து அவ்வப்போது மிரட்டுவார் எப்பவும் அந்த ரூம் படிக்கிபசங்களுக்குதான் கொடுப்பார் அது தான் பெரியரூம். இப்பொது எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. இன்னும் நிறைய பேசஇருக்கிறது மீண்டும் பேசலாம். ஞானசேகர்.

Wednesday, March 11, 2009

குற்றாலம்

குற்றாலம்

எனக்கு மலையும் மலைசார்ந்த இடங்கள் ரெம் பிடிக்கும் அதனால் சின்னவயதில் மலையை எங்கு பார்த்தாலும் ஏர ஆரம்பித்து விடுவேன். எங்கள் ஊர் மேற்கே சந்தையூர் என்ற ஊர் இருக்கும் அங்கும் மலை இருக்கும். பள்ளி விடுநமுறை நாளில் அங்கு போனால் மலை மேல் ஏரி இறங்குவேன்.படிக்கும் போது பேறையூர் மொட்டமலை, மண்மலை,டி.கல்லுப்பட்டி தேவன்குறிச்சிமலை, கோபால்சாமி மலை இப்படி நிறைய இருக்கிறது.ஆனால் குற்றாலமலை இயற்க்கையேடு கூடிய மலை.குற்றாலம் என்று சொன்னவுடன் நம்நினைவு அங்கு உள்ள அருவிகள்தான் ஞாபகமத்திற்க்கு வரும்.குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலையில் அடிவாரத்தில் தென்காசிக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இங்கு மொத்தம் 8 அருவிகள் இருக்கிறது. பேரருவி,சிற்றருவி, செண்பகதேவி அருவி, தேனருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, பழையகுற்றாலம் அருவி, புலியருவி என எட்டு அருவிகள் இருக்கிறது.குளிப்பது எப்படி வேண்டுமாலும் குளிக்கலாம் ஆனால் குற்றாலத்தில் குளிப்பது சீசன் நேரத்தில் குளிப்பதுதான் குளியல். சீசன் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் நல்ல சீசன், சாதரன காலங்களில் அருவியில் தண்ணீர் கொட்டும் ஆனால் சீசனில் தென் மேற்கப் பருவக்காற்று வீசும் போது சாரல் மழையாக பெய்யும் அந்த சாரல் குளிர்ந்த காற்று மிகவும் சுகமாக இருக்கும் சொன்னால் தெரியாது அனுபவித்தால்தான் அதன் சுகம் தெரியும். மேலும் இந்த மழை நீர் மலைகளில் தவழ்ந்து, மூலிகைமேல் பட்டு குளிர்ச்சியுடன் அருவியாக கொட்டும். இதைபார்பதற்க்கே ரம்மியமாக இருக்கும். மூலிகை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். இதற்க்கு எண்ணெய் மசாஜ் என்று பெயர் இதற்கு ஆட்கள் உண்டு ஒவ்வென்றுக்கும் கட்டணம் உண்டு. பெண்களுக்கு தனியாக பெண் மசாஜர் உண்டு.

பேரருவி

பேரருவி (மெயின் அருவி) குற்றாலம் சென்றதும் நம்மை வரவேற்க்கும் அருவி மெயின் அருவி இது கிட்டத்தட்ட 1,200 அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடலில் விழுந்து, பொங்கி தரைமட்டத்தில் விழுகிறது. இப்படி விழும் நீர் நம் தலையில் விழும்போது கூலாங்கல் விழுந்தது போல் இருக்கும்ஆண்களுக்கும், பெண்களுக்கும் குளிப்பதற்க்கு தனித் தனி இடங்கள் உண்டு.

சிற்றருவி

சிற்றருவி இந்த அருவி பேரருவிக் மேல் செண்பகதேவி அருவி செல்லும் வழியில் உள்ளது. இது சின்ன ஓடை போல் இருக்கும். குழந்தைகள் நன்றாக பயமில்லாமல் குளிக்களாம்.

செண்பகதேவி

செண்பகதேவி அருவி இந்த அருவி தரை மட்டத்திலிருந்து சுமார் 2கி.மி. இருக்கும். சிற்றருவிக்குமேல் செல்ல வேண்டும் இங்கு செண்பகதேவி கோவில் இருக்கிறது. இங்கு குற்றாலத்திற்கே உரிய குரங்குகள் நிறைய இருக்கும். நம் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். இந்த அருவியில் குளிக்கும் போது மிகவும் கவனமாக குளிக்க வேண்டும், அருவிக்கு கீழ் பெரிய நீர் தேக்கம் உண்டு அடுத்து பெரிய பள்ளம் உள்ளது.நிறையப்பேர் இறந்துள்ளனர் கவனமாக இருக்க வேண்டும்.

தேனருவி

தேனருவி செண்பகதேவி அருவிக் மேல் செல் வேண்டும் மிகவும் ஆபத்தான இடம் இங்கு செல்வதை தவிர்த்தல் நலம் செண்பகதேவி அருவியில் இருந்து ஒத்தையடி பாதையில் செல்ல வேண்டும்.மலை உச்சியில் இருந்து 1000 அடிக்கு மேல் இருந்து கீழ் நேக்கி கொட்டும் போது தேன் போல் கொட்டும் இங்கு தேன் கூடுகள் நிறைய உண்டு.இதன் ஆரம்ப இடத்தை நானும் என்னுடைய நன்பரும் அடைந்துள்ளேம். யாரும் ஏற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஐந்தருவி

ஐந்தருவி இந்த அருவி குற்றாலாத்தில் இருந்து 5 கி.மி. தூரத்தில் உள்ளது.மலையில் இருந்து விழும் நீர் ஐந்து பிரிவுகளாக பிரிந்து கொட்டுவதால் இதற்க்கு ஐந்தருவி என்று பெயர். ஆண்களுக்கும் மூன்று கிளைகளும் பெண்களுக்கு இரண்டு கிளைகளும் குளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

பழத்தோட்ட அருவி

பழத்தோட்ட அருவிஇந்த அருவி வி.ஐ.பி. அருவி, ஐந்தருவிக்கு மேல் உள்ளது வணத்துறையின் அனுமதி பெற்று குளிக்க வேண்டும்.

பழையகுற்றாலம்

பழையகுற்றாலம் அருவிஇந்த அருவி குற்றாலத்தில் இருந்து 8 கி.மி.தூரத்தில் உள்ளது பழையகுற்றாலம் இங்கு குளிப்பதற்க்கு நன்றாக இருக்கும் சவரில் குளிப்பது போல் இருக்கும்.துணி துவைப்பதற்க்கு வசதியாக இருக்கும்.ஆண்களுக்கும், பெண்களுக்கும் குளிப்பதற்க்கு தனித் தனி இடங்கள் உண்டு. பெண்களுக்கு துணிமாற்றுவதற்க்கு தனி இடங்கள் உண்டு.

புலியருவி

புலியருவி இது பழையகுற்றாலம் அருவி செல்லும் வழியில் உள்ளது. சின்ன அருவி குழந்தைகள் குளிக சிறந்த இடம்.

குற்றாலத்தில் குற்றாலநாதர் கோவில் உள்ளது முருகன் கோவில் உள்ளது. கலைவானர் அரங்கம், படகு துறை,சிறுவர் பூங்கா, பாம்புப் பணணை ஆகியவை உள்ளது.

நெல்லை,மதுரை ஆகிய ஊர்களில் இருந்து தென்காசி வழியாக குற்றாலம் போகலாம்.நெல்லை மாவட்டத்தில் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உண்டு.

-ஞானசேகர்

Monday, March 9, 2009

மூணார்


மூணார்


இந்த ஊர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய நகரம். நான் மதுரை தமிழனாக இருந்தாலும் பிறந்தது மூனாரில். நல்ல இயற்க்கை சூழ்ந்த மழை வாசஸ்தம். தேயிலை எஸ்டேட் நிறைந்த இடம். மூன்று ஆறுகள் சந்திக்கும் இடம் அதனால் மூனார் என்று அழைக்கப்படுகிறது. முத்திரப்புழா, சண்டுவரை மற்றும் குண்டலா என்ற மூன்று ஆறுகள் தான் அவை. கண்கவர்மேகங்களும், வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளும் கண் கொள்ளாக் காட்சி. தமிழ்நாட்டிலிரிருந்து போடிநாயக்கனூர் வழியாக செல்ல வேண்டும். இந்த நகரை அடையும் முன்னர் போடி மெட்டு என்ற அழகிய மலையுச்சியே கேரளத்துக்கும், தமிழகத்துக்கும் உள்ள எல்லையாகும்.


முருகன் கோவில் ஒன்றும் உண்டு. இங்கு கார்த்திகைப் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படும்.
தேயிலைத் தோட்டத் தொழிளாலர்களாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் கேரள நகரம். எங்கள் ஊர் மக்கள் இங்கு முன்பு அதிகம் பேர் வேலை செய்தார்கள்.
சின்னவயதில் இருந்த இடம் இண்னும் எண் கண்முன் இருக்கிறது என்னுடைய பையன்களை அழைத்துக் கொண்டு போகவேண்டும் என்று ரெம்ப நாள் ஆசை.

Thursday, March 5, 2009

பாஸ்டன் படுகொலையின்

இன்று...

மார்ச் 5, 1770 பாஸ்டன் படுகொலை

பாஸ்டன் படுகொலையின் ஒரு செதுக்குதல் பாஸ்டன் படுகொலை (Boston Massacre) மார்ச் 5, 1770இல் பாஸ்டன் நகரில் பிரிட்டீஸ் படையினர்களால் நடத்திய படுகொலையை குறிக்கும்.
1767இல் பிரிட்டீஸ் அரசு புதிதாக மக்கள் விரும்பாத பல வரிகளை அமெரிக்காவில் ஆரம்பித்தது. பெரும்பான்மையாக பாஸ்டன் நகரில் இதற்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. இதனால் பிரிட்டீஸ் அரசு படையினர்களை பாஸ்டனுக்கு அனுப்பியுள்ளது. இப்படையினர்களுக்கும் பாஸ்டன் மக்களுக்கும் இடையில் பல சிறிய வன்முறைகள் பாஸ்டன் படுகொலைக்கும் முன்பு நடந்தன.
மார்ச் 5, 1770 அன்று ஒரு பாஸ்டனியரும் ஒரு பிரிட்டீஸ் படையினரும் வாதாடு செய்துள்ளனர். பிறகு பல்வேறு மக்கள் கூட்டமாக வந்து படையினர்கள் மீது பனி உருண்டைகளை எறிந்தனர். இந்த வன்முறை வளந்து படையினர்கள் கூட்டம் மீது கைதுப்பாக்கிகளை சுட்டு மொத்தத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் காரணமாக பல்வேறு அமெரிக்க குடியேற்ற நாடுகளில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்து அமெரிக்க புரட்சி தொடங்கியுள்ளது.
விக்கிபீடியாவில் இருந்து.

நன்றி

ஞானசேகர்

"பயங்கரவாத அமைப்புகளுக்குள் பாக்கிஸ்தான்"

'அனைத்து பயங்கரவாத அமைப்புகளுக்கு பாக். புகலிடம்'

உலகின் அனைத்து முன்னணி பயங்கரவாத அமைப்புகளுக்கும் பாகிஸ்தான் புகழிடமாக விளங்குகிறது.
பாகிஸ்தானின் எல்லைப் பகுதியே பயங்கரவாத அமைப்புகளுக்கு புகழிடம் அளிக்கிறது. அங்கு அல்கய்தா, தாலிபான், ஹக்கானி, குல்பாதின் ஹெக்மத்யர் ஆகிய அமைப்புகளும், அவற்றுடன் தொடர்புடைய குழுக்களும் அங்கு கூட்டாக இயங்குகின்றன.
இந்த குழுக்கள் அனைத்தும் தனித் தனியானவை என்றாலும், பாகிஸ்தானில் அவை கூட்டாக இயங்குகின்றன. இந்த அமைப்புகளுக்கு பாகிஸ்தான் புகழிடம் அளித்து வருகிறது.
இந்த பயங்கரவாத அமைப்பாள் பாகிஸ்தான் மிகவும் மோசமான விளைவை சந்திக்கும் நிலை வெகு தூரத்தில் இல்லை.
மீண்டும் சந்திப்போம்.

ஞானசேகர்.

Friday, February 20, 2009

"கருப்பு கோட்டும் காக்கி சட்டையும் சட்டமும் தடியும்"

பிப்ரவரி, 19 வியாழக்கிழமை மாலை சென்னை உயர் நீதி மன்ற வளாகத்தில் நடந்த காட்டு மிராண்டித் தனங்கள். மக்களை பாதுகாக்க வேண்டிய காவல் துறையும் சட்டத்தை காக்க வேண்டிய நீதித் துறையும் அரக்க தனமாக நடந்து கொண்டது. நாம் எங்கு இருக்கிறோம் தமிழ் நாட்டிலா அல்லது வேறு எங்கு என்று தெரியவில்லை. ரவுடியை விட கேவலமாக நடந்து கொண்ட போலிஸார், வழக்கறிஞர்கள். தலைமை நீதிபதியே தாக்கப்படுதல்... இவர்கள் இப்படி நடக்கும் போது மக்கள் இவர்களை எவ்வாறு அனுகுவது அரசு இதற்க்கு என்ன பதில் இருக்கவே இருக்கிறது நமக்கு கவிதை வடிவில் பதில்..........

Friday, February 13, 2009

தாய்

உலகிலேயே மிகச் சிறந்தவள் தாய். சந்நியாசம் வாங்கி மிகப் பெரிய மகான் ஆன மகனை, தந்தை வணங்கலாம். மகனும் ஆசிர்வாதம் பண்ணலாம் ஆனால் எவ்வளவு பெரிய மகான் ஆனாலும் அவர் தன் தாயை வணங்க வேண்டும். தந்தை இறந்தால் கூட துறவத்தை கலைந்து விட்டு ஈமக் கடன்களை செய்ய வேண்டியதில்லை. ஆனைல் தாய் இறந்தால் கண்டிப்பாக துறவறத்தை கலைந்து விட்டு வெள்ளை ஆடை உடுத்தி ஈமக் கடன்களை செய்ய வேண்டும். அந்த அளவிற்க்கு தாய் உயர்ந்தவள்.

Tuesday, February 10, 2009

நில மங்கை

நிலம் அதிர நடக்கும்
மங்கை கண்டு
நில மடந்தை
வெக்கப் படுகிறாள்.

Monday, February 9, 2009

உறுதிமொழி

உறுதிமொழி

1.யாரையும் ஏமாற்ற மாட்டேன்.

2.யாருக்கும் கஷ்டத்தைக் கொடுக்கமாட்டேன்.

3.யாருக்கும் கெட்டதை சொல்ல மாட்டேன்.

4.நன்றாக இருப்பவத்களைப் பார்த்து பொறாமைப்பட மாட்டேன்.

5.மற்றவர்களைக் கிண்டலாகப் பேசி, மற்றவர்ள் தவருகளை பெரிதாக்கி, வீண் அரட்டை அடிக்க மாட்டேன்.

6.தவறான வழியில் வரும் பணத்துக்கு ஆசைப்பட மாட்டேன்.

7.எந்த தவறான வழிக்கும் போக மாட்டேன்.

8.என் வேலையை ஒழுங்காக செய்வேன்.

9.என் வேலையை உண்மையாகச் செய்வேன்.

10.வேலை செய்யும் போது அநாவசியமாக அடிக்கடி பேசமாட்டேன்.

11.ரெம்ப அவசியம் இருந்தால் மட்டுமே பொய் பேசுவேன்.சாதரண விஷயத்துக்கெல்லாம் பொய் பேசமாட்டேன்.

12.அம்மா அப்பாவிற்க்கு மரியாதை கொடுப்பேன்.

13.வயதில் பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பேன்.

14.இன்றைக்கு என்னால் முடிந்த ஒரு சின்ன உதவி மற்றவர்களுக்கு செய்வேன்.

15.கடவுளை வணங்கிக் கொம்டு இதையெல்லாம் சொலலி விட்டு அதன் படி நடக்கவில்லை என்றால் அதற்கும் பெரிய தண்டணை பின்னால் கிடைக்கும் என்று எனக்குத் தெரியும். அதனால் கடவுளிடம் தண்டனை வாங்க மாட்டேன், சென்னபடி நடப்பேன்.

மேலே எழுதியுள்ள உறுதிமொழியை வீட்டில் கடவுளின் படத்திற்கு முன்னால் நின்று கொண்டு படிப்பது மிகுந்த நன்மையைக் கொடுக்கும்.

எங்கள் ஊர்

 எங்கள் ஊர் கூவலப்புரம் மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா உள்ளது டி.கல்லுப்பட்டி பஞ்சாயத்து யூனியனில் உள்ளது. மேற்க்கு தொடர்ச்சி மலை சதுரகிரி அடிவாரத்தில் உள்ளது.
  எல்லா ஊர்களுக்கும் ஒரு கோயில் தான் இருக்கும் ஆனால் எங்கள் ஊர் கோயில்கள் நிறைந்த ஒரு சிறிய அழகிய கிராமம். அனைவரும் விவசாய குடும்பம். இங்கு மொத்தம் மக்கள் 500 நபர்கள் இருப்பார்கள். எங்க ஊரில் இருந்து மதுரை 40 கி.மி. இராசபாளையம் 30 கி.மி. பேரையூர் 8.கி.மி. டி.கல்லுப்பட்டி 16 கி.மி. முன்பு நாங்கள் படித்துக் கொண்டு இருக்கும் போது பஸ் வடதி கிடையாது நடந்து செல்ல வேண்டும் அல்லது சைக்கிளிள் செல்ல வேண்டும் இங்கு ஆரம்ப பாடசாலை 1 முதல் 8 வரை வகுப்புகள் உண்டு.     அதற்க்கு மேல் படிக்க பேரையூர் அல்லது டி.கல்லுப்பட்டி போக வேண்டும்.        
  வெளியில் சென்று ஊருக்குள் நுழைந்வுடன் முதலில் தெப்பக்குளம் இருக்கும் அதில் கை, கால் அலம்பிக் கொண்டு தான் வீட்டுக் செல்வார்கள். அடுத்து சுந்தரமூர்த்தி கோயில் மடம். இந்தமடம் எந்த நூற்றாண்டு கோவில் என்று பெரியவங்களுக்கும் தெரியவில்லை. மிகவும் பழைமையானவை முன்பு கூவலப்புரம் சாமியார் மடம் என்று கூறப்பட்டது இப்போது ரெட்டியார் ஜனசங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
கூவலப்புரம் சுந்தரமூர்த்தி கோயில் 
Koovalapuram (Sundaramoorthy Temple)
கூவலப்புரம் சுந்தரமூர்த்தி கோயில் மண்டப சிலைகள்
  கோவில் கொடிமரம் அண்ணக்கொடி கட்டியிருக்கும். ஆடி மாதம் ஆடி அமாவாசைக்கு மூன்று நாள் அண்ணதானம் நடைபெரும் மற்ற நாட்கள் வழிப்போக்கர்களுக்கு சாப்பாடு போடப்படும். இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.மேலும் ஆடி அமாவாசைக்கு சதுரகிரி மகாலிங்கம் கோவில்க்கு போவோர் இங்கு வந்து சுந்தரமூர்த்தியை தரிசித்து செல்ல வேண்டும் என்று ஒரு ஐதீகம் பெரியவர்கள் சொல்லக் கேள்வி.
  ஊருக்கு மேற்க்கே கருப்பசாமி கோவில் உள்ளது அதை கோவில் தோப்பு என்று சொல்வார்கள். அங்கு பஞ்ச பாண்டவர் வணவாசம் செய்யும் போது இங்கு தங்கி சென்றார்கள் என்று ஐதீகம் பஞ்ச பாண்டவர் கோவில் உள்ளது. கண்மாயின் உள்ளே அண்ணாமலை ஈஸ்வரன் கோயில் உள்ளது அதன் கரையில் முனிஸ்வரன் கோயில் உள்ளது. விவசாயம் கண்மாயில் தண்ணீர் இருந்தால் விவசாயம் நன்றாக நடக்கும்.அனைவரும் விவசாயக் குடும்பம்தான். இப்பொளுது பல துறைகளில் இருக்கிரார்கள்.
  இன்னும் நிறைய இருக்கு நாம் பேசலாம். மண்ணும்.... மனமும்.... ஞானசேகர்

Wednesday, February 4, 2009

என்னைப் பற்றி

வணக்கம் !
உங்களோட பேசுறதுல ரொம்ப மகிழ்ட்சி.
நான் பக்கா மதுரக்காரன்,
நேரம் கிடைகிரப்ப உங்கள்ட பேசுறேன்.
வருட்டுங்களா ?
அன்புடன்

-ஞானசேகர்