தேக்கு மரம் இது மிகவும் பொதுவான இந்திய மரங்களில் ஒன்றாகும். (குடும்ப வெர்ப்பினேசி) ஒரு பெரிய இலையுதிர் மரம். தேக்கு பரவலாக 2,000 க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது இது மிகவும் உயரமாகவும் தடிமனகவும் இலைகள் அடர்த்தியாகவும் வளரக்கூடியது. அறுபது, எண்பது ஆண்டுகளில் உயர்ந்த முதிர்சியடைந்த மரங்களாகும். இந்த மரங்கள் உயரம் 45 மீட்டர் வரை வளர முடியும். இந்தியா, மியான்மர் (பர்மா), தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், ஜாவா மற்றும் மலாய் தீவு களில் காணப்படுகின்றன. தேக்கு ஆபிரிக்கா, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்காவிலும் நடப்படுகிறது.
இந்திய தேக்குமரம் ஒரிசா, மத்திய பிரதேசம் வழியாக தெற்கு உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆரவல்லி மலை தெற்கு எல்லைகள் வரை பரவியுள்ளது. உலர்ந்த மற்றும் ஈரமான இலையுதிர் காடுகள் மற்றும் தெற்கு தீபகற்ப இந்தியாவில் இயல்பாகவே வளரும். அதன் சிறந்த வளர்ச்சி வளமான, மண்ணில் 3 முதல் 5 மாதங்களுக்கு ஒரு உலர் பருவத்தில் ஆண்டுதோறும் 125 250 செ.மீ மழை பெறும்.
ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை ஒவ்வொரு தேக்கு மரத்தின் அனைத்து இலைகளும் உதிர்ந்து புதியதாக வளரும். வளர்ந்த மரத்தின் வலுவான இலைகள் 60 செ.மீ. நீளம் வரை வளரும். மரத்தின் கிளைகளில் எண்ணற்ற சிறிய வெள்ளை பூக்கள் மலரும் பூக்கள் வாசனையாகவும் ஐந்து அல்லது ஆறு இதழ்கள் கொண்டிருக்கிகும். பல லட்சம் மலர்களைக்கொண்டிருக்கும் அந்த மலர்கள் கூட அதிகபட்சமாக 2.5 செ.மீ. அளவு அதிகரிக்கும். இந்த சமயத்தில் தேக்குமரம் மிகவும் அழகாக தெரியும்.
தேக்குமரம் நாடு முழுவதும் பரவலாக பயிரிடப்படுகிறது. இது மருத்துவ குணங்கள் உடையது மரம் மதிப்புயையது என்பதால் இது உற்பத்தி இல்லாத நாடுகளில் இதன் வர்த்தக மதிப்பு அதிகம். இந்த மரம் மிகவும் பலமான, கடினமான மற்றும் நீடித்த வலுவானது மற்றும் இதில் தனித்துவமான வாசனை எண்ணெய் உள்ளது இந்த எண்ணெய் மரத்தை காக்கிறது. இந்த மரம் பரந்த அளவில் தளவாடங்கள், வீடுகள், கப்பல்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. மரத்தின் இலைகளில் இருந்து பெறப்படும் சாறு துணி சாயமாக பயன்படுத்தப்படுகிறது. மரத்தின் பகுதிகளில் மிக மருத்துவரீதியில் மதிப்புவாய்ந்ததாக உள்ளன. தலைவலி, செரிமானமின்மை குறைக்க மற்றும் வயிற்று பிரச்சினைகள் தீர்க்க பயன்படுத்தப்படுகிறது.
மேலும், தேக்கு மரம் தூள் பேஸ்ட், டையூரிடிக், கல்லீரல், அழற்சி மற்றும் பல்வலி குறைக்க பரிந்துரைக்கப்படுகிறது மர சாம்பல் கண் இமைகள் வீக்கத்திற்கு பயன்படுத்தப்படுகிறது மற்றும் பார்வை மேம்படுகிறது என்று நம்பப்படுகிறது. வடிகட்டும் மூலம் பெறப்படும் ஆயில் படை, படர்தாமரை இவற்றிற்கு பஸ்தர் மாவட்ட பழங்குடி மக்கள் பயன்படுத்துகிறார்கள். மற்றும் மூச்சு குழாய் அழற்சி சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது. விதைகளில் (கொட்டைகள்) இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் முடி வளர்ச்சி மற்றும் சொறி சிரங்கு கட்டுப்படுத்துகிறது. இந்திய தேக்கு மரங்கள் ஆயுர்வேத நடைமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்திய தேக்குமரம் அதன் விரைவான வளர்ச்சி மற்றும் உயர் தரமான மரமாக மதிப்பிடப்படுகிறது பல வெப்பமண்டல நாடுகளில் தேக்கு மரங்கள் ஒரு முக்கியமான தோட்டங்களாக உள்ளது. தேக்கு மரம் முக்கியமாக அதன் அசாதாரண ஆயுள் சூடான நாடுகளில் மதிப்பிடப்படுகிறது. இந்தியா, மியான்மர் ஆகிய நாடுகளில் பாதுகாப்பு மர விட்டங்களில் பல நூற்றாண்டுகளாக பழைய கட்டிடங்களில் காணப்படுகின்றன, மற்றும் தேக்கு விட்டங்கள் அரண்மனைகள், கோயில்களில் 1,000 ஆண்டுகளுக்கு நீடித்தது அழிவில்லாமல் இன்றும் நிலைத்து இருக்கிறது.
செழுமையான மழைக் காடுகள் இயற்கையின் அழகு.....
No comments:
Post a Comment