இன்று சுற்றுச்சூழல் நிபுணர்களைக் கவலைப் படுத்தும் விஷயங்களில் ஒன்று, தேனீக்களின் எண்ணிக்கை குறைந்துவருவது. இது தொடர்பாக சுற்றுச்சூழலியலாளார்களின் கவலையில் அர்த்தமிருக்கிறது. மகரந்தச் சேர்க்கைக்கு மிகவும் உதவிகரமாக இருப்பவை தேனீக்கள். எனவே தேனீக்களின் எண்ணிக்கை குறைந்தால் உலக அளவில் உணவு உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்படும்.
இயற்கைச் சூழல் அழிவு போன்ற பல காரணங்களில் தேனீக்களின் அழிவுக்கு மற்றொரு முக்கியகக் காரணம், பூச்சிக்கொல்லிகள். இந்நிலையில், தேனீ இனத்தை பாதிக்காமல் தாவரத்தைப் பாதுகாக்கும் விதமான பூச்சிக்கொல்லி மருந்தை தாம் கண்டு பிடித்திருப்பதாகச் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் 'புனல்' வடிவத்தில் வலை பின்னும் சிலந்தியிலிருந்து எடுக்கப்பட்ட டாக்சின் சுரப்பையும், ஸ்னோடிராப் எனப்படும் சிறு தாவரத்திலிருந்து எடுக்கப்பட்ட புதிய ரசாயன மூலக்கூற்றையும் கொண்டு இந் பூச்சிக்கொல்லி மருந்து தாயாரிக்கப்பட்டிருக்கிறது.
செயற்கை ரசாயனங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கான பாதுகாப்பன மாற்றக இந்த இயற்கை வழி பூச்சிக் கொல்லி பயன்படக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடே உலகின் பல நாடுகளில் தேனீக்களின் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடையக் காரணம், எனவே இந்த இயற்கை பூச்சிக்கொல்லி நன்கு பலன் கொடுக்கும் என்பது நிபுணர்களின் எதிர்பார்ப்பு.
நமது உணவுத் தாவரங்களின் பெரும்பான்மையானவை மகரந்தச் சேர்க்கைக்கு தேனீக்களையே பெரிதும் நம்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
"புரொசீடிங்ஸ் ஆப் த ராயல் சொசைட்டி" (Proceedings of the Royal Society) என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்தத் தகவல், சுற்றுச்சூழல் ஆர்வலர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
தேனீயின் முக்கியத்துவத்தை பலதடவை என்னுடைய இடுகையில் வெளியிட்டு இருக்கிறேன். தேனீ இல்லை என்றால் நமக்கு உணவு இல்லை. அதுமட்டும்மல்ல இயற்கை, மரம், செடி, கொடி, பறவை, விலங்கு, ஊர்வன, பூச்சிகள் அனைத்தையும் அழிக்காமல் அழிவில் இருந்து காப்பது நமது கடமை.
இவ்வளவு அதிசயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் பூமியின் இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்...
No comments:
Post a Comment