கழிவறையை விட மிக அசுத்தமான ஒன்றாக நீங்கள் உபயோகப்படுத்தும் செல்போன் உள்ளது என்றால் அது உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். ஆனால் அதுதான் உண்மை. ஏன் என்றால், பல இடங்களில், பல நபர்களால் பல சூழ்நிலைகளில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், அதனை எப்போதும் சுத்தப்படுத்துவதில்லை என்பதால், ஏராளமான கிருமிகள் நிறைந்ததாக செல்போன் உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வயிற்று வலி, வயிற்று உபாதை, தொற்றுநோய் பரவல், அலர்ஜி போன்ற நோய்கள் ஏற்பட கழிவறையை விட செல்போன்களே மிக அதிக அளவில் காரணமாக இருப்பதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றன.
ஏராளமான கிருமிகளைக் கொண்டிருக்கும் செல்போன் எப்போதும் நமது கையிலும், வாய்க்கு அருகேவும் இருப்பதால் பல நோய் உபாதைகளுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது என்று அரிசோனா பல்கலைக்கழகத்தின் மைக்ரோபயாலஜித் துறை பேராசிரியர் சார்லஸ் கெர்பா தெரிவித்துள்ளார்.
இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம்.....
1 comment:
padhivittamaikku nandri
surendran
surendranath1973@gmail.com
Post a Comment