Wednesday, March 11, 2009

குற்றாலம்

குற்றாலம்

எனக்கு மலையும் மலைசார்ந்த இடங்கள் ரெம் பிடிக்கும் அதனால் சின்னவயதில் மலையை எங்கு பார்த்தாலும் ஏர ஆரம்பித்து விடுவேன். எங்கள் ஊர் மேற்கே சந்தையூர் என்ற ஊர் இருக்கும் அங்கும் மலை இருக்கும். பள்ளி விடுநமுறை நாளில் அங்கு போனால் மலை மேல் ஏரி இறங்குவேன்.படிக்கும் போது பேறையூர் மொட்டமலை, மண்மலை,டி.கல்லுப்பட்டி தேவன்குறிச்சிமலை, கோபால்சாமி மலை இப்படி நிறைய இருக்கிறது.ஆனால் குற்றாலமலை இயற்க்கையேடு கூடிய மலை.குற்றாலம் என்று சொன்னவுடன் நம்நினைவு அங்கு உள்ள அருவிகள்தான் ஞாபகமத்திற்க்கு வரும்.குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலையில் அடிவாரத்தில் தென்காசிக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இங்கு மொத்தம் 8 அருவிகள் இருக்கிறது. பேரருவி,சிற்றருவி, செண்பகதேவி அருவி, தேனருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, பழையகுற்றாலம் அருவி, புலியருவி என எட்டு அருவிகள் இருக்கிறது.குளிப்பது எப்படி வேண்டுமாலும் குளிக்கலாம் ஆனால் குற்றாலத்தில் குளிப்பது சீசன் நேரத்தில் குளிப்பதுதான் குளியல். சீசன் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் நல்ல சீசன், சாதரன காலங்களில் அருவியில் தண்ணீர் கொட்டும் ஆனால் சீசனில் தென் மேற்கப் பருவக்காற்று வீசும் போது சாரல் மழையாக பெய்யும் அந்த சாரல் குளிர்ந்த காற்று மிகவும் சுகமாக இருக்கும் சொன்னால் தெரியாது அனுபவித்தால்தான் அதன் சுகம் தெரியும். மேலும் இந்த மழை நீர் மலைகளில் தவழ்ந்து, மூலிகைமேல் பட்டு குளிர்ச்சியுடன் அருவியாக கொட்டும். இதைபார்பதற்க்கே ரம்மியமாக இருக்கும். மூலிகை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். இதற்க்கு எண்ணெய் மசாஜ் என்று பெயர் இதற்கு ஆட்கள் உண்டு ஒவ்வென்றுக்கும் கட்டணம் உண்டு. பெண்களுக்கு தனியாக பெண் மசாஜர் உண்டு.

பேரருவி

பேரருவி (மெயின் அருவி) குற்றாலம் சென்றதும் நம்மை வரவேற்க்கும் அருவி மெயின் அருவி இது கிட்டத்தட்ட 1,200 அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடலில் விழுந்து, பொங்கி தரைமட்டத்தில் விழுகிறது. இப்படி விழும் நீர் நம் தலையில் விழும்போது கூலாங்கல் விழுந்தது போல் இருக்கும்ஆண்களுக்கும், பெண்களுக்கும் குளிப்பதற்க்கு தனித் தனி இடங்கள் உண்டு.

சிற்றருவி

சிற்றருவி இந்த அருவி பேரருவிக் மேல் செண்பகதேவி அருவி செல்லும் வழியில் உள்ளது. இது சின்ன ஓடை போல் இருக்கும். குழந்தைகள் நன்றாக பயமில்லாமல் குளிக்களாம்.

செண்பகதேவி

செண்பகதேவி அருவி இந்த அருவி தரை மட்டத்திலிருந்து சுமார் 2கி.மி. இருக்கும். சிற்றருவிக்குமேல் செல்ல வேண்டும் இங்கு செண்பகதேவி கோவில் இருக்கிறது. இங்கு குற்றாலத்திற்கே உரிய குரங்குகள் நிறைய இருக்கும். நம் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். இந்த அருவியில் குளிக்கும் போது மிகவும் கவனமாக குளிக்க வேண்டும், அருவிக்கு கீழ் பெரிய நீர் தேக்கம் உண்டு அடுத்து பெரிய பள்ளம் உள்ளது.நிறையப்பேர் இறந்துள்ளனர் கவனமாக இருக்க வேண்டும்.

தேனருவி

தேனருவி செண்பகதேவி அருவிக் மேல் செல் வேண்டும் மிகவும் ஆபத்தான இடம் இங்கு செல்வதை தவிர்த்தல் நலம் செண்பகதேவி அருவியில் இருந்து ஒத்தையடி பாதையில் செல்ல வேண்டும்.மலை உச்சியில் இருந்து 1000 அடிக்கு மேல் இருந்து கீழ் நேக்கி கொட்டும் போது தேன் போல் கொட்டும் இங்கு தேன் கூடுகள் நிறைய உண்டு.இதன் ஆரம்ப இடத்தை நானும் என்னுடைய நன்பரும் அடைந்துள்ளேம். யாரும் ஏற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஐந்தருவி

ஐந்தருவி இந்த அருவி குற்றாலாத்தில் இருந்து 5 கி.மி. தூரத்தில் உள்ளது.மலையில் இருந்து விழும் நீர் ஐந்து பிரிவுகளாக பிரிந்து கொட்டுவதால் இதற்க்கு ஐந்தருவி என்று பெயர். ஆண்களுக்கும் மூன்று கிளைகளும் பெண்களுக்கு இரண்டு கிளைகளும் குளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

பழத்தோட்ட அருவி

பழத்தோட்ட அருவிஇந்த அருவி வி.ஐ.பி. அருவி, ஐந்தருவிக்கு மேல் உள்ளது வணத்துறையின் அனுமதி பெற்று குளிக்க வேண்டும்.

பழையகுற்றாலம்

பழையகுற்றாலம் அருவிஇந்த அருவி குற்றாலத்தில் இருந்து 8 கி.மி.தூரத்தில் உள்ளது பழையகுற்றாலம் இங்கு குளிப்பதற்க்கு நன்றாக இருக்கும் சவரில் குளிப்பது போல் இருக்கும்.துணி துவைப்பதற்க்கு வசதியாக இருக்கும்.ஆண்களுக்கும், பெண்களுக்கும் குளிப்பதற்க்கு தனித் தனி இடங்கள் உண்டு. பெண்களுக்கு துணிமாற்றுவதற்க்கு தனி இடங்கள் உண்டு.

புலியருவி

புலியருவி இது பழையகுற்றாலம் அருவி செல்லும் வழியில் உள்ளது. சின்ன அருவி குழந்தைகள் குளிக சிறந்த இடம்.

குற்றாலத்தில் குற்றாலநாதர் கோவில் உள்ளது முருகன் கோவில் உள்ளது. கலைவானர் அரங்கம், படகு துறை,சிறுவர் பூங்கா, பாம்புப் பணணை ஆகியவை உள்ளது.

நெல்லை,மதுரை ஆகிய ஊர்களில் இருந்து தென்காசி வழியாக குற்றாலம் போகலாம்.நெல்லை மாவட்டத்தில் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உண்டு.

-ஞானசேகர்

No comments: