2. நம் முன்னேர்
உலகிற் காணப்படும் படைப்புகள் எல்லாவற்றிற்கும் ஒரு தொடக்கம் உண்டு. அது போலவே மக்கட் படைப்புக்கும் ஒரு தொடக்கம் உண்டு. ஆதி மக்கள் நாவலந்தீவிலேயே தோன்றிய பகுதி இப்பொழுது சுமத்திரா, யாவாத் தீவுகள் இருக்குமிடமா யிருக்கலாமென ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். ஒரு தாய் தந்தையரினின்று மக்கள் பெருகத் தொடங்கினால், 1750 ஆண்டுகளில் இன்றைய மக்கள் அளவு பெருகி விடுவார்கள். இவ்வாறு மேல் நாட்டு அறிஞர் ஒருவர் கணக்கிட்டுள்ளார். மக்கள் இவ்வளவு வேகமாகப் பெருகுவார்களானால் அவர்கள் இருப்பதற்கு இவ்வுலகம் போதாமல் இருக்குமல்லவா மக்கள் இவ்வளவு வேகமாகப் பெருகுவதில்லை. இடையிடையே கொள்ளை நோயிம் போரும் தோன்றி மக்களின் தொகையைக் குறைத்துவிடுகின்றன.
மனிதன் உயிர் நூல் முறைப்படி விலங்கினத்தைச் சேர்ந்தவன், விலங்குகளிலும் பார்க்க நிறைவுடையவன், சிந்தித்து ஒன்றினைக் கண்டுபிடிக்கும் அறிவு ஆற்றல் உடையவன். மனிதனுடைய பற்களும் குடலும் காய், கனி, விதை முதலிய தாவரப் பொருள்களை உண்டு வாழ்தற்கேற்ற அமைப்பு உடையவன். ஆதிகாலத்து மனிதர் காடுகளிற் கிடைக்கும் காய், கனி, விதைகளை உண்டனர், சுனை நீரைப் பருகினர், மலைத் தாழ்வாரங்களிலும் நிழல் மரங்களின் கீழும் ஒதுங்கினர், சுருங்கக் கூறுமிடத்துக் குரங்குகளைப் போலவே வாழ்ந்தனர்.
அவர்களின் தொகைபெருகத் தொடங்கிற்று. அப்பொழுது எல்லோருக்கும் போதிட உணவு ஒரே இடத்திலேயே கிடைத்தல் அரிதாயிற்று. அகவே அவர்கள் தமது இருப்பிடங்களை விட்டு சிறிது சிறிதாக அகன்று சென்று வாவத் தொடங்கினர். அப்போது அவர்கள் நிலம், வீடு, பொருள், பண்டங்கள் வைத்துக் கொள்லவில்லை. ஆகவே அவர்கள் தாம்சென்ற இடங்களிலேயே தங்கி வாழ்ந்தனர். முன் வாழ்ந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்லும் கட்டாயம் அவர்களுக்கு உண்டாகவில்லை. இவ்வாறு மக்கள் இவ்வுலகின் எல்லாப் பாகங்களுக்குஞ் சென்று பரவினர்.
அவர்கள் பிரியத் தொடங்கிய நடு இடத்தில் சிலர் தங்கி வாழ்ந்தனர். அவர்கள் படிப்படியே நாகரிக வளர்ச்சி யடைந்தனர். நாகரிகம் எப்படி வளர்ச்சி யடைகின்றது வாழ்க்கைக்கு வேண்டும் ஊணும் உடையும் பிறவும் தேடும் வகைகளினாலேயே அது வளர்கின்றது. ஆதியில் மக்கள் காய், கனி, விதைகளை உண்டு வாழ்ந்தனர். அவை எல்லாக் காலங்களிலும் கிடைப்பது அரிதாயின. ஆகவே அவர்கள் விலங்குகளையும் பறவைகளையும் கொன்று அவற்றின் ஊனையும் உணவாகக் கொண்டனர். பறவைகளையும் விலங்குகளையும் வேட்டையாடிக் கொல்வது எந்நேரமும் முடியாமல் இருந்தது. பின்பு அவர்கள் காட்டில் வாழும் ஆடு, மாடு முதலிய விலங்குகளைப் பிடித்துப் பழக்கி வளர்த்தனர், தமக்கு கிசைக்கும் மற்ற உணவுகளுடன் அவை தரும் பால் முதலிய பயன்களையும் உண்டு வாழ அறிந்தனர், பின்பு மழைபெய்யும் பருவங்களை அறிந்து தானியங்களை விளைவித்தனர். இவ்வாறு நாகரிகம் படிப்படியாக வளர்ந்தது.
இவ்வாறு நாகரிக வளர்ச்சியடைந்த மக்கள் நாவலந் தீவிலே வாழ்ந்தார்கள். எரிமலைக் குழப்பங்களால் நாவலந் தீவின் பல பகுதிகள் தீவுக்கூட்டங்ளாக மாறின. அப்பொழுது இம் மக்களுள் பலர் கூட்டங் கூட்டமாகத் தனித்து வாழ நேர்ந்தது, பெரும் பகுதியினர் வடக்கு நோக்கிச் சென்றனர். நாவலந் தீவின் வடக்கே குமரிநாடு இருந்தது. குமரிநாட்டில் வாழ்ந்த மக்கள் திருந்திய நாகரிகம் அடைந்திருந்தார்கள்.
நமது நாடு வளரும்...
நமது நாடு வளரும்...
No comments:
Post a Comment