Wednesday, July 9, 2014

விந்தைப் பூக்கள்

 
பிளாக் டியுலிங் என்றழைக்கப்படும் கறுப்பு ரோஜாவின் நிறம் கறுப்பு. இது அல்லி வகையைச் சேர்ந்தது.

  பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலர்வது குறிஞ்சி மலர் என்பது உங்களுக்கு தெரியும் அல்லவா? ஆனால், 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அதிசய மலர் ஒன்று இருக்கிறது. அதன் பெயர் காக்டஸ். இது இந்தியப் பெருங்கடலில் ரீயூனியன் தீவில் காணப்படுகின்றன.

  ‘பீ ஆர்கிட்’ என்றழைக்கப்படும் பூச்செடியில் பூக்கும் மலர்கள் அனைத்தும் தேனீக்களைப் போல் தோற்றமளிக்கும்.

  சோவியத் ரஷ்யாவில் காபர்வோஸ்க் என்ற இடத்திலுள்ள குகைகளில் வித்தியாசமான தாமரை மலர்கள் பூத்து குலுங்குகின்றன. காற்றடிக்கும்போது இந்த மலர்கள் வண்ணம் மாறுகின்றன. முதலில் நீல வண்ணமாகி, சிவப்பாக மாறிவிடுகின்றன. மாலையில் இவை கறுப்பு வண்ணத்தில் காட்சி அளிக்கும்.

  அசெளரா ரூப்ரா என்ற நாய்க்குடை பூ ஆம்பல் மலர் போலவே சிரிக்கும். அதுமட்டுமல்ல, ஆம்பலைப் போலவே தோற்றமளிக்கும்.

  ஜோபி வீட் என்ற ஒரு சிவப்பிந்திய மந்திரவாதியின் பெயரைத் தாங்கியுள்ள இச்செடி பார்ப்பதற்கு அச்சமூட்டுவதாக காணப்படும்.

  நைகிரிட்டல்லா ரூப்ரா என்ற பெயருடைய செடி ஐரோப்பாவில் உள்ளது. இதன் பூக்கள் சாக்லேட்டின் மணத்தையும் நிறத்தையும் கொண்டவை.

  வாகை ஒரு விந்தையான மலர். மாலையில் மலரும் இந்தப் பூ நள்ளிரவில் பிஞ்சாகி சில விநாடிகளில் வளர்ந்து காலையிலேயே அது காயாகிவிடும்.

  ஜாவா மலைப்பகுதியில் காணப்படும் ராயல் கெளஸ்லிப் என்ற பூச்செடி தோன்றினால் அது எரிமலை வெடிப்பதைக் குறிக்கும் அறிகுறியாம்.

 நன்றி: அதிசய மலர்கள் 1000, 
ஆசிரியர் : கடல் நாகராசன்,

இவ்வளவு அதிசயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் பூமியின் இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்... 

No comments: