ஆதியில் காடுகளில் வாழ்ந்த மனிதன், எப்பொழுது இலைகளையும், தழைகளையும் நாகரிகம் எனக் கருதி ஆடைகளாக உடுத்தத் தொடங்கினானோ, அன்றே மனிதன் மரங்களின் மீதான வன்முறையை ஆரம்பித்துவிட்டான். இன்று நாம் வாழும் பூமி வெப்பமயமாக்கலில் சிக்கி எதிர்
காலத்தில் உயிரினங்கள் வாழத் தகுதியற்ற வெப்பப் பந்தாக உருமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இயற்கையின் பெருங்கொடை மரங்கள். மனிதன் தான் கொண்ட பேராசையின் பெரும் விளைவாக காடுகளின் மீது கைவைத்து மரங்களை அழித்து, வாழுகின்ற பூமி தனக்கானது மட்டுமே என எண்ணி பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு ஊறு விளைவித்தான்.
1950-ஆம் ஆண்டு பூமியின் சராசரி வெப்பநிலை 13.8 டிகிரி செல்ஸியஸாக இருந்தது. அது 1997-ஆம் ஆண்டு 14.6 டிகிரி செல்ஸியஸாக அதிகரித்துவிட்டது. வருடாவருடம் வெப்ப நிலையின் அளவு உயர்ந்து கொண்டே வந்தால் பனிப்பாறை உருகி, கடல்மட்டம் உயர்ந்து கடலோரப் பகுதிகள் கடலுக்குள் மூழ்கும் நிலை ஏற்படும்.
காடுகளைத் திருத்தி கழனிகளை அமைத்த மனித இனம், இன்று கழனிகளை அழித்து வான்முட்டும் வணிக வளாகங்களையும், அடுக்ககங்களையும் அமைத்து இயற்கைக்கு எமனாகச் செயல்படுகிறது.
அந்தக் காலத்தில் தமிழகத்தில் சுமார் 33,000 ஏரிகள் இருந்தன. இன்று நகரமயமாதல் எனும் இயற்கைக்கு முரணான வளர்ச்சியில் ஏரிகள் தூர்க்கப்பட்டு பேருந்து நிலையங்களாகவும், கல்வி நிறுவனங்களாகவும், மருத்துவமனைகளாகவும் காட்சியளிக்கின்றன. வீட்டில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வெளியாகும் புளுரோ குளுரோ கார்பன் வளி மண்டல ஓúஸான் படலத்தில் (ஞழஞசஉ) ஓட்டை விழ வைக்கிறது.
பயன்படுத்தாமல் வீசி எரியும் அலைபேசி, தொலைக்காட்சி, கணினி என மின் கழிவுக் குப்பைகள் போன்றவை அவற்றின் பங்கிற்கு காற்றை நஞ்சாக்குகின்றன.
வாகன உற்பத்தியில் நாம் தன்னிறைவு அடைந்து அயல்நாட்டுக்கு வாகனங்களை ஏற்றுமதி செய்வதாகப் பெருமை கொள்ளும் அதே வேளையில், அயல்நாட்டு நிறுவனங்கள் சப்தமில்லாமல் நம்மீது தண்ணீர் சுரண்டலை நிகழ்த்துவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு நான்கு சக்கர வாகனம் உற்பத்தி செய்வதற்கு பல லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.
ஐம்பது ஆண்டுகள் வாழும் வளமான மரத்தை நாம் வெட்டினால், அதனால் ஏற்படும் இழப்பு ரூபாய் கணக்கில் சுமார் 50 லட்சம்.வாழும் பூமியை வளமாக்க நாடெங்கிலும் உள்ள தரிசு நிலங்களை கணக்கிட்டு மரக்கன்றுகளை நட வேண்டும். மலைப்பாங்கான பகுதிகளில் ஹெலிகாப்டர் துணை கொண்டு விதை
களைத் தூவ வேண்டும். நம் குழந்தைகளுக்கு மரங்களில் பயன்களைச் சொல்லி வளர்க்க வேண்டும்.
தினமணி:
நன்றி By அ.பிரமநாதன்
காடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசுபாடு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்...
No comments:
Post a Comment