தமிழகத்தில் பற்றிப்படருகின்ற தாவரங்களான உன்னிச் செடிகளால் முதுமலை உட்பட பல இடங்களிலும் உள்ள புலிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் ஒரு வகை அழகிய மலர்ச்செடிகளாக இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட ''லண்டனா'' எனப்படுகின்ற
இந்த உன்னிச் செடிகள், ஒருவகை பற்றிப்படருகின்ற களைகளாக தற்போது உருவெடுத்துள்ளதாகவும் அவற்றால் உள்ளூர் புல் வகைகள் பலவும் அழிந்துபோவதாகவும் கூறப்படுகின்றது.
பொதுவாக, ஒரு இடத்தில் புலிகள் வாழ வேண்டுமானால், அவற்றுக்கான உணவான மான்களும் அங்கு அவசியமாகின்றன. ஒரு புலி உயிர்வாழ 500 மான்களாவது வேண்டுமாம்.
ஆனால், இந்த உன்னிச் செடிகள் தற்போது காடுகளில் புதர் போன்று படர்ந்து உள்ளூர் புற்களை அழித்து வருகின்றன. இதனால், மான்களுக்கு உணவு இல்லாமல் போகிறது அதனால், அவை குறைந்து வருவதாகவும், அதனால் அவற்றை உண்ணும் புலிகளுக்கு உணவு இன்றி அவையும் அருகி வருவதாகவும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
மிகவும் குறைந்த பரப்பில் அதிகம் புலிகள் வாழ்கின்ற ஒர் அபூர்வமான இடமாக இருக்கும் முதுமலையில், அவற்றுக்கு உணவாக ஆயிரக்கணக்கில் மான்களும் இருக்கின்றன ஆனால் உன்னிச் செடிகளின் விருத்தியால் ஏனைய புல்லினங்கள் அழிந்து வருவதாகவும், அதனால் அங்கு வாழும் மான்கள் குறைய அதனால் புலிகளுக்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
முன்பெல்லாம் வேட்டையாடப்படுவதால்தான் அதிகம் புலிகள் அழிந்தன என்றும், இப்போது இந்த தாவரங்கள் அவற்றுக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
இயற்கை காடுகள் உயிரினங்களுக்கு பெரும் நன்மை செய்கின்றன, பெருமளவில் மனிதகுலத்திற்கு...
No comments:
Post a Comment