Monday, February 7, 2011

கசகசா ஓபியெம் "பாப்பி மலர்"


   கசகசா "பாப்பி விதை" நமது கசகசா என்பது எண்ணெய் சத்துள்ள ஒரு வகையான வித்து.  இதை இந்தியாவின் எல்லா பாகங்களிலும் சமையலுக்கு பயன்படுத்தப்படுகின்றது. இந்த விதைகள் பெரும்பாலும் சைவ, அசைவ எல்லா வித குழம்பு, குருமா, மற்றும் கறிகளுக்கு அரைத்துப் பயன்படுத்தப்படுகின்றது.

  இந்திய உணவில் பயன்படுத்தப்படும் முக்கியமான ஒன்று. ஆனால் வளைகுடா நாடுகளில் கசகசா தடைசெய்யப்பட்ட ஒரு போதைப்பொருள். வளைகுடா நாடுகளுக்கு செல்பவர்கள் கசகசா கொண்டு செல்வதை தவிர்க்கவும் இந்த பாப்பி செடியில் உள்ள காய் முற்றி, காய்ந்தபிறகு அதில் இருந்து எடுப்பதுதான் கசகசா. ஆனால் காயாக இருக்கும்போது காயைக் கீறி அதிலிருந்து வடிகிற பால் சேகரிக்கப்படுகிறது அதுதான் ஓபியம். இதில் இன்னெரு பாப்பி மலர் பல நாடுகளில் அலங்காரத்திற்கு பயன்படுத்துகிறார்கள்.

  ஒரு பயிர் நன்றாக விளைந்தால் யாராவது கவலைப்படுவார்களா? ஆனால் ஐக்கிய நாடுகள் சபை கவலைப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் விளையும் ஒரு பயிருக்காக- அதன் அமோக விளைச்சலுக்காக- ஐ.நா. "ஜாக்கிரதை... ஜாக்கிரதை' என்று எச்சரிக்கை மணி அடிக்கிறது. அந்தப் பயிர் ஓபியெம். போதைப் பொருள். இதில் ஆபத்து என்பது, தெற்கு ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் நிறைய விளைகிறது என்பதில் உண்மை இருக்கிறது.
 
   தாலிபன்கள் ஓபியெம்மை விவசாயிகளிடமிருந்து விளைச்சலை வாங்கி பதுக்கி வைத்துக் கொள்கிறார்கள். அவர்களின் அதிர்ஷ்டம் பாருங்கள், ஆப்கானிஸ்தான் பயிர்களில் மற்றவையெல்லாம் விலை குறைகின்றன. ஓபியெம் மட்டும் விலை உயர்கிறது. இதனை தாலிபன்கள் ஓபியெம்மை வாங்கி ஸ்டாக் வைத்துக் கொண்டு அதை சேவிங்க்ஸ் அக்கவுண்ட்ஸ் போலக் கருதுகிறார்கள். பணம் வேண்டும்போது பேங்க்கில் "வித்ட்ரா' பண்ணுவது போல, ஓபியெம்மை வெளிச் சந்தையில் விற்று பணம் பண்ணுகிறார்கள்.

  இந்தப் பணம் பயங்கரவாதச் செயல்களுக்குத் துணை போகின்றது. இதுதான் உலகநாடுகளை அச்சுறுத்துகின்றது.

   ஒரு புள்ளி விவரத்தின்படி 2009 ஆம் ஆண்டு ஓபியெம் எந்த விலைக்கு விற்கப்பட்டதோ அதைவிட 2010 இல் 164 சதவீதம் உயர்ந்துவிட்டது.

  ஆப்கனில் ஓபியெம், கோதுமை இரண்டும்தான் பிரதான பயிர்கள். கோதுமையின் விலை குறைந்து, ஓபியெம் உச்சத்தில் இருக்கிறது. ஓபியெம் விவசாயிகள் கோதுமை விவசாயிகளைவிட ஆறு மடங்கு அதிக லாபம் சம்பாதிக்கிறார்கள். உலகில் விளையும் ஓபியெம்மில் மூன்றில் இரண்டு பங்கு   ஆப்கானிஸ்தானில் விளைகிறது. இந்த மூன்றில் இரண்டில் 98 சதவீதம் தாலிபன் பகுதிகளில் ஒன்பது மாகாணங்களில் விளைகிறது.
தினமணி...

காடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசுபாடு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்...

No comments: