நம்நாட்டில் ஆண்டு வன இழப்பு 1.3 மில்லியன் ஹெக்டேர். ஒவ்வொரு ஆண்டிலும் இந்தியாவின் வன இழப்பு 1.5 மில்லியன் ஹெக்டேர்களாகும். இந்தியாவில் 19 சதவீதம் நிலம் காடுகளாக உள்ளது. இது உலகத்தின் சராசரியான 29.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் இது மிகமிகக் குறைவானதாகும். மேற்கு ஜெர்மனியில் 28.1, ஐக்கிய அமெரிக்க நாடுகள் 32.8, ரஷ்யாவில் 33.9, ஜப்பான் 61.8, பின்லாந்து 70.9, தாய்லாந்து 77.2 சதவீதம் காடுகள் உள்ளன. 2012-ம் ஆண்டில் இந்தியாவில் காட்டுப் பகுதியை 30 சதவீதம் கூடுதலாக்க வேண்டும் என அரசால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் 13 சதவீதம் நிலம் காடுகளாக உள்ளது. பெட்ரோல் டீசலுக்கு மாற்றாக தாவரங்களிலிருந்து எரிபொருள் பெறுவதற்கான திட்டத்தை உலக நாடுகள் மேற்கொண்டு, காடுகளை அழிப்பதால் பருவநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு புவி வெப்பமடைதல் அதிகரித்து வருகிறது என சுற்றுச்சூழல் வி்ஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். நாட்டில் 3-ல் ஒரு பங்கு வனம் இருக்க வேண்டிய நிலையில், தற்போது 20 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. இதனால், ஆண்டுக்கு 50 தினங்கள் பெய்ய வேண்டிய மழை இப்போது 20 தினங்களுக்கும் குறைவாகவே பெய்கிறது. அனைத்து ஜீவராசிகளும் உயிர்வாழ இது அவசியம். மழை வளம் பெருக, மரம் வளம் அவசியம் ஒரு மரம் 2.50 ரூபாய் மதிப்புள்ள பிராண வாயுவை உற்பத்தி செய்து, ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள மண் வளத்தைக் கொடுக்கிறது. ஒரு மரம் தனது 50 ஆண்டு கால ஆயுட்கால இடைவெளியில் 15,70,000 ரூபாய் மதிப்பிலான சேவை செய்கிறது. ஒரு ஹெக்டேரில் உள்ள காடு ஆண்டு ஒன்றுக்கு 3.7 டன் கரியமிலவாயுவை உட்கொண்டு 2 டன் பிராணவாயுவைத் தருகிறது. வளரும் பயிர்களை வாழ்த்தி வரவேற்கும் வரவேற்பு வளையங்களாக மரங்கள் உள்ளன. காட்டு வளமே நாட்டு வளம், மரம் வளமின்றிப் போனால் உலகில் இன மின்றிப் போகும். அதனால் சோலைவனம் மறையும், பாலைவனம் விரியும்.
மரம் வளர்ப்பு தொடரும்...
மரம் வளர்ப்பு தொடரும்...
காடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசுபாடு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்...
No comments:
Post a Comment