எங்கள் ஊர் கூவலப்புரம் மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா உள்ளது டி.கல்லுப்பட்டி பஞ்சாயத்து யூனியனில் உள்ளது. மேற்க்கு தொடர்ச்சி மலை சதுரகிரி அடிவாரத்தில் உள்ளது.
எல்லா ஊர்களுக்கும் ஒரு கோயில் தான் இருக்கும் ஆனால் எங்கள் ஊர் கோயில்கள் நிறைந்த ஒரு சிறிய அழகிய கிராமம். அனைவரும் விவசாய குடும்பம். இங்கு மொத்தம் மக்கள் 500 நபர்கள் இருப்பார்கள். எங்க ஊரில் இருந்து மதுரை 40 கி.மி. இராசபாளையம் 30 கி.மி. பேரையூர் 8.கி.மி. டி.கல்லுப்பட்டி 16 கி.மி. முன்பு நாங்கள் படித்துக் கொண்டு இருக்கும் போது பஸ் வடதி கிடையாது நடந்து செல்ல வேண்டும் அல்லது சைக்கிளிள் செல்ல வேண்டும் இங்கு ஆரம்ப பாடசாலை 1 முதல் 8 வரை வகுப்புகள் உண்டு. அதற்க்கு மேல் படிக்க பேரையூர் அல்லது டி.கல்லுப்பட்டி போக வேண்டும்.
வெளியில் சென்று ஊருக்குள் நுழைந்வுடன் முதலில் தெப்பக்குளம் இருக்கும் அதில் கை, கால் அலம்பிக் கொண்டு தான் வீட்டுக் செல்வார்கள். அடுத்து சுந்தரமூர்த்தி கோயில் மடம். இந்தமடம் எந்த நூற்றாண்டு கோவில் என்று பெரியவங்களுக்கும் தெரியவில்லை. மிகவும் பழைமையானவை முன்பு கூவலப்புரம் சாமியார் மடம் என்று கூறப்பட்டது இப்போது ரெட்டியார் ஜனசங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
கூவலப்புரம் சுந்தரமூர்த்தி கோயில்
Koovalapuram (Sundaramoorthy Temple)
கூவலப்புரம் சுந்தரமூர்த்தி கோயில் மண்டப சிலைகள்
கோவில் கொடிமரம் அண்ணக்கொடி கட்டியிருக்கும். ஆடி மாதம் ஆடி அமாவாசைக்கு மூன்று நாள் அண்ணதானம் நடைபெரும் மற்ற நாட்கள் வழிப்போக்கர்களுக்கு சாப்பாடு போடப்படும். இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.மேலும் ஆடி அமாவாசைக்கு சதுரகிரி மகாலிங்கம் கோவில்க்கு போவோர் இங்கு வந்து சுந்தரமூர்த்தியை தரிசித்து செல்ல வேண்டும் என்று ஒரு ஐதீகம் பெரியவர்கள் சொல்லக் கேள்வி.
ஊருக்கு மேற்க்கே கருப்பசாமி கோவில் உள்ளது அதை கோவில் தோப்பு என்று சொல்வார்கள். அங்கு பஞ்ச பாண்டவர் வணவாசம் செய்யும் போது இங்கு தங்கி சென்றார்கள் என்று ஐதீகம் பஞ்ச பாண்டவர் கோவில் உள்ளது. கண்மாயின் உள்ளே அண்ணாமலை ஈஸ்வரன் கோயில் உள்ளது அதன் கரையில் முனிஸ்வரன் கோயில் உள்ளது. விவசாயம் கண்மாயில் தண்ணீர் இருந்தால் விவசாயம் நன்றாக நடக்கும்.அனைவரும் விவசாயக் குடும்பம்தான். இப்பொளுது பல துறைகளில் இருக்கிரார்கள்.
இன்னும் நிறைய இருக்கு நாம் பேசலாம். மண்ணும்.... மனமும்.... ஞானசேகர்
No comments:
Post a Comment