Thursday, February 24, 2011

நமது நாடு 1.நமது தாயகம்நமது நாடு   

      தமிழர்கள்தான் ஆதியின் முன்னேடிகள் என்பதை நமது நாடு என்ற புத்தகத்தின் மூலம் ஆசிரியர் யாழ்ப்பாணத்து நாவாலியூர் திருவாளர் ந.சி.கந்தையா பிள்ளை அர்கள் 1945 ஆம் ஆண்டு இதன் முதல் பதிப்பை 95பக்கங்களாக  800 பிரதி வெளியிட்டுள்ளது, திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட் திருநெல்வேலி & சென்னை.

நன்றி. திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட் திருநெல்வேலி    &   சென்னை.
முன்னுரை
 "நமது நாடு" எனினும் இந்நூல் சிறுவர் தமிழ் மக்களின் வரலாற்றைக் கற்று அறிந்து கொள்ளும் முறையில் சுருங்க எழுதப்பட்ட தொன்றாகும். இதண்கண் யாம் கூறியுள்ள ஒவ்வொன்றுக்கும் தக்க சான்றுகள் உள்ளன. அவைகளை இப்பொருள்பற்றிக் கூறும் விரிந்த நூலாகிய "தமிழ் இந்தியா" விற் காண்க. ஆதிமக்கள் ஒரே வகையினர். அவர் சமயம் ஒன்று, மொழி ஒன்று என்னும் கொள்கைகள் வலி பெற்று வருகின்றன. மேல்நாட்டு ஆராய்ச்சி அறிஞர்களின் ஆய்வுகளை ஒழுங்கு வைத்து ஆராயிமிடத்து அவ்வாதி மக்கள் தமிழரே என நன்கு தெளிவாகின்றது. இது மிக வியப்புக்குரிய தொன்றாகும். ஆராய்ச்சி நூலை இளைஞர் எளிதில் கற்று விளங்கிக்கொள்ளமாட்டாதவர்களாவர். அகவே ஆராய்ச்சியிற் கண்ட முடிவுகள் வரலாறுபோலத தொடர்பு படுத்தி எழுதப்பட்டிருக்கின்றன.

  1.நமது தாயகம்          
  நாம் எல்லாரும் தமிழர்; நம்மைப்பற்றி அறிதல்வேண்டும், நம் நாட்டைப்பற்றியும் அறிதல்வேன்டும்; வேண்டுமாயின் பின்பு மற்ற நாட்டவர்களைப்பற்றி அறியலாம்.
     தமிழர், உலகின் மிகப் பழைய சாதியினர். தமிழகத்தினின்றே உலகின் பல பாகங்களுக்கு நாகரிகம் பரந்து சென்றது. இதனை மேல்நாட்டு அறிஞர் சிலர் நன்கு ஆராய்ந்து கூறியிருக்கின்றனர். இவ்வாறு கூறுதல் பலருக்கு வியப்பைத் தரும். இப்பொழுது தமிழர் உலகில் பெரிய சாதியினராகக் காணப்படவில்லை அல்லவா? இதுவே அவ்வியப்பிற்குக் காரணமாகும். வறியவர் செல்வராதலும் செல்வர் வறியவராதலும் உலக இயல்பு. ஒருகாலத்தில் ஒருவரின் பின் ஒருவராகச்சாதியினர் பலர் உயர் நிலை அடைந்திர்ந்தனர், பின்பு வீழ் நிலை அடைந்தனர். வீழ் நிலை அடைந்த சாதியாருள் தமிழரும் ஒருவர்.
  மற்ற சாதியரின் வரலாற்று நூல்கள் பல இருக்கின்றன. தமிழரின் வரலாறு கூறும் நூல்கள் பல வெளிவரவில்லை. ஆகவே நாம் நம்மைப்பற்றிய வரலாறுகளை எளிதில் அறிய முடியவில்லை. இப்பொழுது நமது நாட்டைப்பற்றிச் சிறிது படிப்போம்.
   பூகோள படத்தில் இந்தியாவைப் பாருங்கள். அதன் தென்பகுதியில் கன்னியாகமரி என்னும் முனை இருக்கிறது. அதற்குத் தெற்கே பெரிய கடல் ஒன்று அலைமோதுகின்றது. அதற்கு இக்காலத்தில் இந்துமாக் கடல் என்று பெயர். நம் வாழும் உலகம் தேன்றி எண்ணில்லாத காலம் ஆகின்றது. இவ்வளவு எண்ணில்லாத காலத்திள், இது பல மாறுதல்கள் அடைந்துள்து. இந்துமகாக் கடல் தோன்றுமும் அங்கே பெரிய நிலப்பரப்பு ஒன்று இருந்தது. அது நாவலந்தீவு எனப்பட்டது. ஐரோப்பிய மக்கள் அதற்கு "லெமூரியா" எனப் பெயர் இட்டுள்ளார்கள். "கொந்வானா" என்பதும் அவர்கள் அதற்கு கொடுத்த மற்றெரு பெயர். இதன் நடுவில் மோருமலை நின்றது. அதன் ஒரு கொடுமுடியே இலங்கைத்தீவு. நாவலந்தீவு அல்லது லெமூரியா இப்பொழுது வடக்கே ஆசியாக்கணடம் இருப்பதுபோலத் தெற்கில் இருந்தது.

   

படம் 1. (ஏகபாதமூர்த்தி) திருவரங்கம்.
படம் 2. கித்தைதி (சின்ன ஆசிய) மக்களின் தந்தைக் கடவுள்.
படம் 3. சிரியா நாட்டிற் கிடைத்த தந்தைக் கடவுளின் வடிவம்.


  நிலவுருண்டை ஒருகாலத்தில் அனற்பந்து போல இருந்தது. இதனுள் இன்னும் நெருப்பு இருக்கின்றது. இந்நெருப்பு இடையிடையே பூமியைக் கிழித்துக்கொண்டு வெளியே கிளம்புவதுண்டு. அப்பொழுது அது உள்ளே இருந்து கல்லையும் மம்ணையும் மேலே கக்கும். அதனால் அவ்வெடிப்புகளின் வாய்களில் பெரிய மலைகள் உண்டாகும். இவ்வாறு பூமியினின்றும் நெருப்பு வெளியே வரும் இடங்கள் எரிமலைகள் எனப்படும். எரிமலைக் குழப்பங்களிளால் சில சமயங்களில் தரை கடலுள் மறைந்து போகும். நாவலந் தீவில் எரிமலைக் குழப்பங்கள் பல தோன்றின. அப்பொழுது அதன் பல பகுதிகள் கடலுள் மறைந்தன. அப்பொழுது கன்னியா குமரியைத் தொடர்ந்து ஒரு பெரிய நிலப்பரப்பு நீண்டிருந்தது. அங்கு வாழ்ந்த மக்கள் தாய்க்கடவுளை வழிபட்டார்கள். தாய்க் கடவுளுக்குக் கன்னி அல்லது குமரி என்பது பெயர். ஆகவே அந்தத் தரைக்குக் குமரிநாடு என்று பெயருண்டாயிற்று. நாவலந்தீவும் அதனைச் சார்ந்த குமரி நாடுமே தமிழ் மக்களின் தாயகம்.

நமது நாடு தொடரும்

No comments: