இயற்கையின் அருட்கொடைகள் தான் மரங்கள், செடி, கொடிகள். இவை ஒவ்வொன்றுமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. மேலும் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் தேவைப்படும் பிராண வாயு அதாவது ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்கள் மரங்கள். மழையை வருவிக்கும் வருணபகவானாக மரங்களும், செடிகளும் உள்ளன.
இத்தகைய சிறப்பு வாய்ந்த மரங்களில் பல வகைகள் உள்ளன. இந்த மரங்களில் புங்க மரத்தின் மருத்துவப் பயன்களை அறிந்து கொள்வோம்.
ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களுள் மூங்கிலுக்கு அடுத்து புங்க மரம்தான். எந்தப் பகுதியிலும், எத்தகைய சீதோஷ்ண நிலையிலும் வளரக்கூடியவை. அதிக நிழலை தரக்கூடியது. பசுமை படர்ந்த மரமாக காட்சியளிக்கும். இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படும். சாலை ஓரங்களில் நிழல் தரவும்,, மண் அரிப்பைத் தடுக்கவும் புங்கை மரங்கள் வளர்க்கப்படுகின்றன.
புவி வெப்பமயமாதலை தடுக்கும் தன்மையுள்ள மரங்களில் புங்க மரமும் ஒன்று. வெப்பத்தின் தன்மையை உறிஞ்சி சீரான சீதோஷ்ண நிலையை ஏற்படுத்தும் குணம் இதற்கு உண்டு.
புங்க மர விதையிலிருந்து பயோடீசல் (Biodisel) உருவாக்கலாம் இந்த விதைகளிலிருந்து 30 - 40 சதவீத எண்ணெய்ச் சத்து உள்ளது.
செழுமையான மழைக் காடுகள் இயற்கையின் அழகு.....
No comments:
Post a Comment