Friday, March 2, 2012

6.மரம் வளர்த்தனால் ஆய பயனென் கொல்?

  வேளான்மை கற்றுக்கொண்ட நாளில் அதற்காக காடுகளை அழித்து, கழனி திருத்தி,  விவசாயம் செய்தான். நகர்ப்புரங்களின் விரிவாக்கம், விளை நிலைகளை சுருக்கி விளை நிலைகளை அதிகப்படுத்துதல், அளவுக்கு மீறிய தரிசு நிலம் ஆகியவைகளின் காரணமாக விவசாயம் அழகிறது. நகர விரிவாக்கத் திட்டங்களினாலும், விளை நிலங்களில் பெருகும் குடியிருப்புத் திட்டங்களிலும், பூங்காக்களும், மரங்ளும் அதிமுக்கியத்துவத்தை அரசு அளிக்கவேண்டும். நகரங்களில் மாசு அகற்றும் பணியில் மரங்களுக்குப் பிரதான இடமுண்டு. ஓடி உழைத்து அலுத்து சோர்வடையும் மக்களுக்கு அமைதியும், ஆறுதலும், ஆரோக்கியமும் மரங்கள் அளிக்கும். அதனால் பாடும் பறவைகளும் நம்மை நாடி வரும்.
    காட்டில் உள்ள மரங்கள் அழிந்தால் மரங்கள் மட்டும் அழிவதில்லை. மரங்களைச் சிற்றி வளரும் செடி, கொடிகளும் வியப்புக்குரிய விந்தையான விலங்குகளும் மடிகின்றன. காடு ஓர் ஆலயம். மரம் ஒரு தெய்வம். காடு அழிந்தால் நாடு செழிக்காது. நாட்டு வளம் காட்டு வளத்திலேயே அடங்கியுள்ளது. மரங்களையும், வனங்களையும் வளர்த்துக் காப்பாற்ற வேண்டும். மரங்களின் உபயோகத்துக்கு மாற்றுப் பொருள்களையும் கண்டறிய வேண்டும். ரங்கள் இன்றி மனிதன் இல்லை என்ற உண்மையை மனிதன் உணர வேண்டும். மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை மரங்களின் உபயத்தில் தான் வாழ்கிறான். 
  "மரந்தான் மரந்தான் எல்லாம் மரந்தான், மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான். மனிதா! மனிதனாக வேண்டுமா மரத்திடம் வா ஒவ்வொரு மரமும் போதிமரம்".

நன்றி தினமணி....

கட்டுறையாளர் திரு. பாறப்புறத் இராதாகிருஷ்ணன், அவர்கள்.

No comments: