Saturday, January 14, 2012

கிரீன் கான்செப்ட்

   கன்ஸ்யூமர் டியூரபிள் துறையில் சமிபகாலமாக பின்பற்றப்படும் ஒரு கான்செப்ட் இகோ கான்செப்ட். எகாலஜி எனப்படும் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ற வகையில் அந்தப் பொருள் தயாரிக்கப்பட வேண்டும் என்பதுதான் இகோ கான்செப்ட். இயற்கையைப் பேனும் விதத்திலும் இயற்கைக்கு எதிரான அம்சங்ள் இருந்தால் குறைவாக  இருக்கும் வகையிலும் அமைவதுதான் இகோ கான்செப்ட். இதை ஒவ்வொரு நிறுவனங்ளும் ஒவ்வொரு பெயர்களில் அழைக்கின்றனர். சில நிறுவனங்கள் இதை, கிரீன் கான்செப்ட் என்றும், சில நிறுவனங்கள் என்வரோமென்டல் கான்செப்ட் என்றும் சில நேச்சுரல் என்றும் இன்னும் சில நிறுவனங்கள் எர்த்திலி கான்செப்ட் என்றும் அழைக்கின்றனர்.
    இவை அனைத்திலும் பொதுவாக உள்ள அம்சம் என்னவென்றால், பொதுமக்கள் அந்தப் பொருளைப் பயன்படுத்தும்போது அவர்களுக்கோ அல்லது அதனால் சமுகத்திற்கோ எந்த இயற்கை பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதுதான் கன்ஸ்யூமர் டியூரபிள் என்று கூறப்படும் அன்றாட பயன்பாட்டு எலக்ட்ரானிக் கருவிகள் எளிதில் மட்காத, நீண்டகாலத்திற்கு அழியாத பிளாஸ்டிக், இரும்பு போன்ற உலோகங்கள்ல் உருவாக்கப்படுகின்றன. அந்தக்கருவிகள் அதிக அளவில் தயாரிக்கப்படும்போது, அதிக அளவில் பயன்படுத்தப்படும் போது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் உருவாக்கப்படுகின்றன. அவ்வாறு உருவாக்கப்படவேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் மற்றும் அரசுகளால் வலியுறுத்தப்படுகின்றனர்.
    எந்தெந்த வகையில் கிரின் கான்செப்ட்டை பின்பற்ற முடியும்.
   தானக அழியும் விதத்தில் அந்தப் பொருள் தயாரிக்கப்படவேண்டும். அதன் பாகங்களில் 90 சதவீதம், தானாக அழியக் கூடியதாக இருக்க வேண்டும். மீதமிருக்கும் 10 சதவீத பொருளும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு எளிதில் அழிக்கப்படும் விதத்தில் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
   குறிப்பாக, அதிக கடினமான செயற்கை மற்றும் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தாமல், இயற்கை முறையில் அழியக்கூடிய (பயோ டிகிரேடபிள் ) விதத்தில் இருக்க வேண்டும்.
    கன்ஸ்யூமர் பொருட்களின் வெளிபுறத்தில் சுற்றப்பட்டிருக்கும் காகிதம், அட்டைகள் அடையாளக் குறிப்புகள் போன்றவை எளிதில் மட்கும் காகிதத்தில் இருக்கவேண்டும்.
    மேலும் அவை மறுசுழற்சி செய்யும் விதத்தில் இருக்கவேண்டும். மறுசுழற்சியின்போதும் முந்தைய அளவிலான பயன்பாடு இருக்க வேண்டும்.
   ஆபத்தை விளைவிக்கும் பொருட்கள் என்றால், அவை எந்த விகிதத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதுடன் அவ்வாறு ஆபத்து ஏற்பட்டால் அதை சரி செய்வது எப்படி என்பதை குறிக்கப்பட வேண்டும்.
    கன்ஸ்யூமர் பொருட்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பயன்பாடு கொண்டதாக இருக்க வேண்டும். அடிக்கடி வாங்கும் வகையில் இருக்கக் கூடாது. அவ்வாறு அடிக்கடி வாங்கும் வகையில் இருந்தால், அதனால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் மாசு அதிகரித்துவிடும் என்பதால் நீண்டகால பயன்பாடு கொண்டதாக இருக்க வலியுறுத்தப்படுகிறது.
   அந்தப் பொருட்களை அழிக்கும்போது, மோசமான வாயுக்கள், உடல்நலத்திற்கு தீங்கிழைக்கும் அம்சங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
    இதுபோன்ற பல அம்சங்களைப் பின்பற்றியே கன்ஸ்யூமர் டியூரபிள் பொருட்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் வலியுறுத்தலாக உள்ளது. இவற்றைப் பின்பற்றி நடக்கவேண்டும் என்பது இயற்கையை பேணும் நடவடிக்கையாககக் கருதப்படவேண்டுமே தவிர கட்டுப்பாடாக கருதக்கூடாது.

நன்றி: தினத்தந்தி

காடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசுபாடு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்...

No comments: