கிரேட் இந்தியன் ஹார்ன்பில், கறுப்பு மலபார் ஹார்ன்பில், வெள்ளை மலபார் ஹார்ன்பில், ஆப்பிரிக்கா ஹார்ன்பில்' என்பன உள்பட பல்வேறு வகைகள் உள்ளன. கிரேட் இந்தியன் ஹார்ன்பில் பறவையின் கழுத்தை சுற்றிலும் மஞ்சள் நிற பட்டை இருக்கும்
இருவாட்சி மரப் பொந்துகளில் தனது கூட்டினை அமைக்கும். முட்டைகள் இட்டபின் அவற்றினை அடை காக்கப் பெண் பறவை மரப் பொந்துக்குள் புகுந்து கொண்டு களிமண்ணைக் கொண்டு உட்புறமாக ஓட்டையை அடைத்துவிடும். பின் அதில் ஒரு சிறு துவாரம் செய்து விடும். பொந்துக்குள் அடைக்காக்கும். அடுத்த பதினைந்து இருபது நாட்களுக்கு ஆண் பறவை உணவு கொண்டு வந்து கொடுக்கும். ஆண் பறவை தான் உண்ண நேரமின்றி இளைத்துத் துரும்பாகிவிடும். பெண் பறவையோ உட்கார்ந்த இடத்திலேயே உண்டு உறங்குவதால் கொழுத்துவிடும்.
முட்டையிலிருந்து குஞ்சுகள் வந்தபின், தாய்ப் பறவை பூசிய காரையினை உடைத்துக் கொண்டு வெளியே வந்து மீண்டும் முன் போலவே பூசிவிட்டு, தாய் தந்தை இருவருமாக குஞ்சுகளுக்கு இரை கொண்டு வந்து கொடுக்கும். இப்பறவைகளின் உணவு ஆல், அரசு, அத்தி போன்ற மரங்களின் பழங்கள்.
இயற்கையின் எழிலினை நாம் கண்டு ரசிக்கும் போது அவற்றைப் படைத்த ஆண்டவன் நம் கண்களுக்குத் தெரியாமலா போவான்?
No comments:
Post a Comment