Saturday, May 23, 2009

பதவி பேரம்

பதவி பேரம்

அப்பன் எப்பசாவான் சொத்தை எப்ப பிரிக்கலாம் என்று சொல்வது போல நடக்குது பதவி பேரங்கள்.

15வது மக்களவைத் தேர்தலில் தாங்களே எதிர்பாராத அளவிற்கு ‘அமோக வெற்றி’ பெற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, தனது தோழமைக் கட்சிகளுடன் கடந்த இரண்டு நாட்களாக நடத்தும் பதவி பேரக் கூத்து, நாட்டை ஆள நாம் தேர்ந்தெடுத்த தலைவர்களின் யோக்கியதையை அப்பட்டமாக காட்டிக் கொண்டிருக்கிறது.

18 உறுப்பினர்களைக் கொண்டுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர் கருணாநிதி சோனியாவுடன் நடத்தும் பேரம், மக்கள் நலனை நாடுகின்றனவா அல்லது தங்கள் கட்சிக்கும் தங்களுக்கும் தேவையான நிதியை அள்ளிக் குவிக்க அமைச்சகங்களைத் தேடுகின்றனவா என்கின்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

தனது மகன் மு.க. அழகிரி, மகள் கனிமொழி, முரசொலி மாறன் மகன் தயாநிதி மாறன், டி.ஆர். பாலு, ஆ. ராசா ஆகிய 5 பேருக்கு காபினட் அமைச்சர்கள் பதவி தரவேண்டும் என்றும், இது தவிர மேலும் 4 இணை அமைச்சர்கள் பதவியையும் திமுக தலைவர் கேட்கிறார்.

மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்வார் தம் மக்கள் நலம் ஒன்றே தான் கருத்தில் கொள்வார் என்று புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களின் சினிமா படப்பாடல் எவ்வளவு பெருத்தமாக இருக்கிறது.

தமிழ்நாட்டின் 6 கோடிமக்கள் தேர்ந்தெடுத்த உறுப்பினர்களில் பதவிக்கு மகன், மகள், பேரன், பேத்திகளுக்குதான் பதவியா திமுக வில் வேற ஆள் கிடையாதா! இப்பெழுது பேரம் பேசும் நேரமா இது கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி தற்போது எத்தனை அமைச்சர்கள் பதவியை கேட்பது, அல்லது பெருவது, பெற்றுக்கொள்ள மறுப்பது, அதற்க்கு நேரம் இதுவா? இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் தன்தலைவன் நிலமை என்ன என்ற கவலையிலும் பட்டினியாலும் செத்து மடிவது கண்டு வேதனை படாமல் பதவி பேரம் செய்வது முறையை, தருமமா, வேதனை அழிக்கிறது. கண்ட இலாக்கா கேட்பதை விட தமிழர் நலன்காக்கும் ஒரு இலாக்கா கேட்டு தமிழர்களை அழியாமல் காக்கலாம் அதை விட்டு விட்டு பதவி பேரம் நடத்திக் கொண்டு இருப்பது வெக்ககேடானது.

சோ.ஞானசேகர்

No comments: