நம் தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மரங்களின் மாண்பையும், பெருமையையும் உணர்ந்து பேணி வளர்த்தனர்.
சேரன் பனம் பூமாலை, சோழன் ஆத்திமாலை, பாண்டியன் வேப்பம் பூமாலை அணிந்து மரங்களுக்குச் சிறப்புச் சேர்த்தனர். நாட்டைக் காக்கும் அரண்களில் ஒன்று காட்டரண் என்பதை அறிந்திருந்தனர். பண்டு தொட்டு தமிழ்ப் பெருங்குடி மக்கள் காடுகளை முல்லை, வல்லை, இறும்பு, குறுங்காடு, அரில், ஏறல், பதுகை, பொச்சை, சுரம், பொதி, இணையம், மிளை, அரண் என்று பாகு படுத்தியிருந்தார்கள்.
தமிழகத்தில் முந்பு எங்கும் காடுகள் மண்டி அடர்ந்து கிடந்தன. அன்நாளில் ஊர்களுக்கு மரத்தை ஒட்டியே பெயர் வைத்திருந்தனர்.
தலவிருட்சங்கள் என்று ஊர்தோறும் அப்பகுதிக்குரிய மரங்களை நட்டார்கள். அரசூர், பனையூர், ரனங்காட்டூர், திருப்பனமூர், திருப்பனந்தாள், திருநெல்லிக்கா, திருநாவலூர், வேலம், தாமரைக்குளம், மூங்கில்பட்டு, மருதமலை, திருவேற்காடு, புங்கனூர், நாவல்பாக்கம், திருமுல்லைவாயில், காரைக்காடு, எருக்கம்பூண்டி, திருவீழிமிழலை, செங்காடு, திருப்பராய்த்துறை, திருவிடைமதூர், காட்டுப்பாடி, ஆற்காடு, ஆலங்காடு, திருமறைக்காடு, காட்டுப்பாக்கம், காதாம்பட்டு, புரசைவாக்கம் பூவரசம்வாக்கம் வேப்பம்பட்டு முதலிய ஊர்களின் பெயர்களிலிருந்து தமிழகத்தில் எங்கும் காடுகள் அடர்ந்து எங்கும் மண்டிக் கிடந்தன என்பதை அறியலாம். அதனாலே அக்காலத்தில் மாதம் மும்மாரி பொழிந்தது. பழங்காலம் முதற்கொம்டு பழகிய மரத்தை வெட்டக்கூடாது. இளம்வயதில் அது எனக்கு நிழலைத் தந்தது. பச்சை மரத்தை வெட்டுவது பாவம் என்பது பண்டைக்காலம் தொட்டே நம் நாட்டு மக்களின் இரத்தத்தில் ஊறிய பண்பாடு. மரங்களை வெட்டிச் சாய்த்து விட்டால் அந்த இடத்தை மீண்டும் நிறப்ப பல ஆண்டுகள் ஆகும் என்பதை நினைவில் கொண்டிருந்தார்கள். எனவேதான் மரங்களை உறையாண்மையோடு இணைத்துப் போற்றிப் புகழ்ந்தார்கள்.
மழைக்காடுகள் இற்கையின் பொக்கிஷம்...
2.மரம் வளர்ப்பு தொடரும்...
2.மரம் வளர்ப்பு தொடரும்...
No comments:
Post a Comment