சிட்டுக்குருவி போன்ற சிறிய பறவை இனம் குக்கூ பின்ச். மஞ்சள் நிறத்தில் அழகாகத் தோன்றும். அளவில் சிறிதாக இருந்தாலும் மிகத் தந்திரமான பறவை இது.
குக்கூ பறவைக்கும் குயில்கள் போலவே கூடுகட்டத் தெரியாது. அதனால் மற்ற பறவைகளின் கூட்டில்தான் முட்டையிடும். குயிலானது காகக்த்தின் கூட்டில் மட்டுமே முட்டையிடும். ஆனால் இந்த குக்கூ பின்ச் பறவையோ சிஸிடி கோலா மற்றும் பிரினியா ஆகியவற்றின் கூடுகளில் முட்டையிடும். இந்த 3 பறவை இனத்தின் முட்டைகளும் ஒன்றுபோலவே இருக்கும்.
குக்கூ பின்சின் முட்டை இளஞ் சிவப்பு அல்லது இளம்பச்சை நிறத்தில் இருக்கும். முட்டை ஓட்டில் 'மார்டன் ஆர்ட்' வரைந்ததை போன்று காட்சியளிக்கும். இது மற்ற பறவையின் கூட்டில் முட்டையிட்டாலும், அவைகள் இது தங்கள் முட்டையில்லை என்பதை எண்ணிக்கையின் அடிப்படையில் கண்டுபிடித்துவிடும். ஆனால் தங்கள் முட்டையை மாற்றி உடைத்துவிடக்கூடாதே என்ற அச்சத்தில் குக்கூவின் முட்டையையும் சேர்ந்தே அடைகாக்கின்றன. குஞ்சு பொரித்த தங்கள் குஞ்சு போன்று கருதியே நன்கு உணவூட்டி பராமரிக்கிறது. ஆனால் அத்தனை நிகழ்வுகளையும் தந்திரமாக கண்காணிட்டு வரும் குக்கூ பின்ச்கள், குஞ்சு பொரித்த 3 நாட்களுக்குள்ளாக தனது குஞ்சுகளை மட்டும் அடையாளம் கண்டு தூக்கிச் சென்றுவிடுகிறது.
தந்திரத்தில் கெட்டிக்கார பறவையாக திகழும் குக்கூவை வெளிநாட்டு வண்ணக்குயில் என்று சொல்லிவிடலாம்.
இவ்வளவு அதிசயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் பூமியின் இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்...
No comments:
Post a Comment