Saturday, February 18, 2012

நமக்கு நாமே மின்சாரத்தை உற்பத்தி செய்யலாமே

   மின் வெட்டு இது நாம் தினமும் எதிர் கொள்ளும் ஒரு பிரச்சினை. மின் உற்பத்தியில் பற்றாக்குறை நமது தமிழகத்தை பொருத்தவரை மின் தேவை  மாநில உற்பத்தி போக மத்திய தொகுப்பில் இருந்து 2500 மெகாவாட் வழங்கப்பட வேண்டும் ஆனால் 1000 மெகாவாட் மின்சாரம்தான் வழங்கப்படுகிறது என்பது தமிழகத்தின் வாதம். அதலால் நகர் புரத்தில் 1மணி நேரம் மின் வெட்டு, கிராமப்புரம் பல மணி நேரம் மின் வெட்டு. இதை ஓரளவு சரிக்கட்ட நமக்கு நாமே மின்சாரம் தயாரிப்பதுதான் ஒரே தீர்வு. இது சாத்தியமா எனும் கேள்வி எழும் இது சாத்தியமே. 
   தினமும் நமக்கு தேவையான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்து கொள்ளலாம் தெரியுமா? என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம் உண்மைதான், அதுதான் சூரிய சக்தி. சூரிய ஒளியை நவின வி்ஞ்ஞான தொழில் நுப்பத்தின் மூலம் உபயோகித்துக் கொள்ள முடியுமா என்ற ஆராய்ச்சி பல வருடங்களாக நடந்து வருகிறது. ஒரு வருடத்தில் நமக்கு கிடைக்கும் சூரிய ஒளியைக் கொண்டு அடுத்த பத்து வருடங்ளுக்கு நம் நாட்டின் மொத்த மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்கிறது ஆராய்ச்சி புள்ளி விவரங்கள்.
   சூரிய ஒளியை இரண்டு விதத்தில் உபயோகிக்க முடியும். சூரிய ஒளியின் வெப்பத்தை ஒன்று திரட்டி அதை உபயோகித்து செப்பு கம்பியின் மூலம் தண்ணீரை கொதிக்க வைக்து நீராவி உற்பத்தி செய்து, அதிலிருந்து மின்சாரம் தயாரிப்பது ஒரு முறை. மற்றெரு முறை சூரிய அலைக் கதிர்களை சோலார் செல்கள் 'ஃபோட்டோவோல்டைக்' மூலம் நேரடியாக மின்சார சக்தியாக மாற்றுவது ஆகும். சாதரன கால்குலேட்டர் முதல் விண்வெளி ராக்கெட் வரை இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. ஃபோட்டோவோல்டைக் என்ற பிவி மூலம் சூரிய ஒளியை மின்சக்தியாக மாற்றும் தொழில்நுட்பம் 1950 ஆம் ஆண்டுகளில் அமெரிக்க விண்வெளி சாட்டிலைட்டுகளில் பயன்படுத்தப்பட்டன. சோலர் செல்களில் (ஃபோட்டோவோல்டைக்) உள்ளே ஒளிபடும் போது அதில் உள்ள எலக்ட்ரான்கள் தகர்ந்து வெளிவருகின்றன. இந்த எலக்ட்ரான்களின் தொகுப்பே மின்சாரமாக உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த மின்சாரம் நேரடியாக வீட்டு உபயோக மின்சாரப் பொருட்களான லைட், ஃபேன், ஹிட்டர், ஃபிரிட்ஜ் போன்றவைகளுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மேலும் உள்ள மின்சாரத்தை பாட்டரி மூலம் சேமித்து வைத்துக் கொண்டு பின்னர் உபயோகித்துக் கொள்ளலாம். ஒவ்வொரு வீட்டிலும் மொட்டை மாடியில் சோலார் பேனலை (ஃபோட்டோவோல்டைக்) செல்கள் பொருத்தி அவரவர்க்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ளலாம். ஜெர்மன் போன்ற நகரங்களின் மக்கள் இவ்வாறு உற்பத்தி செய்யும் மின்சாரத்தை தங்கள் தேவை போக மீதம் உள்ளதை அரசு மின்சாரத்துறைக்கு விற்று விடுகின்றனர். இந்தியா போன்ற வெப்ப பிரதேசங்களில் இவ்வாறு மின்சாரம் தயாரிப்பது மிகவும் சுலபமானதும் பயனுள்ளதாகவும் இருக்கும்.
   சூரிய ஒளியில் இயங்கும் பல பொருட்கள் இன்று உலக சந்தையில் கிடைக்கின்றன. அவை வீட்டு உபயோக லைட், ஃபேன், அவசரகால லைட்டுகள், தோட்டத்து விளக்குகள், சோலார் தண்ணீர் இரைக்கும் பம்பு, யுபிஎஸ் இன்வெர்டர் சிஸ்டம் மற்றும் சோலார் வாட்டர் ஹீட்டர் போன்றவை. 3000 ரூபாயில் ஒரு சோலார் பேனலை வாங்கி வீட்டு பால்கனியில் பொருத்திவிட்டால் பகல் நேரத்தில் லைட் ஃபேன் போன்றவற்றிற்கான மின்சாரத்தை எடுத்துக் கொள்ளலாம். மேலும் சோலார் உபகரணங்களுக்கு குறைந்தபட்சம் எந்த பிரச்சினையோ, செலவோ ஏற்படுவதில்லை.
   நம் வீட்டு மாடியில் சோலார் சிஸ்டம் வைக்க விரும்பினால் அதற்கு அரசு மானியம் கிடைக்கிறது. ஒரு கிலோவாட் சோலார் பேனலை நாம் அமைக்க ரூ.2 முதல் ரூ. 3 லட்சம் வரை செலவு செய்கிறோம் என்றால், ரூ.50 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை அரசு மானியம் கிடைக்கிறது. இதற்கு மானியம் மட்டும் போதாது அரசின் நேரடிஉதவி மிகவும் அவசியம். இதுபோல் நமக்கு தேவையான மின்சாரத்தை நாமே தயாரிக்கலாம். அரசு இலவசங்களை கொடுப்பதை தவிர்த்துவிட்டு ஒவ்வொரு வீட்டுக்கும் இது போல் பயனுள்தை செய்தால் மின்வெட்டு இல்லாத மாநிலமாக நமது தமிழகம் இருக்கும்.

மனிதன் இயற்கையை இயற்கையாக இருக்கவிடாமல் இருப்பதே இயற்கை அழிவிற்கு காரனம். இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்...

2 comments:

Anonymous said...

neenka alaka irrukkunkinka sir

Sukanya said...

You are handsome sir