Thursday, April 28, 2011

சூரியஒளி மின்சாரம்



     பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலை ஏற்றம் காரணமாக பூமியின் சுற்றுச்சூழல் பல்வேறு மாசுவால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.

   இதனால் சுற்றுச்சூழலுக்கான முக்கியத்துவமும், விழிப்புணர்வும், பொறுப்புணர்வும் அதிகரிக்கப்பட வேண்டிய காலக்கட்டத்தில் நாம் உள்ளோம். புவிவெப்ப உயர்வு, பருவநிலை மாற்றம், எரிபொருள் அழிவு, பல்லுயிர்ச் சூழல் பாதிப்பு ஆகிய பிரச்னைகள் நம் முன்னே பூதாகரமாகி நிற்கின்றன.

       இது ஒருபுறமிருக்க, சுற்றுச்சூழலைப் பாதிக்காத இயற்கை வளங்களான நீர், காற்று மூலம் கிடைக்கும் மின்சாரமானது, உலகின் அசுர வளர்ச்சியின் தேவைக்கு ஏற்ப போதுமானதாக இல்லை.

    இதனால், புதிய மற்றும் புதிப்பிக்கவல்ல எரிசக்தி சார்ந்த உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் அனைத்து நாடுகளுமே ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளது.

      புவிவெப்பமாதலுக்குப் பசுமை இல்லவாயு (கார்பன்-டை-ஆக்ஸைடு) வெளியேற்றம் முக்கியமான காரணமாக இருப்பதால், இந்த வாயுவை உருவாக்கும் டீசல், பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு பயன்பாடுகளைக் குறைப்பதிலும், வெப்பத்தாலும், மின்சாரத்தாலும் இயங்கும் சாதனங்களை தயாரிப்பதிலும் அமேரிக்கா, சீனா உள்ளிட்ட பொருளாதரத்தில் வளர்ந்த நாடுகள் பலவும் முனைப்புகாட்டுகின்றன.

      இந்தியா போன்ற பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடுகளில் இயற்கை வளங்கள் குறைந்து வருவதும், சுற்றுச்சூழல் சீரழிவும் முக்கிப் பிரச்னைகளைக நம்மை அச்சுறுத்தி வருகின்றன.

    இந்தப்பிரச்னைகளை திறம்பட எதிர்கொள்வது என்பது, புதிப்பிக்கவல்ல் எரிசக்தி சார்ந்த கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலமும், குறிப்பாக சூரிய எரிசக்தி பயன்பாட்டின் மூலம்தான் சாத்தியமாகும். மற்றும் மின் ஆற்றலை வெப்ப ஆற்றலாகவும், மாற்றி நமது தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொள்ளலாம்.

     சூரிய ஆற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றக்கூடிய கருவிகளில் சூரிய வென்நீர் கலன், சூரிய உலர்கலன், சூரிய நன்னீர் கலன் போன்றவை முக்கியமானவையாகும். அதே நேரத்தில் சூரிய மின் உற்பத்தியிலும் சோலார் போட்டோ வோல்டிக் வழியா கவும், சோலார் தெர்மல்
முக்கிய பங்கு வகிக்கின்றன.

   சூரிய எரிசக்தியை வெப்பமாக மாற்றி அதன்பின் மின்சாரம் பெறுவதற்கும், நேரடியாகவே மின்சாரமாக மாற்றுவதற்கும் பயன்படுத்தலாம்.

    சூரிய வெப்பம் மற்றும் மின் கருவிகள் உற்பத்தியும், பயன்பாடும் இன்றைக்கு உலகம் முழுவதும் மிகவும் அவசியத் தேவையாகி வருகிறது.
குஜராத் மாநிலத்தில் சூரிய ஒளியை பயன்படுத்தி மின்சாரம் தயாரித்து வருகிறது.
  
      மின் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் சூரியஒளி மின்சாரத்தை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் யோசனை தெரிவித்தார்.

    இப்போது தமிழகத்தில் ஒரு அரசியல் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் சோலார் போட்டோ வோல்டிக் சாதனம் அமைத்து தந்து தடையில்லா மின்சாரம் கிடைக்க வகை செய்வேம் என்று அறிவித்துள்ள. இது இலவசங்களைவிட நன்மை பயக்கும் திட்டம்  வரவேற்க வேணேடிய ஒன்று. சோலார் போட்டோ வோல்டிக் இதன் விலை அதிகம். அதிகம் பேர் பயன்படுத்தினால் உற்பத்தி பெருகும் விலையும் குறைய நிறைய வாய்புள்ளது.

   ஆதாயம் தேடும் அரசியல் கட்சிகள் கொடுக்கிறேன் என்கிற இலவசங்களைக் காட்டிலும் இயற்கையாக நமக்கு கிடைக்ககும் சூரியசக்கியை ஆக்கசக்தியாக்கி பயனடைவோம்.


இயற்கை வளங்கள் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் விலங்குகள்...

2 comments:

ஆ.ஞானசேகரன் said...

//சூரியசக்கியை ஆக்கசக்தியாக்கி பயனடைவோம்.//

அரசு எந்த அளவிற்கு நடைமுறை ப்டுத்துகின்றது என்பதுதான் இதில் முக்கியம்

S.Gnanasekar said...

தங்கள் வருகைக்கு நன்றி ஆர். ஞானசேகரன் அவர்களே.
அரசு எந்த அளவிற்கு நடைமுறை ப்டுத்துகின்றது என்பதுதான் இதில் முக்கியம்
நீங்கள் கூருவது சரிதான்.