இந்தப் பரந்த உலகில் மூன்றில் ஒரு பங்கு காடுகள் இருக்க வேண்டியது அவசியம். காடுகள் அழிந்தால் நாடுகளில் நச்சுப் பரவும். ஓசோன் பாதுகாப்பு திரை கிழிந்து, பசுமைக்குடில் விளைவை ஏற்படுத்தி, சமநிலை பாதிக்கப்படும். இன்றைய இதே நிலை தொடர்ந்தால் புவி வெப்ம் அதிகமாகி உலகம் பாலைவனமாகிவிடும் என எச்சரிக்கின்றனர் சுற்றுச்சூழல் வல்லுநர்கள். ஆனால், ஆடம்பரம், ஆர்பாட்டம், எதிர்காலத்தைச் சிந்திக்காமல் வனவளம் அனைத்தையும் அழித்து இயற்கையை எதிர்த்து வாழத் தலைப்பட்ட மனிதன் காடுகளை அழித்து தட்பவெப்பநிலையை மாற்றி மழையை மறந்துவிட்டான். காடுகளால் மனிதன் பெறும் பயன்கள் எண்ணிலடங்கா. நேரிடைப் பயன்கள், மறைமுகப் பயன்கள் என இருவகையாக அதன் பயன்களைப் பிரிக்கலாம். காடுகளாள் மனிதன் மட்டுமல்லாமல் பறவையினங்களும், விலங்கினங்களும் பயனடைகின். மரங்கள் இந்த உலகைச் செழுமையாகவும், பசுமையாகவும் வைத்திருக்க உதவுகின்றன. தன்னலம் கருதா மரங்கள் பல உயிரினங்கள் இளைப்பாற நிழல் தருகின்றன. இந்தப் பிரபஞ்சத்தில் நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் ஆகிய பஞ்ச பூதங்களின் இயக்கத்துக்கு மரங்கள் துனை நின்று உயிரினங்களுக்கு சேவைகள் செய்து வருகின்றன. காடுகள் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தி மண் அரிப்பைத் தடுத்து நிறுத்துகின்றன. மேலும் தட்பவெப்ப நிலையைச் சமன்படுத்துகின்றன. மக்களுக்கு உணவு வழங்கும் மண்ணை மரங்கள் காப்பாற்றுகின்றன. வளப்படுத்துகின்றன. காடுகள் அதிகப்படியாக அழ்க்கப்பட்டதால் இந்தியாவில் ஆண்டுக்கு ஏற்படும் மண் இழப்பு சுமார் 6000 மில்லியன் டன் ஆகும். ஒரு ஹெக்டேர் பரப்பில் ஆண்டுக்கு சராசரியாக 17 டன் மண் விளை நிலத்திலிருந்து மண் அரிப்பால் அடித்துச் செல்லப்படுகிறது.
இதனை ஈடுசெய்ய ஆண்டுக்கு 120 ஆயிரம் கோடி ரூபாய் தொடர்ந்து செலவிட வேண்டும் காடுகள் அழியும் போது நிலமும் அழிந்து விடும். ஆகாயத்தைத் தூய்மைப்படுத்தவும், விண்ணிலே மிதந்து செல்லும் மேகத்தை கவர்ந்திழுத்து அமிழ்தமான மழையைப் பொழியச் செய்யவும் மரங்கள் அவசியம். ஒலி, ஒளி, வெம்மை இவற்றின் கடுமையைத் தணிக்க மரங்கள் உதவுகின்றன. மனிதன் உயிர் வாழ்வதற்குத் தேவையான பிரானவாயுவை மரங்கள் வெளியிடுகிந்றன. தூசியையும், புகையையும், மரங்களால் கட்டுப்படுத்த முடியும். சுமாரான அடர்த்தியான மரமே ஆண்டு ஒன்றுக்கு ஒருவருட தூசியைத் தக்கவைத்துக்கொள்ளும். புகையிலுள்ள நச்சுப் பொருள்களையும் மரங்கள் உள்ளிழுத்துக் காற்றைச் சுத்திகரித்து விடும் திறன் வாய்ந்தது.

மரம் வளர்ப்பு தொடரும்...
மரம் வளர்ப்போம் புவிகாப்போம்......
No comments:
Post a Comment