Saturday, November 16, 2013

சிறுதானியம் பெரும்பயன்

  நம் முன்னோர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு முக்கியக் காரணமாக அமைந்தது அவர்கள் கடைப்பிடித்த உணவுப் பழக்கமேயாகும். அவர்கள் உண்ட உணவே மருந்தாகவும் இருந்ததால் நோய் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருந்தது.
கேழ்வரகு
     ஊட்டச்சத்து மிக்க பாரம்பரிய உணவுகளை அவர்கள் பயன்படுத்தியதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து தேக பலத்துடன் வாழ்ந்தனர்.

  ஆனால் தற்போது சிறு வயதிலேயே பல்வேறு நோய்களை சந்தித்துக்கொண்டு மருந்துகளையே உணவாகப் பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதற்கு காரணம் மாறிவரும் உணவுப் பழக்கமே.

  பீட்சா, பர்கர், ஹாட்டாக், ஸ்பீக் மற்றும் சீன, இத்தாலியன், மெக்சிகன் உள்ளிட்ட அயல்நாட்டு உடனடி உணவு வகைகள் மீது ஆர்வம் காட்டுவது, பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவுகள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட நொறுக்கு உணவு வகைகள் போன்றவற்றை சாப்பிடுவதில் அதிகளவு ஆர்வம் காட்டுவது போன்றவை முக்கிய காரணங்கள்.

கம்பு
  இவ்வகை உணவுகளில் அதிகளவிலான ரசாயன உப்பு, ரசாயன கலவைகள், செயற்கையான இனிப்பு, கொழுப்பு வகைகள் உள்ளிட்டவை கலந்துள்ளன. தினசரி உண்ணும் சாதாரண உணவிலிருந்து வேறுபட்டு எதையாவது சாப்பிட விரும்பி, மாற்று உணவுகளை தேடிப்போன மனிதன் இதய நோய், உடல் பருமன் உள்ளிட்ட நோய்களைச் சந்தித்த நிலையில் இதனை மாற்ற மீண்டும் பாரம்பரிய உணவு முறைக்கு நாம் மாற வேண்டும் என்பதே உணவு வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.

  பாரம்பரிய உணவு வகைகளில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை சிறுதானியங்கள் அளிக்கின்றன என்று உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இவற்றை சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரித்து, கொழுப்புச்சத்து குறையவும், உடல் பருமன் ஏற்படாமலும் பாதுகாத்துக் கொள்ளவும் ஏதுவாகிறது.

சோளம்
  சிறுதானியங்கள் என்பது கேழ்வரகு, கம்பு, வரகு, சாமை, சோளம் உள்ளிட்டவை ஆகும். விலைவாசி உயர்வு, இயற்கை சூழ்நிலை மாற்றங்கள் காரணமாக விவசாயிகள் நெல் சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டத்தொடங்கினர். இதனால் சிறுதானியங்கள் பயிரிடுவது குறைந்தது. அரிசி சோற்றை மட்டுமே உண்ணத் தொடங்கிய மனிதன் இதய நோய், சர்க்கரை நோய் ஆகியவற்றுக்கு ஆளானான். அரிசிக்கு மாற்றாக கோதுமையும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சிறுதானியங்களின் பயன்பாடு படிப்படியாக குறைந்து போனது. கோதுமையை விட சிறுதானியங்களில் 10 சதவீதம் சர்க்கரை சத்து குறைவு; நார்ச்சத்து அதிகம்.

  ஒரு காலத்தில் அரிசி பயன்படுத்த வசதியில்லாத ஏழை, எளிய மக்களின் உணவாக விளங்கிய சிறுதானியங்களின் விலை இன்று பன்மடங்கு உயர்ந்து வசதி படைத்தவர்களின் உணவாக விளங்குகிறது.

  பொதுவாக சிறுதானியங்களில், இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச்சத்து, புரதம், தாது உப்பு, பாஸ்பரஸ், கால்சியம் உள்ளிட்ட எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

  தானியங்களிலேயே அதிக சத்து வாய்ந்த கேழ்வரகானது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துதல், உடல் சூட்டினை சமநிலையில் வைத்திருத்தல், குடலுக்கு வலிமையளித்தல் போன்ற பயன்களை அளிக்கிறது.

வரகு
  இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து மற்றும் புரதம் அதிகமுள்ள வரகை சமைத்து சாப்பிட்டால் உடல் எடை குறையவும், மாத விடாய் கோளாறு கொண்ட பெண்களுக்கு உடல் நலனை சீராக்கிக் கொள்ளவும் பயனாக அமைகிறது.

  செரிமான சக்தியை அதிகரித்து உடல் சூட்டினை சம நிலையில் வைத்திருப்பது, வேண்டாத கொழுப்புகளைக் கரைத்து உடல் பருமனை குறைப்பது போன்ற தன்மை கம்புக்கு உண்டு. பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கச் செய்து அவர்களின் உடல் வலிமையையும் கூடுதலாக்குகிறது.
சாமை
  வயிறு சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்துவது, மலச்சிக்கலைப் போக்குவது, ஆகியவற்றுக்கு ஏற்ற உணவான சாமை, அனைத்து வயதினருக்கும் ஏற்றது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் சாமை உணவை சமைத்து உண்ணலாம்.

  உடலுக்கு உறுதியை அளிக்கும் வல்லமையுடைய சோளம் உடல் பருமன், வயிற்றுப்புண் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.
குதிரைவாலி
  இவ்வாறு பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட பாரம்பரிய உணவான சிறுதானியங்களை சமைத்து உண்டு வந்திருந்தால் உடல் பருமன், இதய நோய், நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகாமல் நாம் இருந்திருக்கலாம். ஆனால் நாம் இவற்றை மறந்து போனதால் ஆரோக்கியத்தை இழந்து விட்டோம். இனியாவது இவற்றை உணவாகப் பயன்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.
 தினை
  சிறுதானியங்களின் உற்பத்தியில் ஈடுபடவும், உற்பத்தியை அதிகரிக்கவும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் ஆர்வம் காட்ட வேண்டும். சிறுதானிய உற்பத்தியை மேற்கொள்ள அரசும் அவர்களுக்கு வேண்டிய தொழில்நுட்ப ஆலோசனைகளையும், உதவிகளையும் வழங்க வேண்டும். சிறுதானியங்களின் உற்பத்தி அதிகரித்தால் அவற்றின் விலை குறைந்து அனைவரும் பயன்படுத்த வழி ஏற்படும்.

கட்டுரையாளர்:  என்.எஸ்.சுகுமார்
நன்றி: தினமணி நாளிதழ்.

இயற்கை அன்னையின் படைப்புகள் இதில்தான் எத்தனை சிறப்புகள்....

Thursday, November 14, 2013

நீல திமிங்கிலம் (Blue whale)

  

  நீல திமிங்கலங்கள்  (Blue whale) சில கிட்டத்தட்ட 120ft உள்ள பெரிய பாலூட்டி ஆகும். நீல திமிங்கிலம் அழகான அனைத்து கடல்களில் காணப்படும் ஆனால் திமிங்கலங்கள் வெப்பமாண்டல கடல்களில்  வாழ விரும்புகின்றன. பல ஆண்டுகளாக நீல திமிங்கிலம் உலகம் முழுவதும்  மனிதனால் வேட்டையாடி அழிக்கப்பட்டுவிட்டன. உலகம் முழுவதும் 12,000க்கும் குறைவாகவே நீல திமிங்கலங்கள் உள்ளதாகக் கருதப்படுகிறது. நீல திமிங்கலங்களின் முக்கியமாக உணவு (Krill) கூனிப்பொடிகள் ஆனால் அவைகளின் மகத்தான பெரிய வாய் உள்ளே மீன், மற்றும் சிறிய மீன்களின் தண்ணீருடன் அகப்பட்டுக்கொள்ளும். தண்ணீர் திமிங்கலங்கள் வாயில் இருந்து வடிகட்ட பற்கள் ஆயிரக்கணக்கான உள்ளது.
  முழுவதும் வளர்ந்த நீல திமிங்கலத்தில் இருந்து வெளிவரும் ஒரு மூச்சுக் காற்று கிட்டத்தட்ட 2,000 பலூன்கள் நிரப்ப போதுமான காற்றை உருவாக்கும்! 
 நீல திமிங்கிலம் பொதுவாக தனித்தே கடல் பரப்பில் சுற்றித்திரியும், தனியாக அதன் வாழ்க்கையை பெரும்பாலும் செலவழிக்கிறது. அதன் ஜோடிகள் தேடி பயணமாக இருக்கலாம் என்று அறியப்படுகிறது. இந்த நீல திமிங்கலங்கள் இந்த காலத்திற்கு ஒன்றாக இருக்குமா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் அவை ஒன்றுகொன்று தொடர்பு கொள்ளும் இவை 50 க்கும் மேற்பட்ட நீல திமிங்கலங்கள், இப்பகுதியில் காணப்படும்.
  பெண் நீல திமிங்கலங்கள் 2 முதல் 3 ஆண்டுகளில் இனப்பெருக்கத்திற்கு தகுதியடைகிறது குளிர்கால ஆரம்பத்தில் இது வழக்கமாக நடைபெருகிறது. நீல திமிங்கிலம் கன்று 6 மாதங்கள்வரை அம்மாவின் அரவனைப்பில் இருக்கிறது.

இயற்கையின் அதிசயம் கடல் வாழ்  உயிரினம்  இவைகளை அழிக்காமல் பாதுகாப்போம்...

Wednesday, November 13, 2013

செம்புலி

 'கோகர்' என்ற செம்புலியானது, (பூனை இனத்தை சார்ந்த கொடுமையா விலங்கு) மலைச்சிங்கம், பூமா, மான் புலி என்று பலவாறக அழைக்கப்பசுகிறது. இதன் அறிவியல் பெயர் 
   மற்ற பெரிய பூனை இன விழங்குகளோடு ஒப்பிடும் போது நிலை கொஞ்சம் பரவாயில்லை. மான் மற்றும் ஓநாய்கள் போன்ற பெரிய பாலூட்டிகள் இரையாக்கிக்கொள்கின்றன பெரும்பாலும் உணவு இல்லாமல் நீண்ட நாட்களுக்கு இருக்க முடியும். மேலும் 30ft வரை தாண்ட அற்புதமான திறனை உடையது. கடுமையான குளிர்காலத்தில்  நன்கு  வேட்டை ஆடும்
  இது ஒரு சிறந்த வேட்டைகாரன் தண்டு மற்றும் பதுங்கியிருந்து துரத்தி இரையை வேட்டயாடும்   மான், கடமான் , மற்றும் ஆடு , அதே போல் உள்நாட்டு கால்நடை , குதிரைகள் மற்றும் ஆடுகள் என அடங்கும் . இது பூச்சிகள் மற்றும் விலங்குகள் போன்ற சிறிய உயிரினங்களையும் வேட்டையாடும். இந்த பூனை  அடர்ந்த மரங்களுக்கு அடியில் வளரும் புதர் மற்றும் பாறை பகுதிகளில் உள்ள வாழ்விடங்களில் வாழ விரும்புகிறது ஆனால் திறந்த பகுதிகளிலும் வாழ முடியும் 
  வசந்த காலம் மற்றும் கோடை காலத்தில் பொதுவாக 1 முதல் 4 குட்டிகள் வரை இணப்பெருக்கம் செய்யும். ஒரு கோகர் பொதுவாக அதன் 20 வயது வரை வாழும் .
  Cougars பெரிய அளவிலான காரணமாக, கோகர் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு இடங்களில் அறியப்படுகிறது . 1990 களின் பிற்பகுதி வரை வட மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இரு இடங்களில் வசிக்கும் கோகர் 32 வெவ்வேறு இனங்கள் சமீபத்திய ஆய்வுகள், எனினும், 32 கோகர் இனங்கள் பெரும்பான்மை டிஎன்ஏ கூட ஒத்த என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க கண்டத்தில் காணப்படும் கோகர் மட்டுமே 5 வெவ்வேறு இனங்கள் உள்ளன. 
  பூமியின் வடக்கு கோளத்தில் மற்ற எந்தப் பாலூட்டியை விடவும் மிகவும் விரிந்த பரப்பளவில் செம்புலி கானப்படுகிறது.
  கனடா தொடங்கி, அமெரிக்கா, சிலி நாட்டின் தெற்கு நுனி வரை செம்புலி காணப்படுகிறது.
  அதேபோல, பலேவேறு வகையான காடுகள் முதல், தாழ்நிலங்கள், பாலைவனப் பரப்புகளிலும் இவை உலவித் திரிகின்றன.
  22நாடுகளில் செம்புலிகள் இயர்கையாய் கானப்படுகின்றன. அந்த நாடுகள், அர்ஜென்டினா, பெலிஸ், பொலிவியா, பிரேசில், கனடா, சிலி, கொலம்பியா, ஈக்குவடார், எல்சால்வடோர், பிரெஞ்சு, கயானா, குவாதிமாலா, கயானா, ஹோண்சுராஸ், மெச்சிகோ, நிகரகுவா, பணாமா, பரகுவே, பெரு, சுரினாம், அமெர்க்கா, உரிகுவே, வெனிசூலா ஆகியவை. 
 சூழலுக்குத் தகுந்த மாதிரி மாற்றிக்கொண்டு வாழக்கூடிய செம்புலி, வடஅமெர்க்கா, தென்அமெரிக்காவின் அனைத்து வகையான முக்கிய வாழியிடங்களிலும் காணப்படுகிறது. அவற்றில், உயராமான ஆண்டிஸ் மலைத் தொடர்களும் அடங்கும். ஆனால், ஐரோப்பிய காலனி ஆதிக்கத்தைத் தொடர்ந்து வடஅமெர்க்காவின் கிழக்குப் பகுதி முழுவதும் 200 ஆண்டுகளில் ஒரு செம்புலி கூட இல்லாமல் ஒழிக்கப்பட்டுவிட்டது.
  இன்று கோகர் மட்டுமே வட கிழக்கு அமெரிக்காவில் புளோரிடா பகுதிகளில் காணப்படுகிறது மற்றும் மேற்கு கடற்கரையில் cougars எல்லை வியத்தகு மனித தலையீடுகளால் குறைக்கப்பட்டுள்ளது . கோகர் பொதுவாக கனடிய ராக்கி மற்றும் தெற்கு மெக்ஸிக்கோ இன்னும் மலைப்பாங்கான பகுதிகளில் காணப்படுகிறது .
 புளோரிடா பகுதியில் சிறு எண்ணிக்கையிலான செம்புலிகள் காணப்படுகின்றன. அதேவேளையில், கிழக்கு, மத்திய மேற்குப் பகுதிகளில் செம்புலிகளின் எண்ணிக்கை  கொஞ்சம் கூடிவருவது ஆறுதல் அளிக்கும் விஷயம்.

இயற்கை வளங்கள் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் விலங்குகள்,வனவிலங்குகள், பறவைகள்,பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்...

Tuesday, November 5, 2013

ஆஸ்திரேலியக் கடலில் புதிய வகை டால்பின் மீன்

 
வடக்கு ஆஸ்திரேலியாவை அண்டிய கடலில் புதிய வகையான கூன்முதுகு கொண்ட டால்பின் மீன் இனத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்த டால்பின் மீன் இனத்துக்கு அதிகாரபூர்வமான பெயர் எதுவும் இதுவரை வைக்கப்படவில்லை.
பசிபிக் மற்றும் இந்திய சமுத்திரங்களில் வாழும் நூற்றுக்கணக்கான கூன்முதுகு மீன் இனங்களையும் மீன்களின் மண்டையோடுகள் மற்றும் திசுக்களையும் விஞ்ஞானிகள் ஆய்வுசெய்துவருகின்றனர்.
இந்த ஆய்வுகளின் முடிவிலேயே இந்த டால்பின் மீன் இனத்துக்கு பெயர்வைக்க விஞ்ஞானிகள் எண்ணியுள்ளனர்.
இந்த மீன் இனங்களுக்கு முதுகில் உள்ள துடுப்பு போன்ற சிறகுக்கு கீழே கூன் விழுந்திருக்கும்.
இதுவரை கண்டறியப்பட்டுள்ள மூன்று டால்பின் இனங்களில் இரண்டு இனங்கள் மீன்பிடி நடவடிக்கைகளாலும் வாழ்விடங்களில் ஏற்பட்டுள்ள மாறுதல்களாலும் அழிவடையும் அபாயத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இயற்கையின் அதிசயம் கடல் வாழ்  உயிரினம்
இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்...

Wednesday, October 30, 2013

வெளிநாட்டு வண்ணக் குயில்

 
சிட்டுக்குருவி போன்ற சிறிய பறவை இனம் குக்கூ பின்ச். மஞ்சள் நிறத்தில் அழகாகத் தோன்றும். அளவில் சிறிதாக இருந்தாலும் மிகத் தந்திரமான பறவை இது.
 குக்கூ பறவைக்கும் குயில்கள் போலவே கூடுகட்டத் தெரியாது. அதனால் மற்ற பறவைகளின் கூட்டில்தான் முட்டையிடும். குயிலானது காகக்த்தின் கூட்டில் மட்டுமே  முட்டையிடும். ஆனால் இந்த குக்கூ பின்ச் பறவையோ சிஸிடி கோலா மற்றும் பிரினியா ஆகியவற்றின் கூடுகளில் முட்டையிடும். இந்த 3 பறவை இனத்தின் முட்டைகளும் ஒன்றுபோலவே இருக்கும்.
  குக்கூ பின்சின் முட்டை இளஞ் சிவப்பு அல்லது இளம்பச்சை நிறத்தில் இருக்கும். முட்டை ஓட்டில் 'மார்டன் ஆர்ட்' வரைந்ததை போன்று காட்சியளிக்கும். இது மற்ற பறவையின் கூட்டில் முட்டையிட்டாலும், அவைகள் இது தங்கள் முட்டையில்லை என்பதை எண்ணிக்கையின் அடிப்படையில் கண்டுபிடித்துவிடும். ஆனால் தங்கள் முட்டையை மாற்றி உடைத்துவிடக்கூடாதே என்ற அச்சத்தில் குக்கூவின் முட்டையையும் சேர்ந்தே அடைகாக்கின்றன. குஞ்சு பொரித்த தங்கள் குஞ்சு போன்று கருதியே நன்கு உணவூட்டி பராமரிக்கிறது. ஆனால் அத்தனை நிகழ்வுகளையும் தந்திரமாக கண்காணிட்டு வரும் குக்கூ பின்ச்கள், குஞ்சு பொரித்த 3 நாட்களுக்குள்ளாக தனது குஞ்சுகளை மட்டும் அடையாளம் கண்டு தூக்கிச் சென்றுவிடுகிறது.
 தந்திரத்தில் கெட்டிக்கார பறவையாக திகழும் குக்கூவை வெளிநாட்டு வண்ணக்குயில் என்று சொல்லிவிடலாம்.

இவ்வளவு அதிசயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் பூமியின் இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்... 

Tuesday, October 29, 2013

'உன்னிச் செடிகளால் புலிகளுக்கு ஆபத்து'

 

 தமிழகத்தில் பற்றிப்படருகின்ற தாவரங்களான உன்னிச் செடிகளால் முதுமலை உட்பட பல இடங்களிலும் உள்ள புலிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் ஒரு வகை அழகிய மலர்ச்செடிகளாக இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட ''லண்டனா'' எனப்படுகின்ற 
 இந்த உன்னிச் செடிகள், ஒருவகை பற்றிப்படருகின்ற களைகளாக தற்போது உருவெடுத்துள்ளதாகவும் அவற்றால் உள்ளூர் புல் வகைகள் பலவும்  அழிந்துபோவதாகவும் கூறப்படுகின்றது.
பொதுவாக, ஒரு இடத்தில் புலிகள் வாழ வேண்டுமானால், அவற்றுக்கான உணவான மான்களும் அங்கு அவசியமாகின்றன. ஒரு புலி உயிர்வாழ 500 மான்களாவது வேண்டுமாம்.
  ஆனால், இந்த உன்னிச் செடிகள் தற்போது காடுகளில் புதர் போன்று படர்ந்து உள்ளூர் புற்களை அழித்து வருகின்றன. இதனால், மான்களுக்கு உணவு இல்லாமல் போகிறது அதனால், அவை குறைந்து வருவதாகவும், அதனால் அவற்றை உண்ணும் புலிகளுக்கு உணவு இன்றி அவையும் அருகி வருவதாகவும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
மிகவும் குறைந்த பரப்பில் அதிகம் புலிகள் வாழ்கின்ற ஒர் அபூர்வமான இடமாக இருக்கும் முதுமலையில், அவற்றுக்கு உணவாக ஆயிரக்கணக்கில் மான்களும் இருக்கின்றன  ஆனால் உன்னிச் செடிகளின் விருத்தியால் ஏனைய புல்லினங்கள் அழிந்து வருவதாகவும், அதனால் அங்கு வாழும் மான்கள் குறைய அதனால் புலிகளுக்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
  முன்பெல்லாம் வேட்டையாடப்படுவதால்தான் அதிகம் புலிகள் அழிந்தன என்றும், இப்போது இந்த தாவரங்கள் அவற்றுக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.

இயற்கை காடுகள் உயிரினங்களுக்கு பெரும் நன்மை செய்கின்றன, பெருமளவில்  மனிதகுலத்திற்கு...

'மம்மொத்துகளின் அழிவுக்கு காலநிலை மாற்றமே காரணம்'


 புராதன காலத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படும் மம்மொத் எனப்படும் உரோமங்களுடன் கூடிய யானைபோன்ற ஆனால் அதனையும் விடப் பெரிதான விலங்குகளின் அழிவுக்கு காலநிலை மாற்றம்தான் காரணம் என்பதற்கு ஆய்வாளர்கள் மேலும் வலுவன ஆதாரங்களைக் கண்டறிந்திருக்கிறார்கள்.
இவை மனிதர்களால் அழிக்கப்பட்டிருக்கலாம் என்று முன்னர் நம்பப்பட்டது.

 காலநிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக முன்னர் நம்பப்பட்டதற்கு நீண்ட காலம் முன்னதாகவே இவை அழிந்துபோனதாக அவற்றின் மரபணுக்களில் செய்யப்பட்ட ஆய்வுகள் காண்பித்தன.
ஐரோப்பாவில்கூட ஒரு வகை மம்மொத்துகள் வாழ்ந்ததாகவும் 30,000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அவை அழிந்துவிட்டதாகவும் அறியப்பட்டுள்ளது.
பிரிட்டனின் விஞ்ஞான ஆய்வு நிலையமான றோயல் சொஷைட்டியின் அறிக்கை ஒன்று கூறிகிறது.

 காடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசுபாடு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்... 

விவசாயிகளின் நண்பன் ஆந்தை!

 
  அபசகுணமாகவும், அச்சத்தின் அடையாளமாகவும், மரணத்தின் குறியீடாகவும்  மக்களால் கருதப்படும் ஆந்தைகள் வேளாண் தொழிலின் உற்ற நண்பன். உலகெங்கும் 132 ஆந்தை வகைகள் உள்ளன. நாம் வசிக்கும் இடங்களில் மூன்று வகை ஆந்தைகள்  உள்ளன.புள்ளி ஆந்தை, கூகை என்ற வெண்ணாந்தை, கொம்பன் ஆந்தை.
 வெண்ணாந்தை ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தது என்ற தவறான கருத்து உள்ளது.
 இது நம் நாட்டுக்கே உரித்தான அழகான பறவை. அவற்றின் முகம் ஆப்பிள் அல்லது இதய வடிவில் இருக்கும். பழைய கோட்டைகள், பாழடைந்த வீடுகள், கிணறுகளில் வாழும். வட்ட வடிவமான வெள்ளை முகம் தட்டுப் போலவும், உடலின் முன்பகுதி வெண்மையாகவும், பின்பகுதி மஞ்சள் நிறத்தில் சிறுசிறு கறுப்புப் புள்ளிகளுடனும் காணப்படும். கரகரப்பான குரலில் கிறீச்சிடும். அந்தி சாய்ந்த நேரத்தில் கூட்டை விட்டு
 வேட்டைக்கு புறப்படும். இரவில் இதனுடைய தோற்றம் அச்சமூட்டக் கூடிய விதத்தில் இருப்பதாகக் கருதப்பட்டதால், சாக்குருவி என்றும் அழைக்கப்படுகிறது.
 இரவு முழுவதும் தங்கள் மென்மையான சிறகுகளால் துளி கூட சப்தமின்றிப் பறந்து திரியும். வயல் வெளிகளில் திரியும் எலி,சுண்டெலிகளை அலகால் பிடித்து தூக்கிச் செல்லும். ஒரே இரவில் மூன்று முதல் நான்கு எலிகளை விழுங்கி விடும்.
 சிறிது நேரத்தில் கடுந்திறன் கொண்ட ஜீரண உறுப்புகளால் சத்துப் பொருட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது போக, எலும்புத் துண்டுகள், முடி, நகம் போன்றவற்றை சிறு உருண்டைகளாகக் கக்கிவிடும்.
 இதன் இனப்பெருக்கக் காலம் நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை. மரப் பொந்துகள், பாழடைந்த கட்டடங்களில் நான்கு முதல் ஏழு முட்டைகளை இடும்.
 மனிதர்களுக்கு நோய் பரப்பும், அழிவு சக்தியாக இருக்கும் எலிகள், ஆந்தைகளின் உடலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருப்பது இயற்கையின் விந்தைகளில் ஒன்று. மூடநம்பிக்கையாலும் அச்சத்தின் காரணமாகவும் ஆந்தைகள் கொன்று அழிக்கப்படுகின்றன.
 வேளாண்மைக்குத் தீங்கு செய்யும் எலி, வெட்டுக்கிளி, புழு பூச்சிகளை உணவாக்கிக் கொண்டு விவசாயிகளுக்கு உற்ற நண்பனாகத் திகழ்கிறது.
 கூகைகளை பாதுகாப்பது வேளாண் தொழிலுக்கு பெரும் நன்மை புரியும்.
 சுற்றுப் புறப்பகுதிகளில் வயல் வெளிகள் அழிக்கப்பட்டு வானுயர்ந்த கட்டடங்கள் கட்டப்படுவதால் இவைகள் உணவுக்காக வெகுதூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு செல்லும் போது பொதுமக்களால் தாக்குவதால் இவைகள் அழிந்து வருகின்றன.

 இயற்கை காடுகள் உயிரினங்களுக்கு பெரும் நன்மை செய்கின்றன,பெருமளவில் மனிதகுலத்திற்கு வனவிலங்குகள், பறவைகள்,பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்...

Saturday, October 19, 2013

பினோச்சியோ பல்லி (Pinocchio lizard)


   அழிந்து வரும் விலங்குகள் பட்டியலில்  பினோச்சியோ பல்லி இனங்களும் சேர உள்ளன. இவை 1953-ம் ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டவை. கடைசியாக அமெரிக்காவின் மேகக்காடு பகுதிகளில் தென்பட்டன. ஆனால் அதன் பிறகு எங்கும் எளிதில் காணப்படவில்லை. இன்னும் 15 ஆண்டுகளில் இவை அழிந்த உயிரினங்களில் ஒன்றாக மாறிவிடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

  பினோச்சியோ பல்லியிடம் சில அபூர்வ குணங்கள் உண்டு. கூர்மையான மூக்கைக கொண்டவை ஆண் பல்லி, பெண் பல்லிகளை கவர கூர் மூக்கு உதவுகிறது. மெல்லிய இலைகளிலும் நடக்கும் திறன் கொண்டது. இவை எங்கிருக்கிறது என்பதை இரவு நேரங்களில் எளிதில் கணேடுபிடித்துவிடலாம்.
ஏனெனில் இவற்றின் தோல்பரப்பில் காணப்படும் வெள்ளைத் திட்டுக்கள் இவைகளை பிரகாசப்படுத்தி காட்டுகின்றன.

இயற்கை வளங்கள் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் வனவிலங்குகள், பறவைகள் ,பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்...

Friday, October 4, 2013

உலக விலங்கு நாள்


உலக விலங்கு நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 4 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், விலங்குகளின் அனைத்து வாழ்க்கை முறைகள் கொண்டாடப்பட்டு, உலகனைத்தும் முக்கிய நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இயற்கை ஆர்வலரும் விலங்குகளின் தெய்வமாக மதிக்கப்படுபவருமான பிரான்சிஸ் அசிசி என்பவரின் வணக்க நிகழ்வு அக்டோபர் 4-ல் வருவதால் இந்நாள் வன விலங்கு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

காடுகளை வளர்த்து இயற்கையை காத்து எங்களையும் வாழவிடுங்கள்..

Tuesday, April 23, 2013

பாலூட்டும் புறா




தமிழ்நாட்டின் மாநிலப் பறவை மரகதப்புறா (Emerald Dove) பச்சை நிற இறகுகளும் சிவப்பு நிற அலகும் கொண்ட இந்த மரகதப்புறா மட்டுமல்ல, எல்லாப் புறாக்களும் தங்கள் குஞ்சுகளைப் பாலூட்டி வளர்க்கின்றன என்பது தெரியுமா?
  புறாவின் பாலானது அதன் தொண்டைப் பகுதியிலுள்ள 'crop' எனப்படும் தொண்டைப் பையின் உட்புற சுவரின் திசுக்களில் சுரக்கிறது. இதனால் புறாப்பால் 'crop milk' எனவும் அழைக்கப் படுகிறது. திரவமாக இல்லாமல் பாலாடை போன்று சற்றே கெட்டியாக இருக்கும் இந்தப் பாலில் தாய்ப்பாலைவிட புரதச் சத்தும், கொழுப்புச் சத்தும் மிக அதிகம்.  ஆனால் மாவுச் சத்தும் கால்சியமும் கிடையாது.
  தாய்ப்புறா முட்டை இட்டதும் தாய், தந்தை என இரு புறாக்களுமே அடைகாக்கின்றன. குஞ்சுகள் வெளி வருவதற்கு நாலைந்து நாட்களுக்கு முன்பிருந்தே புறாக்களின் தொண்டைப் பையில் பால் சுரக்க ஆரம்பித்து விடுகிறது. அப்படிச் சுரக்கும் பாலை, புறாக்கள் தொண்டைப் பையிலிருந்து எதிர்க்களிப்பு செய்து தங்கள் வாய்க்குள் கொண்டு வருகின்றன. குஞ்சுகள் தங்கள் சிறிய அலகுகளை தாய் தந்தையின் அலகுக்குள் செலுத்தி இந்தப் பாலை உட்கொள்ளுகின்றன.
  குஞ்சுப் புறாக்களுக்கு முதல் இரண்டிலிருந்து மூன்று வாரங்கள் வரை இந்தப் பால் மட்டும்தான் உணவு. பால் சுரக்கும் தொண்டைப் பையானது சாதாரண நாட்களில் புறாக்கள் வேகமாக உட்கொள்ளும் தானியத்தைத் தற்காலிகமாகச் சேமித்து வைக்க உதவும் உறுப்பாகும். பால் கொடுக்கும் சமயத்தில் புறாக்கள் தானியம் உட்கொண்டால் பாலில் குஞ்சுகளால் ஜீரணிக்க முடியாத தானியம் கலக்க வாய்ப்புண்டு. அதனால் புறாக்கள் தாங்கள் பட்டினியாக இருந்து தங்களின் சிறிய குஞ்சுகளுக்கு இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குப் பாலூட்டுகின்றன. எப்பேர்ப்பட்ட தியாகம் மூன்று வாரங்களுக்குப் பிறகு ஈரப்படுத்தி மென்மைப்படுத்தப்பட்ட தானிய உணவு குஞ்சுகளுக்குக் கொடுக்கப்படுகிறது.
  அதிபுத்திசாலியான புறா இனம், கண்ணாடியில் தங்கள் பிரதிபலிப்பைத் தெரிந்து கொள்ளும் (pass the mirror test) ஆற்றல் படைத்தவை மனிதர்களைத் தவிர குரங்கு, யானை, டால்ஃபின் போன்ற இன்னும் சில மிகக் குறைந்த உயிரினங்களுக்கே இந்த ஆற்றல் உண்டு. இதுபோல் இந்தப் புவியில் வாழும் தாவரங்கள், விலங்கினங்கள் என எல்லாவற்றிலும் நமக்குத்  தெரியாத பல்வகை அதிசய ஆற்றல்கள் உள்ளன. இவற்றை அறியும் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும். எல்லா உயிர் இனங்களையும் போற்றிப் பாதுகாக்கும் உணர்வை வளர்க்க வேண்டும். இந்தப் புவியானது, மனிதர்களாகிய நமக்கே சொந்தம் என்ற அகந்தை உணர்வு மழலைச் செல்வங்களிடம்  தலைதூக்கமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை.

இவ்வளவு அதிசயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் பூமியின் இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்... 


Saturday, March 23, 2013

கடல் வெப்பமாவதால் ஒல்லியாகும் மீன்கள் விஞ்ஞானிகள் பகீர் தகவல்


 பருவநிலை மாற்றத்தாலும் கடல் வெப்பம் அதிகரிப்பதாலும் மீன்களின் உடல் எடை குறைந்துகொண்டே வருகிறது என்கின்றனர்  ஆராய்ச்சியாளர்கள். 50 ஆண்டுகளில் மீன்களின் சைஸ் 20 சதவீதம் வரை குறைந்துவிடும் என்று கூறியுள்ளனர். கடல் வெப்பம் தொடர்பாக கனடாவின்  பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலையின் மீன்வள ஆய்வு மையம் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது. உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம் மற்றும் கடல்  வெப்பம் அதிகரிப்பால் கடல் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி தீவிரமாக ஆராயப்பட்டது. 
  கம்ப்யூட்டர் உதவியுடன் 600-க்கும் மேற்பட்ட கடல் மீன் வகைகளின் மாதிரிகள் உருவாக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. இதில் தெரியவந்த தகவல்கள் பற்றி  ஆய்வு குழு தலைவர் பேராசிரியர் வில்லியம் சியூங் கூறியதாவது: சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் பருவநிலையில் பெருத்த மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. கடல் வெப்பமும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால், மீன்களின் வாழ்க்கை முறை பாதிக்கப்படுவது தெரிந்ததே. கடல் வெப்பத்தால் மீன்களின் உடல் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது என தற்போது தெரியவந்துள்ளது. 
 மிகச்சிறிய அளவில் தொடங்கி பல டன் வரை பல்வேறு சைஸ்களில் மீன்கள் இருக்கின்றன. கடல் வெப்பம் அதிகரிப்பால், மீன்களின் அதிகபட்ச  வளர்ச்சியானது குறைந்துகொண்டே போகிறது. 2000-ல் இருந்ததைவிட மீன்களின் எடை 2050-ல் 14 முதல் 20 சதவீதம் வரை குறையும் என்று தெரிகிறது.  பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளில் உள்ள கடல்களில் (இந்திய பெருங்கடல், வங்கக்கடல், அரபிக்கடல் உள்பட) இந்த பாதிப்பு அதிகம் இருக்கிறது.  இவ்வாறு வில்லியம் சியூங் கூறினார். 
 மீன்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி பிரிட்டிஷ் கொலம்பியாவின் மீன்வள ஆய்வு மையம் பல ஆண்டுகளாக ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. 30 ஆண்டுகளுக்கு  முன்பு டேனியல் பாலி என்ற ஆராய்ச்சியாளர் தலைமையில் இதுதொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. தண்ணீரில் உள்ள ஆக்சிஜனை எடுத்துக் கொண்டுதான்  மீன்கள் தொடர்ச்சியாக வளர்கின்றன. கடல் வெப்பம் அதிகரித்தால் போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் மீன்களின் உடல் வளர்ச்சி குறையும் என்று ஆய்வு  முடிவில் டேனியல் கூறியிருந்தார். அதன் அடிப்படையிலேயே தற்போதைய ஆய்வு நடத்தப்பட்டது.


மனிதன் இயற்கையை இயற்கையாக இருக்கவிடாமல் இருப்பதே இயற்கை அழிவிற்கு காரனம்.


Tuesday, March 19, 2013

புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் எரிமலைகள்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புவியின் வெப்பத்தை கட்டுக்குள் வைக்கும் திறன் எரிமலைகளுக்கு இருக்கிறது என்னும் ஒரு ஆச்சரிய தகவலை அண்மையில் வெளியான ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் விஞ்ஞானிகள் கணித்ததை விட பூமி குறைந்த அளவே வெப்பமடைந்திருந்ததன் காரணத்தை கண்டறிய முயன்ற விஞ்ஞானிகளுக்கு எரிமலைகள் பூமியை வெப்பமடைதலிலிருந்து காத்திருப்பது தெரியவந்தது.

பூமி வெப்பமயமாதலில் முக்கிய பங்கு வகிப்பது வெப்ப வாயுக்கள் எனப்படும் Green house gases தான். இந்த வாயுக்கள் சூரிய வெப்பத்தை உள்வாங்கி பூமியின் வளிமண்டலத்தின் வெப்பநிலையை படிப்படியாக அதிகரிக்கின்றன .இந்நிலையில், வெப்ப வாயுக்களால் பூமியின் வளிமண்டலத்தில் ஏற்படும் வெப்பநிலை மாறுதலை கட்டுப்படுத்தும் தன்மை எரிமலைகளிலிருந்து வெளியேறும் சில வாயுக்களுக்கு இருப்பது தெரியவந்துள்ளது.

எரிமலைகள் வெடிக்கும்போது வெளியேறும் குழம்பிலிருந்து வெளிப்படும் சல்ஃபர் டையாக்சைடு (Sulphur dioxide) வாயு பூமியிலிருந்து சுமார் 12 முதல் 20 மைல்கள் உயரத்தில் உள்ள வளிமண்டலத்தின் ஸ்ட்ரேடோஸ்ஃபெரிக் ஏரோசால் (stratospheric aerosol layer) அடுக்கிற்கு செல்கிறது. அங்கு ஏற்படும் வேதியியல் மாற்றங்களினால் சஃல்பர் டையாக்சைடு வாயு, சல்ஃப்யூரிக் அமிலம் (Sulphuric acid) மற்றும் நீர் ஆவியாக (water vapour) மாறுகிறது.

வளிமண்டலத்தில் இருக்கும் இந்த சல்ஃப்யூரிக் அமிலமும் நீர் ஆவியும், சூரிய வெப்பத்தை பிரதிபலித்து அதனை விண்வெளிக்கே திருப்பி அனுப்பிவிடுகிறது. சூரிய ஒளி வளிமண்டலத்தை அடையும் முன்பே இது நிகழ்ந்துவிடுவதால், வெப்ப வாயுக்களால் பூமி வெப்பமயமாதல் குறைக்கப்படுகின்றது.

எரிமலையின் இந்த செயல்பாடுகளினால் 2000 ஆம் ஆண்டு முதல் பூமி வேப்பமயமடைதல் 25 சதவீதம் குறைத்துள்ளது.

கொலராடோ பல்கலைகழகம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ள இந்த தகவலை வைத்து வருங்காலத்தில் பூமியின் வெப்பநிலை எப்படி இருக்குமென உறுதியாக சொல்லமுடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு அதிசயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் பூமியின் இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்... 

Friday, March 15, 2013

தர்ப்பூசணி


  கோடையை தணிக்கும் இயற்கை வரப்பிரசாதங்களில் ஒன்று தர்ப்பூசணி. இது தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து உலகம் முழுவதும்  பரவியது. வெப்ப மண்டல மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் அதிக அளவில் விளையும், நிறம் மற்றும் வடிவத்தில் வேறுபட் வகைகளில் தர்ப்பூசணி விளைகிறது. சிவப்பு சதைப்பகுதி கொண்ட தர்ப்பூசணி பிரபலம். ஆனால் ஆரஞ்சு, மஞ்சள் நிறங்களில் சதைப்பகுதி கொண்ட தர்ப்பூசணி வகைகளும் உள்ளன. 
  தர்ப்பூசணி அதிக அளவில் நீர்ச்சத்து நிறைந்தது. அத்துடன் உடல் இயக்கத்திற்கு தேவையான மின்னாற்றலை வழங்கும் எலக்ட்ரோலைட்டுகளும் அதிக அளவில் உள்ளன.
  குறைந்த ஆற்றல் வழங்கும் கனி தர்ப்பூசணி. 100 கிராம் தர்ப்பூசணி 30 கலோரி ஆற்றலை உடலுக்கு வழங்குகிறது. கொழுப்புச் சத்து மிகக் குறைந்த அளவிலும், நோய் எதிர்ப்பு பொருட்கள் மற்றும் இதர சத்துகள் மிகுதியாகவும் கொண்டது தர்ப்பூசணி.
  வேறு எதிலும் இல்லாத அளவுக்கு மிகுதியாக 'வைட்டமின் ஏ' சத்து தர்ப்பூசணியில் உள்ளது. 100 கிராம் தர்ப்பூசணியில் 569 மில்லிகிராம் 'வைட்டமின் ஏ' கிடைக்கிறது. இது கண்  பார்வைத் திறனுக்கும், நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கும் மிகவும் அத்தியாவசியமாகும். சருமத்திற்கு பொலிவு தரும். நுரையீரல் மற்றும் தொண்டைப் புற்றுநோய் ஏற்படாமல் தடுப்பதிலும் 'வைட்டமின் ஏ' பங்கெடுக்கிறது.
  லைகோபின், பீட்டா கரோட்டின், லுடின்,  ஸிசாந்தின், கிரிப்டோசாந்தின் போன்ற நோய் எதிர்ப்பு பொருட்கள் உள்ளன. இவை தொண்டை, இரைப்பை, மார்பு, நுரையீரல், குடல் போன்ற பாகங்களைத் தாக்கும் புற்றுநோய்களில் இருந்து உடலைக் காக்கும். உடற்செயல்களைத் தூண்டும்.
  புற ஊதாக் கதிர்களின் பாதிப்பிலிருந்து சருமத்தை பாதுகாக்கும் லைக்கோபின் நிறமி தர்ப்பூசணியில் மிகுதியாக உள்ளது.
  பொட்டாசியம் தாது தர்ப்பூசணியில் நிறைந்துள்ளது. இது இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றையும் கட்டுக்குள் வைக்கிறது. மேலும் முடக்குவாதம், இதய பாதிப்புகள் ஏற்படாமல் காப்பதிலும் பங்கெடுக்கிறது.
  வைட்டமின் பி-6, வைட்டமின் பி-1, வைட்டமின்-சி போன்ற வைட்டமின்களும், மாங்கனீசு தாதுவும் சிறந்த அளவில் கிடைக்கிறது. வைட்டமின் சி சிறந்த நோய் எதிர்ப்பு பொருள்கும். உடலை நோய்த் தொற்றுக்கு எதிராக செயல்படுவதோடு, தீமை பயக்கும் பிரீ-ரேடிக்கல்களை துப்புரவு செய்கிறது.
  தர்ப்பூசணியை குளிர்ந்த நீரில் கழுவி, உலர்ந்த துணியால் துடைத்து பின்னர் தோல் பகுதியை வெட்டி அகற்றிவிட்டு துண்டுகளாக்கி சாப்பிடவேண்டும். தோல் பகுதியுடன் துண்டாக்கி சாப்பிட்டால் கிருமித் தொற்றுகளால் நோய்கள் ஏற்படலாம்.
   இயற்கை சுவையில் தர்ப்பூசணியை அப்படியே சாப்பிட்டு மகிழலாம்.
  பழ சாலட்டுகளில் தர்ப்பூசணி துண்டுகளை சேர்த்து ருசிக்கலாம்.
  தர்ப்பூசணி ஜாம் செய்யலாம். ஜூஸ் செய்து பருகலாம்.
  தர்ப்பூசணி விதைகளை வருத்து நொறுக்குத் தீனியாக சுவைக்கலாம்.
  தர்ப்பூசணியின் வெண்மை நிற தோல் பகுதியை காய்கறிபோல் சமைக்கலாம்.

இயற்கை அன்னையின் படைப்புகள் இதில்தான் எத்தனை சிறப்புகள். 

Saturday, December 8, 2012

ஆச்சரியமான உண்மைகள்!


 மனிதர்களாகிய நாம் சிறப்பாகச் செயல்படுவதற்கு நமது ஐம்புலனறிவு ஒரு முக்கியக் காரனம். ஐம்புலனறிவு எல்லா உயிகளுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
 பறவைகளுக்கு பார்வை சக்தி அதிகம். வானத்தில் வட்டமிடும் பருந்து, தரையில் உள்ள பல்லியைக் கூட பார்த்து அதன் மீது பாய்ந்து பற்றும்.
  வேட்டையாடும் விலங்குகளுக்குப் பார்வை சக்தி குறைவு. ஆனால் மோப்ப உணர்வு மொட்டுகள் 22 கோடி வரை உள்ளன.
 மனிதர்களுக்கு வாசனையை உணரும் மொட்டுகள் 50 இலட்சம் உள்ளன. பத்தாயிரம் வெவ்வேறு வாசனைகளை அவனால் பிரித்தறிய முடியும்.
 உயிர் வாழ்வதற்கு எல்லா உணர்வுகளும் வேண்டும் என்பதில்லை. செடிகள் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடு வாயுவை உண்டு வாழும் ஒரு புழு உள்ளது. அதற்கு அந்த வாசனை மட்டுமே தெரியும்.
 ஒவ்வொர் உயிரினமும் தம் உடலில் இருந்து தனித்தனி வாசனையைக் காற்றில் கலக்கிறது. வண்ணத்துப்பூச்சி தன் வாசனையால் பல மைல்களுக்கு அப்பால் உள்ள தன் இணையைக் கவரும்.
 சூரியனின் புறஊதாக் கதிர்களை தேனீக்கள் உணருகின்றன. சூரியன் இருக்குமிடத்தை வைத்துக் கொண்டு தம் கூட்டுக்குத் திரும்பும் திசையை அவை தெரிந்துகொள்கின்றன. தவளைக்குப் பார்வை சக்தி குறைவு. தன் இரை மட்டுமே அதற்குப் புலப்படும். இன்னும் பல பறவை, விலங்கு, பூச்சியினஙகளிடம் ஆச்சரியமான உண்மைகள் உண்டு.

மனிதன் இயற்கையை இயற்கையாக இருக்கவிடாமல் இருப்பதே இயற்கை அழிவிற்கு காரனம்.


Friday, December 7, 2012

நன்மை செய்யும் பூச்சிகளைக் காப்போம்!


 பயிர்களைத் தாக்கி சேதப்படுத்தும் தீமை விளைவிக்க கூடிய பூச்சிகளை அழிக்கக்கூடிய நன்மை தரும் பூச்சிகள் இயற்கையாகவே ஒவ்வொரு வயலிலும் உள்ளன.
 இப்படிப்பட்ட நன்மை தரும் பூச்சிகளை ஒவ்வொரு விவசாயியும் அடையாளம் கண்டு கொள்வதோடு மட்டு மல்லாமல், அதை அழிக்காமல் இருக்க பூச்சிக் கொல்லி மருந்தின் உபயோகத்தைத் தவிர்த்திட வேண்டும்.
 இது குறித்து ஆலங்குளம் வேளாண்மை உதவி இயக்குநர் இ.வ.நா.முத்துஎழில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
 கிரைசோபா: இவ்வகை பூச்சிகளில் ஆண் பூச்சிகள் 10 முதல் 12 நாள்களும்,பெண் பூச்சிகள் 35 நாள்களும் உயிர்வாழும். 500 முதல் 600 முட்டைகள் வரை இடும். இது குஞ்சு பருவமாக இருக்கும் போதே தீமை செய்யும் பூச்சிகளைத் தாக்க ஆரம்பித்து விடும். இவை பயிர்களைத் தாக்கும் அசுவினி, இலைப்பேன், தத்துப்பூச்சிகள், முட்டைகள், குஞ்சுகளைத் தாக்கி அழிக்கும்.
 இதன் வாழ்நாளில் 400 முதல் 500 தீமை செய்யும் பூச்சிகளை அழித்து விடும். கிரைசோபா தாய்பூச்சி பச்சை நிறத்தில் கண்ணாடி போன்ற இறக்கை உடையது. இதன் குஞ்சுகள் பழுப்பு நிறத்தில் இருக்கும்.
 முட்டை ஒட்டுண்ணிகள்: முட்டை ஒட்டுண்ணிகளான டிரைக்கோகிரம்மா டெலிநாமஸ்,டெட்ராஸ்டிக்ஸ் வகை ஒட்டுண்ணிகள் தன்னுடைய வாழ்நாளில் 20 முதல் 40 முட்டைகள் வரை இடும். இதில் இருந்து வெளிவரும் பூச்சிகள் தீமை செய்யும் பூச்சிகளைக் காய்புழுக்களின் முட்டைகளின் மீது தன் முட்டைகளை இட்டு இனத்தைப் பெருக்கி, காய்புழுக்கள் வெளிவராமல் தடுக்கிறது. இது தன்வாழ்நாளில் 20 முதல் 40 தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கிறது. இந்த ஒட்டுண்ணிகள் கருப்பு நிறம் கொண்டவை.
 அன்சிர்டிட்ஸ் முட்டைப் புழு ஒட்டுண்ணி: இதன் வாழ்நாள் 14 முதல் 17 நாள்கள். தன்வாழ்நாளில் 300 முதல் 400 முட்டைகள் வரை இடும். இது காய்ப் புழுக்களின் முட்டைகளின் மீது தன் முட்டைகளை இடும். முட்டைகளையும், புழுக்களையும் தாக்கி அழிக்கும். இவை பழுப்பு மற்றும் கருப்பு நிறம் கலந்த சிறிய ஈ போன்றது.
 செலானஸ்குளவி: தாய்பூச்சி சிவப்பும் கறுப்பும் கலந்தது. அடி வயிற்றில் மஞ்சள் கோடு இருக்கும். இவை தாய்ப் புழுக்களின் முட்டைகள், புழுக்களையும் தாக்கி அழிக்கும்.
 கோடீசியா குளவி: இதன் வாழ்நாள் 10 முதல் 15 நாள்கள். 10 முதல் 30 முட்டைகள் வரை இடும். இவைகள் காய்ப் புழுக்களின் முட்டைகளையும், புழுக்களையும் தாக்கி அழிக்கும்.
 பிகோனிட் குளவி: இதன் வாழ்நாள் 3 முதல் 6 நாள்கள். இது 6 முதல் 20 முட்டைகள் இடும். இந்த குளவிகள் காய்ப் புழுக்களையும், முட்டைகளையும் தாக்கி அழிக்கும்.
 பெதிலிட்ஸ் குளவி: இவ்வகை குளவிகள் கருப்புநிறம் கொண்டவை. சிறு எறும்புபோல் இருக்கும். காய்ப் புழுக்களை நினைவு இழக்கச் செய்து,அதன் மேல் தன் முட்டைகளை இட்டு இனப் பெருக்கம் செய்து, காய்ப் புழுக்களை அழிக்கின்றன. இதன் வாழ்நாள் 10 முதல் 12 நாள்கள். 3 முதல் 8 முட்டைகள் இடும்.
 இக்மானிட் குளவி: இதன் வாழ்நாள் 3 முதல் 6 நாள்கள். இது 10 முதல் 30 முட்டைகளை இடும். புழுவின் மேல் ஒரு முட்டை வீதம் இடும். குஞ்சு புழுக்களை அழிக்கும். தன் வாழ்நாளில் 10 முதல் 30 பூச்சிகளை அழிக்கும்.
 டாகினிட் ஈ: இதன் வாழ்நாள் 7 நாள்கள் . இதன் நிறம் கறுப்பு அல்லது கருநீலம். வீட்டு ஈயை விடப் பெரியது. 8 முதல் 12 முட்டைகள் இடும். காய்ப் புழுக்களின் மேல் 2 முதல் 4 முட்டைகள் இடும். வெளிவரும் சிறிய புழுக்கள் காய்ப் புழுக்களை அழிக்கும்.
பிராகிமீரியா குளவி: இது கறுப்பு நிறம் கொண்டது. மஞ்சள் கோடுகள் இருக்கும். குண்டானது. பின்கால்கள் இருக்கும். இதன் வாழ்நாள் 3 முதல் 5 நாள்கள். இந்த குளவி 5 முதல் 20 முட்டைகள் வரை இடும். இது காய்ப்புழு அல்லது கூட்டுப்புழு மீது ஒரு முட்டை வீதம் இட்டு அழிக்கின்றது. இதன் வாழ்நாளில் 5 முதல் 20 தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கிறது.
 தட்டான் இனங்கள்: தட்டான், ஊசி தட்டான் போன்ற பூச்சிகள், வானிலும் நீர்நிலைகளின் மீதும் பறந்து கொண்டே இருக்கும். பறந்துச் செல்லும் கொசு மற்றும் சிறு பூச்சிகளைப் பிடித்து உண்கின்றன. தட்டான்கள் சுற்றிவளைத்து இரைதேடும் சிறப்பு வாய்ந்தவை. இதன் கால்கள் இலகுவாக சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் இளம் புழுக்களை கவ்வி பிடித்து தாக்க ஏதுவாக அமைந்துள்ளன.
 பொறி வண்டு: இதன் தாய்ப் பூச்சி முழுவதும் மஞ்சள் அல்லது முழு சிவப்பில் கரும்புள்ளிகள் இருக்கும். குஞ்சு கறுப்பு அல்லது கருநீலமாக இருக்கும். இதன் வாழ்நாள் 42 முதல் 70 நாள்கள். இது 150 முதல் 200 முட்டைகள் வரை இடும். இந்த வண்டுகள் காய்ப் புழுக்கள்,அதன் முட்டைகள்,அசுவினி தத்துப் பூச்சிகள், வெள்ளை ஈ, முட்டைகள் குஞ்சுகளை அழிக்கின்றன. தன் வாழ்நாளில் 400 முதல் 500 பூச்சிகளைத் தேடி அழிக்கின்றன.
 அசாசின் வண்டு: நன்செய்,புன்செய் பயிர்களில் திடீரென அதிகமாக வரும். கழுத்தில் 3 முட்டைகள் இருக்கும். இது 35 நாள்கள் உயிர்வாழும்.
 150 முதல் 200 முட்டைகள் இடும். இந்த வண்டுகள் அந்துப் பூச்சிகளையும், புழுக்களையும் தாக்கி அழிக்கும். தன் அளவை விட பெரிய பூச்சிகளையும் தாக்கும் தன்மை உடையது. தன் வாழ்நாளில் 120 முதல் 140 பூச்சிகளை அழிக்கும்.
 சிலந்திகள்: பல வண்ணங்களில், பல வகையான சிலந்திகள் அனைத்துமே நன்மை செய்பவை. இவை 60 முதல் 400 முட்டைகள் வரை இடும். 120 நாள்கள் வாழக் கூடியது. இதுவும் தன் அளவைவிட பெரிய பூச்சிகளையும் தாக்கி அழிக்கும். தன் வாழ்நாளில் 500 முதல் 600 பூச்சிகளைத் தாக்கி அழிக்கும்.
நீள கொம்பு வெட்டுக்கிளி: இது உடலைக் காட்டிலும் இரண்டு அல்லது மூன்று மடங்கு நீளமுடைய கொம்பு போன்ற உணர் உறுப்பினைக் கொண்டு இருக்கும். பச்சை நிறமுடையது. மென்று விழுங்கும் வாய் உறுப்பைக் கொண்டது. இவை பூச்சிகளின் முட்டைகள், தத்துப் பூச்சிகளை உணவாக உள்கொள்ளும். இதன் வாழ்நாள் 110 நாள்கள்.
 மேற்கண்ட நன்மை தரும் பூச்சிகளை அடையாளம் கண்டு அதை பாதுகாத்து விவசாயிகள் பலன் அடைந்திட வேண்டும் என்றார் ஆலங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்.

நன்றி தினமணி நாழிதள்.....

இயற்கை வளங்கள் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் விலங்குகள்,வனவிலங்குகள், பறவைகள்,பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்...


Friday, November 30, 2012

வேகமாக உயருகிறது கடல் நீர் மட்டம்


 சர்வதேச பருவநிலை மாற்றக் குழு கணித்ததை விட மிக வேகமாக உலகில் உள்ள கடல் மட்டம் உயர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 பூமியின் வெப்பநிலை உயர்ந்து வருவதன் காரணமாக பனிக்கட்டிகள் உருகி அதனால் கடல் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருவது அனைவரும் அறிந்ததே. இதனால், டோக்கியோ போன்ற கடற்கரையோர பகுதிகள் பலவும் நீருக்குள் மூழ்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சர்வதேச பருவநிலை மாற்றக் குழு கணித்ததை விட 60% வேகமாக கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதை செயற்கைக் கோள் மூலமாக அறிந்து அதனை விஞ்ஞானிகள் கணித்ததோடு ஒப்பிட்டதில் இந்த விவரம் தெரிய வந்தது.


அண்டங்கள் ஆகாயங்கள் இயற்கை! வானும் விண்மீன்களும் இயற்கை! சூரியனும் ஒளியும் இயற்கை! அதைச் சுற்றிவரும் கிரகங்கள் இயற்கை! ...


Wednesday, November 21, 2012

பறக்கும் பாம்பு


  பாம்பினங்களிலேயே மிகவும் அழகிய நிறங்கொண்ட பாம்பு "பறக்கும் பாம்பு' ஆகும். உண்மையில் இது பறவைகள்போல் பறப்பதில்லை. ஆனால் உயர்ந்த மரக்கிளையிலிருந்து கீழே உள்ள கிளைக்கு காற்றில் எழும்பிச் செல்கிறது. மேலும், இவை ஒரு மரத்திலிருந்து பல மீட்டர் தொலைவில் உள்ள இன்னொரு மரத்திற்குத் தாவிக் குதிக்கும்.
   மரங்களில் வாழும் இந்தப் பாம்பு மிக வேகமாக மரங்களிடையே தாவிச் செல்லக்கூடியது. இது, தாவும்போது தன் உடலை விறைப்பாக வைத்துக்கொண்டு கீழ் நோக்கி வரும். அதே நேரத்தில் தன் வயிற்றுப் பகுதியை இழுத்துக்கொள்ளும். இந்தச் செயலால் இதன் விலா எலும்பின் வெளிப்பகுதி அகன்று நிற்கும். இதனால், பார்ப்பதற்கு இந்தப் பாம்பு பறப்பது போலத் தெரியும்.
   இந்தப் பாம்பு மென்மையான செதில்களுடன் மிகமெலிந்த உடலமைப்பைக் கொண்டிருக்கும். ஏறத்தாழ ஒரு மீட்டர் நீளம் இருக்கும். இதன் உடல் கருப்பு நிறத்தில் இருக்கும். அதில் ஆங்காங்கே மஞ்சள் மற்றும் வெண்மை நிறங்கொண்ட வளையங்களும், அவற்றின் நடுவில் பொட்டு வைத்ததுபோன்று சிவப்புப் புள்ளிகளும் காணப்படும்.
   இவ்வாறு பல்வேறு வண்ணங்கள் நிறைந்த உடலைக்கொண்டிருக்கும் இந்தப் பாம்பு "அணிகல மரப் பாம்பு'  என்றும், "தங்க மரப் பாம்பு' என்றும் அழைக்கப்படுகிறது.
   இந்தப் பாம்பு "கொலுபிரிடே' என்ற குடும்பத்தைச் சேர்ந்த விஷமற்ற மரப்பாம்பு வகையாகும். நம் நாட்டில் காணப்படும் பறக்கும் பாம்பு "கிரிசோபீலியா ஆர்நேடா'  என்ற இனத்தைச் சேர்ந்தது. இவ்வகைப் பாம்புகள் நம் நாட்டில் தென்மேற்குப் பகுதி மலைகளில் 1500 அடி உயரத்தில் காணப்படுகின்றன. மேலும், வட கிழக்குப் பகுதிகளான பிகார், ஒரிசா, அசாம் ஆகிய காட்டுப் பகுதிகளிலும், இலங்கை, தென் ஆசியா ஆகிய நாடுகளிலும் காணப்படுகின்றன.
   இந்தப் பாம்பின் மற்றொரு இனமான "கிரிசோபீலியா பார்டேசி' அந்தமான் தீவில் காணப்படுகிறது. பெரும்பாலும் அடர்ந்த காடுகளிலும், பெரிய மரங்களிலும் வசிக்கும் இந்தப் பாம்புகள், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளில் வீடுகள் மற்றும் பூங்காக்களின் சுற்றுப்புறங்களில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.
   மற்ற மரப் பாம்புகளைப் போல இந்தப் பாம்புகளும் பகல் வேளையில் இரை தேடுகின்றன. இவை பொதுவாக தாழ்வான புதர்களிலும், புல்லிலும், மரங்களிலும் காணப்படும் தவளை, பல்லி, ஓணான், சிறிய பறவைகளின் முட்டைகள், பூச்சிகள்போன்றவற்றை உண்ணும். இந்தப் பாம்புகளின் விஷம், சிறு பிராணிகளை அசைவற்றுப்போகச் செய்வதற்கு உதவுகிறது. ஆனால், இந்த விஷம் மனிதனுக்கு எந்தவிதமான தீங்கையும் விளைவிப்பதில்லை. பறக்கும் பாம்புகள் பெரும்பாலும் இரையை உயிருடனே உட்கொள்ளும். மரக் கிளைகளில் வேட்டையாடும்போது மிக மெதுவாக ஊர்ந்து செல்லும்.
   இவை ஏறத்தாழ ஆறுமுதல் பன்னிரண்டு முட்டைகள் வரை இடுவதாகத் தெரிகிறது.
   இந்தப் பாம்புகளின் பறக்கும் தன்மையைப் பற்றி குறிப்பாக மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் பழங்கதைகள் இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் இவை பறவைகளாக இருந்து பின்னர் பாம்பாக மாறிவிட்டதாக இந்தப் பழங் கதைகள் கூறுகின்றன. ஆனால் இது உண்மையில்லை. அழகிய நிறங்கள் கொண்ட இந்த அணிகலப் பாம்புகள் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தப் பாம்புகள் வித்தியாசமான நிறங்களில் இருக்கும் ஒரே காரணத்திற்காகவே, இவற்றைப் பார்ப்பவர்கள்  நச்சுப் பாம்பு என்று நினைத்துக் கொன்றுவிடுகிறார்கள். இது தடுக்கப்பட்டு இந்தப் பாம்புகள் பாதுகாக்கப்படவேண்டும்.

இயற்கை அன்னையின் படைப்புகள் இதில்தான் எத்தனை சிறப்புகள். ... 


Tuesday, November 20, 2012

பல்லிகள்


 பல்லி என்றதுமே சுவரில் அங்கங்கே இருந்தபடி பூச்சி பிடித்துக்கொண்டிருக்குமே அதுதான் நினைவுக்கு வரும். இந்தவகைப் பல்லிகள் நம் வீடுகளில் நடமாடும் பூச்சிகளை பிடித்துத் தின்று வீட்டை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. இதெல்லாம் குட்டிப்பல்லி வகைகள். முதலை சைசில் பல்லிகள் இருகின்றன. இந்தப்பல்லிகள் சமயத்தில் மனிதர்களையும் தாக்கிவிடும்.
கொமாட்டா பல்லி
 பார்த்த மாத்திரத்தில் தோற்றத்தாலேயே பயமுருத்தும் இந்த வயைப்பல்லிகள் 3மீட்டர் நீளம் கொண்டவை. எடை ஒரு சராசரி மனிதனின் எடையைப்போல் 70 கிலோவரை இருக்கும். இந்தோசினியத் தீவுகளில் இவை அதிகம் காணப்படுகின்றன. இவற்றின் உணவு பெரும்பாலும் அழுகிக் கியைக்கும் மிருகங்களின் உடல்தான். தோற்றத்தில் பெரிதாக இருந்தாலும் வேட்டையாடும் திறன் இல்லாதவை. அதனால் சிங்கம், புலி போன்ற மிருகங்கள் வேட்டையாடி சாப்பிட்டதில் மீந்துபோன உணவுகளை இவை சாப்பிடும். எதிரிகளிடம் இவை மாட்டிக்கொள்ளும்போது வாயில் இருந்து எச்சிலை எதிரி மிருகங்கள் மீது பீச்சியடிக்கும். இந்த எச்சிலில் விஷம் இருப்பதால் எதிரி விலங்குகள் அதை உணர்ந்து கொண்டு ஓட்டம் பியித்து விடும். இந்த வகைப்பல்லிகள் சமயங்களில் மனிதர்களையும் தாக்க முற்படும்.
       ப்ளையிங் டிராகன் லிசார்டு
 இது சாதாரன பல்லி வகைதான். ஆசியா வெப்ப மண்டல காடுகள் காணப்படுகின்றன. சுமார் 15 இனங்கள் உள்ளன. 8 (20 செமீ) இருக்கும். மழை நேரங்களில் அதிக காற்றோ, அதிக குளிரோ இதனால் தாங்க முடியாது. அதனால் அம்மாதிரி சமயங்களில் முடிந்தவரை பாதுகாப்பான இடம் தேடி பதுங்கிக் கொள்ளும்.
 இதன் சிறப்பு அம்சம், இதன் தாவும் திறன் தான். மரம் விட்டு மரம் தாவும்போது பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல அத்தனை அழகு. இரண்டு மரங்களுக்கு இடையே அதிக பட்சதூரமான 8 மீட்டர் தூரத்தை இது கடக்கும்போது இவை காற்றில் மிதப்பது போல் தோற்றம் தரும். இதன் தோல் அமைப்பு இப்படி பறப்பதற்கு ஏதுவாக அமைந்திருப்பது சிறப்பு.
மானிட்டர் லிசார்டு
  உடும்பு வகைகளை இந்தப் பெயரிட்டு அழைக்கிறார்கள். மனிதர்களின் செல்லப் பிராணியாகவும் இவை வளர்க்கப்படுகிறது. இவை புத்திசாலிகள். நினைவாற்றலில் தேர்ந்தவை. பட்டுப்பூச்சி, மண்புழுவையும் உணவாகக் கொள்ளும். மலேசியாவில் மட்டும் இது அங்குள்லவர்களுக்கு உணவாகி விடுகிறது. உடும்பை அங்குள்ள பெரும்பாலான ஓட்டல்களில் சுவையான உணவுப் பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள்.
       ரீகன்கவுட் லிசார்டு
  ஆப்பிரிக்காவிலும் மெக்சிகோவிலும் அதிகம் காணப்படும் இந்தவகைப் பல்லிகள் வாழ ஏற்ற இடமாக இருப்பது பாலைவனங்கள்தான். மண்ணில் இவை இருக்கும் போது இது சட்டென கண்ணில் படாது. அந்த அளவுக்கு மண்ணின் நிறம் அதன் நிறத்தோடு ஒத்திருந்து இதற்கு உதவுகின்றன.
 இந்த வகைப் பல்லிகள் எதிர்பாரமல் எதிரிகளிடம் மாட்டிக்கொள்ள நேரும்போது மூச்சை இழுத்துப் பிடித்து தன் உடம்பை பெரிதாக்கிக் காட்டும். இந்த திடிர் உடல் விரிவாக்கம் பார்த்து பயப்படாத எதிரி மீது, கண்ணில் இருந்து இரத்தத்தை பீய்ச்சியடிக்கும். நரம்புகள் வழியே மூளைக்குப் போகும் இரத்தத்தின் செயல்பாட்டை இப்படி நிறுத்திக் கொண்டு இப்படி கண் வழியே இரத்தம் பீய்ச்சும் போது எதிரி விலங்குகள் பயத்தில் ஓட்டம் பிடித்துவிடும்.
பிரில்டு லிசார்டு
 ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படும் இந்த வகை பல்லிகளின் ஸ்பெஷல், சிங்கத்தின் பிடரிமயிரை திருப்பிவைத்த மாதிரியான இதன் வித்தியாச முகத்தோற்றமே. நடக்கும், பறக்கும் பூச்சிகள் அத்தனையும் அவற்றின் உணவே. சின்ன பல்லியையும் பிடித்து உணவாக்கிக் கொள்ளும். சமயத்தில் இதைவிட பெரிய பல்லிக்கு இரையாகிவிடுவதும் உண்டு. கழுகு, ஆந்தை இதன் எதிரிகள்.

இற்கையுடன் உயிரினங்களை வாழவிடுவோம்.

Friday, October 12, 2012

தக்காளி பக்கவாதத்தை தடுக்கும்


 தக்காளி அதிகம் சாப்பிட்டால் ஸ்ட்ரோக் என்று ஆங்கிலத்திலும், வாதம், பக்கவாதம் என்கிற பெயரில் தமிழிலும் அழைக்கப்படும் நோய் வராமல் தடுக்கமுடியும் என்று புதிய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
தக்காளி, சிகப்பு குடமிளகாய் மற்றும் தர்பூசணி ஆகியவற்றில் இருக்கும் பிரகாசமான சிகப்பு நிறமுடைய லைகோபீன் என்கிற வேதிப்பொருள் வாதநோயை தடுக்கும் தன்மை கொண்டிருப்பதாக, இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
 வாத நோய் குறித்து பின்லாந்தில் இருக்கும் மருத்துவ விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வுக்காக ஆயிரத்து முப்பத்தி ஓர் ஆண்களை தேர்வு செய்துகொண்டனர். பரிசோதனையின் துவக்கத்தில் இவர்களின் ரத்தத்தில் இருக்கும் லைகோபீன் என்கிற வேதிப்பொருளின் அளவு கணக்கிடப்பட்டது.
ரத்தத்தில் லைகோபீன் அளவு எவ்வளவு இருக்கிறது என்கிற அடிப்படையில், இவர்களை நான்கு தனித்தனி குழுக்களாக பிரித்த ஆய்வாளர்கள், இந்த நான்கு குழுக்களையும் 12 ஆண்டுகள் தொடர்ந்து கண்காணித்தனர்.
 இதில் ரத்தத்தில் லைகோபீனின் அளவு மிகக்குறைவாக இருந்த குழுவில் 258 பேர் இருந்தனர். இவர்களில் 25 பேருக்கு வாதநோய் தாக்கியது. அதேசமயம், லைகோபீனின் அளவு ரத்தத்தில் அதிகம் இருந்த குழுவில் இருந்த 259 பேரில் 11 பேருக்கு மட்டுமே வாதநோய் தாக்கியது.
 இதன் அடிப்படையில், லைகோபீன் அதிகம் இருக்கும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை சாப்பிடுவதன் மூலம் வாதநோய் தாக்குவதை 55 சதவீதம் குறைக்கமுடியும் என்று இந்த ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
தக்காளியில் இருக்கும் லைகோபீன் என்கிற வேதிப்பொருள், ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது என்றும், இது ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்துவதன் மூலம் ரத்தக் கட்டிகள் உருவாகாமல் தடுக்கும் தன்மை கொண்டது என்றும் கூறுகிறார் கிழக்கு பின்லாந்து பல்கலைக்கழக பேராசிரியர் ஜவ்னி கார்ப்பி.
 எனவே இந்த லைகோபீன் அதிகம் இருக்கும் தக்காளி போன்ற காய்கறிகளை அன்றாட உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் வாதநோயை தடுக்கலாம் என்பதை இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிப்பதாக கூறுகிறார். 

இயற்கை நமக்கு அளித்த மகத்துவங்கள் ஏராளம்.  ஒவ்வொரு பழத்திலும் நோய்களுக்கான மருத்துவ குணங்கள் உள்ளடங்கியுள்ளன...