பனிப்பிரதேசமான அண்டார்டிக்கில் பனை, தென்னை, பாக்கு மரங்கள் முளைக்கும் அளவுக்கு சுற்றுச்சூழல் மாற்றம் ஏற்பட்டு வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பாக்கு, பனை, தென்னை போன்ற மரங்கள் வெப்ப பிரதேசத்தில் வளரும் மரவகையாகும். மலையளவு பனிகள் நிறைந்த அண்டார்டிக்காவில், இன்னும் சில நூற்றாண்டுகளில் பனைமரம் வளரும் அளவுக்கு வெப்பம் அதிகரித்து வருவதாக கண்டரியப்பட்டுள்ளது. ஜெர்மனியின் கோதபல்கலைக்கழகம் மற்றும் பிராங்பர்ட் உயிரி மற்றும் சுற்றுச் சூழல் ஆய்வு மையம் இந்த ஆய்வை மேற்கொண்டது.
ஆய்வில் 52 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அண்டார்டிக் பகுதியில் இதுபோன்ர தாவரங்கள் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. "தற்போது உலக வெப்பமாதலின் விளைவால் கார்பன்-டை-ஆக்சைடு அளவு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் அண்டார்டிக் பகுதியில் குளிர்காலத்தில் கூட 10 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவும் சூழல் உள்ளது. இதுபோன்ற சூழல்மாற்றங்கள் தொடர்ந்தால் இனினும் சில நூற்றாண்சுகளில் அண்டார்டிக்காவில் தாவரங்கள் வளரும் சூழல் ஏற்படுவது நிச்சயம்" என்கிறார்கள் ஆய்வாழர்கள்.
அதிர்ச்சியான விஷயம்தான்!
மனிதன் இயற்கையை இயற்கையாக இருக்கவிடாமல் இருப்பதே இயற்கை அழிவிற்கு காரனம்...
No comments:
Post a Comment